Kovai Faizal

Kovai Faizal Ahlusunnah is the real way to jannah

20/08/2026
20/07/2026

்டுகள்_நிறைவு..
#துஆ_செய்யுங்கள்_அன்பர்களே..
#ஆலிம்_பெருமக்களே..
#இன்று_ஸஃபர்_6..

தமிழகத்தின் தலைச்சிறந்த
பேச்சளார்களில் ஓருவரும் நடமாடும் பல்கலை கழுகமாக திகழ்ந்த காயல்பட்டிணம்
மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முன்னால் முதல்வருமான மர்ஹூம்
மெளலவி அல்ஹாஜ்
S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிரி ஹலரத் அவர்கள் வபாஃத் ஆன தினம்
ஹிஜ்ரி 1434 ஸஃபர் 6 (2012 டிசம்பர் 20)
இன்ஷா அல்லாஹ் ஹலரத் அவர்களின் பெயரால் பாத்திஹா ஓதி துஆ செய்வோம்.

மெளலவி S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிரி ஹலரத் அவர்கள் உலமாக்களில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.
குர்ஆன்,ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர் தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர்.

அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து S.S. என்பது
சையது சுலைமான் கலீபா சாஹிப் என்ற அவரின் தந்தையை குறிப்பதாகும்.

அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம் அதோடு 'மஸ்தான்' என்பதும் 'கலந்தர்' என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம் தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

காயல்பட்டணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வராக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி பன்னூற்றுக் கணக்கான 'மஹ்ழரி' ஸனது பெற்ற உலமாக்ககளை உருவாக்கி நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாமிய சன்மார்க்கப் பிரச்சார பீரங்கிகளாக உலா வரச் செய்துள்ளார்கள்.

கேரளாவில் உள்ள பல்வேறு உலமாக்களால்'ஷேய்கு' என்னும் அந்தஸ்து உடையவராகப் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார்.

மெளலவி S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹலரத் அவர்களைத் தமிழ் கூறும் முஸ்லிம் உலகம் S.S.K ஹலரத் என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் பெருமையாக அழைத்தது.அவர் உரை நிகழ்த்தாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹலரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்.

மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும்.குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள். மேலும் ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள்.

கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது நம்முடன் இல்லை அவர் மறைந்து 14 வருடங்கள் ஓடிவிட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(IUML)ன்
கண்ணியமீகு காயிதெ மில்லத்,
சிராஜுல் மில்லத் மற்றும் அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள்.
சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாக்களில் ஹலரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார் பின்னர்,மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார் முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர் வாசிகள் அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள்.

அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர் கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா அரபிக்கல்லூரியில் ஓதி பட்டம் பெற்றவர் ஹலரத் அதனால் தான் அவர் பெயருக்கு பின்னால் 'ரஹ்மானி' என்று சேர்ந்திருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்த மறைந்த மௌலானா தளபதி A.ஷபீகுர் ரஹ்மான் ஹலரத் ஒன்றைச் சொன்னார்கள் ரஹ்மானியா மதரஸாவில் மெளலவி S.S கலந்தர் மஸ்தான் ஹலரத் அவர்கள் இறு‌தி வகுப்பில் இருந்தார்கள். அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன் வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் S.S.கலந்தர் மஸ்தான் ஹலரத் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும் எங்களின் உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார்கள் அத்தகைய மேதை இன்று நம்மிடம் இல்லை.

தமிழக உலமாக்களுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலவி S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹலரத் அவர்கள்.

35 முறை ஹஜ் செய்துள்ளவர் ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாக்கள் சபையின் துணைத் தலைவராக மரணிக்கும் வரை இருந்தார்கள். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து வந்தார்.

"""மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்''"""

"அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்''

என்பது அரபி பழமொழி...

ஆம் மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள் அவர்களின் மறைவு அதிகரிக்குமானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்து விடும் ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்கள் அதனால் உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் மௌலவி S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹலரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.

S.S.K.போன்ற உலமாக்கள் தமிழ் மண்ணில் பெருகிட ஏல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

தகவல்
(SYF@MEDIA)
COIMBATORE ,
TAMILNADU ்டுகள்_நிறைவு..

TAMILNADU

22/05/2026

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்....

அனைவரும் தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவிகளை செய்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன் மேலும் தங்களது தெரிந்த நன்பர்கள்,குடும்பத்தார்கள், உறவினர்கள்,போன்ற அனைவருக்கும் இந்த வீடியோவை SHARE செய்து மேற்படி நபருக்கு நம்மாள் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....

இப்படிக்கு
கோவை பைசல்
9382222202

17/05/2026

கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த, இர்ஷாதுல் முஸ்லிமின் ஷாஃபிய்யா சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மதரஸா கமிட்டி நிர்வாகி மதிப்பிற்குரிய செய்யது மஜீத் (எ) சேட் அவர்கள் தற்போது கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவசர மருத்துவச் சிகிச்சையில் உள்ளார். அவரது மருத்துவச் செலவுகளுக்குப் பெரும் தொகை தேவைப்படுவதால், ஜமாஅத் நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவிகளை வாரி வழங்கி ஒரு மனித உயிரைக் காக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

"நன்மை செய்வதிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்."

07/04/2026

தங்களால் முடிந்த அளவு
உதவிகளை வாரி வழங்குங்கள்....

Address

Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Kovai Faizal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kovai Faizal:

Shortcuts

Share