Jesus Ministry

Jesus Ministry Yesuvai Pol Valuvom... YesuvaiUlagirku Kattuvom...

12/04/2019

Hai Frndz,
kartharudaiya kirubainal online sales (Amazon, snapdeal, indiamart, olx, marketplace) business start paniruken. Chudidhar Material, kurtas, sarees, duppatas, available. Karthar thamay ela products um nala sale aga udavi pananum. Negalum en business ka ga pray panikuga. Ungalukum product vaga virupam iruinthal comment box la soluga. Nandri.

12/04/2019

*பெண்கள் ஆடைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை ஒரு தந்தை விளக்குகிறார்.*

*தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.*

அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.

வழக்கம்போல்,
தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன்,
அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

"செல்ல மகளே",
இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

*வைரங்களை எங்கு எடுப்பாய்?*

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

*முத்துக்களை எங்கு எடுப்பாய்?*

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

*தங்கத்தை எங்கு எடுப்பாய்?*

சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில்,
அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "

என்னை உற்று நோக்கியவராக,
*"உன்னுடைய உடல் புனிதமானது.*

👉 *வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.*

உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"...

*பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்.*

*பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல்.*

*அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்...*

👉 *பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.*

பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்....

இன்று ஒரு தகவல்
படித்ததில் பிடித்தது

Good Morning Frndz..
10/08/2018

Good Morning Frndz..

08/02/2018
19/01/2018

☀ கி.மு. 4026 - ஆதாம் படைக்கப்பட்டது (ஆதி. 2:7)

☀ கி.மு. 4026-க்கு பின் ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, (ஆதி. 3:15) முதல் தீர்க்கதரிசனம்

☀ கி.மு. 3896-க்கு முன் காயீன் ஆபேலைக் கொல்கிறான் (ஆதி. 4:8)

☀ கி.மு. 3896 - சேத்தின் பிறப்பு (ஆதி. 5:3)

☀ கி.மு. 3404 - நீதிமான் ஏனோக்கின் பிறப்பு (ஆதி. 5:18)

☀ கி.மு. 3339 - மெத்தூசலாவின் பிறப்பு (ஆதி. 5:21)

☀ கி.மு. 3152 - லாமேக்கின் பிறப்பு (ஆதி. 5:25)

☀ கி.மு. 3096 - ஆதாமின் மரணம் (ஆதி. 5:5)

☀ கி.மு. 3039 - ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆதி. 5:23,24; அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14 முடிகிறது)

☀ கி.மு. 2970 - நோவாவின் பிறப்பு (ஆதி. 5:28,29)

☀ கி.மு. 2490 - மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய (ஆதி. 6:3) அறிவிப்பு

☀ கி.மு. 2470 - யாப்பேத்தின் பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24; 10:21)

☀ கி.மு. 2468 - சேமின் பிறப்பு (ஆதி. 7:11; 11:10)

☀ கி.மு. 2370 - மெத்தூசலாவின் மரணம் (ஆதி. 5:27)

→ பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:6,11

☀ கி.மு. 2369 - ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை (ஆதி. 8:13; 9:16) செய்தல்

☀ கி.மு. 2368 - அர்பக்சாத்தின் பிறப்பு (ஆதி. 11:10)

☀ கி.மு. 2269-க்குப் பின் பாபேல் கோபுரம் கட்டுதல் (ஆதி. 11:4)

☀ கி.மு. 2020 - நோவாவின் மரணம் (ஆதி. 9:28,29)

☀ கி.மு. 2018 - ஆபிரகாமின் பிறப்பு (ஆதி. 11:26,32; 12:4)

☀ கி.மு. 1943 - ஆபிரகாம் கானானுக்குச் செல்லும் வழியில் ஆதி. 12:4,7; ஐப்பிராத்தைக் கடக்கிறார்.

→ ஆபிரகாமிய யாத். 12:40; உடன்படிக்கை செல்லுபடியாக்கப்பட்டது; கலா. 3:17 நியாயப்பிரமாண உடன்படிக்கை வரையான 430 ஆண்டு காலப்பகுதியின் தொடக்கம்...

☀ கி.மு. 1933-க்கு முன் லோத்து மீட்கப்படுகிறார்; ஆபிரகாம் ஆதி. 14:16,18; 16:3 மெல்கிசேதேக்கை சந்திக்கிறார்

☀ கி.மு. 1932 - இஸ்மவேல் பிறக்கிறார் (ஆதி. 16:15,16)

☀ கி.மு. 1919 - விருத்தசேதன உடன்படிக்கை செய்யப்பட்டது (ஆதி. 17:1,10,24)

→ சோதோம் கொமோராவின் ஆக்கினைத்தீர்ப்பு (ஆதி. 19:24)

☀ கி.மு. 1918 - மெய்யான சுதந்தரவாளியாகிய ஈசாக்கின் பிறப்பு; ஆதி 21:2,5;

→ ‘ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலத்தின்’ அப். 13:17-20 தொடக்கம்...

☀ கி.மு. 1913 - ஈசாக்கு பால்மறந்தது;

→ இஸ்மவேலை (ஆதி. 21:8; 15:13); அனுப்பிவிடுதல்;

→ 400 வருட துன்பகாலத்தின் அப். 7:6 தொடக்கம்...

☀ கி.மு. 1881 - சாராளின் மரணம் (ஆதி. 17:17; 23:1)

☀ கி.மு. 1878 - ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் திருமணம் (ஆதி. 25:20)

☀ கி.மு. 1868 - சேமின் மரணம் (ஆதி. 11:11)

☀ கி.மு. 1858 - ஏசா மற்றும் யாக்கோபின் பிறப்பு (ஆதி. 25:26)

☀ கி.மு. 1843 - ஆபிரகாமின் மரணம் (ஆதி. 25:7)

☀ கி.மு. 1818 - முதல் இரண்டு மனைவிகளை ஏசா (ஆதி. 26:34) விவாகஞ்செய்தல்

☀ கி.மு. 1795 - இஸ்மவேலின் மரணம் (ஆதி. 25:17)

☀ கி.மு. 1781 - யாக்கோபு ஆரானுக்கு ஓடிப்போகிறார், (ஆதி. 28:2,13,19)

→ பெத்தேலில் அவர் கண்ட தரிசனம்

☀ கி.மு. 1774 - யாக்கோபு லேயாளையும் ராகேலையும் (ஆதி. 29:23-30) மணம் செய்கிறார்

☀ கி.மு. 1767 - யோசேப்பின் பிறப்பு (ஆதி. 30:23,24)

☀ கி.மு. 1761 - யாக்கோபு ஆரானிலிருந்து கானானுக்குத் (ஆதி. 31:18,41) திரும்புகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 1761 - யாக்கோபு தேவதூதரோடு போராடுகிறார்; ஆதி. 32:24-28 இஸ்ரவேல் என்று பெயரிடப்படுகிறார்

☀ கி.மு. 1750 - யோசேப்பை அவருடைய சகோதரர் அடிமையாக (ஆதி. 37:2,28) விற்கின்றனர்

☀ கி.மு. 1738 - ஈசாக்கின் மரணம் (ஆதி. 35:28,29)

☀ கி.மு. 1737 - யோசேப்பு எகிப்தின் பிரதம மந்திரியாக்கப்பட்டார் (ஆதி. 41:40,46)

☀ கி.மு. 1728 - யாக்கோபு தன் முழு குடும்பத்துடன் எகிப்துக்குள் ஆதி. 45:6; 46:26; பிரவேசிக்கிறார் (ஆதி47:9)

☀ கி.மு. 1711 - யாக்கோபின் மரணம் (ஆதி. 47:28)

☀ கி.மு. 1657 - யோசேப்பின் மரணம் (ஆதி. 50:26)

☀ கி.மு. 1613-க்கு முன் யோபின் சோதனை (யோபு 1:8; 42:16)

☀ கி.மு. 1600-க்குப் பின் எகிப்து முதல் உலக வல்லரசாக (யாத். 1:8) மேன்மையடைகிறது

☀ கி.மு. 1593 - மோசேயின் பிறப்பு (யாத். 2:2,10)

☀ கி.மு. 1553 - ஜனங்களை விடுவிக்க மோசே முன்வருதல் யாத். 2:11,14,15; மீதியானுக்கு ஓடிப்போகிறார் அப். 7:23 (ஏறக்குறைய)

☀ கி.மு. 1514 - எரியும் முட்புதரின் அருகில் மோசே யாத். 3:2

☀ கி.மு. 1513 - பஸ்கா; இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு (யாத். 12:12) வெளியேறுகின்றனர்;

→ செங்கடலை பிளந்து (யாத்14:27,29,30) கடவுள் விடுவிக்கிறார்;

→ எகிப்தின் வல்லமை (ஆதி. 15:13,14) கவிழ்க்கப்பட்டது;

→ 400 வருட துன்ப காலம் முடிந்தது சீனாய் (ஓரேப்) மலையில் நியாயப்பிரமானம் (யாத். 24:6-8) உடன்படிக்கை செய்யப்பட்டது

→ ஆபிரகாமிய உடன்படிக்கை கலா. 3:17; செல்லுபடியானதிலிருந்து 430 வருடகால முடிவு (யாத். 12:40)

→ வனாந்தரத்தில் மோசே ஆதியாகமத்தைத் (யோவா. 5:46) தொகுக்கிறார்; வேதாகமம் எழுதுவது தொடங்குகிறது

☀ கி.மு. 1512 - ஆசரிப்புக்கூடார பணி முடிவடைகிறது (யாத். 40:17)

→ ஆரோனிய ஆசாரியத்துவம் ஸ்தாபிக்கப்படுகிறது (லேவி. 8:34-36)

→ மோசே யாத்திராகமத்தையும் லேவியராகமத்தையும் (லேவி. 27:34) எழுதி முடிக்கிறார். எண். 1:1

☀ (ஏறக்குறைய) கி.மு. 1473 - மோசே யோபு புத்தகத்தை எழுதி முடிக்கிறார் (யோபு 42:16,17)

☀ கி.மு. 1473 - மோசே மோவாபின் சமவெளிகளில் (எண். 35:1; 36:13) எண்ணாகமத்தை எழுதி முடிக்கிறார்

→ மோவாபில் இஸ்ரவேலுடன் உடன்படிக்கை (உபா. 29:1)

→ மோசே உபாகமத்தை எழுதுகிறார் (உபா. 1:1,3)

→ மோவாபிலுள்ள நேபோ மலையில் மோசே (உபா. 34:1,5,7) மரிக்கிறார்

→ யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் (யோசு. 4:19) கானானுக்குள் பிரவேசிக்கின்றனர்

☀ கி.மு. 1467 - தேசத்தின் பெரும்பாகம் கைப்பற்றப்பட்டது

→ யோசு. 11:23 அப்போஸ்தலர் 13:17-20-ன் ‘ஏறக்குறைய யோசு14:7, 450 வருஷங்களின்’ முடிவு (யோசு 14:10-15)

☀ (ஏறக்குறைய) கி.மு. 1450 - யோசுவாவின் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது (யோசு. 1:1; 24:26)

→ யோசுவாவின் மரணம் (யோசு. 24:29)

☀ கி.மு. 1117 - சாமுவேல் சவுலை இஸ்ரவேலின் அரசனாக (1 சா. 10:24) அபிஷேகம் செய்கிறார் (அப். 13:21)

☀ கி.மு. 1107 - பெத்லெகேமில் தாவீதின் பிறப்பு (1 சா. 16:1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 1100 - நியாயாதிபதிகள் புத்தகத்தை சாமுவேல் எழுதி (நியா. 21:25) முடிக்கிறார்

☀ ஏறக்குறைய கி.மு. 1090 - ரூத் புத்தகத்தை சாமுவேல் எழுதி முடிக்கிறார் (ரூத் 4:18-22)

☀ (ஏறக்குறைய) கி.மு. 1078 - 1 சாமுவேல் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது (1 சா. 31:6)

☀ கி.மு. 1077 - எப்ரோனில் தாவீது யூதாவின் அரசராகிறார் (2 சா. 2:4)

☀ கி.மு. 1070 - இஸ்ரவேல் முழுவதன்மீதும் தாவீது அரசராகிறார்; எருசலேமைத் தன் தலைநகராக்குகிறார் (2 சா. 5:3-7)

☀ கி.மு. 1070-க்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் கொண்டு (2 சா. 6:15) வரப்படுகிறது

→ ராஜ்யத்துக்கான ஓர் உடன்படிக்கை (2சா 7:12-16) தாவீதுடன் செய்யப்படுகிறது

☀ (ஏறக்குறைய) கி.மு. 1040 - காத்தும் நாத்தானும் 2 சாமுவேலை எழுதி (2 சா. 24:18) முடிக்கின்றனர்

☀ கி.மு. 1037 - சாலொமோன் தாவீதுக்குப்பின் இஸ்ரவேலின் (1 இரா. 1:39) அரசராகிறார் 1 இரா 2:12

☀ கி.மு. 1034 - சாலொமோன் ஆலயம் கட்ட தொடங்கினார் (1 இரா. 6:1)

☀ கி.மு. 1027 - எருசலேமில் ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது (1 இரா. 6:38)

☀ (ஏறக்குறைய) கி.மு. 1020 - சாலொமோனின் உன்னதப்பாட்டை சாலொமோன் (உன். 1:1) எழுதி முடிக்கிறார்

☀ கி.மு. 1000-க்கு முன் பிரசங்கி புத்தகத்தைச் சாலொமோன் எழுதி முடிக்கிறார் (பிர. 1:1)

☀ கி.மு. 997 - சாலொமோனுக்குப் பின் ரெகொபெயாம் (1 இரா. 11:43) அரசராகிறார்;

→ ராஜ்யம் பிரிகிறது; (1 இரா 12:19,20 ) யெரொபெயாம் இஸ்ரவேலின் அரசனாக ஆளத் தொடங்குகிறார்

☀ கி.மு. 993 - சீஷாக் யூதாவுக்குள் படையெடுத்து (1 இரா. 14:25,26) ஆலயத்திலிருந்து பொக்கிஷங்களை எடுத்துச் செல்கிறான்

☀ கி.மு. 980 - ரெகொபெயாமுக்குப் பின் அபியாம் (அபியா) 1 இரா. 15:1,2 யூதாவின் அரசனாகிறான்

☀ கி.மு. 977 - அபியாமுக்குப் பின் ஆசா யூதாவின் அரசனாகிறார் (1 இரா. 15:9,10)

☀ (ஏறக்குறைய) கி.மு. 976 - யெரொபெயாமுக்குப் பின் நாதாப் இஸ்ரவேலின் (1 இரா. 14:20) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 975 - நாதாபுக்குப் பின் பாஷா இஸ்ரவேலின் அரசனாகிறான் (1 இரா. 15:33)

☀ (ஏறக்குறைய) கி.மு. 952 - பாஷாவுக்குப் பின் ஏலா இஸ்ரவேலின் அரசனாகிறார் (1 இரா. 16:8)

☀ (ஏறக்குறைய) கி.மு. 951 - ஏலாவுக்குப் பின் சிம்ரி இஸ்ரவேலின் அரசனாகிறான் (1 இரா. 16:15)

→ சிம்ரிக்குப் பின் உம்ரியும் திப்னியும் இஸ்ரவேலின் (1 இரா. 16:21) அரசராகின்றனர்

☀ (ஏறக்குறைய) கி.மு. 947 - உம்ரி இஸ்ரவேலின் தனி அரசனாக ஆளுகிறான் (1 இரா. 16:22,23)

☀ (ஏறக்குறைய) கி.மு. 940 - உம்ரிக்குப் பின் ஆகாப் இஸ்ரவேலின் அரசனாகிறான் (1 இரா. 16:29)

☀ கி.மு. 936 - ஆசாவுக்குப் பின் யோசபாத் யூதாவின் (1 இரா. 22:41,42) அரசனாகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 919 - ஆகாபுக்குப் பின் அகசியா இஸ்ரவேலின் தனி (1 இரா. 22:51,52) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 917 - அகசியாவுக்குப் பின் இஸ்ரவேலின் யோராம் தனி (2 இரா. 3:1) அரசனாகிறான்

☀ கி.மு. 913 - யூதாவின் யோராம் யோசபாத்துடன் ‘ராஜ்யபாரம் (2 இரா. 8:16, 17) பண்ணத்’ தொடங்குகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 906 - யோராமுக்குப் பின் அகசியா யூதாவின் (2 இரா. 8:25,26) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 905 - அத்தாலியாள் அரசி யூதாவின் சிங்காசனத்தை (2 இரா. 11:1-3) கைப்பற்றுகிறாள்

→ யோராமுக்குப் பின் யெகூ இஸ்ரவேலின் (2 இரா. 9:24,27) அரசனாகிறார் (2 இரா 10:36)

☀ கி.மு. 898 - அகசியாவுக்குப் பின் யோவாஸ் யூதாவின் (2 இரா. 12:1) அரசனாகிறார்

☀ கி.மு. 876 - யெகூவுக்குப் பின் யோவாகாஸ் இஸ்ரவேலின் (2 இரா. 13:1) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 859 - யோவாகாஸுக்குப் பின் யோவாஸ் இஸ்ரவேலின் தனி (2 இரா. 13:10) அரசனாகிறான்

☀ கி.மு. 858 - யோவாசுக்குப் பின் அமத்சியா யூதாவின் (2 இரா. 14:1,2) அரசனாகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 844 - யோவாசுக்குப் பின் இரண்டாம் யெரொபெயாம் (2 இரா. 14:23) இஸ்ரவேலின் அரசனாகிறான்

→ யோனாவின் புத்தகத்தை யோனா எழுதி முடிக்கிறார் (யோனா 1:1,2)

☀ கி.மு. 829 - அமத்சியாவுக்குப் பின் உசியா [அசரியா] யூதாவின் (2 இரா. 15:1,2) அரசனாகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 820 - அநேகமாக யோவேலின் புத்தகம் எழுதப்பட்டிருக்கும் (யோவே. 1:1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 804 - ஆமோஸின் புத்தகத்தை ஆமோஸ் எழுதி (ஆமோ. 1:1) முடிக்கிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 792 - சகரியா இஸ்ரவேலின் அரசனாக (6 மாதங்கள்) (2 இரா. 15:8) ஆளுகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 791 - சகரியாவுக்குப் பின் சல்லூம் இஸ்ரவேலின் (2 இரா. 15:13,17) அரசனாகிறான்

→ சல்லூமுக்குப் பின் மெனாகேம் இஸ்ரவேலின் அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 780 - மெனாகேமுக்குப் பின் பெக்காகியா இஸ்ரவேலின் (2 இரா. 15:23) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 778 - பெக்காகியாவுக்குப் பின் பெக்கா இஸ்ரவேலின் (2 இரா. 15:27) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 778 - ஏசாயா தீர்க்கதரிசனமுரைக்கத் தொடங்குகிறார் (ஏசா. 1:1; 6:1)

☀ கி.மு. 777 - உசியாவுக்கு [அசரியா] பின் யோதாம் யூதாவின் (2 இரா. 15:32,33) அரசனாகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 761 - யோதாமுக்குப் பின் ஆகாஸ் யூதாவின் (2 இரா. 16:1,2) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 758 - ஓசெயா இஸ்ரவேலின் அரசனாக ‘ஆளத் (2 இரா. 15:30) தொடங்குகிறார்’

☀ கி.மு. 745 - ஆகாஸுக்குப் பின் எசேக்கியா யூதாவின் (2 இரா. 18:1,2) அரசனாகிறார்

☀ கி.மு. 745-க்குப் பின் ஓசியா புத்தகத்தை ஓசியா எழுதி முடிக்கிறார் (ஓசி. 1:1)

☀ கி.மு. 740 - அசீரியா இஸ்ரவேலைக் கீழ்ப்படுத்துகிறது, (2 இரா. 17:6,13,18) சமாரியாவைக் கைப்பற்றுகிறது

☀ கி.மு. 732 - சனகெரிப் யூதாவின் மீது படையெடுக்கிறான் (2 இரா. 18:13)

☀ கி.மு. 732-க்குப் பின் ஏசாயா புத்தகத்தை ஏசாயா எழுதி முடிக்கிறார் (ஏசா. 1:1)

☀ கி.மு. 717-க்கு முன் மீகா புத்தகத்தை மீகா எழுதி முடிக்கிறார் (மீ. 1:1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 717 - நீதிமொழிகளை தொகுத்தமைப்பது முடிகிறது (நீதி. 25:1)

☀ கி.மு. 716 - எசேக்கியாவுக்குப் பின் மனாசே யூதாவின் (2 இரா. 21:1) அரசனாகிறான்

☀ கி.மு. 661 - மனாசேக்குப் பின் ஆமோன் யூதாவின் அரசனாகிறான் (2 இரா. 21:19)

☀ கி.மு. 659 - ஆமோனுக்குப் பின் யோசியா யூதாவின் அரசனாகிறார் (2 இரா. 22:1)

☀ கி.மு. 648-க்கு முன் செப்பனியா புத்தகத்தைச் செப்பனியா எழுதி முடிக்கிறார் (செப். 1:1)

☀ கி.மு. 647 - தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்படுகிறார் (எரே. 1:1,2,9,10)

☀ கி.மு. 632-க்குப் பின் நாகூம் புத்தகத்தை நாகூம் எழுதி முடிக்கிறார் (நாகூ. 1:1)

☀ கி.மு. 632 - கல்தேயரும் மேதியரும் நினிவேயை வீழ்த்துகின்றனர் (நாகூ. 3:7) பாபிலோன் இப்போது மூன்றாவது உலக வல்லரசாகும் நிலையிலுள்ளது

☀ கி.மு. 628 - யோசியாவுக்குப் பின் யோவாகாஸ் யூதாவின் அரசனாக (2 இரா. 23:31) ஆளுகிறான்

→ யோவாகாஸுக்குப் பின் யோயாக்கீம் யூதாவின் (2 இரா. 23:36) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 628 - ஆபகூக் புத்தகத்தை ஆபகூக் எழுதி முடிக்கிறார் (ஆப. 1:1)

☀ கி.மு. 625 - (இரண்டாம்) நேபுகாத்நேச்சார் பாபிலோனின் (எரே. 25:1) அரசனாகிறான்; முதல் ஆட்சியாண்டு

☀ கி.மு. 624-ன் நிசானிலிருந்து கணக்கிடப்படுகிறது

☀ கி.மு. 620 - நேபுகாத்நேச்சார் யோயாக்கீமை கப்பம்கட்டும் 2 (இரா. 24:1) அரசனாக்குகிறான்

☀ கி.மு. 618 - யோயாக்கீமுக்குப் பின் யோயாக்கீன் யூதாவில் (2 இரா. 24:6,8) அரசனாகிறான்

☀ கி.மு. 617 - நேபுகாத்நேச்சார் முதல் யூதக் கைதிகளைப் (தானி. 1:1-4) பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு செல்கிறான்

→ சிதேக்கியா யூதாவின் அரசனாக்கப்படுகிறான் (2 இரா. 24:12-18)

☀ கி.மு. 613 - எசேக்கியேல் தீர்க்கதரிசனமுரைக்கத் தொடங்குகிறார் (எசே. 1:1-3)

☀ கி.மு. 609 - நேபுகாத்நேச்சார் மூன்றாவது தடவையாக யூதாவுக்கு (2 இரா. 25:1,2) எதிராக வருகிறான்; எருசலேமை முற்றுகையிடத் தொடங்குகிறான்

☀ கி.மு. 607 - ஐந்தாவது மாதம் (ஆப்), ஆலயம் (2 இரா. 25:8-10) சுட்டெரிக்கப்படுகிறது,

→ எருசலேம் (எரே. 52:12-14) அழிக்கப்படுகிறது

→ ஏழாவது மாதம், யூதர்கள் யூதாவைவிட்டு (2 இரா. 25:25, 26) வெளியேறுகிறார்கள்;

→ “புறஜாதியாரின் காலம்” (லூக். 21:24) தொடங்குகிறது

→ எரேமியா புலம்பலை எழுதுகிறார்

☀ கி.மு. 607 - ஒபதியா புத்தகத்தை ஒபதியா எழுதுகிறார் (ஒப. 1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 591 - எசேக்கியேல் புத்தகத்தை எசேக்கியேல் எழுதி (எசே. 40:1) முடிக்கிறார் எசே. 29:17

☀ கி.மு. 580 - 1 மற்றும் 2 இராஜாக்களும் எரேமியாவும் எழுதி (எரே. 52:31) முடிக்கப்படுகின்றன 2 இரா. 25:27

☀ கி.மு. 539 - மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் (தானி. 5:30,31) கைப்பற்றுகின்றனர்

→ மேதிய-பெர்சியா நான்காவது உலக வல்லரசாகிறது

☀ கி.மு. 537 - எருசலேமுக்குத் திரும்பிச் செல்லும்படி அனுமதித்த (2 நா. 36:22,23) பெர்சியனாகிய கோரேசின் கட்டளை (எரே. 25:12) செயல்படுத்தப்படுகிறது

→ எருசலேமின் 70 ஆண்டு (எரே. 29:10) பாழ்க்கடிப்பு முடிகிறது

☀ (ஏறக்குறைய) கி.மு. 536 - தானியேல் புத்தகத்தைத் தானியேல் எழுதி முடிக்கிறார்

(தானி. 10:1)

☀ கி.மு. 536 - செருபாபேல் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடுகிறார் (எஸ்றா 3:8-10)

☀ கி.மு. 522 - ஆலய கட்டட வேலையின்பேரில் தடையுத்தரவிடுதல் (எஸ்றா 4:23,24)

☀ கி.மு. 520 - ஆகாய் புத்தகத்தை ஆகாய் எழுதி முடிக்கிறார் (ஆகா. 1:1)

☀ கி.மு. 518 - சகரியா புத்தகத்தைச் சகரியா எழுதி முடிக்கிறார் (சக. 1:1)

☀ கி.மு. 515 - செருபாபேல் இரண்டாவது ஆலயத்தைக் கட்டி (எஸ்றா 6:14,15) முடிக்கிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 475 - எஸ்தர் புத்தகத்தை மொர்தெகாய் எழுதி முடிக்கிறார் (எஸ்தர் 3:7; 9:32)

☀ கி.மு. 468 - எஸ்றாவும் ஆசாரியர்களும் எருசலேமுக்குத் திரும்பி (எஸ்றா 7:7) வருகின்றனர்

☀ (ஏறக்குறைய) கி.மு. 460 - 1 மற்றும் 2 நாளாகமங்கள் மற்றும் எஸ்றா (எஸ்றா 1:1) புத்தகங்களை எஸ்றா எழுதி முடிக்கிறார்;

→ (2 நா. 36:22) கடைசி சங்கீதங்கள் தொகுத்தமைக்கப்படுகின்றன

☀ கி.மு. 455 - எருசலேமின் மதில்களை நெகேமியா திரும்பக் (நெ. 1:1) கட்டுகிறார்; 70 வாரங்களின் தீர்க்கதரிசனம் (நெ. 2:1,11) நிறைவேறத் தொடங்குகிறது (நெ. 6:15; தானி. 9:24)

☀ கி.மு. 443 -க்குப் பின் நெகேமியாவின் புத்தகத்தை நெகேமியா எழுதி (நெ. 5:14) முடிக்கிறார்

→ மல்கியாவின் புத்தகத்தை மல்கியா எழுதி முடிக்கிறார் (மல். 1:1)

☀ கி.மு. 406 - எருசலேமைத் திரும்பக் கட்டுவது முடிவுற்றதாக தெரிகிறது (தானி. 9:25)

☀ கி.மு. 332 - கிரீஸ், ஐந்தாவது உலக வல்லரசு, யூதேயாவை ஆளுகிறது (தானி. 8:21)

☀ (ஏறக்குறைய) கி.மு. 280 - கிரேக்க செப்டுவஜின்ட் தொடங்குகிறது

☀ கி.மு. 165 - கிரேக்க விக்கிரகாராதனையால் தீட்டுப்படுத்தப்பட்டபின் (யோவா. 10:22) ஆலய மறுபிரதிஷ்டை; பிரதிஷ்டை பண்டிகை

☀ கி.மு. 63 - ரோம், ஆறாவது உலக வல்லரசு, எருசலேமை (யோவா. 19:15) ஆளுகிறது வெளி. 17:10

☀ (ஏறக்குறைய) கி.மு. 37 - ஏரோது (ரோம் நியமித்த அரசன்) மூர்க்கத் தாக்குதலால் எருசலேமைக் கைப்பற்றுகிறார்

☀ கி.மு. 2 - யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் (லூக். 1:60; 2:7) பிறப்பு

☀ கி.பி. 29 - யோவானும் இயேசுவும் தங்கள் ஊழியங்களைத் (லூக். 3:1,2,23) தொடங்குகின்றனர்

☀ கி.பி. 33 - நிசான் 14: இயேசு பலியாகி, புதிய உடன்படிக்கையை (லூக். 22:20) அமலாக்குகிறார்; சிலுவையில் அறையப்படுகிறார் (லூக்23:33)

→ நிசான் 16: இயேசுவின் உயிர்த்தெழுதல் (மத். 28:1-10)

→ சீவான் 6, பெந்தெகொஸ்தே: தேவாவி ஊற்றப்படுகிறது (அப். 2:1-17,38)

→ யூதர்கள் கிறிஸ்தவர்களாவதற்கு பேதுரு வழியைத் திறந்தார்

☀ கி.பி. 36 - 70 வார ஆண்டுகளின் முடிவு; கொர்நேலியுவை பேதுரு (தானி. 9:24-27) சந்திக்கிறார். இவர் விருத்தசேதனம் செய்யப்படாத (அப். 10:1,45) புறஜாதியாரிலிருந்து கிறிஸ்தவ சபைக்குள் வந்த முதல் நபர்

☀ (ஏறக்குறைய) கி.பி. 41 - “மத்தேயு” சுவிசேஷத்தை மத்தேயு எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 47-48 முதல் மிஷனரி பயணத்தைப் பவுல் தொடங்குகிறார் (அப். 13:1–14:28)

☀ (ஏறக்குறைய) கி.பி. 49 - புறஜாதியாரில் விசுவாசிகளானோருக்கு விருத்தசேதனம் (அப். 15:28,29) தேவையில்லையென ஆளும் குழு தீர்மானிக்கிறது

☀ (ஏறக்குறைய) கி.பி. 49-52 பவுலின் இரண்டாவது மிஷனரி பயணம் (அப். 15:36–18:22)

☀ (ஏறக்குறைய) கி.பி. 50 - பவுல் கொரிந்துவிலிருந்து 1 தெசலோனிக்கேயரை (1 தெ. 1:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 51 - பவுல் கொரிந்துவிலிருந்து 2 தெசலோனிக்கேயரை (2 தெ. 1:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 50-52 கொரிந்துவிலிருந்து அல்லது சீரியாவின் (கலா. 1:1) அந்தியோகியாவிலிருந்து பவுல் கலாத்தியருக்குத் தன் நிருபத்தை எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 52-56 பவுலின் மூன்றாவது மிஷனரி பயணம் (அப். 18:23–21:19)

☀ (ஏறக்குறைய) கி.பி. 55 - பவுல் எபேசுவிலிருந்து 1 கொரிந்தியரையும் (1 கொ. 15:32) மக்கெதோனியாவிலிருந்து 2 கொரிந்தியரையும் (2 கொ. 2:12,13) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 56 - பவுல் கொரிந்துவிலிருந்து ரோமருக்கு நிருபம் (ரோ. 16:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 56-58 “லூக்கா” சுவிசேஷத்தை லூக்கா எழுதுகிறார் (லூக். 1:1,2)

☀ (ஏறக்குறைய) கி.பி. 60-61 பவுல் ரோமிலிருந்து இவற்றை எழுதுகிறார்:

→ எபேசியர் (எபே. 3:1)

→ பிலிப்பியர் (பிலி. 4:22)

→ கொலோசெயர் (கொலோ. 4:18)

→ பிலேமோன் (பிலே. 1)

☀ (ஏறக்குறைய) கி.பி. 61 - பவுல் ரோமிலிருந்து எபிரெயருக்கு நிருபம் (எபி. 13:24) எழுதுகிறார் எபி10:34

→ லூக்கா ரோமில் அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதி முடிக்கிறார்

☀ கி.பி. 62-க்கு முன் “யாக்கோபு” நிருபத்தை, இயேசுவின் சகோதரனான (யாக். 1:1) யாக்கோபு எருசலேமிலிருந்து எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 60-65 “மாற்கு” சுவிசேஷத்தை மாற்கு எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 61-64 பவுல் மக்கெதோனியாவிலிருந்து 1 தீமோத்தேயுவை (1 தீ. 1:3) எழுதுகிறார்

→ பவுல் தீத்து நிருபத்தை மக்கெதோனியாவிலிருந்து (தீ. 1:5) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 62-64 பேதுரு பாபிலோனிலிருந்து 1 பேதுருவை (1 பே. 1:1; 5:13) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 64 - பேதுரு பாபிலோனிலிருந்து 2 பேதுருவை (2 பே. 1:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 65 - பவுல் ரோமிலிருந்து 2 தீமோத்தேயுவை (2 தீ. 4:16-18) எழுதுகிறார்

→ இயேசுவின் சகோதரரான யூதா, “யூதா” நிருபத்தை (யூ. 1,17,18) எழுதுகிறார்

☀ கி.பி. 70 - எருசலேமும் அதன் ஆலயமும் ரோமரால் [தானி. 9:27] அழிக்கப்பட்டன (மத். 23:37,38; லூக். 19:42-44)

☀ (ஏறக்குறைய) கி.பி. 96 - யோவான், பத்மு தீவில், வெளிப்படுத்துதலை (வெளி. 1:9) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 98 - “யோவான்” என்ற சுவிசேஷத்தையும் (யோவா. 21:22,23) 1, 2, மற்றும் 3 யோவான் என்ற தன் நிருபங்களையும் யோவான் எழுதுகிறார்;

→ பரிசுத்த வேதாகமம் எழுதப்படுவது முடிந்தது

☀ (ஏறக்குறைய) கி.பி. 100 - கடைசி அப்போஸ்தலராகிய யோவான் மரிக்கிறார் (2 தெ. 2:7)

✍ குறிப்பு:

இந்தத் வருடங்களில் (திகதிகள்) பல சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வருடங்கள் கிடைத்த ஆதாரங்ளைக்கொண்டு தோராயமாக கொடுக்கப்பட்டுள்ளன என்பதை மறக்கவேண்டாம். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் திகதியை மாற்றவே முடியாது என்பதற்காக அல்ல இந்த பதிவு. ஆனால் கால ஓட்டத்தில் என்ன நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன, அவற்றின் இடையேயுள்ள தொடர்பு என்ன என்பதை நாம் அறிந்துக்கொள்ள உதவுவதற்கே இந்த பதிவு.

19/01/2018

1. *தலை:*
கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார்
ஸ்தோத்திரம்(சங்23:5)

2. *முகம்:*
கர்த்தர் அவர் முகத்தை என் மேல்
பிரகாசிக்கச் செய்கிறார்
ஸ்தோத்திரம்.(எண்6:25)

3. *நெற்றி:*
கர்த்தர் என் நெற்றியில்
அவருடைய நாமத்தை
தரிப்பித்திருக்கிறார்
ஸ்தோத்திரம்.(உபா28:10)

4. *கண்:*
கர்த்தர் என் கண்களைக்
கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8)

5. *செவி:*
கர்த்தர் நான் கேட்கும்படி
என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்.(ஏசா50:4)

6. *வாய்:*
கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார்
ஸ்தோத்திரம் (சங் 103:5)

7. *உதடுகள்:*
கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா6:7)

8. *நாவு:*
கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத்
தருகிறார்.ஸ்தோத்திரம்.
(ஏசா50:4)

9. *கழுத்து*:
கர்த்தர் கழுத்திலிருந்து
என் நுகத்தை நீக்குகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

10. *தோள்:*
கர்த்தர் என் தோள்களை
சுமைக்கு விலக்குகிறார்
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

11. *கை:*
கர்த்தர் என் கைகளின்
பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார்
ஸ்தோத்திரம்.(சங்128:2)

12. *விரல்கள்:*
கர்த்தர் என் விரல்களை
யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்
ஸ்தோத்திரம்(சங்144:1)

13 *மார்பு:*
கர்த்தர் எனக்கு நீதியின்
மார்க்கவசத்தைத் தருகிறார் ஸ்தோத்திரம்.
(எபே6:14)

14. *வயிறு:*
கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார்
ஸ்தோத்திரம்.(நீதி13:25)

15. *முதுகு:*
கர்த்தர் என் பாவங்களை
எல்லாம் அவர் முதுகுக்குப் பின்னாக
எறிந்துவிட்டார்.
ஸ்தோத்திரம்.(ஏசா38:17)

16. *இடுப்பு:*
கர்த்தர்எனக்கு சத்தியம்
என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார்.
ஸ்தோத்திரம்(எபே6:14)

17. *முழங்கால்:*
கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக
முடங்கச் செய்கிறதற்காக
ஸ்தோத்திரம்.(ஏசா45:23)

18. *கால்கள்*:
கர்த்தர் என் கால்களை
இடறலுக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்.(சங்116:8)

19. *பாதம்*
கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத்
தூதர்களைத் தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம்.
(சங்91:12)

20. *எலும்பு*:
கர்த்தர் என் எலும்புகளையெல்லாம்
நிணமுள்ளதாக்குகிறார்
ஸ்தோத்திரம்.(ஏசா58:11)

21. *மாமிசம்*:
கர்த்தர் என் மாமிசத்தை
நம்பிக்கையோடே தங்கி யிருக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்(சங்16:9)

22. *ஆத்துமா*:
கர்த்தர் என்ஆத்துமாவை
மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம்.(சங்116:8)

23. *இருதயம்* :
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். (சங் 13:5)

24. *ஆவி* :
மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும். (நீதி 20:27)

25. *சிந்தை* :
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலி 2:5)

தேவரீர் என்
ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம் .எனக்காய் ஜீவனைக் கொடுத்த
தேவனே,உமக்கே என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன்,
இயேசு கிறிஸ்து மூலமாய்
ஆமென்,அல்லேலூயா.
அல்லேலூயா.
அல்லேலூயா

19/01/2018

ஒரு மனிதர் அதிகாலையில் எழுந்து தேவனை ஆராதிக்க ஆலயத்துக்கு சென்றார். செல்லும் வழியில் இடறி கீழே விழுந்துவிட்டார். தட்டுத்தடுமாறி எழுந்தவர் தம் ஆடையில் அழுக்குப் படிந்ததால் மீண்டும் தன் வீட்டிற்குச்சென்று ஆடையை மாற்றிக்கொண்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.

வழியில் அவர் தாம் விழுந்த அதே இடத்திலேயே மீண்டும் விழுந்துவிட்டார். திரும்பவும் எழுந்தவர் மீண்டும் தன் ஆடையை மாற்றும்படி வீட்டிற்குச் சென்று மாற்றிக்கொண்டு திரும்பவும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.

அப்போது வழியில் ஒருவர் தம் கையில் விளக்குடன் நிற்பதைக் கண்டவர். 'யார் நீங்கள்? ஏன் இங்கு கையில் விளக்குடன் நிற்கிறீர்கள்?' என்று அந்த மனிதனிடம் கேட்டார். அதற்கு அந்த மனிதன், 'நீங்கள் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் இருமுறை கீழே விழுந்ததைப் பார்த்தேன். ஆகையால் உமக்கு உதவுவதற்காக நான் இங்கு கையில் விளக்குடன் உமக்காகக் காத்திருக்கிறேன்' என்றான். ஆலயம் செல்லப் புறப்பட்டவரோ, "ஐயா, தாங்கள் யாரோ, எவரோ எனக்காக உதவும்படி வந்திருக்கிறீரே.மிகவும் நன்றி" எனக் கூறினார்.

பின்பு இருவரும் ஆலயத்துக்குச் சென்றார்கள். ஆலயத்துக்குள் சென்ற விசுவாசமுள்ள மனிதர் தனக்கு உதவிய மனிதனை நோக்கி, "நீங்களும் உள்ளே வாருங்கள்! சிறிது உணவருந்திவிட்டு பின்பு தேவனை ஆராதிப்போம்" என்றார். அதற்கு அந்த மனிதன் மறுத்துவிட்டான். இவர் எவ்வளவோ சொல்லியும் அந்த மனிதன் உள்ளே செல்வதற்கு மறுத்துவிட்டான். இவரோ அந்த மனிதனை நோக்கி, 'ஏன் நீங்கள் உள்ளேவர மறுக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், "நான்தான் சாத்தான்" என்றான்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விசுவாசமுள்ள மனிதர், "நீதான் சாத்தானா, பின் ஏன் நீ ஆலயத்துக்குச் செல்ல எனக்கு உதவி செய்தாய்?" எனக்கேட்டார்.
அதற்கு சாத்தான், "நான் உன்னை முதல்தரம் கீழே விழச் செய்தபோது நீ முறுமுறுக்காமல் உன் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிவிட்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டாய். உன் விசுவாசத்தைக் கண்ட தேவன், 'உன் பாவங்களையெல்லாம் மன்னித்தார்'. இரண்டாவதுமுறை உன்னை மீண்டும் அதே இடத்தில் கீழேவிழச் செய்தேன். ஆனால் அது உன் ஆர்வத்தை குறைக்கவில்லை. நீ மீண்டும் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு ஆலயத்துக்குச் செல்ல புறப்பட்டாய். உன் பக்தி வைராக்கியத்தைக் கண்ட தேவன், "உன் குடும்பத்தாரின் பாவங்களையெல்லாம் மன்னித்தார்". அதைக் கண்டு பயந்த நான், எங்கே நீ மூன்றாவது முறையும் கீழே விழுந்து மீண்டும் ஆலயத்துக்குச் செல்வதை தேவன் பார்த்து அதினிமித்தம் உன் தேசத்தாரின் பாவங்களை மன்னித்துவிடுவாரோ என பயந்துதான் நான் தள்ளிவிடாமல் எங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்று உனக்கு உதவிசெய்ய கையில் விளக்குடன் வந்தேன்" என்றான்!

ஆம், கிறிஸ்துவுக்குப் பிரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே! "தமது நாமத்திற்காக நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதுக்கு தேவன் அநீதியுள்ளவரல்ல" என வேதம் அறுதியிட்டுக் கூறுகின்றது. நமது விசுவாசம், உண்மை, நீதி, பக்திவைராக்கியம், கீழ்ப்படிதலினிமித்தம் நம் குடும்பம், நம் தேசம் பாதுகாக்கப்படும், இரட்சிக்கப்படும், ஆசீர்வதிக்கப்படும்.
ஆகையால் நாம் விசுவாசத்தில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. கர்த்தர் தாமே நம் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு நம் யாவருக்கும் கிருபையையும், பெலத்தையும் தந்தருளுவாராக. ஆமென்.

*'விசுவாசத்தைத் துவக்குகிறவரும் அதை முடிக்கிறவருமாகிய நம் ஆண்டவராகிய 'இயேசுகிறிஸ்து' உங்களோடுகூட இருக்கிறார்... கலங்காதீர்கள்.*
ஆமேன்!

16/01/2018

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?

அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் "
என்றது.

தேனீ கோபப்படவில்லை.
உன் கண்களுக்கு இனிய உணவாகவும்,
இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும்,
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே

நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.

ஆனால் உன்னுடைய உணவு,
கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.

அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது.

ஈ அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஓடிப் போனது .

பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.

சிற்றின்பம் ஈ தேடுவது பேரின்பம் தேனி தேடுவது.

16/01/2018

👉🍔நான் *ஆதியாகமம்* உணவகத்திற்கு,
👉🏿🚗 *யாத்திராகமம்* சாலை வழியாகச் சென்றேன்.
👉👳🏻போகும் வழியில் நான் , *லேவி* என்பவர்
*எண்களைப்* பதிவு செய்தபடி *உபாகமத்தின்* மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
👉🏿🚶அந்த நேரத்தில் *யோசுவா* , *நியாயாதிபதிகளின்* அழகிய கதவில் நின்றபடி 🙋 *ரூத்* என்பவள் 👳🏻 *சாமுவேல்*
, 👳🏻 *சாமுவேல்* என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
👉👳🏿ஒரு கட்டத்தில் , *முதலாம் ராஜாக்களும்* , *இரண்டாம் ராஜாக்களுமாய்* இருந்த ,
👉🏿 *நாளாகமங்களின்* ராஜாக்கள், 👳‍♀ *எஸ்றாவையும்* , 👱 *நெகேமியாவையும்*, 💆🏻 *எஸ்தரையும்*, அவர்களது சகோதரன் 👴 *யோபு* அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர்.
👉🚶அவர்கள் 🎻 *சங்கீதம்* பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு 📖 *நீதிமொழிகளைப் பிரசங்கித்து* சாலமோனின் 📘 *உன்னதப்பாட்டைக்* கற்பித்தனர்.
இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,
👉🏿👳🏼 *ஏசாயா, 👱எரேமியா*வின் *புலம்பலை*,
👴 *எசேக்கியேல்* *தானியேல், 👱*ஓசியா* , *யோவேல்* என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
👉👳🏾அந்த சமயத்தில் *ஆமோஸு*ம் , *ஒபதியா*வும் அருகில் இல்லை.
👉🏿👳🐟மூன்று நாட்களுக்குப் பிறகு *யோனா* , *மீகாவும்*, *நாகூமும்* எருசலேமுக்குப் பயணம் செய்த ⛴கப்பலிலேயே பயணித்தார்.
👉🚶 *ஆபகூக்* , அதன் பிறகு *செப்பனியா*வை சந்திக்க, அவர் *ஆகாய்* எனப்பட்ட *சகரியா*வின் நண்பரும் , *மல்கியா*வின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார்.

👉🏿👳🏾👳🏼👳🏿👳🏻உடனடியாக சம்பிரதாயப்படி, *மத்தேயு* , *மாற்கு* , *லூக்கா*, *யோவான்* என்பவர்கள், *அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி* *ரோமர்*, *Iகொரிந்தியர்* போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர்.
ஏனென்றால் *II கொரிந்தியர்* கூட்டத்தினர் எப்பொழுதும் *கலாத்தியரிடம்* சண்டையிடுபவர்களாக இருந்தனர்.
👉அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, *எபேசியரும்*, *பிலிப்பியரும் கொலோசேயருக்கு* நெருக்கமானவர்கள் என்பதும் , *முதலாம் தெசொலேனிக்கேயர்* சந்திப்புக்குப் பிறகு *இரண்டாம் தெசொலேனிக்கேயர்* சந்திப்பு வருவதற்குள் அவர்கள் *ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு* சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ *தீத்து*வின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி *பிலமோனுக்கு* *எபிரேயர்* மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட 👳‍♀ *யாக்கோபு*, இரண்டுமுறை 👱 *பேதுரு*விடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று 🙋‍♂ *யோவான்*களும் *யூதா*விடம் தங்கள் பயணத்தில் *வெளிப்படுத்தின விசேஷத்தை*ப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.

நீங்கள் மாத்திரம் தனியாக ரசிக்காமல் உங்கள் சக கிறிஸ்தவ நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

Address

No 10 Gandhi Street
Chennai
600019

Telephone

9807462144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesus Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share