ஸ்ரீ வல்லபி மாரியம்மன்

ஸ்ரீ வல்லபி மாரியம்மன் தில்லையின் ஈசானியத்தில் கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு #ஸ்ரீ_வல்லபி_மாரியம்மன்
(1)

07/08/2026

#ஆடி_வெள்ளி #சிதம்பரம் #தில்லை எல்லை காக்கும் அன்னை #தில்லை_காளி தரிசனம்

04/08/2026

சிதம்பரம் ஆடி பெருக்கை முன்னிட்டு தீக்ஷிதர் சிறார்கள் விமரிசையாக கொண்டாடினர்🙏🙏🙏

26/07/2026

சிதம்பரம் அருள்மிகு ஓம் ஸ்ரீ கீழத்தெரு மாரியம்மன் ஆலய திருத்தேர் வைபவம்

26/07/2026

சிதம்பரம் அருள்மிகு ஓம் ஸ்ரீ கீழத்தெரு🔥மாரியம்மன் திருத்தேர் நோக்கி செல்லும் காட்சி🙏🙏🙏🔥

24/07/2026

ஆடி வெள்ளி அம்மன் சிறப்பு சந்தனக்காப்பு அலங்கார தரிசனம்

23/07/2026
 #தஞ்சை_பெரியகோயில்  #ஆஷாட_நவராத்திரிப்_பெருவிழா -2026தஞ்சாவூர் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில், #...
22/07/2026

#தஞ்சை_பெரியகோயில் #ஆஷாட_நவராத்திரிப்_பெருவிழா -2026

தஞ்சாவூர் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில்,
#ஸ்ரீ_வாராஹி_அம்மன்

22-07-2026 - #காய்கறி அலங்காரம்

நம்மில் பலரும் அரிந்த ஒன்று நவராத்திரி அந்த நவராத்திரி முப்பெரும் தேவியரான #துர்கா_லஷ்மி_சரஸ்வதி தேவிகளையும் பல கொலுபொம்மைகளை வைத்து வழிபடக்கூடிய நவராத்திரி ஆனால் இது அந்த நவராத்திரி இல்லை.

இது #ஆஷாட நவராத்திரி என்று சொல்லக்கூடியது எதிரிகளை வீழ்த்தும் வாராஹி தேவிக்கே உரிய விஷேசமே ஆஷாட நவராத்திரி.

ஆனி ஆடி மாதத்தில் வரக்கூடியது இந்த வாராஹி அம்மன் வழிபாடான ஆஷாட நவராத்திரி.

#வாராஹி அம்மன் யார் என்றால்:
சப்த மாதாக்ககளில் ஒருவர்,
பாலாதிரிபு சுந்தரியின் போர் தளபதி,
தன்னுடைய பக்த்தர்களின் எதிரிகளை துவம்சம் செய்பவள்,
தஞ்சை ராஜ ராஜ சோழனின் முழுமுதற் கடவுள் மற்றும் இஷ்ட தெய்வம் ஆகையாலே இன்றும் தஞ்சை பெருவுடையார் பெரிய கோவிலில் தனி சன்னதியில் உள்ளார் வாராஹித்தாய்.
மன்னர் ராஜ ராஜ சோழர் எந்த காரியத்தை தொடங்கினாலும் வாராஹி அம்மனை வேண்டியே தொடங்குவாராம்.

வாராஹி அம்மன் விவசாயத்திற்கும் விவசாய நிலங்களுக்கும் விவசாயிகளுக்குமான தெய்வமாய் விளங்குகிறாள்.
ஆகையாலே கையில் ஏர்கலப்பையை தாங்கி கொண்டு நமக்கு காட்ச்சிதருகிறாள்.

நாள்: 15-07-2026 முதல் 23-07-2026 வரை ஆஷாட நவராத்திரி

#பூஜை முறை:
ஆஷாட நவராத்திரியான ஒன்பது நாளும் வாராஹி அம்மனை பூஜிக்க வேண்டும்.

வாராஹி அம்மனின் சிலையோ அல்லது படமோ வாங்கிகொண்டு அதை பூஜை அறையில் ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
வாராஹி அம்மனுக்கு பிடித்த நீல நிற அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் வஸ்திரத்தை(துனி) சாற்றவேண்டும்.
இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மாலை 6மணிக்கு மேல் வைக்கப்பட்ட வாராஹி தேவிக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் பின் அம்பாளுக்கு உகந்த செவ்வரளி அல்லது நீலநிற சங்குப்பூ அல்லது அனைத்து வாசனை பொருந்திய மலர்களை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா.

இந்த மந்திரத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 108முறை அல்லது 27முறை சவரின்றி உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை ஆஷாட நவராத்திரி இல்லாமல் சாதா நாட்களிலும் கூறலாம்.

மந்திரத்தால் அர்ச்சனை செய்த பிறகு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள் குறிப்பாக சக்கரைவல்லி கிழங்கு அல்லது சுன்டல் அல்லது பழங்களில் கருப்பு திராட்சை,அன்னாசி,மாதுளை போன்ற ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக செய்ய வேண்டும்.
பின் தீப தூப ஆரத்தி காட்ட வேண்டும்.

இப்படி இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாலை வேளையில் வாராஹி தேவியை பூஜிக்க நமக்கு ஒரு மாற்றம் ஏற்படும் விவசாயத்தில் முன்னேற்றம்,எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதை,சகல செல்வம்,நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

#குறிப்பு:- இந்த ஒன்பது நாள் பூஜை செய்ய முடியாதவர்கள் முதல்நாள் மற்றும் கடைசிநாள் மட்டும் வழிபடலாம்.
பூஜை செய்து வரும் இந்த ஒன்பது நாட்களிலும் வாராஹி அம்மனின் போட்டோ அல்லது விக்ரஹத்தை இடம் மாற்றம் செய்ய கூடாது.
முதல் நாள் வைத்த இடத்திலேயே ஒன்பது நாட்களும் இருக்க வேண்டும்.
ஆஷாட நவராத்திரி முடிந்த பிறகு அதை நாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுடன் வைத்து விடழாம்.

வாராஹி அம்மனை மேற்கு,கிழக்கு, வடக்கு திசைகளை பார்த்து வைக்க வேண்டும்.

வாராஹி அம்மனை வீட்டில் வைக்கலாமா என்றால் தாராளமாக வைக்கலாம்
அவள் அம்பாள் பார்வதியின் அவதாரமே.
பார்ப்பதற்கு பன்றி முகத்துடன் இருந்தாலும் அவள் தாய்.
ராஜ ராஜ சோழனுக்கு வெற்றியை வழங்கும் அவள் நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைப்பாள்.

அவழுக்கே உறிய விழாவான இந்த ஆஷாட நவராத்திரியில் அவளை வழிபடுவோம்.
அன்னையின் அருளில் ஆர்வம் கொண்டு நாம் தினமும் அவளின் திருப்பாதங்களை பற்றி கொள்வோம்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை படித்ததோடு விட்டு விடாமள் நாளு பேருக்கு தெரியப்படுத்துங்கள் இந்த ஆஷாட நவராத்திரியை தவறாது வாராஹி அம்மனை வழிபடுங்கள்.

நன்றி வணக்கம்

#ௐநமோவாராஹி

Address

Subramaniyan Street
Chidambaram
608001

Opening Hours

Monday 5:30am - 9:30pm
Tuesday 5:30am - 9:30pm
Wednesday 5:30am - 9:30pm
Thursday 5:30am - 9:30pm
Friday 5:30am - 9:30pm
Saturday 5:30am - 9:30pm
Sunday 5:30am - 9:30pm

Telephone

+919894907057

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ வல்லபி மாரியம்மன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ வல்லபி மாரியம்மன்:

Shortcuts

Share

Category