திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்.
ஆலயம் காப்போம்!
அறநெறி வளர்ப்போம்!
நம்மை அனுதினமும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம் என்ன? பிரார்த்தனை, பூஜை, வேள்வி, அர்ச்சனை, இவை அனைத்தும் அவனுக்கு நன்றி சொல்லத் தான் என்றாலும் இவை அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கும். ஆனால் சுயநலம் இன்றி நாம் இறைவனுக்கு செய்யக்கூடிய ஒன்று இருக்க
ிறது. அது தான் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.
புதிய கோவில்களைக் கட்டுவதை விட நம் முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயங்களை ஒழுங்காகப் பராமரிப்பதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.
அப்பர் முதல் முறையாக உழவாரத் தொண்டு செய்த தலம் திருப்பூந்துருத்தில் அத்தகைய உழவாரப்பணி செய்ய அவ்வடியார்கள் அனைவரும் முன்வர வேண்டும், அப்பணியில் நம்மை உடலாலும், பிற வகைகளாலும் (பொருள் கொடுத்து உதவி) ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு அப்பரடிகளின் உழவாரத்தை நாமும் கைக்கொண்டு வாழ்வோம். ஆலய உழவாரத் தொண்டு செய்ய _/\_
_/\_சிவயநம_/\_ உழவாரப்பணி
சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன. பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி. உலகில் எந்த ஒரு பணியும் வழிபடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும். சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்
~ மருள் நீக்கியார் அருள் நெறி திருக்கூட்டம்- கோவை சார்பாக வேண்டுகிறோம் _/\_ .
என் கடன் பணி செய்து கிடப்பதே. இறைப்பணி செய்வோம். இன்பமாக வாழ்வோம்.