24/08/2026
#வருஷாபிஷேகம் #விழா 2026
தருமபுரி குமாரசாமி பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆவணி மாதம் மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து வருடம் தோறும் கும்பாபிஷேகம் நன்னாளை நினைவு படுத்தும் விதமாக ஆவணி மாதம் வருஷாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நிகழும் மங்களகரமான பராபவ ஆண்டு ஆவணி திங்கள் 08 ஆம் நாள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை உத்திராடம் நட்சத்திரம் திரியோதசி திதி கூடிய சுபயோக சுபநாளில் காலை 7.30 மணிக்கு மேல் மூலவர் ஆறுமுகப் பெருமானுக்கு விஷேச அபிஷேகம் அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெறும்.
அதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணியர் (பெரிய நாயகர்) சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி திருவீதி உலா இரவு சோடச உபசாரம், வேத பாராயணம், திருப்புகழ் பாராயணம், மஹா தீபாராதனை நடைபெறும்.