Kalyana Sastha Samajam

Kalyana Sastha Samajam Swamiye Saranam Ayyappa. This is the official page of Kalyana Sastha Samajam, located at chromepet.

அருஞ்சுனை காத்த அய்யனார்கௌதம முனிவருக்கு சாஸ்தா காட்சி கொடுத்த தலம்.இயற்கை எழில் கொஞ்சும் ஏகாந்தமான திருத்தலம். மன்னனின்...
25/08/2026

அருஞ்சுனை காத்த அய்யனார்

கௌதம முனிவருக்கு சாஸ்தா காட்சி கொடுத்த தலம்.

இயற்கை எழில் கொஞ்சும் ஏகாந்தமான திருத்தலம்.

மன்னனின் அரச தண்டனைக்கு ஆளான ஒரு பெண், சாஸ்தாவின் அருள் பெற்றவள்..

மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.

இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ‘‘கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றார். இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுனையை யாரும் அபகரிக்காமலும், தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்’’ என்றார்.‘‘அருமையான சுனையாக மாறும் உன்னைக் காத்தருள்வேன் என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்’’என்று அழைக்கப்பட்டார்.

கௌதம முனிவர் வழிபட்ட இடமாதலால் சுனைக்கு கௌதமர் சுனை என்றும் பெயர் உண்டு.

வழக்கமாக பூர்ணா புஷ்கலா தேவியருடன் அமர்ந்து காட்சி தரும் சாஸ்தா, இங்கே நின்ற கோலத்தில் தேவியர் மட்டுமல்லாமல் 2 பிள்ளைகளுடனும் காட்சியளிக்கிறார்.

21 பரிவாரங்களுடன் ஏகாந்த வாசியாக சாஸ்தா வீற்றிருக்கும் எழிலாலயத்தின் படங்கள் சில...

ஸ்வாமி சரணம்

சரணம் ஐயப்பா!குருவருளும் திருவருளும் சேர, நமது கல்யாண சாஸ்தாவுக்கு 6ம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20ம் ஆண்டு திருக்கல்யாண...
20/08/2026

சரணம் ஐயப்பா!

குருவருளும் திருவருளும் சேர, நமது கல்யாண சாஸ்தாவுக்கு 6ம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20ம் ஆண்டு திருக்கல்யாணமும், சென்னை குரோம்பேட்டை க்ஷேத்திரத்தில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாள் : 22 & 23 ஆகஸ்ட் 2026.

பத்திரிகை தங்கள் பார்வைக்கு இணைக்கப்படுகிறது.

தங்களின் சிறிய அளவிலான பங்களிப்பு, இந்த உத்ஸவத்தின் வெற்றிக்கு பெரும் பங்காக இருக்கும், இறைவன் கல்யாண சாஸ்தாவின் அருளும் பெற்று தரும்.

பங்களிக்க விரும்புவோர் நேரடியாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். வங்கி கணக்கு பெயர்: "Kalyana Sastha Samajam"
வங்கி: சிட்டி யூனியன் பாங்க்
கணக்கு என்: 510909010315561
IFSC CODE – CIUB0000454
கோவிலம்பாக்கம் கிளை(454)
QR CODE இணைக்கப்படுகிறது

இந்த உத்ஸவத்திற்கு பொருளுதவி அனுப்பும் பக்தர்கள், தங்கள் பெயர், நக்ஷத்திரம், முகவரி ஆகியவற்றை [email protected] என்ற ஈ-மெயில் முகவரி அனுப்பும் பட்சத்தில், பூஜை சங்கல்பத்தில் தங்கள் பெயரைசேர்த்துக்கொண்டு, பிரசாதமும் அனுப்ப ஏதுவாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு:
திருவையாறு V.கணேஷ்: 9840857634 / 9566292206

சரணம் ஐயப்பா!

Saranam Ayyappa!As per the divine will, we are ordained to conduct 6th year's Samvathsarabhishekam and 20th year Thirukk...
20/08/2026

Saranam Ayyappa!

As per the divine will, we are ordained to conduct 6th year's Samvathsarabhishekam and 20th year Thirukkalyanam to Lord Kalyana Sastha at Chromepet, Chennai 44.

Date : 22 & 23 August 2026.

Please find the invitation attached.

Any small contribution for the uthsavam would make it successful and obtain the blessings of Lord Kalyana Sastha.

Those who wish to contribute to this Uthsavam, may send directly to our bank account in the name of "Kalyana Sastha Samajam":
Bank: City Union Bank
A/c No.510909010315561
IFSC CODE – CIUB0000454
Kovilambakkam Branch(454)
QR Code attached for Payment Convenience.

Devotees who donate can mail us name, Nakshatram, and address to [email protected] to include in the Puja Sankalpam and the prasadam will be sent.

For further details please contact:
Thiruvaiyaru V. Ghanesh: 9566292206 / 9840857634

Saranam Ayyappa

துர்க்கை சித்தர் அருளிய ஐய்யப்ப ஷோடச நாம ஜோதி
18/08/2026

துர்க்கை சித்தர் அருளிய ஐய்யப்ப ஷோடச நாம ஜோதி

ஸ்ரீ சொரிமுத்தய்யனார் குறித்து, பக்த ஸ்ரேஷ்டர் இயற்றி ஸமர்ப்பணம் செய்த முக்தார்யாஷ்டகம்:*ஸ்ரீ முக்தார்யாஷ்டகம்*  *பாபநாஶ...
18/08/2026

ஸ்ரீ சொரிமுத்தய்யனார் குறித்து, பக்த ஸ்ரேஷ்டர் இயற்றி ஸமர்ப்பணம் செய்த முக்தார்யாஷ்டகம்:

*ஸ்ரீ முக்தார்யாஷ்டகம்*

*பாபநாஶ வனாவாஸம்ʼ பா⁴ண-தீர்தா²ஸ்பத³ம்ʼ விபு⁴ம்*
*ஸர்வாபீ³ஷ்ட-ப்ரதா³தாரம்ʼ முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் .. 1..*
பாபநாசம் வனத்தின் நடுவே இருப்பவரும், பாண தீர்த்த பகுதியை தன்னுடைய ப்ரியமான இடமாகக் கொண்டவரும், பக்தர்கள் விரும்புபவற்றையெல்லாம் அளிப்பவருமான முத்தைய்யனை வணங்குகிறேன்!

*மலயபர்வத -கூடஸ்த²ம்ʼ மஹாலிங்க ஸமீபகம்*
*மங்களோபாத்த-வபுஷம்ʼ முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 2*
மலய பர்வதம் எனும் பொதிகை மலையில் வசிப்பவரும், மஹாலிங்கஸ்வாமியை அருகே உடையவரும், மங்களமே உருவான வடிவத்தில் விளங்குபவருமான முத்தையனை வணங்குகிறேன்

*மூலாதா⁴ரநிலயஸ்தம் கலௌ பா³ஷண தை³வதம்*
*வஸுத³ம் வரத³ம் தே³வம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 3*
மூலாதார நிலையத்தில் விளங்குபவரும், கலியுகத்தில் பேசும் தெய்வமாக இருப்பவரும்,
ஐஸ்வர்யங்களையும் கேட்ட வரங்களையும் கொடுப்பவருமான முத்தையனை வணங்குகிறேன்.

*ஶுபா⁴ஷாடே³ ஹ்யமாவாஸ்யாம் பக்தாக³ஸ்த்ய வரப்ரத³ம்*
*கல்பத்ரு மூல ஸம்தீ³ப்தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 4*
சுபமான ஆடி மாதம் அமாவாசை நாளில் பக்தரான அகத்தியருக்கு
அருள் செய்தவரும், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷத்தின் கீழ் ஜ்வலிப்பவருமான முத்தய்யனை வணங்குகிறேன்

*இந்த்³ராதி³தே³வதாவ்ருʼந்தை³ர் இஷ்ட காமப்ரபூர்த்தயே*
*ஸ்வர்ண வர்ஷாபி⁴ஷிக்தம் தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 5*
இந்திரன் முதலான தேவர்கள் அனைவரின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அதனால் மகிழ்ந்த
தேவர்களால் தங்க மழையால் அபிஷேகம் செய்யப்பட்டவருமான (பொன் சொரி) முத்தையனை வணங்குகிறேன்

*ஶ்ருங்க²லபூ⁴தநாதா²தி ஸர்வபூ⁴த க³ணாவ்ருதம்*
*ஸர்வாஶ்சர்யமயம்ʼ தே³வம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 6*
சங்கிலி பூதத்தார் முதலான கோடி பரிவார பூதகணங்கள் சூழ விளங்குபரும், ஆச்சரியமான லீலைகள் நடத்துபவருமான முத்தையனை வணங்குகிறேன்.

*ராஜராஜம் மிதாசாரம்ʼ தீர்தாதி³ப வரப்ரத³ம் .*
*ரேவதம் அச்வமாரூடம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 7*
அரசருக்கு எல்லாம் அரசராக விளங்குபவரும்,
எண்ணமுடியாத லீலைகளை நிகழ்த்துபவரும், தீர்த்தபதி ராஜாவுக்கு அருளியவரும்,
ரேவதன் என்ற பெயருடையவரும் குதிரை வாகனம் ஏறி வருபவருமான முத்தையனை வணங்குகிறேன்.

*பூ⁴தபா³தா⁴ ரோக³தாப ஸர்வ க்லேஶாதி³ நாஶனம்*
*பு⁴த³பாமர ஸேவ்யம் தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 8*
பூதங்களால் ஏற்படும் கஷ்டங்களையும், நோய்களையும்,
மனக்கவலையையும், எல்லாவிதமான துக்கத்தையும் அழிப்பவரும்,
பண்டிதரும் பாமரரும் பக்தியோடு ஆராதிக்கும் மூர்த்தியான முத்தையனை வணங்குகிறேன்.

*முக்தார்யாஷ்டகம் ஸ்தோத்ரம்ʼ தா³ஸாரவிந்த³ நிர்மிதம்*
*ஸர்வ தாப ஹரம் சைவ ஶாஸ்த்ரு ப⁴க்தி ப்ரத³ம் ஶுப⁴ம்*
சொரிமுத்தையனான சாஸ்தாவைக் குறித்து பக்தியோடு தாஸன் அரவிந்தனால் எழுதப்பட்ட இந்த முக்தார்யாஷ்டகம் எனும் துதி, எல்லா விதமான கஷ்டங்களையும் நீக்கும்; சாஸ்தாவின் மேல் விசேஷமான பக்தியை கொடுக்கும்; படிக்கும் பக்தர்களுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகும்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சொரிமுத்தய்யனே சரணம் ஐயப்பா!

Saranam Ayyappa!As per the divine will, we are ordained to conduct monthly uthiram abhishekam at 5am and Sastha Namam Mu...
12/08/2026

Saranam Ayyappa!

As per the divine will, we are ordained to conduct monthly uthiram abhishekam at 5am and Sastha Namam Mutrothal by Sri Ayyappa Sahasranama Parayana Kuzhu, Chennai from 3pm onwards at the sannadhi of Lord Poorna Pushkalamba Sametha Sri Kalyana Sastha on 16/08/26 (Sunday) @ Nemilicherry, Chennai-44.

https://maps.app.goo.gl/XFg9ygxAWeuMVRmPA

Pl make your presence and invoke the blessings of Lord.

For further details:
Thiruvaiyaru V Ghanesh: 9566292206 / 9840857634

Saranam Ayyappa!

சரணம் ஐயப்பா!
குருவருளும் திருவருளும் சேர, 16/08/26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை 44, நெமிலிச்சேரியில், காலை 5மணிக்கு அபிஷேகமும், மதியம் 3மணி முதல் பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஸ்ரீ கல்யாண சாஸ்தா சன்னதியில், ஸ்ரீ ஐயப்ப சஹஸ்ரநாம பாராயண குழுவினரால் சாஸ்தா நாமம் முற்றோதல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

https://maps.app.goo.gl/XFg9ygxAWeuMVRmPA

அனைவரும் கலந்து கொண்டு ஐயனருளுக்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு: திருவையாறு V.கணேஷ்: 9566292206 / 9840857634

சரணம் ஐயப்பா!

With the Blessings of Acharyas and Lord Poorna Pushkalamba Sametha Sri Kalyana Sastha, Kalyana Sastha Samajam, Nemiliche...
12/08/2026

With the Blessings of Acharyas and Lord Poorna Pushkalamba Sametha Sri Kalyana Sastha, Kalyana Sastha Samajam, Nemilichery, Chennai - 44 is Organising Online classes for SASTHA THODAYAMANGALAM & SASTHRU ASHTAPADHI.

Classes Commence from AVANI MOOLAM (23.08.2026)
Inaugural Class on 23.08.2026 @ 11.00am

The Classes would be conducted every Monday & Thursday between 8.00pm & 8.40pm.

INAUGURATION BY NAMASANKEERTHANA PITHAMAHAR BRAMHASHREE KANPUR MAHADEVAN GURUSWAMI.

Fill up the Google form & Register Before 20.08.2026
https://forms.gle/FrRXSzayLHNjTCqf8

For Further Details Contact Co-ordinator +91 80562 54842

Address

Link Street
Chromepet
600044

Telephone

+919566292206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalyana Sastha Samajam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kalyana Sastha Samajam:

Shortcuts

Share