Siddhar Shivenalayam Ruthra shiva

Siddhar Shivenalayam Ruthra shiva Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddhar Shivenalayam Ruthra shiva, Religious organisation, selvapuram, Coimbatore.

23/05/2019

Athmayone Rk Suresh BA.DTm.BDE.Healar

14/07/2018

ஆகாச கருடன் கிழங்கு [Akasa Garudan Kilangu]

அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!
Akasa Garudan Kilangu
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள். நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்

முன்னோர்கள் சூட்டினார்கள்.?
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும்சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மைகொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்றமாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள் :-
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது.
அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்). உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. “சாகா மூலி” என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும். வீட்டுப்புறத்தைச் சுற்றியும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டாமலும் பாதுகாக்கும்.

இது திருஷ்டி, தோஷங்கள் மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்திலும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருகிறது.
ஆகாச கருடன் கிழங்கு பற்றிய சித்தர் பாடல்
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.

– சித்தர் பாடல்.

இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.சூலை,பாண்டு,பலவித நஞ்சுகள்,கழிச்சல்,கரப்பான்,சொறி,மேகநோய்,கட்டி,தீரும்.

மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன

வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும். இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.

மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும். விடம் முறிந்து நோயாளி குணமடைவான். விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணையை விலக்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண், சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து, குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
சருமநோய்களை குணமாக்கும் தைலம் இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும். கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்.

11/07/2018

இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டு மதங்களுமே சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டி அந்த மண்ணை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

ஆனால் நமது நாட்டில் அது சாத்தியமாகவில்லை ஏனென்று பார்ப்பாேம்.

கிறிஸ்தவர்களை பாெருத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதில்லை.

ஒரு பெண் ஐந்து வருடம் ஒருவருடன் வாழ்ந்து 2 பிள்ளை களைபெற்றெடுத்த பின்னர் அவரை விட்டு விட்டு வேறெரு ஆணை திருமணம் செய்து அவரிடம் 2 பிள்ளைகளை பெற்றெடுப்பார்.

இப்படியே 5 திருமணங்களை செய்து 10 பிள்ளைகளை
பெற்றிருப்பார்.

அப்பிள்ளைகள் தனது தாயார் யாருடன் குடும்பம் நடத்திக்காெண்டிருக்கிறாள் தந்தை யாருடன் குடும்பம் நடத்துகிறார் என்று கண்டு பிடிக்கவோ தாய் தந்தை உரிமை
கொண்டாடவாே இயலாததாகிவிடும்.

இதுதான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை
முறையாகும்.

ஆனால் ஐநூறு வருடங்களுக்கு மேலாக இந்திய மண்ணை ஆண்டாளும் கூட இங்கு குறிப்பாக தமிழகத்தில் குறை ந்தபட்சமாக விபரமறியாத அப்பாவி மக்களை மட்டுமே மதம் மாற்றியுள்ளனர்.

நமது வாழ்வியல் நெறிமுறைகள் திருமண உறவு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இதர சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தி கடை பிடித்து வருகின்றனர்.

இதற்கு காரணமாக பலவிதமாக காரணங்களை சொல்லலாம். ஆனால் இதன் பின் இருக்கும் ஒரு உண்மை நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் ஒன்றாகும்.

நமது முன்னோர்கள் எதையும் காரண காரியம் இன்றி சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கி வைக்கவில்லை. அவர்களின் தீர்க்க தரிசனம், தொலை நோக்கு பார்வையுடன் நமக்கு கொடுத்த மரபுகள் தான் இந்து மதத்தை தமிழ் மண்ணில் தாங்கி பிடித்து வருகின்றன.

ஆயிரம் தெய்வங்களை வழிபடக்கூடியவர்கள் என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்மை ஏளனப்படுத்தலாம். முனியாண்டிக்கும், ஐயனாருக்கும் விளக்கம் கேட்டு நம்மை கேலி செய்யலாம். ஆனால் உண்மையை சொல்லப்போனால் இந்த முனீஸ்வரர், அய்யனார், முப்பாத்தம்மன் தான் இன்றைக்கும் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் நம்மிடம் மண்டி போட வைக்கின்றது.

நம் தேசத்தின் மீது படையெடுத்தது வந்து நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நமது வழிபாடு, உணவு, குருகுல கல்வி என அனைத்தையும் அழித்தால் மதத்தை பரப்பலாம் என திட்டமிட்டு படிப்படியாக ஒவ்வொன்றாக அழித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

ஆனால் அவர்கள் அழிக்கவோ, தொடவோ முடியாதது நமது சிறு தெய்வ வழிபாடு. நமது முன்னோர்பள் நமது பாரம்பழியங்களை இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் தீர்க்கதரிசனத்துடன் இந்து மத மரபுகளை தனிமனித கடமைகளாக நமக்கு வைத்துள்ளனர். இந்த கடமைகளை எந்த கொம்பனாலும் இதுவரை அசைக்கவோ, மாற்றவோ முடியவில்லை. இனிமேலும் அது நடக்காது.

இந்து மதம் ஒரு ஆலமரம். அதன் விழுதுகள் ஆறு பிரிவுகள்.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
2. வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம.
3. சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
5. கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

இந்த ஆறு விழுதுகளின் சல்லி வேர்கள் தான் சிறு தெய்வ வழிபாடு.

சிறுதெய்வ வழிபாடு ஒவ்வொரு இந்துவின் ரத்த நாளங்களிலும் கலந்துருப்பது. இதைத்தான் குல தெய்வ வழிபாட்டில் நமது முன்னோர் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் உண்டு. குல தெய்வம் இல்லாத இந்து கிடையாது.

இந்த குல தெய்வம் என்பது மேற்கண்ட ஆறு இந்து தெய்வங்களின் அம்சமாகவே அமைத்து வழிபடுகின்றனர். உதாரணமாக முனீஸ்வரர் சிவனின் அம்சம், அய்யனார் விஷ்ணுவின் அம்சம், முப்பாத்தம்மன் உமையின் அம்சம்.

இந்துக்கள் குல தெய்வங்களான சிறு தெய்வங்கள் அனைத்துமே மேற்கண்ட ஆறு தெய்வங்களையே பிரதிபலிக்கும்.

முன்னோர்கள் நமக்கு வெறும் கல்லுக்கு மாலை போட்டு வழிபடுவதை மட்டும் நமக்கு சொல்லி விட்டு போகவில்லை. அந்த தெய்வ வழிபாட்டிற்கு பல பாரம்பரிய பழக்கங்களையும், விதிகளையும் நமக்கு கடமைகளாக வகுத்து வைத்துள்ளார்கள். அதில் நமது உறவுகளையும் பிணைத்து வைத்துள்ளார்கள்.

உறவுகளை பிணைத்ததோடு மட்டுமல்லாமல் நமது கௌரவம், புகழ், தனித்தன்மை, நமது அடையாளம், நமது வம்சத்தின் பாரம்பரியம் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சடங்கு சம்பிரதாயங்களை அதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவர்களது குல தெய்வம் கோவில் கண்டிப்பாக இருக்கும். காடு, மலை, வயல் என ஏதாவது ஒரு ஆள்நடமாட்டமில்லாத வனாந்திரத்திலாவது முன்னோர்கள் இருபது தலைமுறைகளுக்கு முன்பாக உருவாக்கி வைத்திருப்பார்கள்.

இருபது தலைமுறைகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் கட்டிய கோவிலாக இருக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்போது உலகம் முழுக்க பரவி ஐநூறு குடும்பங்களாக பெருகியிருப்பார்கள்.

ஆதிகாலத்தில் கோவிலை கட்டிய போது வருடம் ஒரு முறை அனைவரும் எப்படி கூடி வணங்கினார்களோ அதே போல இன்று வரை அது தொடரும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அமாவாசை என வருடத்தின் ஏதாவது ஒரு நாளில் அனைத்து குடும்பங்களும் சேர்ந்து வருடா வருடம் வழிபடுவது அவர்களின் சாசனம். இது அவர்களின் அடையாளம், பிறப்புரிமை.

இது ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை கட்டமைப்பதற்கான அங்கீகாரம். ஒருவன் தனது மகன், மகளுக்கு பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டுமானால் அவனது சாதி மட்டுமல்ல அவன் கும்பிடும் அந்த குலதெய்வ கோவிலும் முக்கியம். தனது குலதெய்வத்தை அவன் அடையாளமாக காட்டித்தான் தனது சொந்த சாதியிலேயே சம்பந்தம் பேச முடியும்.

ஒரு பெண் பிறந்து திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவாள். அவள் திருமணமாகிய பின் கணவரது வீட்டு குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வாள். இங்கேயும் நமது முன்னோர்கள் பலமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதோடு பிறந்த வீட்டு கடமை முடிவதில்லை. அந்த பெண்ணின் பிறந்த வீட்டு குல தெய்வ வழிபாடுகளில் அவளின் ஆயுள் முடியும் வரை சிறப்பான மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டியது உடன் பிறந்த சகோதர்ர்களின் கடமை.

குலதெய்வ கோயில்களில் நடைபெறும் திருவிழா, கிடாவெட்டு, கும்பாபிசேகம், என அனைத்திலும் திருமணம் செய்து கொடுத்த சகோதரிகளை குடும்பத்துடன் அழைத்து, புத்தாடைகள் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது ஆண்களின் கடமை.

நமது முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபடுவதோடு குடும்ப உறவுகளையும் அதில் செழிக்க வைத்துள்ளனர்.

ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் மொட்டையடித்து காது குத்துதல் அவரவர் குலதெய்வ கோவில்களில் வைப்பது மரபு. இதை கூட வெறுமனே பெற்றவர்கள் செய்து விட முடியாது. தாய்மாமனை அழைத்து அவர் மடியில் குழந்தையை அமர்த்தி செய்வார்கள்.

சரியாக சொன்னால் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க செய்தது நமது குல தெய்வங்களான சிறு தெய்வ வழிபாடு மட்டுமல்ல நமது தாய்மாமன்களும் தான்.

பெண் கேட்டு சென்றாலே தாய்மாமன் அனுமதியை முதலில் கேட்க வேண்டும், பெண்ணை பெற்றவர்களும் தாய்மாமன் சம்மதத்தோடு அவன் முன்னிலையில் நிச்சயம் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றும் பல சமூகங்களில் உள்ளது.

அது மட்டுமல்ல சகோதரிகளின் முக்கியத்துவத்தை திருமணங்களிலும் நமது முன்னோர் வைத்துள்ளனர். தாலிக்கு மூன்று முடிச்சு தான். இது வரை எந்த ஆணாவது மூன்று முடிச்சு போட்டதுண்டா...? மூன்றாவது முடிச்சுக்கு உரிமையாளராக சகோதரிகளை நமது முன்னோர் வைத்துள்ளனர்.

ஒரு பெண் பருவமடைந்ததும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முழுக்க முழுக்க செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு தான். அங்கே தகப்பன் இரண்டாவது இடம் தான். முதல் மரியாதை தாய் மாமனுக்குத்தான்.

ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் திருமணமாகும் வரை அவள் மீதுள்ள அக்கறை, அதிகாரத்தை தகப்பனுக்கு சமமாக நமது முன்னோர் தாய்மாமனுக்கு வழங்கியுள்ளனர்.

ஒரு வீட்டில் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர் முக்கியமாக தாய் தன் பிறந்த வீட்டிலிருந்து பெண் வரவேண்டுமென முன்னுரிமை கொடுக்கிறாள். பெண் இல்லா விட்டால் தனது பிறந்த வீட்டு கோவிலை குலதெய்வமாக கொண்ட பெண்ணை தேடுகிறாள். இதில் எது நிகழ்ந்தாலும் அந்த பிறந்த வீட்டு குல தெய்வத்தின் தொடர்பு அவள் விரும்பியபடி தொடர்ந்து கொண்டிருக்கும்.

கடைசியாக செத்தால் கூட பிறந்த வீட்டு மரியாதையோடு போகத்தான் ஒவ்வொரு இந்து பெண்ணும் விரும்புவாள். அவளின் உடலை அடக்கம் செய்ய இறுதி யாத்திரையில் அமர வைக்க அவள் பிறந்த வீட்டு சேலை தான் உடுத்துவார்கள். ஒரு வேளை உடன் பிறந்த சகோதரன் இல்லா விட்டால் அவளின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை கும்பிடுபவர் யாராவது சகோதரன் ஸ்தானத்தில் இருந்து இறுதி ஊர்வலத்திற்கான சேலையும், மாலையும் அணிவிப்பார். இதுவும் நமது முன்னோர் நமக்கு கொடுத்த சம்பிரதாயம் தான்.

இதை இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தி பரம்பரை பரம்பரையாக நமது ரத்தத்தில் கலந்தது. இதை மாற்றவும் முடியாது.

ஏனெனில் பிற மதத்தில் மனிதர்கள் மிருகங்களை போல வாழ்ந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் மனித உறவுகளின் மேன்மையையும், அதன் பரிசுத்தத்தையும் நமது இறை வழிபாட்டுடன் கலந்து உயர்வான இடத்திற்கு வந்து விட்டனர்.

இந்த பதிவு பலருக்கும் மிகைப்படுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.

சொந்த வீடு இருக்காது, கூரை வீட்டில் இருந்தாலும் மழை பெய்தால் இத்துப்போன கூரைகளோடும், இடிந்து விழும் அளவிற்கு மோசமான மண் சுவர் கொண்ட குடிசையில் வாழும் ஒருவனுக்கு குடிக்க கஞ்சி இல்லாமல் பட்டினியாக கூட கிடப்பான். ஆனால் தாய்மாமன் சீர் செய்ய கிட்னியை விற்றாவது லட்சக்கணக்கில் செலவு செய்வான்.

உடன் பிறந்த பெண்களுக்கு உரிய கடமையை செய்தால் தான் நமது சமூகம் அவனை ஆணாகவே ஒப்புக் கொள்ளும். அது மட்டுமல்ல அவனது குலதெய்வ கோவிலில் அப்போது தான் அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதனால் எப்பாடு பட்டாவது அவன் தனது கடமையை செய்கிறான்.

ஒரு குடும்பம் மதம் மாற வேண்டுமெனில் முதலில் குடும்பத்து பெண்களின் ஆதரவு இருக்க வேண்டும். நமது இந்து மதத்தில் தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும், பெருமைப்படுத்தும் உறவுகளை விட்டு அவள் எப்படி வெளியேற சம்மதிப்பாள்....? கணவனுக்காக தனது சகோதரர்களை அவள் எப்படி புறக்கணிக்க முடியும்.

தமிழ் சமூகத்தில் ஆணின் சிறப்பே உடன்பிறந்த சகோதரிகளை கடைசி வரை கைவிடாமல் உறவை பேணுவது. தனக்கு சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் வழங்கும் தாய் மாமன் உறவை புறம் தள்ளி அவன் எப்படி மதம் மாறுவான்...?

இதெல்லாம் நமது இந்து சமூகத்திற்கு ரத்தத்தில் ஊறியது. சிறு தெய்வ வழிபாடு என்பது சினிமாவில் காட்டுவது போல ஒரு கல்லை நட்டு, அதற்கு மாலை போட்டு சூடம் பத்தி காட்டும் காமெடி அல்ல. நமது பாரம்பரியத்தின் அடி விழுதுகள். நமக்கு உணர்வு பூர்வமானது. உண்ணும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுபவன் செய்யக்கூடியது.

இவ்வளவு பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இந்த மண்ணில் அப்பன் யாரென்றே தெரியாதவனையும், சகோதரிகளையே மணந்து கொள்ளலாம் என்பவனையும் தூக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்.

எவன் ஏற்பான்...? வாளுக்கு அஞ்சியவன் நான்கு சதவிகிதம், கஞ்சிக்கு செத்து ரொட்டிக்கு ஆசைப்பட்டவன் மூன்று சதவிகிதம். அவ்வளவு தான். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஊளையிட்டாலும் மேற்கொண்டு போனியாகாது.

ஏசப்பாவும், பில்லாஹ்வும் நம்மூர் சிறு தெய்வங்களான முனீஸ்வரன், அய்யனார் மற்றும் முப்பாத்தம்மனிடம் எப்போதோ மரண அடி வாங்கி தோற்று போய் விட்டனர்.

இத்தகவலை குறை ந்தது 50 பே ருக்காவது பகிர்ந்து நமது சிறப்புக்களை உணர்த்துங்கள்.🙏🙏🙏

07/07/2018

🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯
*******************************

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

*மூளை*

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

*கண்கள்*

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*பற்கள்*

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*நரம்புகள்*

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

*ரத்தம்*

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

*சருமம்*

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

*நுரையீரல் - இதயம்*

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

*வயிறு*

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

*கணையம்*

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.



*கல்லீரல் - மண்ணீரல்*

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.



*மலக்குடல்*

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

*பாதம்*

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

பாதம், விரல் வலி சரியாகும்....

கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்...
28/06/2018

கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று

தவறான வழியில் பணம் சம்பாதித்து

முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையின் அறையில் எழுதப்பட்டிருந்தது

*"I - C - U "*..!

1 நிமிடகதை*

 #கலியின்_ஆரம்பம்.🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ⚜அழகான குதிரையை அவனும் பார்த்தான். ⚜உடனே ...
01/05/2018

#கலியின்_ஆரம்பம்.

🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ⚜அழகான குதிரையை அவனும் பார்த்தான். ⚜உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

#குதிரையின்_உரிமையாளரோ,

🐴 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
⚜சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

🐴 குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

🐴 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

🐴 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

🐴 சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

🐴 குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

🐴 துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

🐴 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

🐴 அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

🐴 "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

🐴 பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

🐴 சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

🐴 பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

🐴 அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

🐴 அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.

🐴 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

#தர்மர்பதில்சொல்லத்_தொடங்கினார்..

☸ "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன."

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

☸ "உங்களிடம் கேள்வி கேட்டவன்
#கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில்
⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.
⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,
பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Address

Selvapuram
Coimbatore
641026

Alerts

Be the first to know and let us send you an email when Siddhar Shivenalayam Ruthra shiva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Siddhar Shivenalayam Ruthra shiva:

Share