Anointing Power Ministries Of The Holy Spirit

Anointing Power Ministries Of The Holy Spirit With a great vision of the ​Holy Spirit, Sis. Ruth Evangeline John has started this ministry (Anointing Power Ministries of Holy Spirit) in 1996.

This page is about to prepare the way for the Lord Jesus Christ.

30/12/2023

5 நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
சங்கீதம் 103:5

12/11/2022

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

🙏

14/10/2022

நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு...

🙏

01/10/2022

Praise the lord Jesus Christ 🙏..

கர்த்தருக்குள் பிரியமான, என் அன்பு சகோதரர், சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலேயே உங்களை சேர்த்துக் கொள்வேன் ;உங்கள் கண் காண நான் உங்கள் சிறையிருப்பை திருப்பும் போது, பூமியில் உள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் : ஆமென்!!

பிரியமானவர்களே! ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்லுகிறார், நான் உங்கள் சிறை யிருப்பை திருப்புவேன் . ஆகையால் கலங்காதீர்கள். பலவிதமான சோதனைகளில் அகப்பட்டு இருக்கிறீர்களா, வியாதியின் மத்தியில், மரணப் படுக்கையில் இருக்கிற உங்களைப் பார்த்து ,ஆண்டவர் சொல்லுகிறார் ; என் மகனே ! என் மகளே! நான் உன்னை மரண படுக்கையில் இருந்து ,வியாதியிலிருந்து, விடுவிப்பேன்; இதுவரை உங்களை சிறைப்படுத்தி வைத்திருந்த அனைத்து போராட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவித்து உங்கள் சிறை இருப்பை ஆண்டவர் திருப்புகிறார்! உங்கள் கண்கள் காண அவர் உங்களை விடுவிப்பார் ; இதுவரை எந்த ஒரு மாற்றமும் உங்கள் வாழ்க்கையில், வேலையில் ,தொழிலில் ,ஊழியத்தில், உயர்வை பார்க்காமல் அல்லது தடைப்பட்டு கொண்டு இருக்கலாம். ஆனால், இன்று அவர் உங்கள் சிறையிருப்பை திருப்பி, உங்களை உங்களை சுற்றி உள்ள சகல ஜனங்களுக்கும் முன்பாக உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் தரிசனங்களும் ,சொப்பனங்களும், தீர்க்கதரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் நிறைவேற போகிறது ஆம் ஆமென்! உங்களை அழைத்தவர் மாறாதவர் அவர் உங்களை ஆசீர்வதிப்பார் ;ஆகையால், இப்பொழுதே அவரை துதித்து ,மகிழ்ந்து கொண்டாடுங்கள் ; ஜெயத்தை சுதந்தரித்துக் கொள்ளுவோம் ஆமென்! ஆமென்!

28/09/2022

யாத்திராகமம் 9: 13-14

13. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

14. விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.

உங்கள் இருதயம் பலவித யோசனைகளாலும், கவலைகளாலும், நோவுண்டு கிடைக்கிறதோ?

உங்கள் இருதயத்தில் உண்டாயிருக்கும் பலவித நோவுகளான
-கவலை
-இழப்பு
-பொருளாதார பிரச்சனை குறித்தான அங்கலாய்ப்பு
-எதிர்மறையான எண்ணங்கள்
-தற்பெருமை
-நம்பிக்கையின்மை
இவற்றுக்கு உங்கள் கடின குணம் தான் காரணம்.
காரணம் நீங்கள் பார்வோனின் ஆவியால் ஆளப்படுகிறீர்கள்.

பார்வோனைப் போல எத்தனைமுறை உங்கள் இருதயத்தை கடினப்படுத்துவீர்கள்?

கர்த்தர பேசும்போதெல்லாம் செவிகொடுக்க மறுத்து,(உன் வாழ்க்கையில ஒரு அற்புதம் பண்ணுறேன், உன் பிரச்சனைய மாத்துறேன், உன் கவலை எல்லாம் மாற்றி போடுறேன், நீ என்னை அறிந்துகொள், என்னை ஆராதனை செய்னு கர்த்தர் சொன்னபொழுதெல்லாம்).

நான் கீழ்ப்படியுறேன் கீழ்ப்படியுறேன் சொல்லி சொல்லி எத்தனை முறை இயேசப்பாவை ஏமாத்தி அவர் மனதை நோகடிச்சிருப்போம்?.

ஐயோ இன்னும் கொடூரம், அவர் செஞ்ச அற்புதங்களை ருசிபார்த்தும் இன்னும் இருதயத்தை கடினப்படுத்துறீங்களே, இது நியாயமா?

கர்த்தர் பேசும்போதே, நீ கதவை திறந்து "விடாதிருந்தால்" அவர் செயல்படும்போது இழப்பு உனக்கே அதிகம். தெரியமா? உன் கடின குணம், உன்னையும் உன்னை சார்ந்தோரையும், உன் ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கும் ஜனங்களையும் கூட வாதிக்கும். பார்வோன் 10 முறையும் தன் இருதயத்தை கடினப்படுத்தி இழந்து போனது அதிகம். கடைசியில் அவன் பிரதிபலன் செங்கடலில் அமிழ்ந்து போனான். கடின குணத்தின் முடிவு மரணமே. (Exo 15:4)

நீ உனக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாயிருப்பது உன் கையிலேயே இருக்கிறது. சத்துருவுக்கு எப்பொழுதும் கதவை திறந்துகொண்டே இருக்கிறாயே, அதை அடைத்துப்போடு... கர்த்தர் கரத்தின் செயலை நீ அறியாயே! கர்த்தருக்கு உன் கதவை திறந்துவிடு...

பார்வோன் ஆவியை உதறி விட்டு எழும்பு!
அவிசுவாசத்தை விட்டு எழும்பு!
முரட்டாட்டங்களை உதறித்தள்ளு!
எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணத்துக்கு பூட்டுப்போடு!

24/09/2022

கட்டளைகளை கைக்கொண்டு ஜீவனுக்குள் பிரவேசி...

🙏

22/09/2022

தேவன் விரும்பாத பலியை அவருக்கு செலுத்தாதே!

🙏

Address

Coimbatore
641042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anointing Power Ministries Of The Holy Spirit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Anointing Power Ministries Of The Holy Spirit:

Share