Kanthar Kotta Manimalai கந்தர் கோட்ட மணிமாலை

  • Home
  • India
  • Cumbum
  • Kanthar Kotta Manimalai கந்தர் கோட்ட மணிமாலை

Kanthar Kotta Manimalai கந்தர் கோட்ட மணிமாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanthar Kotta Manimalai கந்தர் கோட்ட மணிமாலை, Convent and monastery, 54 Jothu Gounder St: Gudalur ; Theni DT Tamilnadu, Cumbum.

13/11/2020

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்
விருந்து உணவை சுற்றத்தாரோடு பகிர்ந்து உண்ணுங்கள்

கந்தர்கோட்ட மணிமாலை வல்லல்பெருமானால் 9  வயதில்   பாடப்பட்ட    ஞான நூல் பக்தியோகத்தில் நின்று பாடப்பட்டது பாடல் வீடியோ மற...
07/09/2020

கந்தர்கோட்ட மணிமாலை வல்லல்பெருமானால் 9 வயதில் பாடப்பட்ட ஞான நூல்

பக்தியோகத்தில் நின்று பாடப்பட்டது

பாடல் வீடியோ மற்றும் விளக்கவுரை ; அவரது மெய்ஞான சீடர் மற்றும் சமரச வேதத்தின் முன்னோடி என்கிற முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

9 வயது குழந்தையை பூசாரி ஏதாவது பாடு என சொன்னதால் பாட முயற்சிக்கிறது

26/04/2020

கந்தர் கோட்ட மணிமாலை 31

மணிமாலையின் நிறைவுப்பாடல் ; பெரும்பாலும் வெற்றி ; போற்றி என்பது போல கவிஞர்கள் முடிப்பார்கள்

ஆனால் வள்ளல்பெருமானோ தன் அச்சத்தை - கையறு நிலையையே வெளிப்படுத்துகிறார்

நான் கொண்ட விரதம் ; இறைவனையும் இறை சக்திகளையும் ; குருநாதனான முருகனையே எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டும் என்பது

உணவு ; உடை ;இருப்பிடம் அடிப்படை தேவைகளுக்காக உலகத்தில் பொருள் தேட உழைக்கவும் வேண்டும்

நேரத்தை அதில் செலவிட்டு பிறகு உன்னையும் தேடினால் ரெண்டும் கெட்டானாக இருக்க வேண்டும்

அப்படி இல்லாமல் நீயே என் தேவைகளை சந்தித்து விடுகிறேன் என வாக்கு கொடுத்தீரானால் ; நான் உலகத்தின் பக்கம் போகும் படியாக இருக்காது

இல்லாமை என்ற துட்ட நாய் என் விரதத்தை கவ்விக்கொண்டு போகிற சூழ்நிலையில் தானே உள்ளேன்

என் செய்வேன் என் செய்வேன்

ஆனால் அவருக்கு தணிகைமணி பிரான் என சொல்லிக்கொண்டு அவர் கண்ணுக்கு மட்டுமே தெரிகிற ஒளிதேகி ஒருவர் தரிசனமானார்

அரேபியாவில் பிறந்த முகமது சாலிக் என்ற ஞானி அல்லாஹ் வால் அறிவுறுத்தப்பட்டு திருத்தணியில் குகையில் தவமிருந்து முருகனின் குரு அருளால் ஒளி தேகம் - மரணமில்லா பெரு வாழ்வு பெற்றவர்

அவர் பரமேறும் முன்பு பூமியிலே வாரீசுகளை உருவாக்க இருவரை தேர்ந்தெடுத்தார்

ஒருவர் வள்ளலார் மற்றவர் சாலை ஆண்டவர்

தணிகைமணியார் 9 வயது சிறுவனை வான்வழியாக பல இடங்களுக்கும் அழைத்து சென்று பல பயிற்சிகள் வரங்களை அருளினார்

9 வயதில் பாடிய கந்தர் கோட்ட மணிமாலைதானே அவரது முதல் பாடல் என சீடர்கள் கேட்ட போது ; இல்லை அதற்கு முன்பே திருத்தணி முருகனைப்பற்றி பாடியதுவே என் முதல் பாடல் என்றார் வள்ளலார்

திருத்தணிக்கு வள்ளலாரின் குடும்பத்தினர் யாருமே அவரை அழைத்து செல்லவில்லை . தணிகைமணியாரே வான்வழியாக அழைத்து சென்றவர் இதன் உள் பொருள்

அதுபோலவே சாலையாரையும் 12 ஆண்டுகள் திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு குகையில் இருத்தி தணிகையார் பயிற்சி கொடுத்துள்ளார்

இந்த இருவருமே மரணமில்லா பெரு வாழ்வு ; சமரச வேதம் ; சத்திய யுகத்தை வரவேற்க அடித்தளம் இடுதல் ; ஆண்டவர் வருகையை முன்னறிவித்தல் ; ஆட்சிக்கான கொடியை ஸ்தாபித்தல் போன்ற வேலையை தமிழகத்தில் அலுக்கில்லாமல் செய்து வருகிறார்கள்

இவ்விருவருமே தங்கள் தேவைகளுக்கு யாரையும் அண்டியதில்லை

தாங்களே பணத்தை இறைவனிடமிருந்து பெற்று சீடர்களுக்கும் செலவு செய்தார்கள்

24/04/2020

Kanthar Kotta Manimalai 30

முருகனை சற்குருவாக அடையப்பெற்றவர்களுக்கு எந்த திக்கில் சென்றாலும் ; அங்கு நல்லதே நடப்பதால் உள்ளம் இன்புறலாமாம்

என் உயிர் இறைவனின் அம்ஸமானது என்று அறிவேன்

அந்த உயிர்க்கு உறுதுணையாக இருக்கும் தேவன் முருகன்

யோகங்களை வாரிவழங்கும் ஞான சற்குரு

துவளாத செல்வத்தையும் வாரிவழங்குவான்

உலக வாழ்வில் போகங்களை அளவோடும் முறையோடும் அனுபவிக்க கற்றுக்கொடுப்பான் ; ஆகையால் ஆனந்த வாழ்வை உறுதிப்படுத்துபவன்

அதனால் ஒவ்வொரு காரியத்திலும் நன்மை எதுவோ அந்த முக்தியை வித்தாக இருந்து அருளுபவன்

முக்தி என்பது நிலை முன்னுறு சாதனம் என்பார் வள்ளலார்

ஒரே நாளில் சித்தி அடைந்துவிட முடியாது

ஒவ்வொரு காரியத்திலும் தனித்தனியாக நன்மை தீமை உணர்ந்து நன்மை தீமை இரண்டையும் கடந்த நிலை ஒரு முக்தி

இப்படி பல முக்திகள் முடிவில்லாதவை

அவைகளை பல பிறவிகளில் கடந்து கடந்து வர ஞான குருகுலத்தின் முதல்வன் அவன்

தேவர்களில் இரண்டு பெரிய பிரிவு நாராயணனை அதிதேவராகவும் சிவனை அதிதேவராகவும் கொண்டு இயங்குகிறது

முருகன் நாராயணனின் மருமகன் ; சிவனின் மகன்

அதனால் சமரச வேதத்தின் அமசமானவன்

பக்தி செய்வோரை மகிழ்ந்து அவர்களை இரண்டு அதிதேவர்களிடத்திலும் பரிதுரைப்பானாம் முருகன்

முருகன் சிவ விஷ்ணு கலப்பானவன்

முருகனும் பல அவதாரங்கள் பூமியில் வந்துகொண்டுதான் இருக்கிறான்

ஐயனார் என்றறியப்படுகிற அய்யப்பன் முதலான பல அவதாரங்கள் முருகனின் அம்ஸமே ஆகும்

அப்படி ஏதாவது ஒரு அவதாரத்தை பற்றிக்கொண்டு பக்தியிலும் பின்பு யோகத்திலும் வளர்ந்தோமானால் ; உலக வாழ்வில் பாவங்களில் வீழ்ந்த பலர் அடுத்த பிறவியில் வறுமையிலும் துன்பங்களிலும் அல்லாடுகிறார்களே ; அப்படி ஆகாமல் நம்மை உயர்த்தி உயர்த்தி விடுவார்

Address

54 Jothu Gounder St: Gudalur ; Theni DT Tamilnadu
Cumbum

Telephone

+917502636040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanthar Kotta Manimalai கந்தர் கோட்ட மணிமாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share