Hari sri sai seva trust

Hari sri sai seva trust Hari sri sai seva trust its a sai temple located at dharmapuri district, gollahalli road.

10/03/2024

இது தெரியுமா ? அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?

நம் கலாச்சாரத்தில் கோவிலுக்கு செல்லும் போது, இறை வழிபாட்டினை செய்யும் போது மற்றும் முக்கிய விரத நாட்கள், மாதங்கள், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் அசைவம் உண்பதை தவிர்ப்பார்கள்.
ஒரு சிலர் முழுமையான சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
ஒரு சிலர் இது போன்ற முக்கிய நாட்களில் அசைவத்தை தவிர்க்கிறார்கள். எனில் ஏன் தவிர்க்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பானது. கோவில் என்பது புனிதமானது அங்கே செல்கையில் சுத்திகரிக்கப்பட்ட ஆராவுடன் நாம் இருப்பது நன்று. அங்கிருக்கும் நேர்மறை ஆற்றலை நம் உடல் உள்வாங்கும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.அறிவியல் ரீதியாக சொன்னால், அசைவ உணவுகளை உண்கிற போது அதை முழுமையாக செரித்து வெளியேற்ற நம் உடல் கிட்டதட்ட மூன்று நாட்கள் வரை எடுத்து கொள்கிறது. எனில் அசைவத்தின் தாக்கம் அதாவது அந்த மந்த தன்மை நம்ம் உடலில் மூன்று நாட்கள் வரை இருக்கும். ஆனால் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் என்பது மிக சில மணி நேரங்களிலேயே செரிக்க கூடியது. இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதுடன் நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மையுடன் இருக்கும்.அமாவாசையில் ஒருவர் அசைவத்தை தவிர்ப்பது ஏன் என்றால், நிலவிற்கு மனித உடலின் மீதான தாக்கம் அதிகம்.
குறிப்பாக மனிதர்களின் செரிமான மண்டலம் மீத் நிலவிற்கு தாக்கம் அதிகம். எனவே அமாவாசையின் போது நிலவு இல்லாததால் அன்றைய நாளில் மனித உடலின் செரிமான இயக்கம் சற்று பலவீனமானதாக இருக்கும். எனவே தான் நம் மூத்தோர் இந்த நாளில் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
இதை போலவே ஏகாதசி, பெளர்ணமி போன்ற நாட்களில் நம் மக்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பதை கண்டிருப்போம். இது உடலை சுத்திகரிக்கும் ஒரு முறையே ஆகும். எனவே இறை வழிபாடு, கோவிலுக்குசெல்லுதல் போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, மனதையும் உடலையும் அதற்கான தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். உடலை நேர்மறை ஆற்றலை உள்ளிக்கும் தன்மையுடன் வைத்திருக்க சாத்வீக உணவே சரியானது.
அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரு புள்ளி. அந்த நாளில் சூரியன், சந்திரன் ஆகியவற்றில் இருந்துவரும் அதிகமான ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது உடலின் செரிமானத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. செரிமானத்தன்மை அந்த நாளில் குறைப்பதால்தான் அமாவாசையன்று விரதம் மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் கண்டுள்ளார்கள். சும்மா விரதம் இரு என்றால் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதற்காகவே, உனது முன்னோர்களுக்காக விரதம் இரு, உனது வாழ்வில் இன்றைக்கு நீ அனுபவிக்கும் அனைத்தையும் பெற்றுத் தந்த அவர்களுக்காக விரதம் இரு என்று கூறிவிட்டனர். இப்படித்தான் அதனை ஒருநன்றிக்கடன் செலுத்தும் நாளாக ஆக்கியுள்ளனர்

வரும் 4ம் தேதி
02/03/2023

வரும் 4ம் தேதி

27/02/2023

வீட்டிற்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது! கனவன் மனைவிக்குள் சண்டை வருமாம்!

நம் வீட்டிற்கு தெரியாதவர்கள் வந்தால் கூட முகத்தில் புன் முறுவலுடன் வரவேற்க வேண்டும் என்ற நமது தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்கள் நாம். ஆனால் இன்று பின்பற்றி தெரிந்த சொந்தக்காரர்கள், தெரிந்தவர் இவர்களை வீட்டிற்கு வந்தால் பயப்படும்படியாக உள்ளது. அப்படி நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மறந்தும் கூட இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றனர். அதையும் மீறி இந்த இடத்தில் நாம் அமர வைக்கும் போது நமது வீட்டில் பல குழம்பங்களும், பிரச்சனைகளும் வரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

வெறும் தரை

முதலில் நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும் அவர்களை அன்புடன் வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். அப்படி வீட்டிற்குள் வரவேற்றவர்களை எக் காரணம் கொண்டும் வெறும் தரையில் அமரும் படி மட்டும் சொல்லக்கூடாத. ஏதாவது பாய் அல்லது சேர் எடுத்து போட்டு அதில் அவர்களை அமர சொல்ல வேண்டும். அதன் பின்பு வீட்டுக்கு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் அல்லது மோர் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் இது தான் நம் சம்பிரதாயமும் கூட.

கெட்ட எண்ணங்கள்

ஏனென்றால் வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வயிறை நாம் குளிர செய்து விட்டாலே போதும் அவர்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் அவர்கள் என நமக்கு சாஸ்திரங்கள் ஐதீகம் கூறுகின்றனர். நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் ஒரு சிலர் நமது வீட்டை பார்க்கும் போது பொறாமை கண்ணுடனும் அல்லது வஞ்சக எண்ணங்களுடன் பார்க்கும் போதும் கூட நாம் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை மோர் கொடுக்கும் போது அந்த எண்ணங்களை நாம் கொடுக்கும் பானங்கள் தனித்து விடும்.

வீடை சுற்றி பார்ப்பார்கள்

இப்படி நான் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் முதல் முதலாக நமது வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் நமது வீட்டை சுற்றி பார்க்க ஆசைப்படுவார்கள். அப்படி அவர்கள் நமது வீட்டை சுற்றி பார்க்கும் போது எல்லா இடங்களுக்கும் செல்வார்கள் அப்படி செல்லும்போது அவர்கள் உங்கள் வீட்டின் கனவன் மனைவியின் படுக்கையறைக்குள் செல்லாமல் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றாள் கணவன் மனைவி படுக்கும் அறையில் வீட்டிற்குள் வருபவர்களை அங்கு அமர வைக்க கூடாது.

கனவன் மனைவிக்குள்
சண்டை வரும்

முன்பெல்லாம் நாம் படுப்பதற்கு பாய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலங்களில் கணவன் மனைவி படுக்கும் பாயை கூட யார் கண்களில் படும்படி வைக்க கூட அதை தினமும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி கழுவி காய வைத்து தான் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் கட்டில் மெத்தை என பயன்படுத்தி வருகிறார்கள் இருந்தாலும் நம் வீட்டிற்கு வரும் உறவினர்கள் விருந்தாளிகளை கணவன் மனைவி படுத்து உறங்கும் மெத்தையில உட்கார வைக்காதீர்கள் இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருமாம்.

நோயாளிகள்

அதேபோல நமது வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் நோய்வாய் பட்டு இருந்தாலும் அவர்களுக்கு என்ன தனியாக ஒரு அறை அல்லது இடம் ஒதுக்கி வைத்திருப்போம் அப்படி உடல் நலம் சரியில்லாதவர்கள் இருக்கும் இடத்திலும் யாரையும் அமர வைக்க கூடாது. குறிப்பாக குழந்தைகளை இது போன்ற இடங்களில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது ஏனென்றால் அவர்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் அதிகமாக உண்டு இது ஆன்மீக ரீதியாகவும் நல்லது கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

தரித்திரம் பிடிக்கும்

ஆகையால் கணவன் மனைவி இருவரும் பயன்படுத்தும் படுக்கை அறையில் எப்பொழுதுமே யாரையும் அனுமதிக்காமல் முடிந்தளவிற்கு பூட்டி வைத்து பயன்படுத்துவது நல்லதாக இருக்கும். அதுபோல நீங்கள் படுத்து உறங்கும் மெத்தை தலையணைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து காய வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும். சிலர் மாத கணக்கில் சுத்தம் செய்யாமல் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள் இதனால் வீட்டிற்கு தரித்திரம் பிடித்து கொள்ளும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

08/09/2022

Aarti

ஹரி ஸ்ரீ சாய் பாபா கோவில் 5ம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு பாலபிஷேகம் நடைபெற்றது
04/03/2022

ஹரி ஸ்ரீ சாய் பாபா கோவில் 5ம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு பாலபிஷேகம் நடைபெற்றது

03/03/2022

ஹரி ஸ்ரீ சாய் சேவா சாய்பாபா கோவில் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காலை 9 மணி அளவில் பால் அபிஷேகமும் மதியம் அன்னதானமும் நடைபெறும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

24/02/2022

*New Temple Timings of SHRI SAI BABA TEMPLE, SHIRDI*
*From 1st March 2022.*

*4.45 am - Temple open*
*5.00 am - Bhoopali starts*
*5.15 am - Kakad Aarti*
*5.50 am - Mangalsnan*
*6.20 am - Choti Aarti*
*6.25 am - Darshan starts*
*12 Noon* - *Madhyan Aarti*
*Dhoop Aarti* - *At Sun Set*
*10.00 pm - Shej Aarti*
*10.45 pm - Temple closes*

*Aum Sai Ram*
🌻🌻👣🌻🌻

11/02/2022

ஓம் சாய்ராம் ! இனிய நற்காலை வணக்கம் !!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பாபாவின் அறிவுரைகளையும், உறுதிமொழிகளையும், அவர் தன் பக்தர்களுக்கு அளிக்கும் சத்தியமான வாக்குகளையும் ஏளனமாக எண்ணி அலட்சியப்படுத்தி விடாதீர்கள். பக்கீரின் பிரம்படி தீர்ப்பு அத்தகைய சக்தி வாய்ந்தது. உங்களுடைய கர்வமும், சுய புத்திசாலித்தனமும் உங்களை வீழ்த்திவிடும். பாபாவின் திருவாய்மொழியைத் தூற்றுபவர்களுக்கு நஷ்டமும் ஏமாற்றமுமே அனுபவமாகக் கிட்டும்.
ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கோயிலுக்குள் ஓடாதீர்கள்!கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்கு...
05/01/2022

கோயிலுக்குள் ஓடாதீர்கள்!
கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு. சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

*எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும...
26/12/2021

*எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும். உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.* 🛑🛑

கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாகவும் மாறுவதற்கு கூட, இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கின்றது. இது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் கடிகாரம் மாட்டியிருக்கும் திசையும், கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக அது எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும், எந்த வடிவத்தில் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட பல குழப்பங்களுக்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சுழல்கின்ற காலச்சக்கரத்தை நமக்கு வலியுறுத்துவதே இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க வில்லை. வானத்தை பார்த்து, வானத்திலுள்ள சூரியனைப் பார்த்து தான் நேரத்தை கணித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருந்ததற்கு வீட்டில் கடிகாரம் இல்லாததும் ஒரு காரணம். சரி, இப்போது நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க என்ன செய்வது?

முதலில் உங்களுடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பொருளாதார சூழ்நிலை உயர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மாட்டப்படும் கடிகாரம் வட்ட வடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் நோய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தவாறு இருக்கும். கிழக்குப்பக்கம் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது.

கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம். சிலபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை. வடக்குப் பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாற்ற முடியவில்லை, என்றால் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் தெற்குப் பக்கத்தில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதற்கு என்ன காரணம்? கடிகாரத்தில் எப்போதுமே முள் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் போது அதில் ஒரு விதமான சத்தம் எழும். பொதுவாக அது நம்முடைய காதுகளுக்குக் கேட்காது. சில சமயங்களில் அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் நமக்கு அந்த சத்தம் கேட்கும் அல்லவா? தெற்கு என்பது எமதர்ம ராஜாவுக்கும், நம்முடைய முன்னோர்களுக்கும் சொந்தமான திசை. ஆகவே அவர்களை தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் இந்த கடிகாரத்தை அந்த இடத்தில் மாற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டில், நேரம் பார்ப்பதற்காக அடிக்கடி பார்க்கக்கூடிய பொருள் கடிகாரம். இந்த கடிகார கண்ணாடியில் நிச்சயம் விரிசலும் அல்லது உடைந்து இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல் நமக்கு உண்டாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய கால நேரத்தை குறித்து, நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. ஆகவே, இந்த கடிகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தில் தான் இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு நிமிடம் கூட நம்முடைய கடிகாரம் பின்னோக்கி ஓடக் கூடாது. என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஓடாத கடிகாரத்தை சுவற்றில் மாட்டி வைக்காதீர்கள். உங்களுடைய வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கின்றது என்பதானால் ஆங்காங்கே எல்லா இடங்களிலும் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. குறிப்பாக நில வாசலுக்கு வெளியில் கடிகாரம் இருக்கவே கூடாது. சிலபேர் பால்கனியில் எல்லாம் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. ஒரு கடிகாரத்திற்கு வாஸ்துப்படி எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன! நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? - பூணூல் வகைகள், ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்?ஆவணி அவிட்டம் திருநாளை ஆற்றங்கரை, குளக்கர...
21/08/2021

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? - பூணூல் வகைகள், ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்?

ஆவணி அவிட்டம் திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சங்கு தொடங்குவர்.கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.
ஆவணி அவிட்டம் எனும் ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கப்படும் மகத்தான வழிபாடு நாளாகும்.

இது தினத்தை ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடுவார்கள். இது ஒரு கூட்டு வழிபாடாகும்.

ஆவணி அவிட்டம் எப்படி கொண்டாடப்படும் ?
இந்த அற்புத திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சங்கு தொடங்குவர்.

கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஆவணிஅவிட்டம் மந்திரம் பெருமைகள் இதோ!

கிழக்கு திசையில் வாழை இலை போட்டு அதில் அரிசி பரப்பி அதன் மீது 7 கொட்டை பாக்கு வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.

அப்போது பஞ்சபூதங்களை வழிபாடு செய்வது உத்தமம். திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தவருக்கும் தானமாக தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் தங்களின் பூணூலை புதுப்பித்துக் கொண்டு வேதங்களைப் படிக்கத் தொடங்கலாம்.

ஆவணி அவிட்டம் விரத பலன்களும்..! - கள்ளப் பூணூல், பிரம்மச்சாரி பூணூல் என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் இதற்கு உபாகர்ம என்று பெயர். அதாவது பொருள் தொடக்கம் என்பதாகும். இந்த தினத்தில் வேதங்களைப் படிக்கத் தொடங்குவதற்கு நல்ல நாளாகும்.

இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

பூணூல் வகைகள் :
கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்று நான்கு வகைப்படும்.

பூணூல் போட்டுக் கொள்ளக்கூடிய ஆண் பாலகனாக இருந்தால் பிரம்மச்சாரி எனும் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார். அதன் பின்னர் வேதங்களைக் கற்று தேற வேண்டும். அவன் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்...

பிரம்மச்சாரி பூணூல்
ஒருவர் உபநயன விழா நடத்தி பூணூல் போடப்பட்டுவிட்டால் அவர் அதைக் கழற்றக் கூடாது.
உபநயன விழா நடத்தாமல் ஆவணி அவிட்டம் அன்று மட்டும் சாஸ்திரத்திற்காகப் போடப்படும் பூணூலைக் கழற்றி விடலாம். இதையே கள்ளப் பூணூல் என்கிறோம். திருமணமாகாதவருக்கு பிரம்மச்சாரி பூணூல் போடப்படும்.

பிரமசாரி பூணூல், கள்ளப் பூணூலில் 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு, அதன் நடுவில் பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

கிரஹஸ்தர் பூணூல் :
திருமணமானவர்களுக்கு கிரஹஸ்தர் பூணூல் போடப்படும். இதில் ஆறு நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.

ஆவணி மாத அவிட்ட பூணூல் அணிதல் குறித்து திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பாஸ்கர் குருக்கள் விளக்கம்

சஷ்டி அப்தி பூணூல் :
60 வயதான பின் சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும் அறுபதாம் கல்யாணம் முடித்தவர்களுக்கு சஷ்டி அப்தி பூணூல் அணிவிக்கப்படும். இதில் 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

ஆவணி அவிட்ட விரத மகிமை :
ஆவணி அவிட்டம் விரத நியமங்களைக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

27/03/2021

பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்....

(1) ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

(2) 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்

(3) இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

(4) சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

(5) சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

(6) முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

(7) பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.

(8) ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

(9) மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

(10) இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

(11) காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

(12) தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

(13) தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

(14) அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

(15) பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

(16) பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

(17) பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

(18) காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

(19) 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.

(20) இந்த திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும், திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும் ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று சுந்தபுராணம் கூறுகிறது.

(21) திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

(22) திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

(23) சிவ-பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.

(24) பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

(25) இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.

(26) பங்குனி உத்திரம்
நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

(27) நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

(28) அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

(29) உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.

(30) ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.

(31) பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

(32) பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.

(33) சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.

(34) கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

(35) திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.

Address

Dharmapuri
636072

Telephone

+918667573045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hari sri sai seva trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category