ஆவிக்குரிய இரத்தப் பேழை

ஆவிக்குரிய இரத்தப் பேழை நித்திய ஜீவனுக்கான தேவனின் ஒரே வழி அ?

" உண்மையான " பெந்தெகோஸ்தே" சபை"" பரிசுத்த ஆவியானவரின் " உண்மையான " பெந்தெகோஸ்தே சபையும், அச்சபைக்குண்டான அவரது ஏழு உபதேச...
01/09/2025

" உண்மையான " பெந்தெகோஸ்தே" சபை"
" பரிசுத்த ஆவியானவரின் " உண்மையான " பெந்தெகோஸ்தே சபையும், அச்சபைக்குண்டான அவரது ஏழு உபதேசங்களும்: - “
[நீதிமொழிகள்: 9 :1-6, மத்தேயு: 3 :11, 12 மத்தேயு: 16: 13 - 19, யோவான்: 3 :1 - 8 அப்போஸ்தலர்: 2 : 1 - 47 (36 - 47 ) ன் படி :]

" ஏழுஉபதேசங்கள்" அப்: 2: 36-47] ன் படி

1.முதல் உபதேசம்: - "இயேசுவே" - இச்சபையின்ஆண்டவரும் கிறிஸ்துமாவார்! ஆமென்! பழைய ஏற்பாட்டின் யெகோவா தேவனே, புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து ஆவார்! [அப்போஸ்தலர்: 2: 36] ன் படி! ஏசாயா: 9: 6, [ தேமோத்தேயு: 3: 16 ன் படி:]
2.இரண்டாவது உபதேசம்: - மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் " (முழுக்கு) ஞானஸ் நானம் பெற வேண்டும் ! [ அப்போஸ்தலர்: 2: 38]-குறிப்பு :- " பிதாகுமரன் பரிசுத்த ஆவி என்ற பரிசுத்த ஆவியின் எந்த வெளிப்பாடும் இல்லாத " ரோமன் கத்தோலிக்க " திரித்துவ " ஞானஸ் நானமல்ல ! " வஞ்சிக்கப்படாதீர்கள் !
3.மூன்றாவது உபதேசம்: - நியாயப்பிரமான நாமங்களை , வழிப்பாட்டு முறைமைகளை பாவங்களை விட்டு உண்மையாய் " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் " மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் " ஞானஸ் நானம் பெற்று , வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட " பரிசுத்த ஆவியை " - முத்திரையாய், வரமாய் பெற வேண்டும் ! ஆதாரம் : யோவேல் : 2 : 28 , 29 , அப்போஸ்தலர்:2 : 38 - 39 ன் படி !
4.நான்காவது உபதேசம்: மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகி ,உங்களை " இரட்சித்துக் " கொள்ளுங்கள்! (அப்போஸ்தலர்: 2: 40, II கொரிந்தியர்: 6 : 13 - 18 ன் படி !]
5.ஐந்தாவது உபதேசம்: - விசுவாசிகளனைவரும் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், (சபை ஐக்கியத்திலும்) அப்பம் பிட்குதலிலும் (இரவு இராப்போஜனத்திலும், கால் கழுவுதல் ஆராதனையிலும்) ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய் தரித்திருக்கவேண்டும் ! " அப்போஸ்தலர்: 2: 42 " முக்கியக்குறிப்பு:- அப்போஸ்தலருடைய உபதேசமும் ஐக்கியமும் என்பது " பரிசுத்த ஆவியின் " உபதேசமும் , ஐக்கியமாகும் ! ஆமென்! [ ஆதாரம் :- II தீமோத்தேயு: 3 : 16 , 17 I பேதுரு : 1 : 20 , 21 , II கொரிந்தியர் : 12 : 18 , ஏசாயா : 34 : 16 ன் படியாகும்! ஆமென்!]
6.ஆறாவது உபதேசம்: - விசுவாசிகளெல்லாரும் சகலனைத்தையும் பொதுவாய் வைத்து அனுபவிக்க வேண்டும்! அப்போஸ்தலர்: 2: 44 - 46 ன் படி! உன்னை நீ நேசிப்பதுப் போல பிறரை நேசி!( அன்பே பிரதானம்) ஆமென்! [ கொரிந்தியர் 8: 15 ன் படி! ஆமென்]
7.கவனியுங்கள், ஏழாவது உபதேசம்: - காணியாட்சிகளையும், ஆஸ்திகளையும் நிலங்களையும், வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று அதன் கிரயத்தைக் கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள் ஏனெனில் அது தேவனுடைய ஊழியத்திற்குரியது!பாருங்கள்! மறைத்தவர்கள் மாண்டுப்போனார்கள்! [ ஆதாரம்: - அப்போஸ்தலர் : 2 : 45 , 4 : 32 -37 , 5 : 1 - 10 ] ஆமென் ! நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, கொண்டுப்போவதுமில்லைப் பாருங்கள்! ஆமென்!
“இதுதான் - " அப்போஸ்தலர்: 2: 36 - 47 ன் படி " " பரிசுத்த ஆவியானவரால் "கட்டப்பட்ட இரட்சிக்கப்பட்ட " அவரது " உண்மையான பெந்தெகோஸ்தே சபையாகும்! ஆமென்!
"வேதத்திலிருந்து""இதை"எடுத்துப்போடுங்கள் பார்க்கலாம்? ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது உனக்கு பயங்கரமாமே?! [ எபிரேயர்: 10: 29 - 31 வாசி!] ஆம்! ஒருவன் " பரிசுத்த ஆவிக்கும் , அவரது பரிபூரண உபதேசமான அப்போஸ்தலர் : 2 : 36 - 47 க்கும் விரோதமாக பேசினால் போதித்தால் செயல்பட்டால் அவனுக்கு இம்மைலும் மறுமையிலும் மன்னிப்பே இல்லையென்றும், முள்ளில் உதைக்கிறது கடினமாம் என்றும், ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது உனக்கு பயங்கரமாம் என்றும், ஒருவன் இத்தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், புறக்கணித்தால், எதிர்த்து நின்றால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும்,பரிசுத்த நகரத்திலிருந்தும், புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிருந்தும் அவனுடைய பங்கை “தேவன்” எடுத்துப்போடுவார் என்று மத்தேயு:12:30-37,அப்போஸ்தலர்:9:1-6,எபிரேயர்:10129-31,வெளி:22:18,19ன்படிநீ எச்சரிக்கப்படுகிறாய்!
கவனியுங்கள், “அப்போஸ்தலர்: 2:36-47ன்படி உண்டான சபைதான் உண்மையான ஆவிக்குரிய பெந்தகொஸ்தே சபையாகும்! ஆமென்!
ஆனால், இன்று இவ்வுலகில் காணப்படும் சபைகளெல்லாம் “பரிசுத்த ஆவிக்கு” எதிரான போலி “திரித்துவ” பெந்தகொஸ்தே சபைகளாகும்! இவை பரிசுத்த ஆவிக்கு எதிரான அந்தி கிறிஸ்தவனுடையது! விளக்கம்:-
போலி என்றால்? “மணியைப்போலவே” காணப்படும், பாசாங்கு செய்யும், அந்திகிறிஸ்துவின் “திரித்துவ” சபைகளாகும்! (இச்சபைகள் IIகொரிந்தியர்: 11:2 க்கு முரணான மூன்று தேவர்களை கொண்டது.
இதன் வரலாறு:- “இது” கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் “திரியேக”, திரித்துவ போதனைகளால் உண்டான- உருவான- சபையாகும்!
திரித்துவம், திரியேகம் என்றால்? ஒன்றிக்கு மேற்பட்ட மூன்று தேவர்களையும், மேலும், அநேக தேவர்களையும், தேவிகளையும் உடையதாகும்! அதாவது “ஒரே தேவனுக்கு” முரணான போதனைகளையும் வழிபாடுகளுடையதாகும்! இவர்களுக்கு பிதா முதல் தேவன், குமாரன் இயேசு இரண்டாம தேவன், பரிசுத்த ஆவி மூன்றாம் தேவன்! இவர்கள் “மூன்று” தேவர்களை கொண்டவர்கள்! இதில் “இயேசு” (திரித்துவத்தில்) இரண்டாம் ஆளாம்!! வேடிக்கை!
ஆதாரம்: - “ஞானோபதேச சின்னக்குறிப்பிடம்” என்ற “ரோமன் கத்தோலிக்க ஸ்தாபன சபையின் அனுதின “திரித்துவ தியான- வழிப்பாட்டு புத்தகமாகும்! அதுதான், அவர்களது (திரியேகம், திருத்துவம்) உபதேசமும், கோட்பாடும், கொள்கைகளும், வழிபாடுகளும், வழிமுறைகளும் திரித்துவ ஞானஸ்நானங்களும் ஆகும்!

!(பிதாகுமாரன் பரிசுத்த ஆவி என்ற அவர்களது திரித்துவ ஞானஸ்ஞானம்!) வேதத்தில் அப்படி ஒரு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளதா? சான்றுகள் இருந்தால் கூறுங்கள்! கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? மூன்று தேவர்களாக?! Iகொரிந்தியர்: 1:11,12வாகி! (மூவரென்று பிசாசு பிரித்துக்கூறுகிறான்?!)
“திரியேக, திரித்துவத்தின் தாய்” ரோமன் கத்தோலிக்க திரித்துவ சபைஸ்தாபனமாகும்!”
நீங்கள் அவளுடைய பிள்ளைகள்! ஆம்! திரியேக, திரித்துவ சபைகளெல்லாம் அவளுடைய பிள்ளைகள் ஆவீர்கள் வெளி:17,18ஆம் அதிகாரங்களின்படி! ஆம்! I யோவான்: 5:19 ன்படி-”( உலகிலுள்ள)" கிறிஸ்துவ சபை ஸ்தாபனமெல்லாம் இதை அறியாமல், தெரியாமல்- திரித்துவ பொல்லாங்கானுக்குள் கிடக்கிறது என்று ஆவியானவர் இச்செய்தியின்மூலம் உங்களை எச்சரிக்கிறார், அழைக்கிறார்! ஆமென்! மணவாட்டியே வெளியே வா! (வெளி: 18:4)
“இச்செய்தியானது “பரிசுத்த ஆவியினால்” உண்டானது!” இனி காலம் செல்லாது! படித்துவிட்டு தர்க்கம் பண்ண அல்ல” உன் ஜீவனை காத்துக்கொள்ள !(வெளி :18:4ன்படி ஆமென்! வாசி: முதலில் “தேவன்” யாரையும் எச்சரிக்காமல் ஒருவரையும் நியாயம் தீர்ப்பதில்லை!
முடிவாக:- பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாக கேட்டேன், அது என் ஜனங்களே! நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு (திரித்துவ பாவங்களுக்கு) உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளைவிட்டு (அவளுடைய திரித்துவ போதனையை விட்டு, சபையை விட்டு) வெளியே வாருங்கள் என்றழைத்தது!” வெளி: 18:4” வாசிக்கவும்! சபைக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று எழுது என்றார்!!

நீதிமொழிகள் : 9 : 1-6

ஞானம் தன் வீட்டைக்கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.

நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்;.

பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்: புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

இவன், பரிசுத்த ஆவியின் பாதத்திலிருந்து.
சகோதரன் : - J.E. யோசுவா ஸ்டேன்லின் - 96598 77137,70925 27101
உடன் ஊழியத்தில் சகோதரி: - சாராள் – 97508 53428 மற்றும் சபையார்
ஜீவ நீரூற்று ஜெப வீடு, மாசாண்டிபாளையம் அன்னூர் - கோவை மாவட்டம்

நம் மனதிற்குள் தோன்றும் 7 கெட்ட கேள்வியும் (சிந்தனைகளும்-சாத்தானின் பொய்களும்) - தேவனுடைய சத்திய வசனமும் பிசாசு அநேக பொய...
31/08/2025

நம் மனதிற்குள் தோன்றும் 7 கெட்ட கேள்வியும் (சிந்தனைகளும்-சாத்தானின் பொய்களும்) - தேவனுடைய சத்திய வசனமும்
பிசாசு அநேக பொய்களை எதிர்மறையான கேள்விகளை கேட்டு சொல்லி நம்மை வஞ்சிப்பான், அவன் பொய்யும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.
ஏவாளிடத்தில் அவன் சொல்லிய பொய்யினால் மொத்த மனஷனும் பாவத்தில் விழுந்தான்.
நம்மையும் அவரையும் பிரிப்பதே அவனுடைய நோக்கம், தேவ சித்தத்திற்கு நம்மை செவி சாய்க்க விடாமல் நம் ஆத்துமாவை அழிப்பதே அவன் எண்ணம்.
பல எண்ணங்களை நமக்குள் கொண்டு வந்து நம்முடைய விசுவாசத்தையும் அவருக்குள் உண்டான நம்முடைய பிணைப்பையும் உடைப்பான்

யோவான் : 8:44 (John:8.44)
சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
நம் மனதிற்குள் தோன்றும் Negative Thoughts எண்ணங்கள் :-
1. நீ தனியாக இருக்கிறாய் - You are alone
மத்தேயு : 28:20 (Matthew:28:20
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
2.நீ பெலனற்றவன் - You are weak
பிலிப்பியர்:4:13 - Philip:4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
3.நீ தோல்வியடைந்தவன் - You are a failure
1.யோவான் : 5:4 - ( 1.John:5:4)
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
4. நீ உதவியற்றவன் - No one can help you
சங்கீதம் : 121: 1,2 - (Psalms:121:1,2)
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
5.உங்கள் பாவங்கள் மன்னிக்க முடியாத அளவிற்கு பெரியது - Your sins are too big to forgive
1.யோவான் : 1:7
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
6.உங்கள் கடந்த கால வாழ்க்கை வரையறுக்கிறது - Your Past defines you
2.கொரிந்தியர் :5:17 - (2 Corinthians:5:17)
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
7.தேவன் உங்களுக்கு பதில் தரமாட்டார் - God will never listen to You
1.யோவான் : 5:14 - (1.John:5:14)
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
1 யோவான் 5:14

ஆமென்.

27/08/2025

Pls read 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

மீட்பின் வழியும், மீட்பின் பிரமாணமும் : -

வேதச் சான்றுகளுடன் கூடிய முழுமையான வேத விளக்கம்.

ஆதாமும்,ஏவாளும் புசித்த அந்த கனி என்ன???

சர்ப்பத்தின் வித்தைக் குறித்தான வேத ஆதாரம் என்ன???

இதன் ஆவிக்குரிய விளக்கங்களை தெளிவாக காண செய்திகளை அனுப்ப ஆவலுடன் உள்ளேன் தயவு கூர்ந்து சில நிமிடம் ஒதுக்கி படியுங்கள். நன்றி

ஆவிக்குரிய இரத்தப் பேழை
9659877137
6382054305

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆவிக்குரிய இரத்தப் பேழை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category