Nachi

Nachi ‌அருள்மிகு ஆற்றங்கரை நாச்சியம்மன் திருக்கோயில், ஈகரை

Eegarai Sri Nachiyar Amman
08/03/2026

Eegarai Sri Nachiyar Amman

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் திருக்கோயில்
12/09/2025

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் திருக்கோயில்

09/08/2025

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சியம்மன்

09/08/2025

Sri Guru Raghavendra Swamy Darshan. Thursday, 7 Aug 2025

🌸Sri Raghavendraya Namaha 🌸
🪷Sri Gurubyo Namaha🌸

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜை 08-08-25 வெள்ளிக்கிழமை காலை மணி 10.30 ம...
07/08/2025

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜை 08-08-25 வெள்ளிக்கிழமை காலை மணி 10.30 முதல் 11.30 வரை நடைபெறும்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் இருந்து ஆறேழு கிலோமீட்டர் அருகில், ஈகரை கிராமத்தில், விரிசிலை ஆற்றின் வடகரையில் அருள்...
29/07/2025

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் இருந்து ஆறேழு கிலோமீட்டர் அருகில், ஈகரை கிராமத்தில், விரிசிலை ஆற்றின் வடகரையில் அருள் புரிகிறாள் நாச்சியார்.

சேது வள நாட்டின், காளையார்கோயில் கூற்றத்தின் நாற்பத்தெட்டு நாடுகளில் ஒன்று தென்னாலை நாடு.

தென்னாலை நாடு என்று சேதுபதிகள் செப்பேடுகளில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பெயர் பொருள்நிறைவோடும் கம்பீரத்தோடும் உள்ளது, ஆனால் இப்பகுதி மக்களோ "தென்னாலி நாடு "என்றே அழைக்கிறார்கள்.

தென்னாலை நாடு :-

ஈகரை
நாகாடி
பனந்தோப்பு
எழுபொன்கோட்டை
வெட்டிவயல்
அச்சணி
வீரை
கல்லங்குடி
காரை
திருமணவயல்
சிறுவத்தி

என பதினோரு சேர்க்கைகளைக் கொண்டது!

ஈகரைச் சேர்க்கை

ஈகரை
மேலக் காவணவயல் / கீழக்காவணவயல்
சிங்கத் திருமுகப்பட்டி
கோட்டவயல்
இடையன்வயல் (இது அரைக்கிராமம்)
புதுக்கோட்டை
கள்ளிக்குடி
பனங் காட்டான் வயல்
கொங்கிவயல்
ஆனையேரிவயல்
பிரண்டைவயல்
கண்ணங்கோட்டை,

எனப் பதினொண்றரைக் கிராமங்களைக் கொண்டது!

இந்தப் பதினொண்றரைக் கிராமங்களுக்கும் தனித்தனியே கோயில் உண்டு.

ஆனால் பதினொண்றரைக் கிராமங்களுக்கும் (ஈகரைச் சேர்க்கைக்கு) சேர்த்து ஒரு கோயில் உண்டு, அதுவே ஆத்தங்கரை நாச்சியார் கோயில், ஆத்தங்கரை நாச்சிக்கு உரிமையுடைய சேர்க்கைக் குடிகள் இணைந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை மதுவெடுப்பு விழா எடுப்பதுண்டு, ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுவெடுப்பு நடக்கவில்லை!

புதிய கோயிலில் இரண்டு கருவறைகள்! ஒன்று 'நவ நாச்சியாருக்கு 'மற்றொன்று 'ஆதி நாச்சியாருக்கு!

"இரண்டு மூலவர்கள் எப்படி? " பூசாரி சுப்புராமனிடம் கேட்டேன்,

"நாச்சியார், நாச்சி, நாச்சம்மை, நாச்சிமுத்து, நாச்சாயி,அழகுநாச்சி, வேலுநாச்சி, ராமுநாச்சி என்றெல்லாம் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையார் சாதியினர் தங்கள் பெண்களுக்கு பெயர் சூட்டுகின்றனர்!

கிராமக் கோயில்களில் பெரும்பாலும் வேளார்கள் தான் பூசாரிகளாக இருப்பார்கள், இந்த நாச்சியாருக்கு கள்ளராகிய நாங்கள் தான் பூசாரி!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர் எங்கிருந்தோ புலம் பெயர்ந்து இங்கே வந்து காடு திருத்தி நன்செய் புன்செய் கண்மாய் கரைகளைஉண்டாக்கி 'ஈகரை 'எனும் இந்த ஊரையும் உருவாக்கினார்கள்!

இந்த ஆறு (விரிசிலை ஆறு) முல்லைப் பெரியாறு விளங்கும் கம்பம் தேனி பகுதியில் உருவாகிறது, அதனால் இதை நாங்கள் பெரியாறு என்றே அழைக்கிறோம்,

ஆற்றின் வெள்ளப் பெருக்கில், வீரம் பொருந்திய,அழகிய ஐம்பொன் விக்கிரகம் ஒன்று இழுத்து வரப்பட்டு இந்த ஈகரையில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்து 'நாச்சியார் 'எனப் பெயரிட்டு, கூரை வீட்டில் முறைப்படி நிலைப்படுத்தி பூசைகள் செய்தார்கள் எங்கள் முன்னோர். அன்று தொடங்கி நாங்கள் பூசாரி வீட்டாரானோம். நாச்சியார் சேர்க்கைத் தெய்வமானாள்.

இடைக்காலத்தில் 'கப்பலூர் நாட்டு அம்பலம் குடும்பத்தினர் தங்கள் வாரிசாக ஈகரைப் பூசாரி வீட்டிலிருந்து ஒரு இளைஞரைத் தத்தெடுத்திருக்கிறார்கள் அந்த மகன் நாச்சியாரின் விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு மூவிலை வேல் ஒன்றை வணங்கியிருக்கிறார்கள்.

1800 ன் தொடக்கத்தில் தேவகோட்டை செட்டியார் ஒருவர் கல்லாலான நாச்சியார் சிலையை செய்து அளித்திருக்கிறார். அதுவே இன்று ஆதி நாச்சியார். அந்தச் சிலையும் புயல் வெள்ளப் பெருக்கில் ஆற்றில் புதையுண்டு போனது. மீண்டும் ஒரு புதிய சிவையைச் செய்து வழங்கினார் மற்றொறு வள்ளல். அதுவே 'நவ நாச்சியார் '

பத்தாண்டுக்கு முன்பு ஆற்றில் எந்திரத்தைப் பயன்படுத்தி மணல் அள்ளிய போது ஆதி நாச்சியாரும் அகப்பட்டார்.

- ஆறாவயல் பெரியய்யா

அருள்மிகு ஆற்றங்கரை நாச்சியம்மன் திருக்கோயில், ஈகரை
29/07/2025

அருள்மிகு ஆற்றங்கரை நாச்சியம்மன் திருக்கோயில், ஈகரை

Address

Eegarai
Devakottai
630311

Opening Hours

Monday 8am - 1pm
Tuesday 8am - 2pm
Wednesday 8am - 1pm
Thursday 8am - 1pm
Friday 8am - 2pm
Saturday 8am - 1pm
Sunday 8am - 3pm

Alerts

Be the first to know and let us send you an email when Nachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category