Heavenly God Ministry

Heavenly God Ministry Hearty Invites to Heavenly God Ministry in the name of Our Father.

World🌍 Peace🕊️ Gospel 📖Date & Time : 13.06.2019 Thursday | 6:30 PM.Venue : SVT Hall, Sivanandhacolony, Coimbatore - 12.W...
10/06/2019

World🌍 Peace🕊️ Gospel 📖

Date & Time : 13.06.2019 Thursday | 6:30 PM.
Venue : SVT Hall, Sivanandhacolony, Coimbatore - 12.

We welcomes you all 🙏 Come and get the peace of Christ ✝️

உலக சமாதானத்தின் சுவிசேஷம்
27/11/2018

உலக சமாதானத்தின் சுவிசேஷம்

27/11/2018
Sristi Mahal
10/04/2017

Sristi Mahal

11/02/2017
19/12/2016
2 Days convention at Trichy
03/10/2016

2 Days convention at Trichy

27/05/2016

தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்..

அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்.

அகரதமான (ஏசா 14:15) - ஆழமான.

அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை.

அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு).

அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்.

அசூசம் (புலம்பல்) - தீட்டு.

அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்.

அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்.

அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு.

அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்.

ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர்சுருதி.

இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்.

ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்).

இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்.

உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்.

உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்.

உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள்.
ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்).

உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி.

ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா).

கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்.

ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து. கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்.

கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி.

கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து.

கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்.

கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத.

காங்கை (ஏசா 25:5) - வெப்பம்.

காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை.

கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்..

கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்.

குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்).

குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது).

குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு.

கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்.

கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்.

கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்.

கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்குபல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்..

கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி.

சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்.

சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்..

சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு. சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்.

சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை.

சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி.

சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்.

சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்.

சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்.

சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது..

சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்..

சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு..

தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு).

தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை.

தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி).

தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை.

25/05/2016

TODAY 🌄 BIBLE 📖
FEAST🍲

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வேதாகமம்📝

📚 நம்முடைய நடை முறையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள 39 பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் எபிரேயத்தில் 22 புத்தகங்களாக யூதர்களால் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

📚நாம் அறிந்திருக்கும் பழைய ஏற்பாடு Tanakh (டனக்) என்ற வார்த்தை யால் TNK என்ற தொகுப் பாக வரையறுக்கப்பட்டு ள்ளது.

📚 TNK என்றால்
T- Torah (தோரா)
N-Neviim (நிவீம்)
K-Khetuvim (ஹெட்டுவிம்)
என்ற மூன்று தொகுப்பே எபிரேய பழைய ஏற்பாடாகும்.

📚இதில் 12 சிறிய தீர்க் கதரிசி புத்தகங்கள் ஒரே புத்தகமாக தொகு க்கப்பட்டுள்ளது.

📚1,2 சாமுயேல் ஒரே புத்தகமாகவும்,
1,2 இராஜாக்கள் ஒரே புத்தகமாகவும்,
1,2 நாளாகமம் ஒரே புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

📚 மற்றும் ரூத் புத்தகம் நியாயாதிபதிகளோடும் புலம்பல் எரேமியாவோடும், எஸ்றா நெகேமியாவோ டும் இணைக்கப்பட்டு
உள்ளது.

📚தோரா(Torah)
------------------------------
மோசே எழுதிய
ஆகமங்களான
ஆதியாகமம் To
உபாகமம் வரை 5

📚நிவீம் (Neviim)
--------------------------------
யோசுவா 1
நியாயாதிபதி 1
சாமுயேல் 1
இராஜாக்கள் 1
ஏசாயா 1
எரேமியா +புலம்பல் 1
எசேக்கியேல் 1
12 சிறிய. தீர்க்கதரிசிகள் 1

📚ஹெட்டுவிம்(Khetuvim
---------------------------------------------
நாளாகமம் 1
எஸ்றா+நெகேமியா 1
எஸ்தர் 1
யோபு 1
சங்கீதம் 1
நீதி மொழிகள் 1
பிரசங்கி 1
உன்னதப்பாட்டு 1
தானியேல் 1
-------
22
-------
இப்படி த்தான் யூதர் களின் வேதாகமம் 22 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

📚இந்த 22 புத்தகங் களின் எண்ணிக்கை எபிரேய எழுத்துக்களின் எண்ணிக்கையான
22 ஐ குறிப்பதாக உள்ளது.

📚ஆதாம் துவங்கி முற்பிதாவான யாக்கோபு வரைக்கும் உள்ள சந்ததியின் எண்ணிக்கையான
22 ஐ இந்த வேதாகம புத்தகங்களின் எண்ணி க்கையோடு இணைத் துள்ளனர்.

📚119 சங்கீ 8 வசனங்கள் கொண்ட. 22 பகுதிகளாகும். அதில் ஒவ்வொரு பகுதி யும் ஒவ்வொரு எபிரேய எழுத்துக்களான ஆலேப் முதல் தாவ் வரைக்கும் உள்ள 22 எழுத்துக்களைக் கொண்டு துவங்குகிறது.


📚மேலும் பரிசுத்த ஸ்தலத்திலுள்ள விளக்கில் காணப்படும் ஆறு கிளைகளில், ஒவ்வொன்றிலும் மூன்று அலங்காரப் பொருட்களும்,நடு தண்டில் நான்கு அலங்காரப் பொருட் களும் காணப்படும். இதுவும் யூதர்களின் வேத எண்ணிக்கை க்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

Address

Coimbatore
641018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heavenly God Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Heavenly God Ministry:

Share