அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple)

  • Home
  • India
  • Cuddalore
  • அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple)

அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple), Religious organisation, முதன்மைச்சாலை(Main Road), Cuddalore.

Hindu Shiva Temple in Cuddalore District, Tamil Nadu, India.
தினமலர்: https://temple.dinamalar.com/New.php?id=2294
மாலை மலர்: https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/01/30065535/1225176/shiva-temple.vpf 1. தினமலர்: https://temple.dinamalar.com/New.php?id=2294--------------------------------------------------------------------------------
2. மாலை மலர்: https://www.maalai

malar.com/devotional/devotionaltopnews/2019/01/30065535/1225176/shiva-temple.vpf--------------------------------------------------------------------------------
3. மூவர் தேவார வைப்புத் தலங்கள் - Muvar Thevara Vaippu Thalangal:
தேவார வைப்புத் தலங்கள்: https://shaivam.org/to-practise/moovar-thevara-vaippu-thalangal
263. மாறன்பாடி - mARanpAdi சம்பந்தர் தேவாரம் - 2.39. திருக்ஷேத்திரக்கோவை - மூன்றாவது பாட்டு: ச 2-39-3:
விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது மாறன் பாடி. சம்பந்தர் குறிக்கும் 'பாடி நான்கும்' என்பதில் இத்தலமும் ஒன்று. தற்போது இறையூர் என்றும், எறையூர் என்றும் இத்தலம் வழங்குகிறது.--------------------------------------------------------------------------------
4. திருமாறன்பாடி வைப்புத்தலம் பாட்டு:
http://www.chennailibrary.com/saiva/thirumuraitwo4.html
பன்னிரு சைவத்திருமுறைகளில் இரண்டாம் திருமுறையில் –
திருஞானசம்பந்தர் அருளிய - தேவாரம்

2.39. திருக்ஷேத்திரக்கோவை

பண் - இந்தளம்

417 அட்டா னமென் றோதியநா லிரண்டும்
அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 2.39.3
பாடி நான்கும்:
1. திருமாறன்பாடி
2. எதிர்கொள்பாடி
3. திருமழப்பாடி (பாடல் பெற்ற ஸ்தலம் "பொன்னார் மேனியனே")
4. திருவாய்ப்பாடி--------------------------------------------------------------------------------
5. திருமாறன்பாடி - பெரியபுரானத்தில் - கிட்டதட்ட 40 பாடல்களுக்கு மேல் விருத்தாசலத்தில் இருந்து திருவட்டத்துறைக்கு போய் சேருவதற்கு வழியில் இறையூர் என்று இன்று அழைக்கப்படும் திருமாரணபாடியில் ஞான சம்பந்தர் உறங்கி இளைப்பாறிய இடமாக குறித்திருக்கிறார் எம்பெருமான் சேக்கிழார்:

191. மாறன் பாடி எனும் பதி வந்துற 2089-1
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 2089-2
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 2089-3
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 2089-4

180. அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 2078-1
பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 2078-2
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் 2078-3
செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார் 2078-4

181. மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று 2079-1
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி 2079-2
செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு 2079-3
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் 2079-4

182. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் 2080-1
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 2080-2
ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு 2080-3
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் 2080-4

183. தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி 2081-1
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 2081-2
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 2081-3
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 2081-4

184. ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை 2082-1
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் 2082-2
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 2082-3
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார் 2082-4

185. கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 2083-1
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 2083-2
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் 2083-3
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார் 2083-4

186. முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 2084-1
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 2084-2
அந்தணாளர் அவர் அருகே செலச் 2084-3
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் 2084-4

187. ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 2085-1
காதலால் அணைவார் கடிது ஏகிட 2085-2
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 2085-3
பாத தாமரை நொந்தன பைப்பய 2085-4

188. மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 2086-1
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 2086-2
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 2086-3
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார் 2086-4

189. பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 2087-1
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 2087-2
தேசு மிக்க திருவுரு ஆனவர் 2087-3
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார் 2087-4

190. இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 2088-1
வந்த வைதிக மாமணி ஆனவர் 2088-2
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 2088-3
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் 2088-4

191. மாறன் பாடி எனும் பதி வந்துற 2089-1
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 2089-2
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 2089-3
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 2089-4

192. உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 2090-1
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 2090-2
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 2090-3
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் 2090-4

193. அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 2091-1
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 2091-2
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 2091-3
வெற்றி மாதவத்தோருடன் மேவினார் 2091-4

194. இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 2092-1
மன்னனார் தம் வழி வருத்தத் தினை 2092-2
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 2092-3
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர் 2092-4

195. ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 2093-1
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 2093-2
மாறில் முத்தின் படியினால் மன்னிய 2093-3
நீறு வந்த நிமலர் அருளுவார் 2093-4

196. நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் 2094-1
மாட மாமணை தோறும் மறையோர்க்குக் 2094-2
கூடு கங்குல் கனவில் குலமறை 2094-3
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் 2094-4

197. ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 2095-1
மான முகத்தின் சிவிகை மணிக் குடை 2095-2
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 2095-3
கோன் அவன் பால் அணைந்து கொடும் என 2095-4

198. அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 2096-1
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 2096-2
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 2096-3
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர் 2096-4

199. ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 2097-1
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின 2097-2
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 2097-3
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார் 2097-4

200. சால மிக்க வியப்புறு தன்மையின் 2098-1
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 2098-2
காலம் எய்திடக் காதல் வழிப்படும் 2098-3
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் 2098-4

201. திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 2099-1
துங்க வெண் குடை தூய சிவிகையும் 2099-2
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 2099-3
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 2099-4

202. கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 2100-1
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 2100-2
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து 2100-3
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் 2100-4

203. சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 2101-1
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 2101-2
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 2101-3
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 2101-4

204. மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 2102-1
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 2102-2
தேசுடைச் சிவிகை முதலாயின 2102-3
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் 2102-4

205. இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 2103-1
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 2103-2
முத்த நற் சிவிகை முதல் ஆயின 2103-3
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார் 2103-4

206. அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 2104-1
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 2104-2
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 2104-3
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின் 2104-4

207. சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் 2105-1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 2105-2
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 2105-3
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் 2105-4

208. மாலை யாமம் புலர் உறும் வைகறை 2106-1
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 2106-2
கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து 2106-3
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர் 2106-4

209. போத ஞானப் புகலிப் புனிதரைச் 2107-1
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 2107-2
காதல் செய்பவன் போலக் கருங்கடல் 2107-3
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் 2107-4

210. ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 2108-1
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 2108-2
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 2108-3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 2108-4

211. வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 2109-1
கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் 2109-2
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 2109-3
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் 2109-4

212. என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 2110-1
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 2110-2
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது 2110-3
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் 2110-4

213. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 2111-1
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 2111-2
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 2111-3
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே 2111-4

214. எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 2112-1
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 2112-2
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 2112-3
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார் 2112-4

215. பொடி அணிந்த புராணன் அரத்துறை 2113-1
அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 2113-2
படி இலாத சொல் மாலைகள் பாடியே 2113-3
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார் 2113-4

216. சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 2114-1
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று 2114-2
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து 2114-3
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் 2114-4

217. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை 2115-1
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் 2115-2
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி 2115-3
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம் 2115-4

218. விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் 2116-1
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் 2116-2
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து 2116-3
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே 2116-4

219. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் 2117-1
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் 2117-2
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் 2117-3
மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார் 2117-4

220. நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி 2118-1
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே 2118-2
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம் 2118-3
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் 2118-4

221. செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க 2119-1
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம் 2119-2
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் 2119-3
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத 2119-4

222. சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே 2120-1
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் 2120-2
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட 2120-3
பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க 2120-4

223. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 2121-1
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 2121-2
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 2121-3
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 2121-4

224. தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை 2122-1
இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம் 2122-2
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு 2122-3
அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார் 2122-4

225. வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் 2123-1
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து 2123-2
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல 2123-3
அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார் 2123-4

226. மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து 2124-1
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் 2124-2
என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் 2124-3
பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார் 2124-4

227. சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் 2125-1
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி 2125-2
நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப் 2125-3
பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில 2125-4

228. இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி 2126-1
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு 2126-2
திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் 2126-3
அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார் 2126-4

229. தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி 2127-1
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் 2127-2
தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் 2127-3
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் 2127-4

230. விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த 2128-1
களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட 2128-2
உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி 2128-3
வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார் 2128-4

231. அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி 2129-1
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு 2129-2
உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே 2129-3
வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார் 2129-4

232. சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப் 2130-1
கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக் 2130-2
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப் 2130-3
புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார் 2130-4

233. மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் 2131-1
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் 2131-2
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் 2131-3
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 2131-4

234. உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர் 2132-1
புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம் 2132-2
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி 2132-3
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் 2132-4

235. அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின் 2133-1
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் 2133-2
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் 2133-3
பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் 2133-4

236. அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர் 2134-1
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் 2134-2
துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன் 2134-3
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார் 2134-4

237. மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது 2135-1
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் 2135-2
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் 2135-3
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் 2135-4

238. பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி 2136-1
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் 2136-2
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் 2136-3
மேவிய பெரும் திரு விசய மங்கையில் 2136-4

239. அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் 2137-1
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் 2137-2
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய 2137-3
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார் 2137-4

240. விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் 2138-1
அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து 2138-2
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் 2138-3
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் 2138-4

22/12/2025

இறையூர் சிவன் கோயில். 21.12.25 ஞாயிறு அன்று மார்கழி மாதம் 6ம் நாள் பூசை சிறப்பாக நடைபெற்றது.

20/12/2025

இறையூர் சிவன் கோயில். 18.12.25 வியாழன் அன்று மார்கழி 3ம் நாள் பூசை சிறப்பாக நடைபெற்றது.

17/12/2025

இறையூர் சிவன்

கோயில். 16.12.25 செவ்வாய் கிழமை அன்று மார்கழி மாதம் முதல் நாள் பூசை சிறப்பாக நடைபெற்றது.

16/12/2025

இறையூர் சிவன்

கோயில். 16.12.25 செவ்வாய் கிழமை அன்று மார்கழி மாதம் முதல் நாள் பூசை சிறப்பாக நடைபெற்றது.

Address

முதன்மைச்சாலை(Main Road)
Cuddalore
606111

Alerts

Be the first to know and let us send you an email when அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்(Temple):

Share