South India Buddha Vihar

South India Buddha Vihar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from South India Buddha Vihar, Religious organisation, Bunder Garden Main Street, Perambur, Chennai.

சமத்துவ தலைவரின் பிறந்தநாளான 31'st Jan போஸ்டர் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளில்   என்று குறிப்பிடவும்.அதுமட்டுமின்றி,"சமத...
29/01/2025

சமத்துவ தலைவரின் பிறந்தநாளான 31'st Jan போஸ்டர் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளில் என்று குறிப்பிடவும்.

அதுமட்டுமின்றி,
"சமத்துவ தலைவரின் கனவை நிறைவேற்றுவோம்" என்றும் பதிவிடவும், ஜெய் பீம்.

Let us trend on 31st Jan 2025 (BSP Armstrong Anna's birthday).

புத்தக அரங்கு திறப்பு மற்றும் நூல் வெளியீடு நிகழ்ச்சி..                            அனைவருக்கும்.நமோ புத்தாய🙏ஜெய்பீம்..செ...
24/12/2024

புத்தக அரங்கு திறப்பு மற்றும் நூல் வெளியீடு நிகழ்ச்சி.. அனைவருக்கும்.நமோ புத்தாய🙏ஜெய்பீம்..
சென்னை, நந்தனம் YMCA வளாகத்தில் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக காட்சியில் நமது சமத்துவத்தலைவர் அண்ணன்ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நிறுவிய தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரங்கு எண்கள் 57 மற்றும் 58 ஆகும்.

இந்த அரங்குகளை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளையின் தலைவருமான திருமதிஆம்ஸ்ட்ராங் அவர்கள் வருகின்ற டிசம்பர் 28 அன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்வு தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளையின் செயலாளர் மூத்த வழக்கறிஞர் A.கௌதமன் அவர்கள் முன்னிலையில் வணக்கத்திற்குரிய பிக்கு புத்த பிரகாஷ் தலைமையில் நடைபெறும் பௌத்த வழிபாட்டுக்குபின் துவங்கும்.

இந்நிகழ்வில் இந்த ஆண்டு கவிஞர் அ. முத்துகிருஷ்னன் மொழிபெயர்த்து, தொகுத்து,எளிமைப்படுத்தி சமத்துவத்தலைவர் இறுதியாக பதிப்பிக்க நினைத்திருந்த

1.அடிமைமுறை தீண்டாமை எது கொடூரமானது?

2.வன்முறை தீர்வல்ல.

3.ஆடித்திருவிழா அமாவாசை என்னும் பௌத்த பண்பாடுகள்.

4.காந்தி மகாத்மாவா?
ஆகிய குறுநூல்களும்

5.காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் நூலின் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பும் ஆன்றோர்கள்,சான்றோர்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

எனவே பௌத்த உபாசகர்கள், உபாசகியர்கள் பகுஜன் சொந்தங்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஜெய்பீம்.. ஜெய் ஆம்ஸ்ட்ராங்!

தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை மற்றும் பதிப்பகம்.
பெரம்பூர், சென்னை -11

06/07/2024

தேசிய கட்சியின் மாநில தலைவரைக்கூட பாதுகாக்க துப்பில்லாத விடியல் அரசு.

வெட்கக்கேடு.

தென்னிந்திய புத்த விஹார் சார்பில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது..
24/05/2024

தென்னிந்திய புத்த விஹார் சார்பில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது..

24/05/2024

தென்னிந்திய புத்த விஹாரில் புத்த பூர்ணிமா சிறப்பு வழிபாடு..

☸️ பெரம்பூர் தென்னிந்திய புத்த விஹார் புத்த பூர்ணிமா விழா☸️அன்புடையீர் நமோபுத்தாய.ஜெய்பீம்🙏🏻..வருகின்ற 23-05-2024 வியாழக...
21/05/2024

☸️ பெரம்பூர் தென்னிந்திய புத்த விஹார் புத்த பூர்ணிமா விழா☸️

அன்புடையீர் நமோபுத்தாய.ஜெய்பீம்🙏🏻..

வருகின்ற 23-05-2024 வியாழக்கிழமை சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பிரதான சாலையில் உள்ள தென்னிந்திய புத்த விஹாரில் புத்த பூர்ணிமா விழா மகா உபாசகியர் திருமதி T.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களது தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:-

நெல்வயல் சாலையில் உள்ள தென்னிந்திய புத்த விஹாரில் வணங்குதலுக்குக்குரிய பிக்கு புத்த பிரகாஷ் அவர்களின் தலைமையில் புத்த பூர்ணிமா வழிபாடு
நேரம் :04:00 மணி

அலங்கரிக்கப்பட்ட புத்தர் சிலையுடன் புத்த வந்தனங்களுடன் பேரணி
துவங்கும் இடம்: பெரம்பூர் நெல்வயல் சாலையில் (பெரம்பூர் பேருந்து நிலையம்) உள்ள தென்னிந்திய புத்த விஹார் நேரம்: 04:30மணி

வழி: பெரம்பூர் இரயில் நிலையம் எதிரில் மூலக்கடை சாலை வழியாக மூன்று சிலை இடது பக்கம் ராகவன் தெரு வழியாக சென்று பந்தர் கார்டன் பிரதான சாலை

முடியும் இடம்: பெரம்பூர் பந்தர் கார்டன் பிரதான சாலையில் உள்ள தென்னிந்திய புத்த விஹார்
நேரம்: 06:00 மணி வரை

தென்னிந்திய புத்த விஹாரில் புத்த பூர்ணிமா சிறப்பு வழிபாடு
வணங்குதலுக்குக்குரிய பௌத்த அறவணடிகள், நா.வினாயகம் மற்றும் உபாசகர்கள்,உபாசகியர்கள் ஆகியோரால் நடைபெறும்.
நேரம் 06:15 மணிக்கு

பௌத்த அறிஞர் ஐயா ஓரா.கிருஷ்ணன் அவர்களின் 90வது பிறந்தநாளில் அவரை கௌரவித்தல்.
நேரம்: 07:00 மணி

ஓரா.கிருஷ்ணன் ஐயா ஆற்றிய பௌத்த பணிகள் விளக்க உரை உபாசகர் பரமதயாளன் அவர்கள்
நேரம்: 07:15 மணி

புத்த பூர்ணிமா வரலாற்று ஆய்வு சொற்பொழிவு மூத்த வழக்கறிஞர் ஆ.கௌதமன் அவர்கள்
நேரம்: 07:30 மணி

சிறப்பு அழைப்பாளராக
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை இணை இயக்குநர் திரு S.கோபிதாஸ் The Buddhist Society of India Tamilnadu President அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.

பொதுமக்களுக்கு காலை,மதியம்,இரவு மூன்று வேளையும் விஹார் முன்பு உணவு வழங்கப்படும்.

குறிப்பு:-

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து வரவும்.

தென்னிந்திய புத்த விஹார் உபாசகர்கள் மற்றும் பகுஜன் சொந்தங்கள் அனைவரும் குடும்பத்தினருடன் 3 மணிக்கு நமது விஹார் முன்பு வரவேண்டும்.

தென்னிந்திய புத்த விஹார்.
பந்தர் கார்டன் பிரதான சாலை,பெரம்பூர்,சென்னை-11

என்னயா அம்பானி வீட்டு கல்யாணம், ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கல்யாணம் மாதரி வருமா?.நிகழ்கால பௌத்த பேரசனாக தம் திருமணத்தை நிகழ்த்து...
03/03/2024

என்னயா அம்பானி வீட்டு கல்யாணம், ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கல்யாணம் மாதரி வருமா?.

நிகழ்கால பௌத்த பேரசனாக தம் திருமணத்தை நிகழ்த்துக்காட்டிய BSP தமிழக தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஜெய்பீம்.

Rest in peace sir..
18/02/2024

Rest in peace sir..

04/01/2024
தென்னிந்திய புத்த விஹாரில் தம்ம யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது..கேரளா மாநிலத்தில் இருந்து 30-09-2023 அன்று தொடங்கி மகாராஷ...
06/10/2023

தென்னிந்திய புத்த விஹாரில் தம்ம யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது..

கேரளா மாநிலத்தில் இருந்து 30-09-2023 அன்று தொடங்கி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் 22-10-2023 அன்று நிறைவடைய உள்ள தம்ம யாத்திரை நேற்று 05-10-2023 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரும் தென்னிந்திய புத்த விஹார் நிறுவனர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வழிகாட்டுதல் படி வணங்குதலுக்குரிய பௌத்த அறவனடிகள் மற்றும் தென்னிந்திய புத்த விஹார் உபாசகி திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முன்னிலையில் மாமன்னர் அசோகர் தம்ம யாத்திரை பெரம்பூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய தென்னிந்திய புத்த விஹாரில் இருந்து புறப்பட்டு பந்தர் கார்டன் மெயின் ரோட்டில் உள்ள புதிய தென்னிந்திய புத்த விஹார் வரை பேரணியாக வந்தது.

சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு ஐயா அரிபரந்தாமன் அவர்களும் மற்றும் தலித் முரசு ஆசிரியர் ஐயா புனிதபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய புத்த விஹார் செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு ஆ.கெளதமன் அவர்கள் தென்னிந்திய புத்த விஹார் வரலாறு பற்றி விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உபாசகர்கள், உபாசகியர்கள், மற்றும் பகுஜன் சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.. ----------------------------------
தென்னிந்திய புத்த விஹார் பெரம்பூர், சென்னை-11

பெகன்ஜி மாயாவதி அவர்கள் குழந்தைக்கு பெயர் சூட்டிய பிறகு தென்னிந்திய புத்த விஹார் தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உபாசக...
07/05/2023

பெகன்ஜி மாயாவதி அவர்கள் குழந்தைக்கு பெயர் சூட்டிய பிறகு தென்னிந்திய புத்த விஹார் தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உபாசகியர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்தினருடன் புத்த பூர்ணிமா தினத்தில் பெங்களூருவில் உள்ள மஹா போதி சொசைட்டி புத்த விஹார் சென்று பகவான் புத்தரை வணங்கினார்கள்..

Address

Bunder Garden Main Street, Perambur
Chennai
600011

Opening Hours

6pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when South India Buddha Vihar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to South India Buddha Vihar:

Share