Synod of Baptist, Brethren and Evangelical Churches

Synod of Baptist, Brethren and Evangelical Churches Registered religious society

15/07/2025
கர்த்தருடைய பெரிதான கிருபையால் 15.03.2025 அன்று கோயம்புத்தூர் ஆர் எஸ் புரத்தில் நடைபெற்ற பாப்திஸ்து சபை போதகர்களின் மாதா...
17/03/2025

கர்த்தருடைய பெரிதான கிருபையால் 15.03.2025 அன்று கோயம்புத்தூர் ஆர் எஸ் புரத்தில் நடைபெற்ற பாப்திஸ்து சபை போதகர்களின் மாதாந்திர ஐக்கியக் கூட்டத்தின் நானும், நம் மாமன்றத்தின் துணைத்தலைவர் போதகர் பீட்டர் அர்ஜுனன் (ஆத்தூர்) அவர்களும் கலந்து கொண்டோம்.
நேற்றய கூட்டத்தில் கலந்துகொள்ளும் முடிவு சடுதியாக எடுத்தது.
வழக்கமாக இரண்டாவது சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள பாப்திஸ்து சபை போதகர்கள் கூடுவது வழக்கம். இம்மாதம் பாப்டிஸ்ட் வேதாகமக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெறும் என்பதால் ஐக்கிய கூட்டம் நடைபெறாது என்றிருந்த நிலையில், நேற்று மூன்றாவது சனிக்கிழமை கூடுவது என்று முடிவெடுத்து ஆர் எஸ் புரத்தில் உள்ள கார்னர் ஸ்டோன் பாப்டிஸ்ட் சபையில் மாதாந்திர ஐக்கிய கூட்டம் நடைபெற்றது.
அவர்களின் வழக்கமான கூட்டம் முடிந்தவுடன் நம்முடைய மாமன்றத்தை அறிமுகம் செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். 20 க்கும் மேற்பட்ட போதகர்கள் வந்திருந்தனர். யாரையும் தெரியாமல்தான் அங்கு சென்றேன், ஆனால், எனக்கு அறிமுகமான போதகர்கள் நான்குபேர் அங்கு இருந்தார்கள்.

மாமன்றத்தின் விவரங்களை நானும் துணைத்தலைவர் போதகர் பீட்டர் அர்ஜுனன் அவர்களும் எடுத்துரைத்தோம்.

அனைவருமே இம்மாதிரியான அமைப்பு நமக்கு அவசியம் என்று ஒப்புக் கொண்டனர். அவர்கள் கேட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் தெளிவாக பதில் அளித்துள்ளோம்.

அவர்கள் கூடிபேசி முடிவெடுத்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியாக போட்டோவில் வலப்புறம் கடைசியாக உட்கார்ந்து இருக்கும் ஐயா, ஒரே வார்த்தையில், இளைய ஊழியர்கள் அனைவரையும் பார்த்து:
"தங்கம் செய்யாததைக்கூட சங்கம் (மாமன்றம்) செய்யும்" என்றும், நீங்கள் அனைவரும் கூடி முடிவெடுத்து (எங்களை காண்பித்து) அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.

ஊழியர்கள் அனைவரும் மிஷனெரி பூத் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாங்கிக்கொண்டார்கள்.

அனைவருக்கும் நம்முடைய மாமன்றத்தின் காலண்டர் கொடுக்கப்பட்டது.

- போதகர் டேவிட் தன்ராஜ்
தலைவர், பா. பி. ந. தி மாமன்றம்

17/03/2025

Hi everyone,

This is the official page of the Synod of Baptist, Brethren and Evangelical Churches.

Join us for information and fellowship.

Rev. Pon Va KALAIDASAN
Treasurer of the Synod

Address

101, Appasamy Street, Harrington Road, Chetpet, Chennai/.
Chennai
600031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Synod of Baptist, Brethren and Evangelical Churches posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share