ருத்ராட்சம்

ருத்ராட்சம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ருத்ராட்சம், Hindu temple, Coimbatore.

இன்றைய ராசிபலன் தினப்பலன் பிப்ரவரி 9 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன...
09/02/2023

இன்றைய ராசிபலன்

தினப்பலன் பிப்ரவரி 9 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் செய்தி உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக் கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட லாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண் டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். பொறுமை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன அமைதி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த படியே நடக்கும். ஆனால், சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண் டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்

விருச்சிக ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் பண உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் வீண் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு கிடைக்கக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னை கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. கால பைரவரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி பெறலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீன ராசி அன்பர்களே!

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

இன்றைய ராசிபலன் தினப்பலன் பிப்ரவரி 6 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன...
06/02/2023

இன்றைய ராசிபலன்

தினப்பலன் பிப்ரவரி 6 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவு கள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச் சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலா ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்..

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். மகான் ராகவேந்திரரை வழிபட மனஉளைச்சல்கள் நீங்கும்..

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங் கள் குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீன ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட மனதில் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

இன்றைய ராசிபலன் தினப்பலன் பிப்ரவரி 3 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன...
03/02/2023

இன்றைய ராசிபலன்

தினப்பலன் பிப்ரவரி 3 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். குடும்பத் தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. சிவபெருமான் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சிறு கவனம் தேவை. அம்பிகை வழிபாடு நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் சிறப்பு வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அம்பிகையை வழிபடுவது நன்று.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும். தெரியாதவர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டாம். இன்று வேங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். பணியாளர்களால் வியாபாரத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிகை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் நல்லபடியாக இருக்கும் என்றாலும் சிக்கனம் தேவை. இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். புதியவர்களை நம்பி தெரியாத தொழில் முயற்சிகளைத் தொடங்க வேண்டாம். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய சரக்குகளை விற்கும் வழியைக் கண்டுபிடிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அம்பிகை வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் விருத்திக்காகக் கேட்டிருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பிள்ளை களை அனுசரித்துச் செல்லவும். புதிய ஒப்பந்தங்களைக் கையெழுத்திடும் முன்பு அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.

01/02/2023

இன்றைய ராசிபலன்

தினப்பலன் பிப்ரவரி 1 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுத லாகக் கிடைக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் அறவே நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பப் பெரியவர் களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுக ளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். பிற்பகலுக்கு மேல் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆஞ்சநேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட மற்றவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்ப னையும் லாபமும் அதிகரிக்கும். இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ருத்ராட்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category