Perur Patteeswaraswamy temple

Perur Patteeswaraswamy temple மேலைச் சிதம்பரம் Perur Patteeswaraswamy temple built by Karikala Chola is located 7 km west of near Noyyal river.

Coimbatore has many temples out of which the Perur Patt ஓம் நமசிவாய!


சிவநேயச் செல்வங்களே,
வணக்கம்! வருக... வருக... இந்த இந்து முரசிற்கு வருகை தரும் உங்களை நான் இரு கரம் கூப்பி அன்போடு வரவேற்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! .
—வணங்கி மகிழ்கிறேன்.அன்புடன், வெ .சிவகுமார்

அருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்
ஆரூர் அத்தா ஐயாற் றமு

தே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..
-சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான "பட்டி' விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் "உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் "காமதேனுபுரம்' என்றும், உன் கன்றின் பெயரால் "பட்டிபுரி' என்றும், எனக்கு "பட்டீஸ்வரர்' என்றும் பெயர் வழங்கப்படும்,''என அருளினார்.

சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.

இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.

இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை' எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம்.

இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

சிவாலயங்களில் ஆடும் நிலை யில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.

பேரூர் பட்டீஸ்வரன் கோயில் பல நூற்றாண்டுகளாக இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிலையை மட்டுமே கோயம்புத்தூர் மக்கள் த...
29/11/2025

பேரூர் பட்டீஸ்வரன் கோயில் பல நூற்றாண்டுகளாக இருக்க,
சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சிலையை மட்டுமே கோயம்புத்தூர் மக்கள் தங்களது அடையாளமாக பார்க்கிறார்கள்.
(Edited)

-- ஆற்றல் பிரவீன் குமார்
From Facebook
only Coimbatorian fb group

Perur 12.11.2025
13/11/2025

Perur 12.11.2025

29/09/2025
27/09/2025

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி ஸ்ரீ மங்களாம்பிகை உடனாய ஸ்ரீ பிராணநாத சுவாமி திருக்கோயில் நவராத்திரி விழாவின் ஐந்தாம் திருநாளான நேற்று (26.09.2025) ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் அம்பாளுக்கு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

11/02/2025

Perur Patteeswaraswamy temple

11/02/2025

Address

Arulmigu Patteeswarar Swamy Temple , Perur
Coimbatore
641010

Opening Hours

Monday 6am - 1pm
4pm - 9pm
Tuesday 6am - 1pm
4pm - 9pm
Wednesday 6am - 1pm
4pm - 9pm
Thursday 6am - 1pm
4pm - 9pm
Friday 6am - 1pm
4pm - 9pm
Saturday 6am - 1pm
4pm - 9pm
Sunday 6am - 1pm
4pm - 9pm

Telephone

0422 2607991

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perur Patteeswaraswamy temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Perur Patteeswaraswamy temple:

Share