26/08/2026
Rock Eternal Ministries:
CHOOSE GRATITUDE
“Give thanks in every circumstance.” 1Thessalonians5:18. We can give thanks in every circumstance because God remains in control, even when life doesn't go according to our plans. He can bring good from difficult situations and use even our mistakes for His purpose. No matter what you are facing, His love for you never changes. Choose gratitude today, shift your focus from your problems to God's faithfulness, and trust Him to work mightily in your life.
நன்றியுணர்வைத் தேர்ந்தெடுங்கள்
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்.” 1தெசலோனிக்கேயர்5:18. வாழ்க்கை நம் திட்டங்களின்படி அமையாதபோது கர்த்தர் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நன்றி செலுத்த முடியும். கடினமான சூழல்களிலிருந்து அவரால் நன்மையைக் கொண்டுவர முடியும்; நம்முடைய தவறுகளைக் கூட அவர் தம் நோக்கத்திற்காகப் பயன்படுத்த வல்லவர். நீங்கள் எத்தகைய சூழலை எதிர்கொண்டிருந்தாலும் சரி, உங்கள் மீதான அவருடைய அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. இன்று நன்றியுணர்வைத் தேர்ந்தெடுங்கள், உங்கள் பிரச்சனைகளிலிருந்து கவனத்தை கர்த்தருடைய உண்மையுள்ளத்தின்மீது திருப்புங்கள்; உங்கள் வாழ்வில் அவர் வல்லமையாகச் செயல்படுவார் என்று அவரை நம்புங்கள்.