Athma Jyothisha Nilayam

Athma Jyothisha Nilayam Pridiction for you jathagam,

03/03/2016

காமத்தை கடக்க இதோ ஒரு வழி...!

காமத்தை கை விடுங்கள் அப்போதுதான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள் ஞானிகளும் சித்தர்களும் கூட இதை தான் சொல்கிறார்கள் நமது அன்றாட வாழ்வில் அனுபவத்தில் காமம் என்ற பாலுணர்ச்சி புனிதமான சிந்தனைகள் நமக்குள் ஏற்படாமல் தடை செய்வதை காண்கிறோம்

நிறையே பேர் சொல்கிறார்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிர்க்கிறது தரையில் விழுந்த மீனை போல் துன்பத்தால் துடிக்கிறது அதை மாற்ற கடவுளை வணங்குகிறேன் ஒரு நிமிடம் மட்டும் ஏற்படுகின்ற இறை சிந்தனை நிம்மதியை தருகிறது மூச்சி விட காற்றியில்லாமல் தவித்தவனுக்கு தென்றல் காற்று வந்து தடவி கொடுத்தது போல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்தம் இதயத்தை சூழ்கிறது ஆனால் அது ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் அது நிலைக்கிறது தவிர அடுத்த நிமிடமே மனம் காம சிந்தனையில் விழுந்து விடுகிறது குளித்து முடித்தவன் கூவத்தில் விழுவது போல் சிந்தனை எங்கும் சாக்கடை நாற்றம் வீசுகிறது பழையப்படி துயர மேகங்கள் சூழ்ந்து இதைய வீட்டை இடி இடித்து மின்னல் வெட்டி நடு நடுங்க செய்கிறது ஆகவே காமத்தை ஒழிக்காத வரை மனிதனுக்கு கதி மோட்சம் இல்லை என்று பேசுவதை அன்றாடம் கேட்கிறோம்.

காமம் என்பது இவ்வளவு கொடியது என்று மனிதனுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவன் ஏன் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறான் எத்தனை பேர் பிடித்து தடுத்தாலும் அதன் மீதே ஏன் போய் விழுகிறான் சிலர் சொல்கிறார்கள் காம உணர்வு என்பது மலம் கழிப்பது போல சிறுநீர் கழிப்பது போல ஒரு இயற்கை உந்துதல் தான் பெற்ற பிள்ளையை பறிகொடுத்தால் கதறி அழுவது எப்படி இயற்கையானதோ அப்படி தான் காமமும் அதை ஆபாசம் என்று நினைப்பதும் புனித வாழ்வுக்கு தடை என்று கருதுவதும் முட்டாள் தனமாகும் என்கிறார்கள்.

இது சரியான கருத்து என்பதில் மாற்றமில்லை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவருதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.

தலையை நுழைக்க விட்டால் ஒட்டகம் வீட்டுக் கூரையையே தின்றுவிடும் என்பார்கள் காம உணர்வும் சிறிய நெருப்பு துண்டாக மனதிற்குள் விழுந்து உடல் முழுவதையுமே பற்றி எரிய செய்து விடுகிறது இந்த நெருப்பில் தர்மம் ஒழுக்கம் தொண்டு போன்ற நற்பண்புகள் எல்லாம் சாம்பலாகி விடுகிறது ஆனாலும் மனது மீண்டும் மீண்டும் அந்த நெருப்பில் குளிர்காய விரும்புகிறதே அது ஏன் என்று நமது அறிவு மனம் விடாமல் கேட்கிறது

பொதுவாக மனிதர்களாகிய நாம் ஒன்று நடந்து முடிந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம் அல்லது நடக்கப் போவதை பற்றி கற்பனை தேரில் பறந்து கொண்டிருப்போம் நிகழ்காலத்தில் அதாவது இந்த வினாடியில் நாம் வாழுகின்ற வாழ்க்கையை மனம் ரசனையுடன் நோக்காது இதனால் தான் நாம் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறோம் ஆனால் காம வசப்படும் போது காம உறவில் இடுப்படும் போது நமது மனம் கடந்த காலத்தை மறக்கிறது எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை கை விடுகிறது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது இப்படி நிகழ்காலத்தில் மனமானது நிலைக்கும் போது தான் நமக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஊற்றின் கதவுகள் திறந்து கொள்கிறது

நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்று திறக்கப்பட்டு அதன் ஒளிவெள்ளம் நம்மை குளிப்பாட்டுவது சில வினாடிகள் தான் ஒரு நீர்குமிழி போல கண நேரத்தில் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகிறது அதற்கு காரணம் நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுகிறது இந்த உண்மை நமக்கு தெரிவதில்லை அதனால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்குடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம் காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள்.

காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிதான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள் இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும் மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறிர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும் எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும்.

காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி புலன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் தானே இறை காட்சி பெற முடியுமென்று வள்ளுவரும் பதஞ்சலி மகரீஷியும் சொல்கிறார்கள் கட்டுப்படுத்தாமல் கடவுள் தரிசனத்தை பெறாமல் மானிட பிறப்பை வீணடித்துக் கொள்வாதா என்று சிலர் பதறக் கூடும்.

அவர்கள் ஒரு நிஜத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் இதுவரை செய்கின்ற தியானமும் பூஜையும் அது நிகழ்கின்ற காலத்தில் காம சிந்தனைகளால் தாக்கப்படாமல் இருக்கிறதா உறுதியாக இந்த கேள்விக்கு ஆமாம் என்ற பதிலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் தரமுடியுமா முடியாது என்றே நான் நினைக்கிறேன் காரணம் பலரின் பூஜையும் தியானமும் காம எண்ணங்களால் தடை படுகிறது என்பதே நிதர்சனமாகும்

எனவே காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டுவிடுங்கள் தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள் எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும்.

அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள் அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும்.

தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள் ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது.

அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள் அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன் ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும் காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்.

காமத்தை கடக்க ஒரே வழி அதை அலச்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதை நிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் மளிகைக்கடை சிந்தனையோ வேண்டாம் அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள் புளியம் பழமும் தோடும் கனிய கனிய வேறு வேறாக பிரிவது போல் மனதிலிருந்து காம சிந்தனை தானாக விலகி விடும்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள் அதே போல தான் காமமும் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி கடவுள் சிந்தனையில் ஐக்கியமாவிர்கள்.

08/11/2015

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு
கிளியை
மிகவும் பிரியமாக வளர்த்து
வந்தாள்....
ஒரு நாள் அந்த கிளி
நோய்வாய்ப்பட்டு
விட்டது.....அதை பரிசோதித்த
மருத்துவர் இனி
அது பிழைக்காது என்று
கூறிவிட்டார்....
உடனே தன் கணவனை அழைத்த
இந்திராணி ,
இந்தகிளியை எப்படியாவது
காப்பாற்றுங்கள்...
கிளி இறந்துவிட்டால் நானும்
இறந்துவிடுவேன்
என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே
இந்திராணி...நான்
உடனே பிரம்மாவிடம் சென்று
முறையிடுகிறேன்..ஒவ்வொருவர்
தலையெழுத்தையும் எழுதுபவர்
அவர்தானே ? அவரிடம் சென்று
கிளியின்
தலையெழுத்தை மாற்றி
எழுதிவிடுவோம் என்று
சொல்லிவிட்டு , பிரம்மாவிடம்
சென்று
விஷயத்தை கூறினான்....
விஷயத்தை கேட்ட பிரம்மா ,
இந்திரா....
படைப்பது மட்டுமே என்
வேலை...உயிர்களை
காப்பது சாட்சாத்
மஹாவிஷ்ணுவின்
தொழில்...நாம் அவரிடம் சென்று
உதவி
கேட்போம்...வா ...நானும் உன்னுடன்
வருகிறேன் என்று இந்திரனை
அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்
சென்று விஷயத்தை
தெரிவித்தார்....
மஹாவிஷ்ணுவோ , உயிர்களை
காப்பது
நான்தான் ...ஆனால் உன் கிளி
இறக்கும்
தருவாயில்,இருக்கிறது.....அழிக்
கும் தொழிலை
மேற்கொண்ட சிவன் தான்
அதைக்காப்பாற்ற
வேண்டும்...வாருங்கள் நானும்
உங்களுடன்
வந்து சிவனிடம் பேசுகிறேன்
என்று
கிளம்பினார்....
விபரங்களை கேட்ட சிவன் ,
அழிக்கும் தொழில்
என்னுடையதுதான்...உயிர்களை
எடுக்கும்
பொறுப்பை நான் எமதர்மராஜனிடம்
ஒப்படைத்துள்ளேன்...வாருங்கள்...நாம்
அனைவரும் சென்று எமதர்மனிடம்
கூறி அந்த
கிளியின் உயிரை
எடுக்கவேண்டாம் என்று
சொல்லிவிடுவோம் என்று
சொல்லி அவர்களை
அழைத்துக்கொண்டு எமலோகம்
செல்கிறார்....
தன்னுடைய அவைக்கு சிவன் ,
மஹாவிஷ்ணு ,
பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும்
வருவதை
கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி
வந்து
வரவேற்கிறார்..விஷயம்
முழுவதையும்கேட்ட
அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த
நேரத்தில் , .
எந்த சூழ் நிலையில் , என்ன
காரணத்தால்
எடுக்கவேண்டும் என்ற காரணத்தை
ஒரு
ஓலையில் எழுதி ஒரு பெரிய
அறையில்
தொங்கவிட்டுவிடுவோம்..அந்த
ஓலை அறுந்து
விழுந்துவிட்டால், அவரின் ஆயுள்
முடிந்துவிடும்....வாருங்கள் அந்த
அறைக்குசென்று , கிளியின்
ஆயுள் ஓலை எது
என்று பார்த்து , அதை மாற்றி
எழுதிவிடுவோம்
என்று அவர்களை அழைத்துச்செல்கி
றார்....
இப்படியாக , இந்திரன் ,பிரம்மா
,விஷ்ணு , சிவன்
, எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த
அறைக்குச்சென்றனர்... ....அவர்கள்
உள்ளே
நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து
விழுகிறது...உடனே அவர்கள்
அவசரமாக
சென்று அந்த ஓலையை எடுத்து
பார்க்கின்றனர்..
அது அந்த கிளியின் ஆயுள்
ஓலை.....அவசரமாக
அதைப்படித்து பார்க்கின்றனர்....
அதில்......
இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன்
, எமதர்மன்
ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக
இந்த
அறைக்குள் நுழைகிறார்களோ ,
அப்போது
இந்த கிளி இறந்துவிடும்..... என்று
எழுதப்பட்டிருந்தது...
இதுதான் விதி என்பதோ ?

08/11/2015

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன்படுத்தும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை, வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் உடல் மன பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்தரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் "ஹிப்னாடிஸத்தை" நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று "ரெய்கி மருத்துவம்" நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் "டெலிபதி" முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்த முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி? எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன்படுத்தப்படுகிறது.

காதல் வெற்றிக்காக, காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற - வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை "ஸ்ரீ தேவி யட்சணி மகாத்மியம்" சொல்கிறது.

"ஸ்ரீதேவியட்சணி மகாத்மியம்" சொல்லும் அடிப்படையில் நோக்கும் போது திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது, வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்ட பெண்ணை வசியம் செய்யகூடாது, உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது, தன்னை விட மூத்த வயது பெண்ணை வசியம் செய்ய கூடாது, அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது, அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய கூடாது. சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது. "வைஜெயந்தி உபாசனை" செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது. இத்தகைய பெண்களை தவிர்த்து பிற பெண்களுக்கு தான் வசியத்தை பிரயோகிக்க முடியும்.

அதே போல பெண்களும், திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது, குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது, விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது, (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன).

காதலில் வெற்றி பெற யட்சணி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி "மதன மேகலா லக்ன பீடம்" வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா விஸ்ரூப யட்சிணி என்பது நீர், காற்று, நிலம், நெருப்பு, ஆகாயம் போன்ற இயற்கை சக்தியின் அட்ச அம்சம் கொண்டது. "மதன மேகலா லக்ன பீடம்" ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது. இதன் உள்ளே ரதி - மன்மத வசிய சக்ரமும், விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடை ஏதுவும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி பிடித்தபடி, "ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா" என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரி பூரண வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம், மதனகாமப்பூ, வெண்குன்றி மணி, சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு "வீணா யட்சணி" மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசியம் செய்யமுடியும்.

மரமஞ்சள், கஸ்தூரி, தாழம்பூ இதழ், கல்மதம், பாதிரி, வெண்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை மரப்பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பால்புரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் "உச்சிஷ்ட மதன கன்னிகா யட்சணி" அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று "யட்சிணி வசிய நிகண்டு" என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் செய்யும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சாங்கக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வித்வ பிரயோகம் :

குடும்ப பிரச்சனைகள் தீர, கணவன் - மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. "வித்வ பிரயோகம்" எனப்படும் பூதப் பிரேத பைசாச பிரயோகங்கள், துர் தேவதைகள், யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களை கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தியை கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் - மனைவிக்குள் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் மூன்று வித வழிகளை பயன்படுத்துவதுண்டு. ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனதை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்க செய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்களை அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும்.

அஸ்ரஸ்வதம் :
கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சு தன்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். அஸ்ரஸ்வத பிரயோகத்தால் கணவன் மனைவி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் நிலையில் பாதிப்புகள், சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகி பிரிந்துவிடும் நிலை ஏற்படும். அஸ்ரஸ்வத முறையை பயன்படுத்தும் போது கணவன் - மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்ணங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி செல்லும் நிலை ஏற்படும்.

அந்தராசனம் :
அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமாக வாழும் பெண் அல்லது ஆணுக்கு, வேறு ஆண் அல்லது பெண்ணோடு தொடர்பு மற்றும் தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் அவர்களின் குடும்பத்தில் விரிசலும், பிரிவும் ஏற்பட செய்வது.

பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் - திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் திலகம் என்பது நெற்றி அல்லது நெற்றிவகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்களும் (திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை) பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். பெண்கள் சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆணோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும், ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும், கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம், செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். வசியம் செய்த பெண்ணை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே அந்த ஆணுக்கு தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான்.

ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும். உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும், நாளடைவில் வசியம் செய்தவரின் முழு கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் வந்துவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் வசிய மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து, மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு.

இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன.

உச்சிஸ்ட சண்டாளி, உச்சிஸ்ட காளி, பந்தினி, மதனமேகலா, வட யட்சிணி, துமாவதி, சங்க தாரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம், உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீ கரம், புன்னாக மலர், ஜப புஷ்பம், பாதிரி, பால் புரண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளநீரில் சேர்த்து அரைத்து புடம் போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம், ஸ்த்ரீவசியம், புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா யட்சணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி, புனுகு, கும்குமப்பூ, வெள்ளாடனை ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்கள் நிழலில் உலர்த்தி, அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மண் சட்டியில் காட்டி கரியாக எடுத்து, அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். காம தேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம், மனோசிலை, உத்தரோணிப்பூ ஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்று வேளை, மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன் பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் - மனைவி ஓன்றாக சேர்வார்கள் என்றும் (மனைவியின் மணம், ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவியின் மீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரகொன்றை, தேவதாரு வேர், இலந்தை வேர், வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண் கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான்என்று "பைரவி தந்த்ரம்" என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும். ஆனால் துரதிருஷ்ட வசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன்படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மாற்றும் முயற்சிகளை தடுக்கவும், நமது பாரம்பரிய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும், பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் - மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. அஸ்வரூட ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் - மனைவி இடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிகப்படுத்துகிறது, பகளாமுகி யந்திரம் கணவன் -மனைவி ஒற்றுமையான திருமண வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தால் என்ன வகையான ஔஷத மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் மருந்துகளை ஸ்ரீ தேவி கார்த்யாயணி மந்திரத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம், உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்ப தலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயணி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி, மோகினி, பில்லி, சூனியம், வைப்பு, ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை நீக்கிவிடும்.

19/10/2015

ஓம் படைவீட்டம்மா துணை. அனைவருக்கும் வ்ணக்கம். ஸ்ரீபைரவருடைய அவதார தினமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தை புராணங்கள் எடுத்து சொல்கிறன. எனவே வருடந்தோறும் அன்னாளை ஸ்ரீபைரவாஷ்டமி என திருக்கோவில்களில் கொண்டாடுகிறார்கள்.. இதனால் இந்த நாளை மாதந்தோறும் நினைவுகூறும் வகையில் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீபைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. புராணப்படி மட்டுமல்ல. ஜோதிடப்படியும் இந்த தினம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகிறது.

காலபுருஷ தத்துவப்படி, ஸ்ரீபைரவருடைய ஜென்ம மாதமாகிய கார்த்திகை எட்டாமிடமாகிறது. அதாவது விருச்சிக ராசி. ராசியாதிபதி செவ்வாய் என்பதால் ஸ்ரீபைரவர் செவ்வாய்க்குரிய வழிபடும் தெய்வமானார். மேலும் எட்டாமிடத்திற்குரிய காரகத்துவம் பெற்றவர் சனிபகவான். எனவே சனிக்குரிய வழிபடும் தெய்வமாகவும் ஆனார். செவ்வாய்க்குரிய தெய்வமாக ஸ்ரீமுருகப்பெருமானும், சனிக்குரிய தெய்வமாக ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகிய தெய்வங்களை ஜோதிடனூல்கள் குறிப்பிடும்போது, ஸ்ரீபைரவரையும் குறிப்பிட ஒரு காரணம் உள்ளது. செவ்வாய், சனி இருவரும், ஸ்தானாதிபத்தியப்படியும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையிலும் முழு சுபராக இருப்பின் முறையே, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்த்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகியோர் வழிபடும் தெய்வமாவர். செவ்வாயும், சனியும், ஸ்தானாதிபத்தியத்தாலும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையாலும் அசுபத்தன்மை பெற்றால் ஸ்ரீபைரவர் வழிபடும் தெய்வமாவார். எனவே அவரது அவதாரம், காலதத்துவபுருஷப்படி அசுபத்தன்மை கொண்ட அஷ்டமஸ்தானத்திலும், சந்திரனின் அஷ்டமிதிதியிலும், அதுவும் தேய்பிறையிலும் நிகழ்ந்தது. தாய், தந்தை எனப்படும் இரு கிரகங்களும் அசுபத்தன்மையோடு இருப்பதை பார்க்கமுடிகிறது. சூரியன் அஷ்டமத்தில் இருப்பது அசுபமாகும். தேய்பிறை அஷ்டமிதிதி சந்திரன் அசுப கிரகமாவார்.

சிற்ப சாஸ்த்திரங்கள் ஸ்ரீபைரவரை அஷ்ட சக்திகளாக பிரித்துள்ளன. மூலசக்தி ஸ்ரீகாலபைரவர். ஜோதிட சாஸ்த்திரமோ ஸ்ரீபைரவரை நவசக்திகளாக பிரித்துள்ளது. ஒவ்வொரு சக்தியும், ஒவ்வொருகிரக அம்சம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியலை கீழே காணலாம்.

1. சூரியன் - சுவர்ணாகர்ஷணபைரவர்
2. சந்திரன் - கபால பைரவர்
3. செவ்வாய் - சண்ட பைரவர்
4. புதன் - உன்மத்த பைரவர்
5. குரு - அசிதாங்க பைரவர்
6. சுக்கிரன் - ருரு பைரவர்
7. சனி - குரோத பைரவர்
8. ராகு - சம்ஹார பைரவர்
9. கேது - பீஷண பைரவர்

சனியும், செவ்வாயும், தனித்தனியாகவோ, அல்லது இணைந்தோ, மேலும் வேறு கிரகத்துடன் கூட்டு சேர்ந்தோ கெடுபலனை தருமானால், கூட்டு சேர்ந்த கிரகம் எதுவோ அதற்குரிய அம்ச ஸ்ரீபைரவரை வணங்கவேண்டும். இதனால் கெடுபலன் குறையும்.

1. ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவதால் பொருளாதார சிக்கல்கள் தரக்கூடிய கெடுபலன் குறையும். இவருக்குரிய ஸ்தலம். கும்பகோணம் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் கோவில்.
2. ஸ்ரீகபாலபைரவரை வணங்குவதால், மனதில் ஏற்படும் உளைச்சலும், அதனால் ஏற்படக்கூடிய சித்தப்பிரமை தரக்கூடிய கெடுபலன் குறையும். ஸ்தலம். திருவிற்குடி, திருப்பூந்துருத்தி. 3. ஸ்ரீசண்ட பைரவரை வணங்குவதால் போட்டி, பொறாமை, கடுமையான எதிரிகள் தொல்லை தரக்கூடிய கெடுபலன் குறையும். ஸ்தலம். ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில்.
4. ஸ்ரீஉன்மத்த பைரவரை வணங்குவதால் அரைகுறை ஞானசூன்யம், மற்றும் பித்துபிடித்த நிலைக்கு ஆளாகும் நிலை தரக்கூடிய கெடுபலன் குறையும். ஸ்தலம். திருவீழிமிழிலை.
5. ஸ்ரீஅசிதாங்கபைரவரை வணங்குவதால், தொழிலில் காணப்படும் படைப்புத்திறன் குறைதல், மந்தனிலை ஆகியன குறையும். ஸ்தலம். சீர்காழி ஸ்ரீசட்டனாதர் ஆலயம்.
6. ஸ்ரீருருபைரவரை வணங்குவதால், கற்பித்தல், மற்றும் கற்றுகொள்ளல் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகளுக்கான கெடுபலன் குறையும். ஸ்தலம், திருமருகல், ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவில்.
7. ஸ்ரீகுரோதபைரவரை வணங்குவதால் காரணமின்றி விளையக்கூடிய, கோப, ஆவேச குணங்களால், அடுத்தவர்கள் தரும் துன்பங்கள் குறையும். ஸ்தலங்கள். திருவிசைனல்லூர், திருனறையூர். இவ்விரண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ளன.
8. ஸ்ரீசம்ஹாரபைரவரை வணங்குவதால் பூர்வபாபகர்ம வினையால் விளையாக்கூடிய துன்பங்கள் குறையும். ஸ்தலங்கள். திருவெண்காடு, கொல்லிமலை, வைரவன்பட்டி.
9. ஸ்ரீபீஷணபைரவரை வணங்குவதால், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பயங்கர கெடுபலன் குறையும். ஸ்தலம். ராமேஸ்வரம், பிரான்மலை.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீசிவபெருமான் கோவிலில் மேற்கண்ட ஸ்ரீபைரவ மூர்த்தங்கள் இருப்பின் அங்கேயே வழிபாடு செய்யலாம்.

மேற்கூறிய சிவஸ்தலங்களில், அந்தந்தந்த பைரைவருக்கு தனிசன்னதிகள் உள்ளன. ஸ்ரீபைரவருக்குரிய அம்சமறிந்து, அந்த அம்ச கிரகத்துக்குரிய பரிகாரவழிபாடுகளை ஸ்ரீபைரவருக்கு செய்யவேண்டும். பொதுவாக மேற்கூறப்பட்ட எல்லா கெடுபலனுக்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்கலாம். சனி, செவ்வாய் தனித்தனியாகவோ, இணைந்தோ, மற்ற கிரகத்துடன் கூட்டணி கொண்டோ உருவாக்கும், கண்டம், தீராதநோய், கட்டுப்படாத கடன்சுமை, வம்புவழக்குகள், எல்லா முயற்சிகளிலும் ஏற்படும் தடை ஆகியவற்றிற்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்குவது சிறப்பு. மேற்கூறப்பட்ட கெடுபலன்கள், அதை உருவாக்கும் கிரகங்கள், அதற்குரிய ஸ்ரீபைரவர் வழிபாடு ஆகியவற்றை நாமே சுயமாக அறிந்துகொள்ளவும், அதற்குரிய வழிபாடுகளை செய்யவும் முயற்சிக்காமல், நல்ல அனுபவமுள்ள ஒரு ஜோதிடரின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஸ்ரீபைரவர் திருவருள் புரிவாராக. நன்றி. வணக்கம்.

14/09/2015

👍👍👍👍👍👍👍👍👍👍
உண்மையான இந்து மதம்
விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை தெரியப்படுத்துங்கள்
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும் அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். ஆற்றில் மட்டும் கரைக்க வேண்டும்.
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே.... 👌👌👌👌👌👌👌👌👌👌

14/09/2015

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

Address

20, Natesan Street, T. Nagar/17
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Athma Jyothisha Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category