Homam &poojas

Homam &poojas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homam &poojas, Hindu temple, 24 prasad nagar, Chennai.

 #திருப்பரையார் அருள்மிகு  #லக்ஷ்மிபூமி ஸமேத  #ஸ்ரீ_ராமஸ்வாமி ஆலயம்  #கேரள மாநிலம் திருச்சூருக்குத் தென்மேற்கே திருப்பரை...
16/12/2022

#திருப்பரையார் அருள்மிகு #லக்ஷ்மிபூமி ஸமேத #ஸ்ரீ_ராமஸ்வாமி ஆலயம்

#கேரள மாநிலம் திருச்சூருக்குத் தென்மேற்கே திருப்பரையார் ராமர் ஆலயம் உள்ளது. இங்கு அனுமன் அரூபமாக திருஷ்டா சீதா, திருஷ்டா சீதா (கண்டேன் சீதையை) என்று சொல்லிக் கொண்டு இரவும் பகலும் ஆலயத்தை வலம் வருவதாகவும்; அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. மேலும், இவ்வாலய மடப்பள்ளியில் எவ்வளவு பெரிய பாத்திரத்தில் பிரசாதம் தயார் செய்தாலும், பணியாளர் ஒருவரே எவர் உதவியுமின்றி பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விடுகிறார். காரணம், பிரசாதம் இறக்கும்போது அனுமனும் ஒரு கை கொடுத்து உதவுவதாகச் சொல்லப்படுகிறது...

30/05/2022

ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.

அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,

பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.

தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க,

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி,

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க,

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய,

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது....???

குழந்தை எப்படிப் பிழைத்தது....???

தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன....??? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்.....???

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.

குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும்.

*Owing to the prevailing COVID-19 situation, it is proposed to conduct Yajur Upakarma (3rd Aug)/Rig Upakarma (4th Aug) o...
17/07/2020

*Owing to the prevailing COVID-19 situation, it is proposed to conduct Yajur Upakarma (3rd Aug)/Rig Upakarma (4th Aug) online (via Zoom) in multiple batches.* The Upakarma will be conducted Those who are unable to reach their “Aathu Vadyar” or visit temples can register via phone, what's app, For darbhai/pavitram/poonal/sankalpam paper will be sent by post r person, enable us to send the materials ahead of time.

உபாகர்மா செய்து கொள்ள ஆத்து வாத்தியாரை அணுக முடியாதவர்களும் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களும் அவசியம் zoom meeting appமூலம் உபாகர்மா செய்து கொள்ளலாம்... (phone , what's app, அல்லது கீழே உள்ள லிங்க் link மூலம் பதிவு செய்து கொள்ளவும். 30ம் தேதிக்குள்).. பதிவு செய்பவர்களுக்கு பூணூல், பவித்ரம், தர்பை முதலியவை அனுப்பி வைக்க முடியும்...

B. Radhakrishna Ghanapadigal.
9841547476. 8667060609.
Email ID...
[email protected]
ராதா க்ருஷ்ண கனபாடிகள்
9841547476..
8667060609.. மேலும் இது போன்ற நிலைமையில் இவ்வாறு செய்வது சிறந்ததாக அமையும்
முடிந்தத வரை இந்த விவரத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும் (please share)

தற்பொழுது நிலவும் covid-19ன் காரணத்தினால் உபாகர்மா செய்து கொள்ள ஆத்து வாத்தியாரை அணுக முடியாதவர்களும் கோவிலுக்கு.....

29/04/2019

□□□சில ஹோமங்களும் அதன் பயன்களும்□□□

1. கணபதி ஹோமம் :
தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் :
பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் :
கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் :
ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் :
ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் :
மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் :
புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் :
செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

11. தில ஹோமம் :
சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் :
நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் :
திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. கால சர்ப்ப ஹோமம் :
திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்;
சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

02/06/2018

யாகமும் ( #ஹோமம் ) அதன் பலனும் !!!

ஒவ்வொரு தேவதைகளுக்கும் இஷ்டமான ( ப்ரீதியான ) திரவியங்களை அக்னி ரூபமாக செய்யும் தியாகமே #யாகம் என்று பொருள்....

அவரவருக்கு தேவையான யாகங்களை செய்து தேவதைகளின்
அருளைப் பெறுவீர்....

அவற்றில் சில....

1.கார்ய சித்திக்கு – கணபதி ஹோமம்.

2.கிரஹ தோஷ நிவர்த்தி –
நவக்ரஹ ஹோமம்.

3.ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி, குபேர ஹோமம்.

4.ஆயுள் விருத்திக்கு –
அம்ருத முருத்யுஞ்ஜய ஹோமம்.

5.ஆரோக்யமான வாழ்விற்கு –
தன்வந்திரி மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.

6.சத்ரு உபாதைகள் நீங்க –
மஹா சுதர்சனர் மற்றும்
சத்ரு சம்ஹார ஹோமம்.

7.கல்விக்கு – மஹா சரஸ்வதி , மற்றும் ஹயக்ரீவர் ஹோமம

8.சகல கார்ய வெற்றிக்கு –
மஹா சண்டி ஹோமம்.

9.திருமண தடை நீங்க –
சயவம்வரா பார்வதி ,
ஹோமம்.

10.ஆசைகள் பூர்த்தி அடைய –
வாஞ்சா கல்ப கணபதி ஹோமம்.

11.புத்ர சந்தானம் கிடைக்க –
சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்.

12.சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ ருத்ர ஹோமம்.

13.அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க –
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஹோமம்

14.ஆபத்து,விபத்துகள் அகல – ஆஞ்சநேயர் ஹோமம்.

15. நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி
More details call...

02/06/2018

தீர்க சுமங்கலி பவா ...!

என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்
5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

திருமணத்தில் ஒன்று,

60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய.

அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..அதிபதிகள் ஆவார்கள்.

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

இறையோடு இரண்டரக் கலந்து,இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமையும்

18/03/2018

#வசந்தநவராத்திரி :(17/3/18 ---- 25/3/18)

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்
இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம் .

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.

(நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில்,

வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,

ஒரு பட்ச்ம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும்,

மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது.

சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.

வசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது.

வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.

இந்த வசந்த காலத்தில், பெரும்பாலான அம்பிகையின் ஆலயங்களில்

ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள்.

மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும், லலிதா சகஸ்ரநாம அர்சசனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜை நடைபெறும்..

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த இந்த வசந்த நவராத்திரி காலத்தில் நம் இல்லத்தில் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று நல்ல நேரத்தில் கலசம் வைத்து அதனை அம்பாளாக பாவித்து ஒன்பது நாளும்
( நவமி வரை )மாலையில் பூ பழம் தாம்பூலம் என்று நம்மால் முடிந்த நிவேதனம் செய்து நமக்கு தெரிந்த தோத்திங்கள், பாடல்களை பாடி ( *சிவன் அபிஷேகம் பிரியர் பெருமாள் அலங்கார பிரியர் அது போல் அம்பாள் ஸ்தோத்திர பிரியா* ) அம்பாளை துதிக்க சகலகாரியமும் சித்தியாகும் தசமியன்று நல்ல நேரம் பார்த்து கலசபூசை செய்து பூஜை செய்து கலசத்தை அகற்றுவது வழக்கம்...

ஒன்பது நாளும் லலித்தா சகஸ்ரநாமம் பாராயணம். தேவிபாடம் . லலிதாம்பா ஷோபனம் . தேவிகட்கமாலா பாராயணம் .லலிதாதிரிசதி . அஷ்டோத்திர போன்றவை பாராயணம் செய்வது சிறப்பு ஒன்பது நாட்களும் அம்பாளை குளிர்விக்கும் வகையிலான பாராயணங்கள் சிறப்பு..

அனைவரின் இல்லத்திலும் லலித்தாதிரிபுர சுந்தரி அருள் பெருகட்டும் ...
Radhakrishna Ghanapatigal
8667060609🙏🏽

Maha Shivaratri  pooja
13/02/2018

Maha Shivaratri pooja

சந்திரகிரஹண பரிஹார ஸ்லோகம்
29/01/2018

சந்திரகிரஹண பரிஹார ஸ்லோகம்

26/11/2017

Address

24 Prasad Nagar
Chennai
6000087

Telephone

+918667060609

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homam &poojas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Homam &poojas:

Share

Category