19/04/2025
தேய்பிறை அஷ்டமி... ஞாயிறு... ராகுகால வழிபாடு!
அருள்மிகு
சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்
20.04.25 ஞாயிற்றுக்கிழமை/தேய்பிறை ஸ்ரீகால பைரவாஷ்டமி மாலை 04.30 யாகத்தை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ராகுகால வேளையில் பைரவரை தரிசித்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். தடைகள் மொத்தமும் தகர்ந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. காலபைரவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். முன்னோர் ஆராதனை கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு அஷ்டமியும் பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். குறிப்பாக, தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி நாளில், பைரவரை வழிபடுவது இன்னும் நற்பலன்களை வாரி வழங்கக் கூடியது.
சிவன் கோயில்களில், கோஷ்டத்தைச் சுற்றி வரும் போது நிறைவாக சனீஸ்வரர், மற்றும் பைரவரையும் தரிசிக்கலாம். சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட பைரவ மூர்த்தம், உக்கிரமானது. எதிரிகளை அழிக்கக்கூடியது. எதிரிகளின் பலத்தை அழித்து நமக்கு பலத்தையும் பலன்களையும் தந்தருளக்கூடியது.
பைரவருக்கு உகந்த மலர்களாக செந்நிற மலர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. செவ்வரளி மலர்கள் கொண்டு பைரவரை அர்ச்சித்து வழிபடலாம். .
ஞாயிற்றுக்கிழமையில் அஷ்டமி வரும்போது ராகுகாலத்தில் பைரவ தரிசனம் செய்து, வேண்டிக்கொண்டால், வேண்டிய வரங்களைத் தந்தருளுவார் பைரவர்.
நன்றி.