28/10/2024
ராம் ராம்... தீபாவளிக்கு வஸ்திரம் வழங்கும் வேலை இருந்ததால் முகநூலில் சிலருக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போனது. இருப்பினும் சிலருக்கு சில பதில்களை தந்தேன். தனியாக ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன் நேரம் இல்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது.
வேணு கோபாலசங்கரன் அண்ணா கடந்த பத்து மணி நேரத்திற்கு முன் முகநூலில் உள்ள மூன்று பேர்களை பெயரை போட்டு ஒரு பதிவு செய்துள்ளார். ஒன்று கபால கிருஷ்ணன், இரண்டு வெங்கடேசன், மூன்று அடியேன்... நாங்கள் சிருங்கேரிக்கு சாதகமாக பேசுவது போல பதிவிட்டிருந்தார்... கீழே தெளிவாக அடியேன் பதிவிடுகிறேன்....
கடந்த ஒரு வார காலமாக முகநூலில் சிருங்கேரி ஆச்சார்யா காஞ்புரத்திற்க்கு வருகை தருவதாகவும், காமாக்ஷியை தரிசிக்க போவதையும் அடியேன் ஒரு நான்கு பதிவுகள் பதிவு செய்திருந்தேன். அதுவும் அடியேனின் சொந்த பதிவு இல்லை. யாரோ பதிவு செய்ததை அடியேன் பதிவு செய்தேன்.
அடியேன் செய்த பதிவிற்காக சிலர் அடியேனை குரு துரோகி என்றும், சிருங்கேரியிடம் அடியேன் விலை போனதாகவும் பலரும் பல விதமாக அம்புகளை எறிந்தனர். குறிப்பாக வேணுகோபால் சங்கரன் அண்ணா உச்சத்திற்கே சென்று விட்டார். அது மட்டுமா? நட்பில் இருந்தும் விலக்கிக் கொண்டார். விலகுவது, இருப்பது அவரவர்களின் சொந்த விருப்பம். ஆனால் ஒரு ஆச்சார்யர் வருவதை பதிவிட்டதற்கு இவர்களுக்கு இவ்வளவு வன்மம் தேவை இல்லை.
சரி விஷயத்திற்கு வருகிறேன்... அடியேன் குரு துரோகி என்றால் கீழே உள்ள பத்திரிக்கையை ஒரு முறைக்கு பத்து முறை அடியேனிடம் சீரியவர்கள் இந்த பத்திரிக்கைக்கு என்ன பதில் தருவார்கள்? ராஜ கீழ்பாக்கத்தில் மஹா ஸ்வாமி வித்தியா மந்திர் பள்ளிக்கு பாம்பே சங்கர் அண்ணா பத்திரிக்கை அடித்து சிருங்கேரி மகா சன்னிதானம் விதுசேகர பாரதி தீர்த்த ஸ்வாமிகளை வருகின்ற நவம்பர் நான்காம் தேதி பள்ளிக்கு அழைத்துள்ளார். சிருங்கேரி பெரியவாளும் அங்கே செல்ல இருக்கிறார்கள். என்னிடம் சீரியவர்கள் பாம்பே சங்கர் அண்ணாவிடம் சீர முடியுமா?
அடியேனை அவரது பக்கத்தில் நேற்று முதல் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார் வேணு கோபலன் சங்கரன் அண்ணா அதேபோல இவரை இதே வேணு கோபாலன் அண்ணா குரு துரோகி என்று தனது பக்கத்தில் பதிவிடுவாரா? நிச்சயம் மாட்டார். பணம், பதவி என்று இருப்பவர்களிடம் எதையும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.
ஒரு சாதாரண பதிவிற்காக மிக பெரிய வார்த்தை அம்புகளை வீசுகிறார்கள். காலம் அப்படிப்பட்டது என்று நாம் தான் இவர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு சன்யாசி வருவதை பதிவிட்டதற்க்காக அடியேனை இவர்கள் ஏசுகிறார்கள். பரவாயில்லை அடியேன் கடந்து செல்கிறேன். கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாக சொல்கிறேன் அடியேனுக்கு ஒரே ஒரு குருநாதர் தான்... அது அடகயேனை ஆட்கொண்ட ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மட்டுமே. இருக்கும் வரையிலும் சரி இறந்த பின்னும் சரி எனது குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மட்டுமே.
காசுக்காகவோ, பதவி, அந்தஸ்துக்காகவோ, பெயருக்காகவோ கட்சி மாறும் ஈன பிறவி அல்ல அடியேன். அடியேன் பல முறை சொல்லி உள்ளேன் எத்தனை கோடி சம்பாதித்தாலும், எத்தனை கோடி பெயர் எடுத்தாலும் நம்முடன் வரப்போவது நாம் செய்யும் பாவ, புண்ணியம் மட்டுமே. துரோகத்தில் மிக பெரிய துரோகம் குரு துரோகம் மட்டுமே. அதற்கு பிராயசித்தமே கிடையாது. அது அடியேனுக்கு நன்றாக தெரியும். மற்றவர்களுக்கு? அம்புட்டு தான் ஜோலி முடிந்தது....
புரிந்தவர்கள் பிஸ்தா.......