Sai Guru Trust

Sai Guru Trust Everyone must work out his karma, be it is good or bad, one has to finishout His karmic deeds. Om Sairam Shirdi Sai Baba Temple.

Sai sadguru will help us to overcome karmic sufferings if we totally surrendered to His Lotus Feet and follow His advices on on our day to day life.

கோயில் கும்பாபிஷேகம் என்பது என்ன விளக்கம்?கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்ப...
05/11/2024

கோயில் கும்பாபிஷேகம்
என்பது என்ன விளக்கம்?

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

04/11/2024

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?
நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்
தெரிந்து கொள்வோம்
01) பார்க்காத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்,.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்,.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்,.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்,.
26)உழைக்காத உடலும் கெடும்,.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்,.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்,.
41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்,.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்,.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.
இந்த 60 ஐ யும் அறிந்து கொண்டால்?
நமது வாழ்க்கை கெடவே கெடாது....

*அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.'*தன்னை நம்பி வர்றவங்களை காக்கும் குணம் உடையவர்கள்....
03/11/2024

*அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.'*

தன்னை நம்பி வர்றவங்களை காக்கும் குணம் உடையவர்கள். அது எந்த நேரமானாலும் சரி. அவர்களுக்கு அளிக்கும் உதவியைத் தயங்காமல் செய்பவர்கள்.

ஒரு நாள் அர்ஜுனன் கண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, நம்முடைய சகோதரர் தர்மர் அனைவருக்குமே தானம் செய்கிறார். இருப்பினும் கொடைவள்ளல் என்று கர்ணணை ஏன் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சந்தேகமாக கேட்க,

கண்ணனோ தன் மாயச்சிரிப்புடன் இதற்கு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் நீ பார்த்து புரிந்துகொள்வதே சிறந்தது என்று தன் சக்தியால் விடாமல் மழை பொழிய செய்த கண்ணன், அதன் பிறகு சில நாள் கழித்து மாறுவேடத்தில் இருவரும் தர்மரிடம் செல்கிறார்கள்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று தர்மர் கேட்க, எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் இருக்கிறது. ஆனால் விறகுகள் நனைந்து விட்டதால் அவற்றைச் சமைப்பதற்கு விறகுகள் தேவை. தந்து உதவுங்கள் என்று கேட்டனர்.

அதைக் கேட்ட தர்மன் அரண்மனை சமையல் களஞ்சியத்தில் விசாரித்து, பொன், பொருள் என்றால் என்னால் உடனே தந்துவிட முடியும். ஆனால் நீங்க கேட்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். தற்சமயம் எங்களிடமும் அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கே இருக்கின்றது. அதனால் தர இயலாத சூழலில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால், இங்கே வந்து விருந்துண்ணலாமே என்றார்.

பிறகு வருதாகக் கூறிய கண்ணன் அர்ஜுனனை கர்ணனிடம் அழைத்துச் சென்று அங்கேயும் இதே காரணத்தைக் கூறினார்கள். கர்ணன் சற்றும் யோசிக்காமல், தன் அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து, அவற்றைக் கொண்டு வந்து அவர்கள் இருவரிடம் தந்து இதைப் பயன்படுத்தி சமைத்து பசியாறுங்கள் என்று சொன்னார்.

அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, கண்ணன் அவனைப் பார்த்து இப்போது புரிகிறதா, அர்ஜுனா கர்ணனை ஏன் மக்கள் கொடைவள்ளல் என்று சொல்கிறார்கள் என்று கேட்க, அர்ஜுனனும் அதை ஒப்புக் கொண்டான். நம்மிடம் இருப்பதை அளிப்பதை விடவும், நம்பி வந்துவிட்டவர்களுக்கு தேவையானதை அளிப்பதே சிறந்த தானம் என்கிறது இக்கதை.

இப்போது புரிகிறதா... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது மறுவி அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்று மறுவி வந்த பழமொழி பற்றி.

🟨🟨. ♦️. 🟥🟥*எல்லாம் அவன் செயல்*         *சர்வம் சிவமயம்*     🟨🟨. ♦️. 🟥🟥*"*தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டு...
03/11/2024

🟨🟨. ♦️. 🟥🟥

*எல்லாம் அவன் செயல்*

*சர்வம் சிவமயம்*

🟨🟨. ♦️. 🟥🟥

*"*தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்*

எதை கேட்க வேண்டும்?"*

*ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.*

பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது,

என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.

ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே'என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

*1. கர்வம்*
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்"என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

*2. ஆசை*

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது.

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.

முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

*3. திருப்தி:*

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்

"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)

என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது"என்கிறார்.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*4. இரக்கம்:*

நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".

இரக்க குணம் உள்ளவனுக்கு,
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல,
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*5. மோக்ஷம்*

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன்.
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது?
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.

இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று.
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.

🟨🟨. ♦️. 🟥🟥

*எல்லாம் அவன் செயல்*

*சர்வம் சிவமயம்*

🟨🟨. ♦️. 🟥🟥

சிந்திக்க வேண்டிய பதிவு.ஒரு முஸ்லிம் எழுத்தாளர் இந்தக் கட்டுரையின் மூலம் இந்து சமூகத்திற்கு சில உண்மைகளை  உணர்த்தியுள்ளா...
03/11/2024

சிந்திக்க வேண்டிய பதிவு.

ஒரு முஸ்லிம் எழுத்தாளர் இந்தக் கட்டுரையின் மூலம் இந்து சமூகத்திற்கு சில உண்மைகளை உணர்த்தியுள்ளார். இது உண்மையிலே சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
உங்கள் திருமணமான பெண்கள் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள். அவர்களை தடுத்தது யார்?
உங்கள் நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் உங்கள் அடையாளமாக இருந்தது. நீங்கள் வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதுகிறீர்கள். ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் திலகம் அணிவதை நிறுத்தி விட்டது மட்டுமல்ல, உங்கள் பெண்களும் ஃபேஷன் மற்றும் நவீனத்துவம் என்ற பெயரில் நெற்றியில் திலகம் பூசுவதை விட்டுவிட்டீர்கள்.
உங்கள் பாரம்பரிய விழாக்களை மறந்துவிட்டீர்கள். எங்கள் சமூகத்தில், ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டால், அவர் தனது தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு, இபாதாத் / நமாஸ் மற்றும் இபாதாத் / நமாஸை தனது வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்.
ஆனால் இந்துக்கள் பெரும்பாலோர் கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டீர்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் சுற்றுலா போல செல்கிறீர்கள். அதுவும் பெரும்பாலானோர் பகவானிடம் இருந்து ஏதாவது ஒன்றை விரும்பும்போதோ அல்லது துன்பத்தில் இருக்கும் போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர்.
உங்கள் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு நீங்கள் சொல்கிக்கொடுத்து ஆன்மீகத்தை அவர்களுக்கு உணர்த்தி வழி நடத்த தவறி வருகிறீர்கள்.
உங்கள் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் படித்த பிறகு ஆங்கில கவிதைகள் சொல்வதில் நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகள் ஆன்மீக ஸ்லோகங்களை அறிந்து கொள்ளாததைப் பற்றி கவலை கொள்வதில்லை.
எங்கள் வீடுகளில் ஒரு குழந்தை பேசத் தொடங்கும் போது, ​​பெரியவர்களுக்கு "சலாம்" சொல்லக் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் வணக்கம், நமஸ்காரம் மற்றும் பிரணாமத்தை ஹலோ, ஹாய், டாடா, பைபை, ஸீயூ என்று மாற்றிவிட்டீர்கள்.
எங்கள் குழந்தைகளும் கான்வென்ட்டில் இருந்து திரும்பிய பிறகு, உருது, அரபு மொழியைக் கற்று, மதப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். உங்கள் பிள்ளைகள் ராமாயணம், கீதை, திருவாசகம் போன்ற ஆன்மீக நூல்களை நீங்கள் படிக்க வைப்பதில்லை.
நாகரீகம், வரலாறு, மரபுகள், பாரம்பரியம் போன்ற அனைத்தையும் நீங்கள் அதிகம் கொண்டிருந்தீர்கள். குருட்டு நவீனத்துவம் என்ற பெயரில் அனைத்தையும் தியாகம் செய்து வருகிறீர்கள். ஆனால் நாங்கள் எங்களுக்கான மரபுகளையும், பாரம்பரியத்தையும் மறக்காமல் பின்பற்றுகிறோம். அதுதான் உங்களுகுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். உங்கள் வேர்களுடனான உறவை முறித்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் வேர்களை நேற்று அல்லது இப்போது அல்லது வரும் நாட்களிலும் விட்டுவிடவே விரும்பவில்லை.
நீங்கள் திலகம், யக்ஞோபவீதம், சிகை அணிவதைத் தவிர்க்கிறீர்கள். உங்கள் பெண்கள் திலகம், வளையல்கள் மற்றும் மங்களசூத்திரம் அணிவதற்கு வெட்கப்படுகின்றார்கள். நீங்கள் அவற்றைத் தேவையற்றதாகக் கருதுகிறீர்கள் மற்றும் உங்கள் அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டுவதில் சங்கடமாக உணர்கிறீர்கள்.
நவீனத்துவம் என்ற பெயரில், அதிகாலை 4 - 5 மணிக்கு எழும் பழக்கத்தை விட்டுவிட்டு, உங்கள் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மரபுகள், சடங்குகள் செய்ய தவறிவிட்டீர்கள்.
உங்கள் மொழி, உங்கள் பாரம்பரிய ஆடை அணிகலன்கள் ஆகியவற்றைப் பின்தங்கிய நிலை என்று நினைத்துக் கொண்டு விட்டீர்கள்.
ஒரு சமூகம் தன் அடையாளங்களைப் பாதுகாக்க இயற்கையாகவே விழிப்புடன் இருக்க வேண்டும் ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக உங்கள் சமூகத்தின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறீர்கள்.
உங்கள் நாகரீகம், கலாச்சாரம் அழிந்துவிடுமோ என்ற பயம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று சிந்தியுங்கள்.
உண்மையான பிரச்சனை என்னவென்றால், உங்கள் சமூகம் விழித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் நீங்களே உங்களை நடைமுறைக்கு உதாரணமாகக் காட்டவில்லை. உங்கள் புகழ்பெற்ற மரபுகளில் வேரூன்றியவராக மற்றவர்கள் உங்களைப் பார்ப்பதில்லை. எனவே சமூகம் மட்டுமல்ல, உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களும் உங்கள் மதப் பேச்சுகளைக் கேட்பதில்லை.
நாங்கள் யோகாசனங்களுடன் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் வாசிப்போம். தொப்பி, உடை போன்றவற்றின் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதில் இப்போதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
பல தசாப்தங்களாக உங்கள் இந்து அடையாளத்தை அழிப்பதில் நீங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் பாரம்பரியத்தை நிலைநிறுத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்*.
மற்ற சமூகங்களைக் கண்டு கலங்குவதற்குப் பதிலாக, உங்கள் மரபுகளில் நம்பிக்கையைப் பேணுவது எப்படி, அவற்றில் பெருமை கொள்வது எப்படி, விழிப்புடன் இருப்பதன் மூலம் பாரம்பர்யத்தை பாதுகாப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்.
முதலில் உங்கள் நாகரீக அடையாளம் மற்றும் அதன் சின்னங்களை அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள உங்கள் சமூக கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
உங்களையும் உங்கள் சமூகத்தையும் புத்திசாலிகள் என்று நீங்கள் கருதினால், உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அதன் இருப்பை வெளிப்படுத்தி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், உங்கள் தர்மத்தையும் காப்பாற்றி வாழ பழகிக் கொள்ளுங்கள்.
வளர்க பாரம்பரியம்....
எந்த மதமாக இருந்தாலும் மதப் பண்பாடுகளைப் பின்பற்றி அதன் வழி நடப்பதே நல்லது. காரணம் மதக்கோட்பாடுகள் அனைத்துமே மனிதனை நெறிமுறைப் படுத்தவே முன்னோர்களால் வகுக்கப்பட்டன.
சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவன் மனிதன் மட்டுமே.....
நாமும் நமது குழந்தைகள் அனைவரையும் கோவில் சென்று வழிபாட்டு முறையை கற்றுக்கொள்ள. செய்யவேண்டும்.

உண்மைதான்.
இந்த விஷயங்களை ஒரு முஸ்லீம் எழுத்தாளரின் கட்டுரை வழியாக தான் இந்து மக்களுடைய புரிதலுக்காக/விழிப்புணர்வுக்காக தெரிந்துகொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில தான் நமது இந்து சமுதாய மக்கள் இருக்கிறார்கள்.
இந்த காலத்துல 40 45 வயதுடைய எந்த ஒரு ஆண்/பெண்களும் அவர்களுடைய பெற்றவர்கள் & பெரியவர்கள் அறிவுறைகளை மதிப்பதில்லை/ஏற்பதில்லை.
அப்படி இருக்க அவர்களுடைய சந்ததிகள் எப்படி இருப்பாங்க என்றுகூட நினைக்க மாட்டாங்க.o

02/11/2024

கண்ணபிரானும், அர்ஜுனனும் இருவரும் தேரில் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை பார்த்து அது புறா தானே அர்ஜூனா என்றார் கண்ணன்.

அர்ஜுனனும் ‘ஆம்’ என்றான்.

‘இல்லையில்லை கழுகு மாதிரி தெரிகிறது’ என்றார் கண்ணன்.

ரொம்ப சரி. அது கழுகே தான்’ என்றான் அர்ஜுனன்.

‘மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை’ என்றதும், ‘அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான்’ என்று மூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.

‘என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே!

அது என்ன பறவை என தெளிவாகச் சொல்!’ எனக் கண்ணன் அர்ஜுனனிடம் வினவினான்.

‘கண்ணா! என் பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப் பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்?

நீயே எல்லாம். நீ மனது வைத்தால் சில கணங்களுக்குப் பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே! ஆக, இப்படிப் பட்ட உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன்’ என்றான் அர்ஜூனன்.

அதனால் தான் கண்ணனுக்கு, அர்ஜுனனை மட்டும் ரொம்பப் பிடித்தது. அதாவது அர்ஜுனன் தன் மேல் வைத்து இருந்த விஸ்வாசத்தை, நம்பிக்கையை கண்ணன் விரும்பினார்.

ஆக, பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! என்று புராணங்களே கூறுகையில். இது நம்புகிற மாதிரி இல்லையே என்று வாதம் செய்தால், மனிதனானவன் பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க இயலாது.

இறைவனின் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே முதல் படி என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த அடிப்படை தத்துவத்தை புரிந்து கொண்டால் போதும், பக்தி மார்கத்தில் மனம், மணம் கமழும்.
நமோ நாரயணா.

*தினமும்* *இந்த* *சிவ* *மந்திரத்தை* *உச்சரிப்பவர்கள்* *உடம்புக்குள்* *கண்* *திருஷ்டியும்* *நுழையாது* , *தீய* *சக்தியும்*...
02/11/2024

*தினமும்* *இந்த* *சிவ* *மந்திரத்தை* *உச்சரிப்பவர்கள்* *உடம்புக்குள்* *கண்* *திருஷ்டியும்* *நுழையாது* , *தீய* *சக்தியும்* *நுழையாது*...

நல்ல நேரம் நடக்கக்கூடிய சமயத்தில் கூட சிலருக்கு கஷ்டம் வரும். அதற்கு காரணம், கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி இருக்கும் *கண்* *திருஷ்டியும்* , *கெட்ட* *சக்தியும்* தான். இந்த இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள, நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அது எப்படி. மந்திர கட்டு, மாந்திரீகம், தாந்த்ரீகம் என்று போக வேண்டாம்.

சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை தினம் தோறும் உங்கள் வாயால் உச்சரித்து வந்தாலே போதும். அந்த மந்திரம் உங்கள் உடம்பைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையமாக வந்துவிடும். எதிரி தொல்லை, கண் திருஷ்டி, தீய சக்தி, எதிர்மறை ஆற்றல் இவைகளில் இருந்து உங்களை பாதுகாக்க போகும் அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

*சிவ* *மந்திரம்*

ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.

இது தீய சக்திகள் அனைத்தையும் தன்னிடம் விட்டு விரட்டுவதாகும். சரி, மந்திரம் தெரிந்து விட்டது. இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். எத்தனை முறை உச்சரிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் முடிந்தால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஈசனை மனதார பிரார்த்தனை செய்து, குலதெய்வத்தை நினைத்து, பிறகு இந்த மந்திரத்தை தினமும் *27* முறை சொல்லலாம்.

விளக்கு ஏற்ற முடியாது என்பவர்கள் பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு உங்களுடைய அன்றாட வேலையை துவங்கலாம். மற்றபடி இந்த மந்திரத்தை உச்சரிக்க பெரிசாக பூஜை புனஸ்காரங்கள் என்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்ய தேவை கிடையாது.

சில பேருக்கு வாழ்க்கையில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று யூகிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். கூடவே இருக்கும் நண்பன் எதிரியாக செயல்படுவான். பின்னால் இருந்து குழி தோண்டுவான், இதனால் வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை ஒரு மனிதனுக்கு இருக்கும். இப்படிப்பட்ட எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

10 பேர் கூடி இருக்கும் இடத்தில் உங்களுக்கே தெரியாமல் குழப்பம் வரும் அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் குழப்பம் தெளிவாகும். அலுவலகம் தொழில் செய்யும் இடம் உங்களுடைய கடை எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து பலன் பெறலாம்

மிகப்பெரிய ரகசியங்களை கூட சித்தர்கள் மந்திரம் என்ற பெயரில் இரண்டு வரியில் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் பிரயோகப்படுத்துவதில் தான் நன்மையை அடங்கி இருக்கிறது. அதில் ஒரு அற்புத சக்தி வாய்ந்த மந்திரம் தான் இது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைவதை உணருவீர்கள்.

வரக்கூடிய பிரதோஷம் நாளில் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில், இந்த இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். 48 நாள் தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உங்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அது ஒரே நாளில் கிடைத்துவிடும். இந்த மந்திரமும் இந்த பதிவும் உங்களுக்காக சிவபெருமான் கொடுத்த பிரசாதம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல நாட்களாக பிரச்சனையில் சிக்கி இருக்கும் உங்கள் வாழ்க்கை, விடுதலை பெறவேண்டும்....🌲🌲🌲

கோவை இடையர்பாளையம் ஸ்ரீ சீரடி சாயி குருவருள் திருக்கோயிலில் பாபாவின் குருவார தீபாவளி திவ்ய தரிசனம்
31/10/2024

கோவை இடையர்பாளையம் ஸ்ரீ சீரடி சாயி குருவருள் திருக்கோயிலில் பாபாவின் குருவார தீபாவளி திவ்ய தரிசனம்

🌿தீபாவளி பற்றிய வியப்பூட்டும் முத்தான முப்பது செய்திகளை அறிவோம்* ...... 🌿சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்...
30/10/2024

🌿தீபாவளி பற்றிய வியப்பூட்டும் முத்தான முப்பது செய்திகளை அறிவோம்* ......

🌿சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் திருவடிகள் சரணம்🌿

தீபங்கள் ஜொலிக்கின்ற தீபாவளி
நாளை தீபாவளி

1. முன்னுரை

தித்திக்கும் தீபாவளி! திகட்டாத தீபாவளி !

எத்திக்கும் கொண்டாடும் இனிய நல்தீபாவளி!

மத்தாப்பு, புத்தாடை, மனம் இனிக்க பலகாரம்,

புத்துணர்ச்சி தந்திடும் புதுமையான பண்டிகை!

வாருங்கள்! கொண்டாடி வளமாக வாழ்ந்திடுவோம்!

வாழ்த்துக்கள் பல சொல்லி, தீப ஒளி ஏற்றிடுவோம்!

இதோ தீபாவளி வரப்போகிறது. தீபாவளி என்பது ஒரு பண்டிகையா? விழாவா? விரதமா? உற்சவமா? என்றால் எல்லாம் தான் என்று சொல்லலாம். தீபாவளி மகிழ்ச்சிக்குரிய உற்சவம். கடைபிடிக்க வேண்டிய நோன்பு. ஒவ்வொரு வீட்டிலும் உற்சாகம் தருகின்ற உன்னதமான திருவிழா. ஆம். வணிகர்களுக்கு வியாபார மகிழ்ச்சியையும், நுகர்வோருக்கு வாங்கிய ஆனந்தத்தையும் தரும் அற்புதத் திருவிழா. அகிலமெல்லாம் கொண்டாடும் திருவிழா, அதுதான் தீபாவளித் திருவிழா. அந்த தீபாவளித் திருநாளின் உன்னதத்தை 30 முத்துக்களாகக் காண்போம்.

2. தீபாவளி என்கின்ற சொல்லுக்கு பொருள்?

தீபாவளி என்கின்ற சொல்லுக்கு பொருள் தீபங்களின் வரிசை என்பதுதான். தீப +ஆவளி என்பதுதான் தீபாவளி ஆகிவிட்டது. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். நாமாவளி = நாமங்களின் வரிசை. அதைப்போல் இது தீபங்களின் வரிசை. ஆக, இந்த பண்டிகையின் பிரதானமான விஷயம் என்ன என்று சொன்னால் தீபங்களை வரிசையாக ஏற்றுவதுதான் முக்கியம். தீபங்களை ஏற்றுவதற்கு என்ன காரணம்? வெளிச்சம் ஏற்படுவதற்கு, துக்கங்கள் நீங்குவதற்கு தீபங்களை ஏற்றுகின்றோம்.

சவம் என்றால் துக்கம் என்று பொருள் உற்சவம் என்று சொன்னால் துக்கத்தை நீக்கிக் கொள்ளுதல் என்று பொருள். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு விடிவு காலமாக ஒரு தீபத்தை ஏற்றி வைக்கிறோம். அது நமக்கு தெளிவைத் தருகிறது. துக்கமாகிய இருட்டை விலக்குகிறது .நல் வாழ்வாகிய வெளிச்சத்தைத் தருகிறது. இறையருளை பெற்றுத் தருகிறது அதற்காகத்தான் தீபங்களை நாம் ஏற்றுகின்றோம்.

3. நள்ளிரவுப் பண்டிகை

தீபாவளி, ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருகிறது. அதற்கு அடுத்தநாள் நிறைந்த அமாவாசை. பெரும்பாலும் தீபாவளி நள்ளிரவுக்கு பின் விடிகாலையில் கொண்டாடப்படுகின்ற பண்டிகை . அமாவாசைக்கு முந்தின இரவு என்பதால் அடர்த்த இருட்டு இருக்கும். அந்த அடந்த இருட்டு தான் நம்முடைய அஞ்ஞானம் என்பது. அஞ்ஞானம் எப்பொழுதும் துன்பத்தைத் தருவது. தெளிவின்மையைத் தருவது.

அதை விரட்ட வேண்டும் என்று சொன்னால், நாம் ஆன்மிக வெளிச்சத்தை ஏற்ற வேண்டும். அந்த வெளிச்சத்தை இருட்டில் ஏற்றுவதுதான் தீபாவளியின் அடிப்படையான நோக்கம். அதன் மூலமாக நாம் ஆன்மிக ஞானத்தையும் அந்த ஞானத்தின் விளைவான பக்தியையும், அந்த பக்தியின் விளைவாக தெளிவையும் பெறுகிறோம். அதற்குப் பிறகு நம்முடைய வாழ்க்கை தெளிந்த நீரோடை போல வெற்றி மீது வெற்றி வந்து சேரும் வாழ்க்கையாக மலர்கிறது.

4. மலர்ச்சியைக் கொண்டாடுகின்ற பண்டிகை

விடிகிறது “விடியல்” என்றாலே புது வாழ்வு பிறத்தல் என்று தானே அர்த்தம் சதுர்த்தசி நள்ளிரவில் தீபங்களின் வரிசையை நாம் ஏற்றி வைக்கும் பொழுது இருட்டு அகல்கிறது சற்று நேரத்தில் மிகப் பிரகாசமான தீபமான சூரியனும் உதிக்கிறது. ஆம். உலகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் கொண்டாடுகின்ற பண்டிகை தான் தீபாவளி. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய தினங்களில் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டிபடி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 14, (அக்டோபர் 31 )வியாழக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில், சதுர்த்தசி வருக்கிறது.இன்று தான் லஷ்மி பூஜையும் செய்ய வேண்டும். நாளை அமாவாசை என்பதால் அமாவாசை தர்பணாதிகளும், கேதாரகௌரி நோன்பும் அனுஷ்டிக்க வேண்டும்.

5. உலக நாடுகளில் தீபாவளி

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்திற்கு மட்டும் உரிய பண்டிகை அல்ல. இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், அமெரிக்கா ,நியூஜிலாண்ட் ,ஆஸ்திரேலிய , இங்கிலாந்து,மத்திய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

6. ராமாயணத்தில் தீபாவளி

ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டான். துறவிகளைப் பாதுகாக்கவும், அசுரர்களை அழிக்கவும் அந்த வனவாசம் பயன்பட்டது. அதற்குப் பிறகு வனவாசத்தில் சீதாதேவி ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் அசோகவனத்தில் தனிச் சிறை வைக் கப்பட்டாள் . இதை ஆழ்வார் பின்வரும் பாசுரத்தில் உறுதி செய்கிறார்.

தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,

கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,

களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,

அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.

ராமன் சுக்ரீவனோடு சேர்ந்து, அனுமனையும் அழைத்துக் கொண்டு, இலங்கை சென்று ராவணனை வென்று, சீதா தேவியை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பினார். ராமனைப் பிரிந்து ஏக்கத்தோடு இருந்த மக்கள் ராவணனை வென்று ,திரும்பவும் ஆட்சி கட்டிலில் அமர அயோத்திக்கு திரும்புவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர். வீடெங்கும் தீப மேற்றினர் அயோத்தியே ஜொலித்தது. அப்படி தீபங்களின் ஜோதியில் இராமன் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளித் திருநாள் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளித் திருநாளை அயோத்தி மக்கள் இராம பிரானோடு சேர்ந்து கோலாகலமாகக் கொண்டாடினர். இன்றைக்கும் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியில் தீபங்கள் ஜொலிக்க தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

7. வராக புராணத்தில் நரகாசுரன் கதை

புராணக் கதைகளின்படி, திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்). பலமானவன் என்றால் தீமைகளில் பலமானவன். உலகத்தில் உள்ள அத்தனைத் தீமைகளையும் ஒரு உருவம் செய்தால் அது தான் பவுமன். அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான்.

பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டபோது, எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான். அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒருநாள் இறந்தே தீரும் என்றார். பின்பு, நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

8. மனிதன் அசுரனான்

பொதுவாக அசுரர் தேவர் என்பது குணத்தைப் பொறுத்த விஷயமே. மனிதன் என்பது மத்திய நிலை. அவன் மனதால் உயர்ந்து பிறருக்கு உபயோகமானால் “தேவன்” ஆகிறான். இதை வள்ளுவர், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.” என்றார். உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் தெய்வமாக மதிக்கப்படுவான். அதேநேரம் மனிதன் தன் குணத்தில் இருந்து இறங்கினால் அவன் அசுரனாகிறான்.

9. கொடுமைக்கும் முடிவு

பூமா தேவிக்கு மகனாகப் பிறந்து, குணமிழந்து, வர பலத்தால் அரக்கத்தனம் கொண்ட அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. நர(மனிதன்)+ அசுரன் = நரகாசுரன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். இதனால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இன்னொரு விதத்தில் உயிரினத்துக்கு ஏதேனும் ஒரு வகை அச்சுறுத்தல் ஏற்படும்போது ,அதன் அழிவுக்கான தேவையும் உருவாகிவிடுகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும் சரியானதே . ஆனால் அதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது.வராக அவதாரத்தின் போது நரகாசுரன் தோன்றினாலும் கிருஷ்ணாவதாரம் வரை அவன் கொடுமை கட்டுக்குள் இருந்தது.

10. நரக சதுர்த்தி தீபாவளியானது

நரகாசுரனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, தேவர்கள் முறையிட்டனர். கிருட்டிணர் அவனோடு போர் தொடுக்க முடிவெடுத்தார். தனது மனைவியரில் ஒருவரான ச‌‌த்யபாமா‌ (பூமாதேவியின் அவதாரம்)வை அழைத்துக்கொண்டு போருக்குச் சென்றார். பெரும் போருக்கு பிறகு அன்னை கையாலேயே நரகாசுரன் வரம் பெற்றபடி மாண்டான். அவன் கடைசி நேரத்தில் தன தவறை உணர்ந்து பகவானிடம் வரம் கேட்டான். என்னை மக்கள் நினைவில் வைத்து, என் முடிவை (தீமையின் முடிவை) ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்க, அவனுக்கு கொடுத்த வரத்தின் படி, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி விடியல் காலை நேரம், தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்..

11. தீமை அழிந்து நன்மை பிறந்த நாள் தீபாவளி

தீமைகளின் ஒரு உருவகம் தான் நரகாசுரன். அதர்மத்தின் குறியீடு நரகாசுரன். அதனை பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தெய்வமாகிய கண்ணனின் பேராற்றல் உதவியோடு வென்று உலகத்தைச் சந்தோஷப்படுத்திய தினம்தான் தீபாவளி. நம்மை வருத்திய நோய் தீர்ந்து விட்டால் நாம் சந்தோஷப்படுவோம் அல்லவா! அதைப்போல உலகை வருத்திய நரகாசுரன் எனும் தீமை அழியும் போது கிடைத்த ஆனந்தத்தைத் தான் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். அன்று வீட்டில் நாம் பட்டாசுகள் வெடித்து, புது ஆடைகள் தரித்து, இனிப்புகள் பலகாரங்கள் செய்து, குதூகலமாகக் கொண்டாடுகின்றோம்.

12. நரகாசுரன் சொல்லும் செய்தி இதுதான்

பெரும்பாலான கதைகள் ஸ்தூல வடிவில் பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும் படி இருப்பினும் அதன் சூட்சும வடிவம் நமக்கு சில அற்புதமான செய்திகளைச் சொல்லத்தான் செய்கிறது.அப்படி நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு சில விஷயங்களை தீபாவளிக் கதை அழுத்தமாகச் சொல்கிறது. சக்தியோ அறிவோ பணமோ பதவியோ இவை எல்லோரையும் வாழ வைக்கத்தானே தவிர, மற்றவர்களைக் கொடுமைப்படுத்த அல்ல என்பதை உணர வேண்டும். எத்தகைய ஆணவமும் வர பலமும் தலைக்கு ஏறினால் அது தலையை எடுத்து விடும். அழிவுக்கு வழிவகுக்கும். இப்போதைய சூழலில் இதைச் சிந்திக்க வேண்டுமென்றால், பண பலமும் பதவி பலமும் கொண்டு பிறரை இம்சித்தால்,அது அவர்கள் அழிவுக்கு வழிகோலும்.

13. அழிவும் ஆக்கமும் அவரவர்கள் கையில்

எதைக் கையில் எடுக்கிறோமோ அதுவே திரும்பும். நன்மையைக் கையில் எடுத்தால் நன்மையே நடக்கும். தீமையைக் கையில் எடுத்தால் தீமையே திருப்பும். இதை கிராமத்தில் “அரிவாள் எடுத்தவன் அதனாலே முடிவான்” என்பார்கள். ஒருவன் கையிலெடுக்கும் விஷயமே அவனை வாழ வைக்கிறது அல்லது அழிக்கிறது. தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்காக செலவிடுகின்ற பொழுது அவனும் மற்றவர்களும் வாழ்கிறார்கள். தன்னுடைய பலத்தை மற்றவர்கள் அழிவுக்காகச் செலவிடுகிறபோது அவனே அழிகிறான். அப்படித்தான் நரகாசுரன் அழிந்தான். நீதியை நிலை நாட்டும் பொழுது பகவானோ, பூமித்தாயோ புத்திர பாசத்தைக் காட்டுவது இல்லை. காரணம் நாம் அனைவருமே பகவானுக்கு புத்திரர்கள்தான்.

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!”

(எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதரிப்பேன்) என்றார், கீதையில் கண்ணன். நரகாசுரனை பிள்ளை என்று பார்க்கவில்லை. அவன் தீமையைத்தான் பார்த்தார்.

14. கேதார கௌரி விரதம் (தீபாவளி நோன்பு)

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்தார். கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தினை அனுஷ்டிப் பதுண்டு.கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

15. எப்படிக் கொண்டாடுவது?

முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார். வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளதை வைக்கவேண்டும். முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன் மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு

மேற்கொள்ளப்படுகின்றது.

16. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சு

வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப் படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றப்படுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு அமாவாசை நவம்பர் 1 ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. மஹா லட்சுமிக்குரிய அந்த நாளில் பிரதோஷ வேளைக்குப்பின் நோன்புக்கயிறு கட்டப்படுகிறது.

நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப் பட்டப்பகுதியில் அணியப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர்.முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு பூஜையின் மறுநாள் நீர்நிலைகளில் விடப்படுகிறது. தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் (ஒரே நாள் விரதமாக) கடைபிடிக்கப்படுகிறது.

17. முதல்முதலில் தமிழ்நாட்டில் தீபாவளி

தீபாவளி பண்டிகை கால தேச வர்த்தமானத்தின் அடிப்படையில் பல மாற்றங்களோடு இன்று கொண்டாடும் நிலைக்கு வந்திருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

தமிழகத்தில் முதன்முதலாக கி.பி. 15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின்போது வான வேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம்.

18. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்

ஹர்மந்திர் சாஹிப், அல்லது தர்பார் சாஹிப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக “பொற்கோயில்” என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம்தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அதை நிறுவினார். இந்தப் புனித கோயில், ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும். 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர். 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் (தீபாவளி)கொண்டாடுகின்றனர்.

19. சமணர்களின் தீபாவளி

வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒருக்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு வர்த்தமானர் என்று பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர். அவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை.இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது 36-வது வயதில் மகாவீரர் உலக வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளத் துவங்கினார்.

இவர் 12 ஆண்டு காலம் கடும் தவம் புரிந்தார்.துறவறத்தை மேற்கொண்ட பதிமூன்றாவது ஆண்டு ரிஜூபாலிகா நதியின் வடகரையில் அமர்ந்து உயர்ந்த ஞானம் பெற்றார். இதற்குப் பின் இவருக்கு கைவல்யர், எல்லாமறிந்தவர், ஜீனர் (வென்றவர்) மகாவீரர், பெருவீரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

20. புத்தரும் தீபாவளியும்

பௌத்தத்தில், தீபாவளியை ‘தீபதான உற்சவம்’ என்றும் அழைப்பர். கதைப்படி, புத்தர் போதி கயாவில் மெய்ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர். அவனைப் பார்க்க விரும்பினார். இதற்காக, புத்தர் இராசகிரக மகாநகருக்கு அருகிலுள்ள மங்களகிரி என்ற மலையிடத்தில் இருந்தபோது, புத்தரை கபிலவத்துவுக்குத் திரும்பி வரும்படி சுத்தோதனர் ஒரு தூதரை அனுப்பினார். ஆனால், தூதுவர் புத்தரைச் சந்தித்த பிறகு அவருடைய சீடரானார். முந்தைய தூதர் வராததால், சுத்தோதனர் மற்றொரு தூதரை அனுப்பினார், அவரும் புத்தரின் கீழ் துறந்தவரானார்.

21. தீபதான உற்சவம்

பல தூதர்களை ஒவ்வொருவராக அனுப்பினார் மன்னர். அவர்கள் பெருமானின் கீழ் உண்மையை உணர்ந்து துறவிகள் ஆனார்கள். புத்தருடன் மங்கள கிரியிலிருந்து யாரும் திரும்பவில்லை. கடைசியாக, சுத்தோதனர் தனது விசுவாசமான மந்திரி காலோதயனை அனுப்பினார், அவர் பின்வாங்க மாட்டார். இராச கட்டளையை நிராகரிக்க மாட்டார் என்று மன்னர் நம்பினார். காலோதயன், அரச தேரோட்டியான சந்தகனுடன் மங்களகிரியை நோக்கிச் சென்றான்.

புத்தரின் உபதேசத்தைக் கேட்ட காலோதயன் பெருமானின் மாணவனாக மாறினாலும், புத்தரை மீண்டும் கபிலவத்துவிற்கு வரச் செய்தான். புத்தரும் அவரது துறவிகணங்களும் கபிலவத்துவுக்குச் செல்ல அறுபது நாட்கள் ஆனது. பெருமானும் அவருடைய மாணவர்களும் கபிலவத்துவிற்கு விசயம் செய்த நாளன்று, நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விளக்குகளை வரிசையாக வைத்திருந்தார்கள். புத்தபெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களைத் வாங்க முடியாத அனைத்து ஏழைகளுக்கும் வறியர்களுக்கும் மக்கள் தீபம் அளித்தனர்.

இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை.புத்தரின் நகர விஜயத்தை கபிலவத்து தீபங்களை தானமாக அளித்து, ஊர் முழுவதும் அவற்றைத் தொடராக அமைத்து, வரவேற்றத்தால் அன்றைய தினம் ‘தீபதான உற்சவம்’ என்றும் ‘தீபாவளி’ என்றும் அழைக்கப்பட்டது. மகாராசா அசோகர் மகாத்தவிரர் மௌகளிப்புத்திரர் மற்றும் இந்திரகுப்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மௌரியத்தலைநகர் பாடலிபுத்திரத்தின் ‘அசோகாராமம்’ என்ற தனது மடாலயத்தில் தீபதான உற்சவத்தை கொண்டாடினார்.

22. ஏன் தீபாவளியை மகிழ்ச்சிக்குரிய பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்?

மற்ற பண்டிகைகள் அநேகம் இருந்தாலும் தீபாவளிக்குப்பின்தான் அந்த பண்டிகைகள். இந்த தீபாவளி சந்தோஷத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. அதையும் தெரிந்து கொள்வோமே! தீர்க்கதமஸ் என்ற முனிவர். அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே, அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். அவர் ஆசிரமத்துக்கு ஒருமுறை சனாதன முனிவர் வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார்.

23. விரதம் என்றாலே பட்டினிதான். தீபாவளிக்கு மட்டும் விதவிதமான பலகாரங்களா?

பொதுவாக, மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என தீர்க்கதமஸ் கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.இந்த விரதத்தை எப்படிப் பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். அப்படி விளக்கியதுதான் தீபாவளிப் பண்டிகை.

24. கங்கா ஸ்நானம், எண்ணெய் குளியல் ஏன்?

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி (தீபாவளி) அன்று அனைவரும் அதிகாலையில் எழ வேண்டும். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்ய வேண்டும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேயஸ்மின் ஸந்நிதிம் குரு (ஓ புனித நதிகளான கங்கை , யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா , சிந்து மற்றும் காவேரி ; தயவு செய்து இந்த தண்ணீரில் இருங்கள் (அதை புனிதமாக்குங்கள்) என்று பொருள். எண்ணெய் குளியல் என்பது துக்கம், சோகம் நீங்கி சந்தோஷத்தைக் கொண்டாடுவதன் அடையாளம். சுபம் கொண்டாடுதல் என்பார்கள்.

25. இதெற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும்

எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப் பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் இருப்பதாக ஐதீகம்.

இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் நம் முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள். அன்று மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியோடு இருப்பர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

26. தலை தீபாவளி

மகா விஷ்ணு சமுத்திரராஜன் மகளான மஹாலஷ்மியை மணந்து கொண்டார். அவர் தலை தீபாவளியை மாமனார் வீட்டில் கொண்டாடுகிறாராம். (பாற்கடல் மாமனார் வீடல்லவா). எனவே, தலைதீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் மாமனார் வீட்டில் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன. இதன் மூலம் மஹாலஷ்மியின் பூரண அருள் தம்பதியருக்கு கிடைக்கிறது.

27. எம தீபம் ஏற்ற வேண்டும்

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகால மரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நமது முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கிறோம். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே.

28. ஆற்றில் தீபங்கள்

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யம தர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே, அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்குச் சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு ஆசிர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும்.

மேலும், சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார். வடமாநிலங்களில் அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

29. தன்வந்தரி ஜெயந்தி

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக “தன்திரேயாஸ்” என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது. தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக் கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமர வாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சந்நதி உள்ளது.இன்னும் பல இடங்களிலும் உண்டு.

அன்று தன்வந்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

ஓம் நமோ பகவதே

வாஸுதேவாய! தன்வந்தரயே!

அம்ருத கலச ஹஸ்தாய!

ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய

நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நம: !

(பொருள்:அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே,எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.)

30. எத்தனை எத்தனை பண்டிகைகள்?

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி

Address

Sai Guru Trust
Coimbatore
641025

Opening Hours

Monday 6am - 8:45pm
Tuesday 6am - 8:45pm
Wednesday 6am - 8:45pm
Thursday 6am - 9:30pm
Friday 6am - 8:45pm
Saturday 6am - 8:45pm
Sunday 6am - 8:45pm

Telephone

+918056441369

Alerts

Be the first to know and let us send you an email when Sai Guru Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sai Guru Trust:

Share