தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

  • Home
  • India
  • Coimbatore
  • தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் எங்களின் நோக்கம், கடைசி தமிழனும் தேவ?

இன்று நான் இரட்சிக்கப்பட்ட நாள்கிறிஸ்துவின் பணியில்தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
11/05/2018

இன்று நான் இரட்சிக்கப்பட்ட நாள்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்உழைக்கும் நண்பர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய சமாதானம் உங்கள் குடும்பங்களில் நிலைபெற்றிருப...
01/05/2018

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

உழைக்கும் நண்பர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய சமாதானம் உங்கள் குடும்பங்களில் நிலைபெற்றிருப்பதாக. ஆமென்.

உழைப்பின் மகத்துவத்தை பரிசுத்த வேதாகமம் பல்வேறு விதங்களில் எடுத்துரைக்கிறது. எனக்கு பிடித்த வசனம் "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது" விசுவாசம் இல்லாத கிரியையும் செத்தது.

வேலையே செய்யாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழும் சோம்பேறிகளை தேவன் கடுமையாக சாடுகிறார். "யாக்கோபு 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?"

கிரியை என்பது வேலை செய்வது. நிலத்தில் வேர்வை சிந்தாமல், வேலை பளு என்பதே இல்லாமல், குறுக்கு வழியில் காசு வரும் என்று எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் தேவன் கொடுக்கும் சவுக்கடி.. "யாக்கோபு 2:26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது."

அதாவது வேலை செய்யாதவன் செத்த பிணத்திற்கு சமம். விசுவாசமும் செத்த விசுவாசமாய் மாறும். படிக்காமல் ஊர் சுற்றிவிட்டு பரீட்சை முடிந்ததும் நண்பர்களோடு ஊர் சுற்றி விட்டு, தொலைகாட்சி பெட்டியில் நடிகளிகள் போடும் குத்து பாட்டுகளை ரசித்து விட்டு பின் பரீட்சை ரிசல்ட் வருகிறது என்றவுடன் மற்றவர்களை ஜெபிக்க சொல்வதும், உபவாசம் இருந்து ஜெபிப்பதும் நம்மில் பல பேர் உண்டு. இவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள். எழுதிய தேர்வில் மதிப்பெண் குறைவாகவோ, தோல்வியோ அடைந்துவிட்டால் "கடவுளை நம்பி என்ன பயன்" என்று கூறும் கூமுட்டைகள் நம்மிடையே பல உண்டு.

நம்மால் முடிந்தவரை உழைக்க வேண்டும். உழைப்பின் உச்சம் என்ன தெரியுமா? யோபுவின் புஸ்தகத்தில் உண்டு. "யோபு 28:4 கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்." அதாவது நீ நடக்கும் பாதையில் கடக்க கூடாதபடி கடுமையான ஆறுகள், நதிகள், அலைகள் எழும்பி உன்னை நெருக்கினாலும் மற்றவர்களை ஏவாமல் தானே முன் நின்று அப்படிப்பட்ட தடைகளை ஒன்றுமில்லாமல் செய்து வீருனடைபோடுபவன் தான் உண்மையான மனிதன்/ தொழிலாளி.

முடிந்தவரை நாம் தேவன் கொடுத்திருக்கிற அறிவை பயன்படுத்துவோம். நாம் மனிதன் உருவாக்கிய கணினி அல்ல. மற்றவர்கள் இயக்க. நாம் தேவனால் உருவாக்கப்பட்டவர்கள். தேவன் நமக்கு உயிர்கொடுத்து சகல அதிகாரங்களையும் கொடுத்து அதை ஆள, அனுபவிக்க ஆயுசையும் கொடுத்திருக்கிறார். நல்ல நிலத்தில் விழுந்தவிதையாய் இருப்போம்.

நீதிமொழிகள் 8:19 பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

"என் வருமானம் நல்லது" என்ற வார்த்தையின் அர்த்தம் புரிகிறதா? வெள்ளிக்கும் தங்கத்திற்கும் ஆசைப்பட்டு கடனாளி ஆவதை விட உங்கள் பலன் அதாவது உங்கள் ஆரோக்கியம் நல்லது என்பதை மறந்துவிடாதீர்கள். தேவன் கொடுத்திருக்கிற ஆரோக்கியத்தையும், அறிவையும் பயன்படுத்துங்கள். அதன் பிறகு கடவுளிடம் விசுவாசமாய் இருங்கள்.

கடுமையாக உழைத்துவிட்டு பின் கடவுள் தனக்கு கீழ்தான் என்று நினைப்பவனையும் தேவன் வெறுக்கிறார். நாம் செய்யும் வேலைகள், சிந்திக்கும் திறமைகளில் வித்தியாசம் உண்டு. ஆனால் நமக்கு தேவன் ஒருவரே... I கொரிந்தியர் 12:6 கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

இந்த தேவனுக்கு நன்றி செலுத்துவோம். விசுவாசம் மட்டும் போதாது, தேவன் கொடுத்திருக்கிற பலத்தை, அறிவை, சமமாக பயன்படுத்துவோம். தேவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

உழைப்பவனின் ஜெபத்தை மட்டுமே தேவன் அங்கீகரிக்கிறார். சோம்பேறிகளின் ஜெபத்தை அல்ல. உங்களால் அனைத்தையும் செய்ய முடியும் என்று கூறவில்லை. உங்களால் இயன்றதை முனங்காமல் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் விசுவாசத்தை தேவன் மீது வையுங்கள். இவை இரண்டும் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை கொண்டுவரும். இது உணமியாய் உலக்கும் ஒருவனின் வெற்றி ரகசியம்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

உங்கள் ஜெபங்களில் இவர்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
30/04/2018

உங்கள் ஜெபங்களில் இவர்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

பரிசுத்த வேதாகமமும், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியும்...
07/04/2018

பரிசுத்த வேதாகமமும், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியும்...

கிறிஸ்தவ ஊழியங்கள் மீது இன்றைக்கு பொய்யான தகவல்களை கொடுத்து சேவைகளை நிறுத்த பல இயக்கங்கள் வேகமாய் செயல்பட்டு கொண்டிருக்க...
28/03/2018

கிறிஸ்தவ ஊழியங்கள் மீது இன்றைக்கு பொய்யான தகவல்களை கொடுத்து சேவைகளை நிறுத்த பல இயக்கங்கள் வேகமாய் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடந்தவற்றை தங்கள் சுய பண லாபத்திற்காக பல தொலைக்காட்சி செய்தியாளர்கள் பல ஆயிரம் கொலை நடந்து விட்டதாகவும், முதியவர்களின் எலும்புகளை விற்று பொழப்பு நடத்துவதாகவும் கூறி பொய்யான தகவலை கொடுத்து தங்கள் TRB யை ஏற்றி கொண்டது. இதன் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கருணை இல்லத்தின் நோக்கங்கள் கீழ்தரமாய் பேசப்பட்டதுடன் இந்து முன்னணி இயக்கங்கள் தெருவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கத்தியது. ஆனால் காவல்துறையாலேயோ, இந்த கருணை இல்லத்தில் மீது நடவடிக்கை எடுக்க கூறி வறுபுறுத்திய செய்தி நிறுவனங்கள், மதவாத இயக்கங்களோ நிரூபிக்க முடியவில்லை.

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள பாலேஸ்வரம் என்ற கிராமத்தில் புனித ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆதரவற்ற முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்த இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடலில் இருந்து எலும்புகள் பிரித்தெடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த முதியோர்களை மீட்டு, பல்வேறு அரசு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்கள் பலர், முறையான பராமரிப்பு இல்லாமல் இறந்துள்ளனர். தங்களிடம் அனுமதி பெறாமலே, இல்லத்தில் இருந்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். ஆகவே, சட்ட விரோத காவலில் இருக்கும் முதியோர்களை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி, கருணை இல்ல நிர்வாகி தாமஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்தமனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இல்லத்தில் இருந்து 294 முதியோர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுக்கு, நாங்கள் தான் பாதுகாவலர்கள். எங்களுக்கு எதிராக, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெறாமல், அதேநேரத்தில், முறையாக அனுமதி பெற்று செயல்படும், எங்கள் இல்லத்தில் இருந்து முதியோர்களை அழைத்து சென்றது சட்டவிரோத செயல் ஆகும். மேலும், அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர், முறையான பராமரிப்பு இல்லாததால் இறந்துள்ளனர் என்று வாதிட்டார்.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 12 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த இல்லத்தின் நிர்வாகி மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு அது தற்போது நிலுவையில் உள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அதன் அறிக்கை எங்கே? அவர்கள் செய்யாவிட்டால் குற்றம் எனில், அதை அரசு செய்தால் சரியா? இந்த விசயத்தில் மதச்சாயம் பூச வேண்டாம் என்று எச்சரித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை, அவ்வில்லத்துக்கு இன்றே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைத்தனர்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் இப்படிப்பட்ட செய்தி நிறுவனங்களை கடுமையாக கண்டிக்கிறது. கண்டத்தையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் மூலம் தந்தி நிறுவனம், மற்றும் பாலிமர் நிறுவனங்களின் தரம் தாழ்ந்த செய்தி செய்திகளை அறிந்து கொள்ளலாம். பல உண்மைகளுக்கு மத்தியில் தங்கள் சுய பண லாபத்திற்காக தங்கள் மனசாட்சியை நாய்களுக்கு விற்க துணிந்துள்ள இப்படிப்பட்ட செய்தி நிறுவனங்களை இனிமேலும் நம்ப மாட்டார்கள் என நான் நம்பிறேன்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

https://www.ietamil.com/tamilnadu/joseph-elders-home-case-in-high-court/

http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D-2888702.html

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; கிறிஸ்துவின் பணியில்தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள...
14/03/2018

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

கிறிஸ்தவனின் ஆழமான விசுவாசத்தின் அடிப்படை என்னவென்று தெரியாத நண்பர்களிடம் இந்த மூன்று அதிகார வசனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. என்னவந்தாலும் நம்முவோம், எங்கள் இயேசுவை என்று உலகிற்கு தெரிவியுங்கள்.

சங்கீதம் 27 :4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

ரோமர் 8 :38 36. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

37. இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

38. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,

39. உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

மத்தேயு 5:10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்இயேசு கிறிஸ்துகிறிஸ்துவின் பணியில்தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
03/02/2018

என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்

இயேசு கிறிஸ்து

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

உண்மையை சொல்லி இருக்கிறேன்.. பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். புது வருடம் என்றாலே.... இன்றைக்கு சபைக்குள் ஜோசியம்...
20/12/2017

உண்மையை சொல்லி இருக்கிறேன்.. பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புது வருடம் என்றாலே.... இன்றைக்கு சபைக்குள் ஜோசியம் பார்ப்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. என்னவென்று புரிகிறதா?

புதுவருடத்தில் ஒவ்வொருவருக்கும் வாக்குத்தத்த வசனம் கொடுப்பது புதிய trend ஆகி விட்டது.. இதற்கு ஒருபடி மேலே உள்ள CSI சபைகள் ஆலய காணிக்கை சமயத்தில் காணிக்கை கொடுத்து வாக்குத்தத்ததை வாங்க வைத்து விட்டனர்.. சபைகள் இன்றைக்கு வேதாகமத்தை சரியாக போதிக்கமால் விட்டுவிட்டால் எதிராக்கால சந்ததிகளை அழிந்து போய்விடும் என்பதை என்றைக்கு நாம் உணர்வோம்..

இன்றைக்கு கிறிஸ்தவ புத்தக கடைகளில் ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம், மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை எவ்வளவு படுஜோராக நடைபெறுகிறதோ... அதை போல வாக்குத்தத்த அட்டைகள் விற்பனையும் படுஜோராக நடைபெறுகிறது..

வாக்குத்தத்தங்கள் எங்கு சீப்பாக (விலைகுறைவாக) கிடைக்கும் என்று அலையும் போதகர்களும் விதிவிலக்கல்ல..

மற்றும் புதிய வருட வாக்குத்தத்த செய்தி என்று கூறிக்கொண்டு ஓர் கூட்டம் கிளம்பும்.. பரிசுத்த வேதாகமத்தில் தேவன் ஊழியம் செய்த போது எந்த இடத்திலும் புது வருட வாக்குத்தத்த கூட்டம் நடத்தியதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.

உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் வேண்டி கொள்ளுங்கள் என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. ஆனால் நாம் ஜெபித்து தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து வசனங்களை பெற்று கொள்ளாமல் மற்றவர்கள் சபை வாசல்களில் பிச்சைக்காரர்கள் போல காத்திருப்பது காத்திருக்க வைப்பது மிகப்பெரிய கொடுமை.

பல கிறிஸ்தவர்கள் ஓர் பெரிய பட்டியலோடு தேவ ஆலயத்திற்கு செல்வர்.. என் பிள்ளைக்கு கல்யாணம் ஆகுமா? நான் / என் பிள்ளை தேர்வில் தேர்வானா? நான் / என் பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? என்று பல கோரிக்கைகள்.. தேவன் கொடுத்திருக்கிற அறிவையும், காலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே இதுவெல்லாம் நடக்கும்.. ஆனாலும் பரிசுத்த ஆலயத்தில் கொடுக்கப்படும் வாக்குத்தத்த அட்டையை நம்பியே பலர் காலம் தள்ளுவது வேதனைக்குரியது. சபை போதகர்களும் இதை போதிக்காமல் வேடிக்கை பார்ப்பது கொடுமையிலும் கொடுமை..

இதை படித்து விட்டு நீங்கள் உங்கள் சபையில் என்ன சொல்ல போகிறீர்கள்? நீங்கள் எப்படி நடந்து கொள்ள போகிறீர்கள் என்பது உங்களுக்கும், தேவனுக்கும் மட்டுமே வெளிச்சம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்..

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறக்க ஓர் முக்கியமான காரணம் உண்டு.பாவத்தில் உழன்று தவிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுக...
18/12/2017

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறக்க ஓர் முக்கியமான காரணம் உண்டு.

பாவத்தில் உழன்று தவிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுக்கவிருக்கும் மிகப்பெரிய சமாதானமான வாழ்க்கையே அது. பாவத்தினால் வரும் விளைவினால் இன்று மனிதனுக்கும் கடவுளுக்கும் மிகபெரிய விரிசல் விழுந்தது.

மனிதர்கள் எல்லோரும் பரலோகம் செல்வோம் என்று கூவுவதால் எந்த பயனும் விளையப்போவது இல்லை. பரலோகம் நாம் நினைப்பது போல சாதாரணமான இடம் அல்ல. அது கடவுள் தங்கும் மிகப்பெரிய உன்னதமான இடம். கடவுள் பரிசுத்தர் என்றால், பாவம் இல்லாதவர் என்றால், அவருடன் இருப்பவர்களும் அவ்வண்ணமே இருக்க முடியும். நமது வீட்டை சுத்தமாய் வைக்க ஆசைப்படுவோம். நடுவீட்டில் அசிங்கத்தை போட்டு அதனை பொறுத்து கொண்டு வாழமாட்டோம்.
அதை போலத்தான் நமது தெய்வமும். அவருடைய வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு. ஆனால் அது பாவிகளுக்கு அல்ல. பாவ மன்னிப்பை பெற்று கொண்டவர்களுக்கு மட்டுமே.

அப்படிப்பட்ட இடத்திற்கு உன்னையும் என்னையும் அழைத்து செல்ல வந்த ஓர் மிகப்பெரிய தெய்வம் தான் இயேசு கிறிஸ்து. பாவ மன்னிப்பை வளங்கள் நியாயத்தீர்ப்பு கொடுக்கவிருக்கும் நீதிபதிக்கே அதிகாரம் உண்டு. அந்த பாவ மன்னிப்பின் அதிகாரத்தை பெற்ற இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாக வழங்கினார். இதை ஏற்று கொள்ள மறவாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட உண்மையில் தகுதி உடையவர்கள் தானா என்று அறியுங்கள். இந்த இயேசு பிறந்த நாளில் ஒருவருக்காவது பாவ மன்னிப்பை குறித்தும் பரலோக கிரீடத்தை குறித்தும் பகிர மறவாதீர்கள்.

கிறிஸ்மஸ் பிறப்பு அல்ல, நம் உள்ளத்தில் இயேசு என்று பிறக்கிறாரோ அன்று தான் உண்மையான கிறிஸ்மஸ் நன்னாள். இந்த இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால் "நானும் பரலோகம் செல்வேன்" என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை. பரலோகத்திர்க்குள் பாவத்தோடு நுழைய முடியாது. பாவ மன்னிப்பை பெற்றவர்கள் தான் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் என்பது இயேசுவின் வருகையின் அர்த்தத்தை உணரும் நாள். அவர் வந்த நோக்கத்தை முழுமையாக அறிய நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த நற்செய்தியை சொல்ல வேண்டும். இயேசு பிறந்தவுடன் இந்த உலகத்திற்கு வந்த முதல் செய்தி என்ன தெரியுமா? ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தூதர்களை பார்த்து பயந்து போக அவர்களோ "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்றார்கள்" இயேசு இந்த உலகத்தில் பிறந்தவுடன் இரண்டு நிகழ்வுகள் நடந்தது. ஒன்று "இருளில் இருப்பவர்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள்" இரண்டு "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்ற செய்தி பரலோகில் இருந்து பூமிக்கு வந்தது.

பாவ இருளில் இருப்பவர்கள் இயேசுவை உள்ளத்தில் பிறக்க செய்வதன் மூலம் பெரிய வெளிச்சத்தை காண முடியும், அப்படிப்பட்ட வெளிச்சத்தை கண்டவர்கள் மிகப்பெரிய சமாதானத்தை காண முடியும். இது தான் இந்த கிறிஸ்மஸ் நாளில் நற்செய்தியை இருக்க முடியும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஓர் நற்செய்தி
இந்த உலகம் தரமுடியாத மிகப்பெரிய சமாதானத்தை இயேசு தருகிறார்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

I தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.இந்த படத்திலேயே உங்களுக்கு புரி...
07/12/2017

I தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

இந்த படத்திலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைகிறேன்.. நான் ஊழியர்களை குறை சொல்ல இந்த பதிவை போடவில்லை. இதை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேதாகம அறிவில் எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறான், வசனத்தின் ஆழத்தை உணர்ந்திருக்கிறான் என்று சோதித்து பார்ப்பது நலமாய் இருக்கும்.

இன்று ஊழியர்களை குறை சொல்லும் பலரும் தினமும் வேதம் வாசித்து அதன் படி நடகின்றனரா? என்று பார்த்தால் பதில் நிச்சயம் இல்லை என்று தான் வரும். 'உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துபோடு, பிறகு மற்றவர்கள் கண்ணில் இருக்கும் உத்திரத்தை பார்க்கலாம்' என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த வசனம் நமக்கு எந்த விதத்தில் பொருந்துகிறது என்று சோதித்து பார்த்தால் நலமாய் இருக்கும்.

ஒருவர் வேதாகமத்திற்கு விரோதமாய் பேசுவார் என்றால் அந்த வசனம் எதை குறிக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குடும்ப ஜெபத்தில், மற்ற இடங்களில் தயவு செய்து அந்த வேதாகம வெளிப்படுத்துதலை பகிர்ந்து கொள்ளுங்கள். ஊழியர்களை குறை சொல்லுவதை விட்டு விட்டு நாம் உண்மையாய் தேவனுக்காய் ஊழியம் செய்தாலே இன்று பலரையும் ரட்சிப்பின் பாதையில் மட்டும் அல்ல, வேதாகம அறிவிலும் விதைத்திருக்கலாம்.

யோசித்து பாருங்கள். ஜெபித்து கேளுங்கள். விடை கிடைக்கும்...

எபிரெயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா? உங்கள் கேள்விகளுக்கு உலக அறிவியல் அடிப்படையிலும் பரிசுத்த வேதாகம அடிப்படையிலும் பதிலை...
27/11/2017

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா? உங்கள் கேள்விகளுக்கு உலக அறிவியல் அடிப்படையிலும் பரிசுத்த வேதாகம அடிப்படையிலும் பதிலை இங்கே தந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்து நேசிக்கிறார்.. அவர் மார்பில் அனைத்து கொள்ள ஆவலாய் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரீகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

ஆனால் நம் பரிசுத்த தேவனானவர் பரிசுத்த வேதாகமத்தில் மரணத்தை குறித்து சுமார் 4000 முதல் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வழித்துவிட்டார். ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தல் வரை மரணம் என்ற பதத்தை சரியானபடி தேவ ஆவியானவர் பதிந்திருக்கிறார்.

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது.மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே.மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பரிசுத்த வேதாகமம் திட்டவட்டமாக சரீரத்தை குறித்தும் ஆத்த்துமாவை குறித்தும் கூறி இருக்கிறது,
1 கொரிந்தியர் 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; 43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். 44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

கிறிஸ்தவர்கள் பரலோக வாழ்க்கை, நன்றாக வாழ்க்கை குறித்து பேசும் போது பலரும் நகைத்த, கிண்டலடிக்க கோபப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் இன்று ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவபரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என கண்டறிந்து உள்ளனர்.

பவுல் அடிகளார் II கொரிந்தியர் 5:8. "நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்" என்று கூறுகிறார். நாம் விரும்புகிறோமா? நீங்கள் விரும்பாவிட்டாலும் விரும்பினாலும் நிச்சயம் உங்கள் தேகத்தை விட்டு நீங்கள் பிரிவீர்கள். அதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு எனபது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டது.

இந்த சர்சைக்குரிய ஆய்வு கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் உள்ள 944 பேர் மீது முக்கிய மருந்து கலவைகள் கொண்டு நடத்தப்பட்டு உள்ளது.எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ரீ அனிமேசன் முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்கு, அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பின்னரான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அதன் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் "மத நம்பிக்கைகள் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை."

இந்த மத நம்பிக்கை வரிகள் பலருக்கும் அதிர்ச்சியாய் இருக்கும். அப்படியென்றால் மதம் இல்லையா? மதமே இந்த உலகத்தில் இல்லை என்ற உண்மையை இனியாவது இந்த உலகம் புரிந்து கொள்ளுமா? தேவன் மனிதனை தான் படைத்தார், மதத்தை அல்ல. இன்று எங்கள் மதம் தான் உண்மையான மதம் என்று கூறும் வெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது இந்த ஆய்வு.

அதை போலத்தான் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடைய செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு எடுத்து கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

மனிதனை பிறந்த எவரும் மரணத்தை சந்திப்பார்கள். ஆனால் அவர்கள் பரலோகம் போவார்களா? நரகத்திற்கு போவார்களா? என்பது ஏசுவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் மனிதகுல வரலாற்றின் பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என ஆக்கர்மேன் கூறி உள்ளார்.

இது போல் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) 1975 ஆம் ஆண்டு எழுதிய “வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை” (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான் இதன் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. இவர் இந்த நூலுக்காக 150 தனிநபர்களின் அனுபவங்களை பயன்படுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார். அவர் கூறியவற்றையும் பரிசுத்த வேதாகம வார்த்தையும் உங்களுக்காக....

* ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.

மத்தேயு 13:50 அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

* கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலை பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்கள்.

வெளிப்படுத்தல் 11:12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

* மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்த கணத்தில் குறித்த வலி மறைந்து விடுவதோடு பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

* பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்கவழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.

* சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது “கார்ல் ஜங்” அனுபவத்தோடு ஒத்துப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.

* சுரங்கவழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியில் அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்யிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.

II corindhiyar 5:8. நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.

யோவான் 14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

* ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியை பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)
வெளிப்படுத்தல் 11:12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்,
வெளிப்படுத்தல் 21 :10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளிப்படுத்தல் 21:23. நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

* அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காணகூடியதாகவும் அமைந்ததாம்.

II தீமோத்தேயு 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

* அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னம் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாக சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படி பல விஷயங்களை அறிவியல் ஆதாரத்தோடும் பரிசுத்த வேதாகம ஆதாரத்தோடும் இங்கே விளக்க செய்த என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

உங்களை இந்த பூவுலகில் சந்திப்பேனா இல்லையா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக பரலோகில் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன். எனக்கு அந்த நிச்சயம் என்றும் உண்டு.

மத்தேயு 10:28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
http://www.iflscience.com/health-and-medicine/life-after-death/
https://www.express.co.uk/news/science/670781/There-IS-life-after-DEATH-Scientists-reveal-shock-findings-from-groundbreaking-study
https://www.outerplaces.com/science/item/17068-life-after-death-consciousness-langone-sam-parnia
https://www.youtube.com/watch?v=HeM4m_4dWeA
https://www.speakingtree.in/blog/german-scientists-prove-that-the-life-after-death

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தமிழ் நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்:

Share