St.Antony Church Puliakulam

St.Antony Church Puliakulam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St.Antony Church Puliakulam, Catholic Church, Puliakulam, Coimbatore.

10/07/2017
இப்போதைய தேவை ஜெபமாலைப்போரும், சிலுவைப்போருமே :ஜெபமாலைப்போர் உங்களுக்குத் தெறியும் . அது என்ன சிலுவைப் போர்..?நமக்கு வாழ...
20/06/2017

இப்போதைய தேவை ஜெபமாலைப்போரும், சிலுவைப்போருமே :

ஜெபமாலைப்போர் உங்களுக்குத் தெறியும் . அது என்ன சிலுவைப் போர்..?

நமக்கு வாழ்க்கையில் வருகின்ற கஷ்ட்டங்கள், இடையூறுகள், துன்பங்கள, வேதனைகள், கவலைகள், நோய்கள்; நமக்கு பிடிக்காத நிகழ்வுகள், பிடிக்காத உணவுகள்; பிடிக்காதவர்களுடன் பேசும் சூழ்நிலைகள், வெயில், மழை, குளிர் என்று இப்படி எந்த சிலுவைகள் வந்தாலும் அவற்றை அமைந்த மனதுடன் ஏற்று நம் இயேசு சுவாமியின் அன்புக்காகவும், பாவிகள் மனம் திருந்தவும் (நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாகவும்), மாதாவின் மாசில்லா இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாகவும் ஒப்புக்கொடுக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபமாலைகள் ஜெபிக்க வேண்டும்..

நம்முடைய சொந்த சிலுவைகளும், ஜெபமாலைகளும் இப்போது கண்டிப்பாக தேவை.இவைகள் நம்முடைய ஆன்மாவுக்கு எதிராகவும், பிறரின் ஆன்மாக்களுக்கு எதிராக சாத்தான் நடத்திவரும் பாவ சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வாய்ப்புகளுக்கு எதிரான போர் தளவாடக்கருவிகள்.. ஏற்கனவே பாவம் மற்றும் சாவான பாவங்களில் சிக்கித்தவிக்கும் எண்ணற்ற மக்களை மீட்கப்பயன்படும் ஆயுதங்களும் இவைகளே...

ஆக, இன்றைய சூழ்நிலைகளில் ஜெபமாலைப்போரும், சிலுவைப்போரும் கட்டாயம் தேவை...

திவ்யபலிபூசையில் தகுதியான உள்ளத்தோடு நற்கருணை நாதரான நம் சேசு சுவாமியிடம் ஐக்கியமாகி,எப்போதும் ஜெபமாலைப்போரிலும், சிலுவைப்போரிலும் ஈடுபட்டு வந்தால் நம் ஆன்மாவையும் மீட்டு எண்ணற்ற ஆன்மாக்களையும் மீட்டு வெற்றி முழக்கங்களோடு மோட்சம் சேரலாம் நமதன்னையின் துணையில்.

குறிப்பு :
பாத்திமாவின் செய்தியான ஜெபம், தவம் பரிகாரத்தில் இந்த ஜெபமாலைப்போரும், சிலுவைப்போரும் அடக்கம்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

Happy Easter to all
16/04/2017

Happy Easter to all

புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
28/02/2017

புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

28/02/2017

புனித அந்தோணியார்

21/02/2017

புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே!
கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை

என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். – ஆமென்.

PRAY FOR US புனித அந்தோனியார் செபம்::ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ...
21/02/2017

PRAY FOR US
புனித அந்தோனியார் செபம்::
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....
(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.

Address

Puliakulam
Coimbatore
641045

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Antony Church Puliakulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share