Thiru arutprakasa vallalar theiva nilayam

Thiru arutprakasa vallalar theiva nilayam Arutperumjothi Arutperumjothi
Thaniperumkarunai Arutperumjothi

ஜீவகாருண்யத்தின் எல்லைhttp://vallalarmiracles.org/ஒருசமயம் அன்பர்கள் சிலர் ஜீவகாருண்யத்தின் எல்லையைப் பற்றிப் பேசிக்கொண்...
18/03/2015

ஜீவகாருண்யத்தின் எல்லை
http://vallalarmiracles.org/

ஒருசமயம் அன்பர்கள் சிலர் ஜீவகாருண்யத்தின் எல்லையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காண்பிப்பது என்றும், மற்றொருவர் ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்கள் மற்றும் தாவரங்களிடமும் இரக்கம் காண்பிப்பது என்றும் வாதிட்டுக் கொண்டிருந்தனர். பெருமான் அவர்களிடம் “ஜீவகாருண்யம் எவ்வளவு தூரம் பரந்துள்ளதென்று அறிவீர்களா” என்று கேட்டுவிட்டு அதை விளக்க ஒரு கதை சொன்னார். ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கும் பெரியோர் இருவர் ஒரு தெருவழியே நடந்து சென்றனர். ஒருவர் கால்பட்டு மண் கட்டி ஒன்று உடைந்தது. உடனே, உடனிருந்தவர் மயங்கினார். மயக்கம் தெளிந்து எழுந்த அவர் “ஒன்றுபட்டிருந்த மண்கட்டி இரண்டாகிவிட்டதே, அதன் இயற்கைநிலை குலைந்துவிட்டதே என்று வருந்தினேன், மயக்கமானேன்” என்றார்.

இதன்மூலம் மனித இனம், விலங்கினம், தாவர இனம் ஆகியவற்றிற்கு மட்டுமன்றி ஜடப்பொருட்களுக்கும் ஜீவகாருண்யம் உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.

Vallalar history, Vallalar Varalaru, about vallalar, Vallalar padalgal, Vallalar songs

Arut-perun-jyothi   Arut-perun-jyothiThanip-perung-karunai   Arut-perun-jyothi
18/03/2015

Arut-perun-jyothi Arut-perun-jyothi
Thanip-perung-karunai Arut-perun-jyothi

அமுதத் துளிகள் - ஜீவகாருண்ணியம்அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முத...
02/01/2015

அமுதத் துளிகள் - ஜீவகாருண்ணியம்

அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதல் படியாக இருக்கின்றது. ஆதலால் இதை பாதுகாக்க வேண்டும்.

எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்த வேண்டும்.

சீவர்களுக்கு சீவர்கள் விஷயமாக உண்டாகும் ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்

நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதற்கு பல பெயர்கள் உள்ளன, அவை

பிந்துஸ்தானம்
அறிவிடம்
பாலம்
லலாடம்
முச்சுடரிடம்
முச்சந்திமூலம்
முப்பாழ்
நெற்றிக்கண்
கபாடஸ்தானம்
சபாத்துவாரம்
மகாமேரு
புருவமத்திய மூலம்
சிற்சபை

ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும், அன்பும் உடனாக விளங்கும். அதனால் உபகார சக்தி விளங்கும், இந்த உபகார சக்தியால், எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசுவென்பது
மரணமே நித்தியப் பிரளயம்

புலால் எந்த வகையிலும் புசிக்கக் கூடாது

ஜீவகாருண்ணியம் என்னும் திறவுகோல் கொண்டே மோட்சவீட்டில் நுழைய முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளல் பெருமான்.

அருந்தல் பொருந்தல் சமமானால் மரணம் வராது.

ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு துவாரம் யாதெனில் கடவுளின் பெருமையையும் நமது சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்.

தாகம், இச்சை, எளிமை, பிணி மற்றும் பயம் இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் அபரசீவகாருண்ணியம்
பசி, கொலை, இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் பரசீவகாருண்ணியம்.

தம் குடும்பத்தை பசியால் தவிக்கவிட்டு அயலார்க்கு பசியாற்றுதல் கடவுளுக்கு சம்மதமல்ல
நரக வேதனை, சனன வேதனை, மரண வேதனை மூன்று வேதனைகளும் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை
பகலில் எந்த வகையிலும் நித்திரை ஆகாது.

எப்பொழுதும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும்
அகத்தில் ஆன்மா தனித்திருக்கும். ஜீவன் மனமுதலிய அந்தகரண கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

கடவுளை ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும்.
சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துக்களாகிய சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிரம் முதலிய பஸ்பம் ஆகியவற்றையே உட்கொள்ளவேண்டும்.

http://vallalarmiracles.org/matravai-tamil.html

கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கேபண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமேபத்...
17/09/2014

கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே

Cure without operationI am Raji, devotee of Aiyya from Chennai.In June 2013, my father, S.Ramalingam, who is about 67 ye...
16/09/2014

Cure without operation

I am Raji, devotee of Aiyya from Chennai.

In June 2013, my father, S.Ramalingam, who is about 67 years, got burns in the legs because of contact with 2-wheeler silencer. Doctors bandaged the affected part for four times. After the fourth time, that part of the leg became black and the pain didn’t reduce. When he was taken to a bigger hospital, they diagnosed that iron rust went into the legs and had caused infection. Doctors suggested for an operation. My father had undergone bypass surgery about 10 years back and was also having diabetes complaint. Further he was very weak and hence the operation was postponed. Due to all these complications, we underwent a lot of mental agony. I was worried if my father could bear the pain of the operation. I sincerely prayed to Aiyya to save my father. On that night, I got a dream in which Aiyya asked me to take a lemon in my hands and pray that all the infections in my father’s wound are taken away into the lemon. Aiyya, asked me to throw away the lemon. I got surprised and did the same before Aiyya’s picture in the Pooja room next day. Two days after, Doctor checked my father’s leg and said that it did not require any operation and that the infection can be cured by medicine alone. Thus my father was saved by Aiyya.

Thanks to Aiyya!!!

http://vallalarmiracles.org/athisayangal-pinbu.html

களவும் கருணையும்  http://vallalarmiracles.org/after_tamil.php சென்னையை சேர்ந்த வள்ளலார் பக்தர் ஒருவர் தன் குடும்பத்தோடு ...
16/09/2014

களவும் கருணையும் http://vallalarmiracles.org/after_tamil.php

சென்னையை சேர்ந்த வள்ளலார் பக்தர் ஒருவர் தன் குடும்பத்தோடு வடலூர் சென்றிருந்தார். இரவில் மேட்டுக்குப்பத்தில் இரவு தரிசனம் முடித்து அங்கேயே குடும்பத்தோடு தங்கினார். அன்றிரவு அவருக்கு ஒரு மோசமான கனவு தோன்றியது. உடனடியாக விழித்து அய்யாவிடம் முறையிட்டு வேண்டி மீண்டும் உறங்கினார். அப்பொழுது இரவு 2.30 ஆனது. மறுநாள் குடும்பத்துடன் வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. �அவருடைய வீடு உடைக்கப்பட்டு, வீடு�மற்றும்�பீரோவில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறியிருந்தன. மிகவும் அதிர்ந்து�போன அன்பர், காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல் துறை தடயங்களை சேகரித்து விரைவில் கள்வரை பிடித்துவிடுவோம் என்று உறுதியளித்து சென்றது.

ஆனால் ஆச்சரியப்படும் படியாக அன்பரின் வீட்டில் எந்த நகையும், பணமும் கொள்ளை போகவில்லை மாறாக, அவர் உண்டியலில் சேர்த்து வைத்த (அன்னதானத்திற்காக) ரூ. 3500/- பணத்தை மட்டும் திருடர்கள் திருடி சென்றனர். ஆனால், தங்க மோதிரம், தங்க கைகடிகாரம் அனைத்தும் பீரோவில் அப்படியே இருந்தது. மேலும் திருடர்கள் பீரோவை உடைத்து பார்த்தபோதும், அவர்களால் அய்யாவின் திருநீரு மற்றும் அன்னதான சீட்டை மட்டுமே குவிந்து கிடந்ததை பார்க்க முடிந்ததே தவிர மாறாக தங்க நகைகள், மற்றும் பணத்தை அவர்களால் எப்படி எடுக்க மறந்தார்கள் என்பதை நினைத்து இன்னும் அன்பரால் நம்பமுடியவில்லை. இதை எல்லாம் ஐயாவல் தவிர வேறு யாரால் செய்ய முடியும். மேலும் ஆச்சர்யப்படும்; படியாக, அத்திருடர்கள் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டில் 8 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ளனர். அப்பொழுது மணி அதிகாலை 3 இது மேலும் அன்பருக்கு ஆச்சர்யத்தை அளித்து. ஏன்னென்றால் அவர் அப்பொழுதுதான் அவருக்கு வந்த மோசமான கனவுக்காக மேட்டுக்குப்பத்தில் தங்கியிருந்த பொழுது அய்யாவிடம் முறையிட்டு பிராத்தனை செய்த நேரம். ஐயாவின் கருணை அவர்மேல் நிறைந்து இருப்பது அவருக்கு மெய்சிலிர்க்க வைத்தது.�

தருமச்சாலை தொடக்க விழா முன்னேற்பாடுகள்23.5.1867 அன்று தருமச்சாலை தொடங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குரிய மற்ற வேலைக...
18/10/2013

தருமச்சாலை தொடக்க விழா முன்னேற்பாடுகள்

23.5.1867 அன்று தருமச்சாலை தொடங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குரிய மற்ற வேலைகள் துரிதமாக நடந்தன. அற்றார் அழி பசி தீர்க்கும் ஜீவகாருணிய ஒழுக்கப் பேரறம் தொடங்கப்பெற்றது.

அழைப்பிதழும் ஆயிரம் காப்பிகள் அச்சடிக்கப்பட்டன. அழைப்பிதழ்கள் சங்கத்தின் பெயரால் அனைவருக்கும் அனுப்பப்பட்டது. துறவிகட்கு மட்டும் பெருமானார் பெயராலேயே அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆக இரண்டு விதமான அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர்க்கு அன்று அன்னம் பாலிக்கப்பட்டது.

தருமச்சாலை திறப்பு விழாவன்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முதல் பகுதி மக்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அதில் வள்ளலார் பசியின் கொடுமையையும், பசியினால் வரும் வேதனை, துன்பம் முதலியவற்றையும் இதுவரை வேறு யாரும் கூறாத அளவுக்கு விவரமாக விரித்துரைத்தார்.

பசி, கொலை, பிணி, தாகம், இச்சை, எளிமை, பயம் இவற்றினால் உயிர்கள் துன்பமடைய நேர்கிறது. இவற்றில் பசி கொலையினால் வரும் துன்பத்தைப் போக்குவது பர ஜீவகாருண்யம் என்றும் அவற்றைத் தவிர வரும் மற்ற துன்பங்களை அபர ஜீவகாருண்யம் என்றும் கூறுகிறார்.

இறைவனை அடைவதற்குத் தருமமே வழி ஆதலால் அதற்குத் தருமச்சாலை என்றே பெயர் வைத்தார்.

18/10/2013
பார்வதி புறநகர் மற்றும் அவ்வூர் மக்களின் சிறப்புஅய்யா திட்டமிட்ட தருமச்சாலை அமைந்துள்ள – பார்வதிபுரம் சிதம்பர தலத்திற்கு...
18/10/2013

பார்வதி புறநகர் மற்றும் அவ்வூர் மக்களின் சிறப்பு

அய்யா திட்டமிட்ட தருமச்சாலை அமைந்துள்ள – பார்வதிபுரம் சிதம்பர தலத்திற்குச் சுமார் இருபது மைல் வழிநடை எல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூரில் அமைந்துள்ளது. சென்னை நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பாதையையும், மஞ்சகுப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாதையையும், இணைக்கும் சிறப்பை இவ்வூர் பெறுகிறது.

தருமச்சாலை இவ்விடத்தில் தொடங்க வேண்டுமென்ற பெருமானாரது விருப்பத்தை அறிந்த பார்வதிபுர மக்கள், தங்கள் நிலங்களை மனமுவந்து தானமாகத் தந்தனர். நாற்பது பேர் சேர்ந்து 80 காணி நிலத்தை 2.2.1867ம் நாள் அன்று தானமாகத் அளித்தனர். அவ்வூர் மக்கள் மிகவும் தர்மச்சிந்தனை நிறைந்தவர்கள் என்பதை இங்கு நம்மால் எளிதாக உணர முடிகிறது.

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை 1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அ...
17/10/2013

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை

1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.


7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.

16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.

20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.

22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.

27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழ...
17/10/2013

வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்.
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."

Address

Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when Thiru arutprakasa vallalar theiva nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiru arutprakasa vallalar theiva nilayam:

Share