ஆன்மீகத் தகவல் களஞ்சியம்

ஆன்மீகத் தகவல் களஞ்சியம் Its about aanmigam

27/04/2026

#வாலை தாய் அருள் இல்லாமல் யாரும் சித்தர் ஆக முடியாது. பொதுவாக சித்தர்களை பற்றி நிறைய பொய்யான கருத்துகளை பதிவிடுகின்றனர்.
#சித்தர்கள் யாரும் 300 வருடம் 500 வருடம் தவநெறியில் உள்ளார்கள் என்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் இந்த உடல் ஓர் அளவுக்குதான் சக்தியை தாங்க முடியும். யுகங்களாக வாழும் ஒரே மாமுனி சித்தர் #அகத்தியர் மட்டுமே ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அந்த உடலினுள் 80 வயது வரைக்கும் தான் இருப்பார் பின் வேறொரு உடலுக்குள் மாறி விடுவார் இதுவே அவர் பல யுகங்களாக வாழ்கின்றார். அந்த ஒவ்வொரும் தனித்தனி பெயர் பெற்று ஜீவ சமாதி அடைவார்கள். இந்த உலகத்தை காக்கும் வேலையை அவர் ஈசனின் கட்டளைக்கிணங்க செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் #தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளார். #கொங்கணர் அகத்தியரின் சிஷ்யர் அவரை பற்றி பார்ப்போம். இவர் போகரின் சிஷ்யர் கிடையாது. இவர் போகரிடமும் பல கலைகளை கற்றார். கேரள மாநிலம் கொங்கண் பிரதேசத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார். கொங்கணர் சிறந்த முருகன் மற்றும் அம்பிகை பக்தர். முருகனை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். ( ) பில்லி சூனியத்தில் கைதேர்ந்த சித்தர் கொங்கணர். இவர் எப்பொழுதும் அடர்ந்த காடுகளில் தான் இருப்பார். இவர் அகத்தியரிடம் நிறைய பயிற்சி மேற்கொண்டு சித்து விளையாட்டுகளில் கைதேர்ந்தவர் அதை வைத்து பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளை வேரோடு அழிப்பதில் வல்லவர். இவரை நாள்தோறும் வணங்கி வர நம் குடும்பத்தை சீர்குலைக்கும் தீயசக்திகளிடம் இருந்து நம்மை காத்தருள்வார். #திருப்பூர் மாவட்டம் #ஊதியூர் மலையில் கொங்கண சித்தர் தவபீடம் உள்ளது. கொங்கணச் சித்தர் தங்கியிருந்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை வையப்பமலை, அலவாய்மலை, சங்ககிரிஆகியவையாகும்.
இவருக்குக் கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் ஒரே ஆன்மா ஆனால் வெவ்வேறானவர்கள்.
கதை தொகுப்பு:
கொங்கணர் இளமையில் கொங்கு நாட்டின் இளவரசர். ஊதியூர் மலைக் காடுகளில் வேட்டையாடினார். பின்னர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து யோக தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கைப் பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று.
அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து ஒரு மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். அந்த இல்லத்தரசி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்தவரைக் கொங்கணர் சினத்துடன் விழித்துப் பார்த்தார்.
உடனே, அவ்வம்மையார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார்.கற்பின் திறத்தால் வந்த ஞானத்தை அறிந்த கொங்கணவர் நாணமுற்று,தன்னுடைய சினத்தை வெல்லவேண்டிய உண்மையை அறிந்து மிகவும் தீவிரமாகத் தவவாழ்வில் கவனம் செலுத்தலானார். பின் பாலாம்பிகையை வணங்கத்தொடங்கி " #வாலைக்கும்மி" என்ற பாடலையும் பாடி அவளின் பேரருளைப் பெற்றார்.

திருவார் திரு அழுக்கு சுவாமிகள் என்கின்ற சத்யேந்திர சித்தர். பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் என்னும் ஊரில் 191...
25/03/2026

திருவார் திரு அழுக்கு சுவாமிகள் என்கின்ற சத்யேந்திர சித்தர். பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் என்னும் ஊரில் 1919 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த மிகப்பெரும் அவதூத ஞானி. அவருக்குள் ஒன்பது சித்தர்கள் அடக்கம். அகத்தியர், திருமூலர், போகர், பாம்பாட்டி, கருவூரார், புலிப்பாணி, பதஞ்சலி, சிவவாக்கியர், சட்டைமுனி. பதினெட்டு சித்தர்களில் முதல் ஒன்பது சித்தர்கள் இவங்கதான். இந்த ஒன்பது சித்தர்களுடைய தவ வலிமையும், ஆன்மாக்களும், ஒளித் தேகங்களும் ஒன்றாக ஐக்கியமாகி இந்த பூமியில பஞ்சபூத நெருப்பின் அவதாரம். நெருப்புதான் அருள் பெரும்ஜோதி. இறை ஆற்றலாகவே இந்த பூமியில அவதாரம் செய்தவர் கடந்த நூற்றாண்டில. யார் வந்தாலும் திருவார் திரு அழுக்கு சுவாமிகள் தன்னுடைய கையை வலது கையை இடது திருமணியில் வச்சிருப்பாங்க. அப்படியே எடுத்துக் கொடுப்பார். அவர் தேகத்துல அழுக்கு சுரக்கும். எல்லாரும் அழுக்குன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா நவபாசானத்தையும் மிஞ்சும் ஔஷதம். அதை எடுத்துக் கொடுப்பாரு. அவரு குடுக்கிற எதுவுமே எல்லாமே பரிபூரணமா குணமாகும்.

தென்கைலாயம் என்று அழைக்கப்படக்கூடிய வெள்ளியங்கிரியில் சிறிது காலம் தவ வாழ்வில் இருந்திருக்கிறார். பிறகு
கிளம்பி கோவையில் சில காலம் தங்கி இருக்கிறார். பலகாலம் பழனியில் அன்பர்களுக்கு அருள் ஆசி வழங்கியுள்ளார்.

அதன்பிறகு பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் என்னும் பகுதியில் அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்துள்ளார்.

அழுக்குச்சுவாமிகளின் சித்துக்கள்.
----------------------------------------------------------------
தண்ணீரில் விளக்கு ஏற்றுவது ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது மற்றும் ஆற்றின் பெருவெள்ளத்தில் நடுவிலே ஆற்றைக் கடப்பது இதுபோன்ற பல எண்ணற்ற சித்துக்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தும் மகா வல்லமை பெற்ற ஞானி அழுக்கு சித்தர் என்று
அவரை பற்றி அறிந்தவர்கள் கூறும் பல தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

அவருடைய நோக்கம் சித்துக்களை காண்பித்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பதல்ல அவர் மிகவும் எளிதாக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த மிகப் பெரிய ஞானி.

அனைத்து ஜீவராசிகளும் அனைத்து ஆன்மாக்களும் தேடும் ""ஞானம் ""என்ற பெரும் புதையல் அவரிடம் இருந்தது.

ஊனக்கண் கொண்டு உலகப் பற்றுடன் பொருள் ஆசை, மண் பொன் மீது ஆசை கொண்டு அதன் தேவைகளுக்காக அவரை நாடுபவர்கள் இடம் அவர் காட்டும் விளையாட்டு களே இந்த சித்துக்கள்.
அவருள் இருந்த ஞானப் புதையலைக் கண்டு தரிசித்து அஞ்ஞானத்தை அடைய விரும்பியவர்கள் ஒரு சிலரே அவற்றுள் மிகவும் முக்கியமானவர் ""அப்பா பைத்தியம்"" சுவாமிகள்.

அழுக்குச் சுவாமிகளின் சீடர்கள்.
--------------------------------------------------------------
பெரும் செல்வந்தரான ஜமீன் பரம்பரையான ""அப்பா பைத்தியம்"" சுவாமிகள் அழுக்கு சித்தரிடம் சீடரானார்.

இவரைப் போன்றே ஆனைமலை ""கணபதி சுவாமிகளும்"" அழுக்கப்பர் என்னும் அழுக்கு சுவாமிகளின் சீடர் ஆவார்.

அழுக்கு சுவாமிகளின்
ஜீவ சமாதிக்கு செல்லும் வழி.
----------------------------------------------------------
பொள்ளாச்சியிலிருந்து வேட்டைக்காரன்புதூர் பேருந்து வசதிகள் உள்ளது.
மாசாணி அம்மன் கோவிலை அடுத்து ஆனைமலை என்ற ஊருக்கு அருகில் வேட்டைக்காரன்புதூர் அமைந்துள்ளது.

#அகத்தியர்போற்றி #சித்தர்கள்

15/02/2026
01/02/2026

Kavadi aatam. Subramanya Swamy temple

17/01/2026

Deivakulam Kaliamman Temple

Happy new year to u all.
01/01/2026

Happy new year to u all.

பெண் சித்தர் மாயம்மா..​ மாயம்மா அவர்கள் ஒரு மகத்தான பெண் சித்தர்..மற்றும் மௌன யோகினி ஆவார். ​மாயம்மாவின் பிறப்பு மற்றும்...
21/12/2025

பெண் சித்தர்
மாயம்மா..
​ மாயம்மா அவர்கள் ஒரு மகத்தான பெண் சித்தர்..

மற்றும் மௌன யோகினி ஆவார்.

மாயம்மாவின் பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை குறித்த உறுதியான விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

அவர் எங்கு, எப்போது பிறந்தார் என்பதில் பல கருத்துகள் உள்ளன.

பொதுவாக, அவர் வட இந்தியாவிலிருந்து (நேபாளம் அல்லது அஸ்ஸாம்) வந்தவர் என்று நம்பப்படுகிறது.

சிலர் அவர் காசி மற்றும் இமயமலையில் தவம் செய்தவர் என்றும் கூறுகின்றனர்.

சிலர், கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மனே பெண் சித்தர் அவதாரமாக கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறார் என்று கூறியுள்ளனர்.

பூண்டி ஸ்வாமிகள் போன்ற ஆன்மீகப் பெரியோர்கள் இவரைப் புகழ்ந்துரைத்துள்ளனர்.

​ கன்னியாகுமரியில்
​1920-களில் அல்லது 1950-களில் அவர் இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் காணப்பட்டார்.

அவர் அழுக்கான ஆடை, கலைந்த தலைமுடியுடன், ஒரு பிச்சையெடுப்பவரைப் போன்ற எளிமையான தோற்றத்தில் காணப்பட்டார்.

​மௌன யோகினி மாயம்மா பெரும்பாலும் மௌன யோகினியாகவே வாழ்ந்தார்.

எப்போதாவது மட்டும் சைகையிலோ அல்லது வினோதமான ஒலிகள் எழுப்பியோ தன் கருத்தைத் தெரிவிப்பார்.

​மாயச் செயல்கள்:

​அவர் கடலில் நடப்பது, திடீரென்று கடலில் மூழ்குவது,
ஆழமான பகுதிகளில் நீந்திச் செல்வது,
விவேகானந்தர் பாறை மீது திடீரெனத் தோன்றுவது எனப் பல மாயங்களைச் செய்தார்.

இதனால் மக்கள் அவரை 'மாயம்மா' என்று அழைத்தனர்.

​நாய்கள் அவரைச் சூழ்ந்திருக்கும். யாராவது உணவு கொடுத்தால்,

அவர் பெரும்பாலும் அந்த உணவைத் தன்னுடன் இருக்கும் நாய்களுக்குக் கொடுத்துவிடுவார்.

​கடற்கரையில் கிடக்கும் கடற்பாசி மற்றும் கழிவுகளைச் சேகரித்து, தீயிட்டு எரித்து,

யாகம் செய்வது போல் பல மணி நேரம் அதன் முன் அமர்ந்திருப்பார்.

​ஒருமுறை, பேருந்தில் அடிபட்டு குடல் வெளியே வந்த ஒரு நாயை, அவர் தன் மடியில் வைத்து, குடலை உள்ளே தள்ளி, வைக்கோலால் தைத்து, காயங்களைக் கட்டி, உயிர்ப்பித்த சம்பவம் அவரைப் பற்றிய தெய்வீக உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஜீவசமாதி
​சேலம் வருகை மாயம்மா தன் சீடரான திரு. ராஜேந்திரன் என்பவருடன் சேலத்திற்குச் சென்று, அங்கே ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஓரிடத்தில் தங்கிவிட்டார்.

அன்னை மாயம்மா தான் முன்னறிவித்தபடி, பிப்ரவரி 9, 1992 அன்று சேலம், ஏற்காடு செல்லும் வழியில் (மாடர்ன் தியேட்டர்ஸ் அருகில்) ஜீவசமாதி அடைந்தார்.

அவரது சீடரான ஸ்ரீ ராஜேந்திரன் என்பவரால் அந்த இடத்தில் சமாதி ஆலயம் எழுப்பப்பட்டு, அவர் இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டுதோறும் குருபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

​மாயம்மா சித்தர், பல சித்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்பட்டவர்.

அவர் தான் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பாத, ஆனால் தன் செயல்கள் மூலம் தெய்வீகத்தை வெளிப்படுத்திய
​மாயம்மா சித்தர்.

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

29/11/2025

Address

Coimbatore
642005

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீகத் தகவல் களஞ்சியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category