Abundant Life Center

Abundant Life Center Abundant Life Center Interdenominational organisation, Our core idea is to Teach, Train and Edify the Christians, to be a witness to the World.

17/11/2017

இந்தியாவில் வாழும் 90% ஆதி இந்தியர்கள்(மண்ணின் மைந்தர்கள் or ஆதி தமிழர்கள்) இந்தியாவை ஏன் ஆளவில்லை, 10% வாழும் ஆரிய கொள்கை உடைய பிராமணர்கள் ஆளுவது ஏன்?

இந்தியாவை மண்ணின் மைந்தர்கள் ஆளுவதே நியாயம். எப்பொழுது ஆளுவது? எப்படி ஆளுவது? இந்திய மக்களாட்சி உள்ள நாடு. சிந்திப்போம் செயல்படுபவோம். கடவுள் இயேசு பெருமான் வழிநடத்துவார். உண்மையை அறியுங்கள் உண்மை விடுதலையாக்கும்.

Rev. K.M.DEVAN
FOUNDER & PRESIDENT
ABUNDANT LIFE CENTRE
CHENNAI
MOB: 9176002444
EMAIL [email protected]

01/09/2017

கிருஸ்துவ தலைவர்கள் Vs இந்துத்துவா தலைவர்கள்
இயேசு ஆண்டவர் இந்த மனித இனத்தை ஜென்ம, கர்ம பாவத்திலிருந்து ஆன்மிக விடுதலை கொடுத்து மனித இனத்தை முழுவதும் ஒன்றினைத்து அவனை அவரோடு இனைத்து இயேசு ஆண்டவரின் சித்தத்தையும், அவருடைய இராஜ்யத்தை நிலைநாட்டி செல்வது அவருக்கு ஏற்ற மாணவனாக இருக்கமுடியும். ஆனால் நம்முடன் இருக்கும் இன்றை தலைவர்கள்.!!!!!!!!!
கிருஸ்துவ தலைவர்கள்:-
இன்று உலகமுழுவதும் சுற்றிவரும் நம் இன்றை தலைவர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் இயேசு ஆண்டவரின் நோக்கத்தை மண்ணில் புதைத்துவிட்டனர்.
நம் தலைவர்கள் முழு கவனத்தையும், நிறுவனங்கள் மேலும், பதவியின் மேலும், பணத்தின் மேலும், தங்கள் குடும்பத்தினரின் மேலும், தங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள்.
இவர்கள் சபைகள், விசுவாசிகள், இயக்கங்கள் ஒன்றினையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். சபைகளை சாதியின் பெயரால் உடைக்கிறார்கள், (Doctrines)கொள்கைகள் மூலம், சுதேசி சபைகள், பாரம்பரியம் சபைகள், ஆச்சாரமான சபைகள், என எப்படியெல்லாம் சிறு சிறு குழுவாக உடைக்கமுடியுமோ, அப்படி உடைத்து வைத்துள்ளார்கள். இதில் பெரும் பங்கு சாதியின் அடிப்படை, மற்றும் நிறத்தின் அடிப்படையிலான பிளவு.
இந்த தலைவர்கள் உலகமுழுவதும் மேற்கண்டவற்றின் முலம் தெளிவாக பிரித்து உள்ளார்கள். இதில் ஒரு கொடுமை என்ன என்றால் சேர்கமுடியாதவாறு இவற்றை பாதுகாக்கிறார்கள்.
இந்துத்துவா தலைவர்கள்:-
இந்தியாவுக்கு கைபர் போலன் கணவாய் வழியாக குடியேறிய 5 இனமக்கள், ஒற்றுமையாக இருந்த சிந்துவெளி(இந்திய மக்களை- மண்ணின் மைந்தர்களை) வர்ணாசிரம் என்கின்ற கொள்கையின் மூலம் கூறு போட்டு பிரித்துள்ளார்கள்.
இவர்களுக்கு அடிமைகளாகவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவும் அவர்களை வைத்திருந்தார்கள்.
இவர்கள் அரசு பதவிவைக்கவும், பணசம்பாதிக்கவும், அவர்கள் உறவின்களுக்கு அரசு பதவி கிடைக்க செய்யவும், பள்ளிப்படப்பை படிக்க செய்யவும், அடிமைகள் மேல் வரி தினித்து பணம் ஈட்டினார்கள்.
இவர்கள் முதலில் மண்ணின் மைந்தர்களை பிரித்தார்கள், பின்பு நாட்டை கூறு கூறாக பிரித்து, மொழி வாரியாக, இன வாரியாக, தொழில் வாரியாக எப்படி எல்லாம் பிரிக்கமுடியுமோ அப்படி எல்லாம் பிரித்து நாட்டை கூறு போட்டு உள்ளார்கள்.
அடிமைகள் இன்று வரை ஒன்று இனைக்கமுடியவில்லை. காரணம் இதில் அவர்கள் சுகம் கண்டு கொண்டார்கள்.
இதுதான் இன்றைய கிருஸ்துவ தலைவர்களின் நிலையும், இந்துத்துவா தலைவர்களின் நிலையும்.
இவர்கள் அவர்களுக்கு அடிமையாக இருப்பதால் இவர்களும் இப்படிபட்ட குனங்களோடு உள்ளார்கள்.
ஆக இவர்கள் எப்படி இயேசுவின் சித்தத்தை செய்ய முடியும்.
இப்படிக்கு
கி.ம. தேவன்.
பரிபூரண வாழ்வு ஊழியம்

07/01/2017

இந்தியாவை கிருஸ்துவ நாடாக மாற்ற வேண்டும் என தீவிரமாக ஓடி கொண்டு இருக்கும் அனைத்து கிருஸ்துவ சுவிசேஷச அமைப்புகள், இயக்கங்கள், நிறுவனங்கள், முதலாளித்துவ திருச்சபை நிறுவன தலைவர்களுக்கு என்னுடைய கேள்வி? இன்று உலகளவிலும், இந்தியாவிலும் நடந்து கொண்டி இருக்கும் மனித சமுதாயத்திற்கு விரோதமான செயல்கள், மனித உரிமை மீறல்கள். மனித அடிப்படை தேவைகளுக்கான தடுப்பு(அ) கலப்படம், மனித வாழ்வாதார இயற்கை சூழல்களை அழிப்பது போன்ற விரோத செயல்களுக்கு நீங்கள் ஏன் குரல் கொடுக்காமல் வாயை மூடிக்கொண்டும், தசமபாகம் கேட்பதிலும், கடவுளின் பெயரை வைத்து பயபடுத்துவதும், இசை கச்சேரி, சிறு, பெருவிழா, நடன நிகழ்ச்சி, ஆசீர்வாத கூட்டம், போன்றவற்றுக்கு வாயைத்திறந்து கேட்பது மட்டும் உங்களால் முடிகிறது. ஆனால் மனிதன் அழிந்தாலும், நசுக்கப்பட்டாலும் அவனுக்கு உங்கள் குரல் இல்லை. ஆனால் உங்கள் குரல் வயிறுக்கும், குடும்பத்திற்கும் குறைவரக்கூடாது என்ற நிலை. கடவுளால் உண்டாகப்பட்ட மனிதனை அடிப்படை மீட்பு கொடுக்காமல், எப்படி இந்தியாவை மாற்றுவது?

நன்றி: கி.தேவன்.

01/03/2016

கிருஸ்த்துவம்
ஒரு வணிகமா, சமயமா, மார்க்கமா
நான் முகப்புநூலில் படித்த செய்திகள். இன்று சுவாரஸ்யமான பல கருத்துகள், தகவல்கள், சிந்தனைச்செய்திகள், என பல்வேறு தகவல்களை தங்களுடைய முகப்பு நூல் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு "Likes, comments" வந்தது என போட்டி போட்டுக்கொண்டு பார்க்கிறோம். ஆனால் Like போடுகிற நாம் அவற்றை ஆராய்ந்து பார்கிறோமா?.
அதில் நான் கவனித்த செய்தி ஒன்று அல்லேலூயா, ஆமென், ஆசிர்வாதம், என்ற வார்த்தையில் இன்று கிருஸ்த்துவ சமுதாயத்தில் பரவிவரும் இந்த கொடிய வியாதியாக, ஒரு கொள்ளை நோயாக பரப்பிக்கொண்டுள்ளன. நம்முடைய வெள்ளைச்சீருடை மக்கள்.
இந்த வெள்ளைச்சீருடை நண்பர்களுக்கு இறைப்பணி என்றால் தெரியாது, ஆனால் இறைப்பணி என்ற பெயரில் ஆட்கள் (ஆள்) சோர்க்கும் பணிகள்தான் இப்பொது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் ஒரு போட்டா, போட்டி யார் அதிக ஆள் சேர்ப்பது என? என்ன ஒரு அவளநிலை. ஒவ்வெரு வார கூடுகையில் அடுத்த வாரம் வரும் போது ஒருவரையாவது அழைத்து வரவேண்டும் என அதிகார கட்டளை. இதோடு ஒரு பயத்தையும் சொல்லி அதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தையும் கூறி அடிமைப்படுத்தி உள்ளனர், 1 தீமோ1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். தேவன் இப்படுப்பட்ட செயலைக் கொடுத்திருக்கும் போது, ஏன் வெ.சீ இவற்றை கைக்கொள்ள கற்றுத்தரவில்லை? பலமும், தெளிந்த புத்தியை அடமானம் வைத்து, அடிமைகளாக மாறிவிட்டோமா. ஆனால் நம்ம் ஆசீர்வாதங்கள் என்ற பெயரில் பயபடுத்தி வைத்துள்ளனர்.
நான் ஒரு தம்பியிடம் கதைத்துக்கொண்டிருந்தேன், அவர் சொன்ன செய்தி எண்ண வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியும் அவர் குடும்பத்தையும் ஓர் நிகழ்ச்சியில் சந்தித்து பேசும் போது அந்த பெண்மணி தன்குடும்பத்தின் பிரச்சனையை இந்த தம்பியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த தம்பி சொன்னாராம் இயேசுவை ஏற்றுகொள்ளுங்கள் அவர் உங்கள் குடும்ப பிரச்சனை அவர் தீர்ப்பார் என்று. இதை தான் இறைப்பணி என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதுதான் இறைப்பணியா? இப்படிப்பட்ட பணியை செய்யும்படி வெள்ளைச்சீருடை கட்டாயப்படுத்துகிறனர். ஆக இறைப்பணி என்பது அவருக்கும் தெரியாது, அவருடைய அடிமைக்கும் தெரியாது.
வணிகமயமாக்கபட்ட இயேசு கிருஸ்துவின் போதனைகள் இன்று மிகவும் வேதனையும், வெட்கமும் அடையச்செய்கின்ற சூழல் நடைபெற்றுகொண்டுள்ளது. கிருஸ்த்துவின் சுவிசேஷத்தை வியபாரம் செய்து கொண்டிருக்கும் கூட்டங்கள் பரவலாக உள்ளது, அவை: ஊடகக் கூட்டம், விளம்பர பலகை ஒட்டும் கூட்டம், அபிஷேக எண்ணெய், அபிஷேக கைக்குட்டை, விற்கும் ஒரு கூட்டம், அபிஷேக ஆராதனை, துதி ஆராதனை, அபிஷேக அன்னிய பாஷை என நடத்தும் ஒரு கூட்டம், பெயர் சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம், Mela-க்கள் நடத்தும் ஒரு கூட்டம், பங்காளர்களை திரட்டும் கூட்டம், என பல கூட்டங்கள் அணி அணியாக வளம்வந்து கொண்டியிருக்கின்றன. இவர்கள் மூலதனமாக சுவிசேஷத்தையும் தங்களுடைய பொருட்களையும் பயண்படுத்துகின்றனர். இவர்கள் பெரும் பொருள் ஈட்ட இத்தகைய உத்திகளை கையளுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் புனித யாத்திரை(HOLY LAND TOUR) என்கின்ற ஒரு வேடிக்கையான கூட்டம். இன்னும் அறியப்படாத, கண்டறியாத, கேட்டறியாத கூட்டங்கள் இருக்கலாம். இவர்கள் இயேசுவை பின்பற்றினால், ஏன் இந்த வணிகமயம்? மத்தேயு 20:25-28, இவர்களில் பணிவிடைக்காரர், ஊழியக்காரர் எங்கே? இயேசு: "மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகர் மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்."
மதம் யானைக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கிறது? மருத்துவ ஆராய்ச்சி முலம் கண்டுபிடித்தது யானைக்கு உடலில் உஷ்ணம் அதிகம் ஏற்பட்டால் அது மூளைக்கு குழப்பம் உண்டாகி பைத்தியம் போல் சுற்றி திரிந்து கேடு விளைவிக்கிறது. இப்படி தான் கிருஸ்த்துவத்திலும். மதம் மூன்று காலங்களையும் உள்ளடக்கியது. அதாவது ஆன்மாவானது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் மதம் என்ற பெயரில் பல சடங்குகள், சம்பிரதாயங்கள், என பலவற்றில் மூழ்கி உள்ளது. நெற்றியில் சிலுவை படுவது, எண்ணெய் பூசுவது, தண்ணீர் தெளிப்பது. என பலவேறுபட்ட மதச்சடங்க்குள் பினைக்கப்பட்டுள்ளது.
நம் தலைவர்கள், சபைகளின் எழுப்புதல், எழுச்சி, அடைவேண்டும் என்று சபைகளில் எழுப்புதல், எழுச்சி கூட்டங்கள் நடத்தி இப்படிபட்ட உபதேசங்குகளை பயிற்றுவிக்கிறார்கள். எங்கே மனமாற்றம்? மாறாக மதமாற்றம் வேட்டைதான் நடைபெறுகிறது. இயேசு சொன்ன வார்த்தை மத்தேயு 23:15 இதன்படித்தான் இன்று அனைத்து திருச்சபைகளிலும் ஆள் சேர்க்கும் போட்டி உள்ளது. இதற்கு எத்தனை போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள், குழப்பங்கள், வெட்கம்.
அன்புள்ள கிருஸ்துவ சகோதர, சகோதரிகளோ. உங்களை தாழ்மையுடன் கேட்பது. தயவு செய்து கிருஸ்துவின் சத்தியத்தை புரிந்து, சத்தியமில்லாத உபதேசங்குக்கு விலகியும், எச்சரிக்கையாகவும், இருங்கள். இப்படிபட்ட உபதேச மக்களுக்கு ஆதரவை அளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இப்படிக்கு ,கிருஸ்துவின் பணியில்
தேவன்
பரிபூரண வாழ்வு, சென்னை

13/10/2015

We praise God for his wonderful grace and mercy our Ministry. We able to registered our Abundant Life Organization under Tamil Nadu Govt Act. Yesterday I received the registered document. Our organization Reg. no: 1522/B4/2015. Please continue to pray for Abundant Life ministry and all his works.

13/10/2015

அன்புள்ளம் கொண்ட கிருஸ்த்துவ சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் உலகத்தின் இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துகள். கடந்த ஒன்பது மாதங்கள், நம்மை கருத்தோடும், பாதுகாப்போடும், பராமரிப்போடும், காத்த நம்முடைய தேவனுக்கு நன்றியும், துதியும், கனமும் உண்டாவதாக.
திருச்சபையய் குறித்து எனக்குள் இருந்த பல்வேறு சிந்தனைகள், கேள்விகள் அநேகம் உண்டு, திருச்சபை வரலாறு உண்டு, இதில் இந்திய திருச்சபை, ஐரோப்ப திருச்சபை, மேற்கத்திய, கிழக்கத்திய திருச்சபை என வரலாறு உண்டு, ஆனால் திருச்சபை தொடக்கம், பரிமாணம் மற்றும் வளர்ச்சி. திருச்சபை என்பது அறியா ஒன்று. இன்று திருச்சபை என்பதற்க்கு பல்வேறு பொருள்களை கொண்டுள்ளன. சபை என்ற பொருளுக்கு மக்கள் கூடியிருக்குமிடம் என்பதுதான் பொதுவான பொருளாகும். திருச்சபை என்ற பொருளுக்கு ‘கிருஸ்த்தவர்கள் கூடி ஆராதிக்குமிடம்’ என பொருள் விளங்கப்படுகிறது. இது ஆராதிக்கும் இடத்தை குறிப்பதில்லை ஆனால் இது கூடியிருக்கும் மக்களை குறிக்கிறது தவிர இடம் / கட்டடம் அல்ல.

உலகை ஆளும் கடவுள் தனனுடன் உறவாடவும், தன்னை தொழுதுக்கொள்ள்வும் மனிதனை உருவாக்கி அவனை பலுகி பெருகவும், சகல பிராணிகளை ஆளவும், ஆண்டுகொள்ளவும் மனிதனுக்கு அதிகாரம், ஆளுமை செய்யக்கூடிய திறமையை தேவன் அவர்களுக்கு தந்திருந்தார்.

மனிதனுடைய (ஆதாம் & ஏவாள்) கீழ்படியாமையின் மூலம் கர்மபாவம் அவர்களை ஆட்கொண்டது, இந்த கர்மபாவம் இன்று எல்லா மனிதர்களிடத்திலும் ஜென்மபாவமாக உள்ளது. இந்த பாவ விடுதலைக்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆதி 4: 4 வசனம் “ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும், அவைகளில் கொழுமையானவைகளிலும், சிலவற்றைக் கொண்டுவந்தான், கடவுள் அவன் காணிக்கையை அங்கிகரித்தார்”. இதன் மூலம் முதல் பலிக்கொள்கை கோட்பாடு உண்டானது. ஆபேல் கொடுத்த காணிக்கை தேவன் அக்கினியினால் அங்கிகரித்தார்.

உலகத்தை ஆளும் ஆண்டவர் தான் சிருஷ்டித்த மனிதனுக்கு தான் கொடுத்த கட்டளைகளை, அதிகாரங்களை, ஆளுமைகளை விட்டு கடவுளுக்கு விரோதமாக அவன் செய்த மீறுதலால் அவன் தன்னை சிருஷ்டித்த கடவுலோடு உறவாட முடியாமல் தன்னை மறைத்துக்கொண்டான். இந்த மறைவு அவனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இழப்பை ஈடு செய்ய (ஆதாம் & ஏவாள்) கர்மபாவத்திலிருந்து விடுதலை பெற அவனுக்குள் ஆண்டவர் பலிசெலுத்தும் முறையை அவன் இருதயத்திற்குள் உணர்வை வைத்து இருந்தார். ஆகவே தான் ஆபேல் தன்னுடை ஜென்மபாவத்திலிருந்து விடுதலை பெற பலியை உணர்ந்து தன் மந்தையிலிருந்து பழுது இல்லாத கொழுமையான ஆடுகளை பலிசெலுத்தினான். இந்த பலி கொடுக்கும் ஆட்டின் இரத்தம் தன்னை விடுதலையாக்கும் என்று விசுவாசித்தான் இது இரத்தம் சிந்துதல் இல்லாமல் மீட்பு இல்லை என்பதனையும், கிருஸ்த்து இரத்தம் சிந்துதலையும் வெளிப்படுத்துகிறது.

பழைய ஏற்பாடுக்காலம் – பலி கொள்கை கோட்பாடு:-
பலிபீடம் முறை வழிபாடு:- நோவா
உலகில் பாவம் பெருகினதால் தேவன் உலகை அழிக்கும் நோக்கில் 40து நாள் பெருமழையின் முலம் இந்த பூமியில் பாவம் செய்த அனைத்து மனிதர்களையும் அவர் அழித்தார். இந்த் பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா உலகை ஆளும் கடவுளுக்கு தன்னையும், தன் குடும்பத்தையும், மிருகங்களையும், பிராணிகளையும், பறவைகளையும், கடவுள் அழிவிலிருந்து காத்ததினால் அவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதிலே சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிவற்றை தெரிந்துகொண்டு நோவா பலிசெலுத்தினான். நோவா அந்த பலியை நெருப்பினால் பலிசெலுத்தினான் ஆகவேதான் அதற்கு தகனபலி (ஆதி 8:20) நோவாதான் முதன் முதலில் பலிபீடம் கட்டி அதிலே மிருகங்களையும், பறவைகளையும் பலி செலுத்தினான்.

பலிபீடம் முறை வழிபாடு:- ஆபிரகாம்.
நோவாவிற்கு பிறகு இந்த பலி, பலிபீடம் முறையானது குலவழிபாடக பின்பற்றபட்டது. ஆபிராம் தன்னுடைய குடும்பத்தையும், இனத்தையும், விட்டு தேவன் அழைக்கும் இடத்துக்கு சென்றபோது அவனுக்கு கடவுள் மோரே என்னும் இடத்தில் தரிசனமானதால் அந்த இடததிலே முதல் பலிபீடம் கட்டி தன்னை அழைத்துவந்த தேவனை தொழுதுக்கொண்டான் ஆதி 12:7. பலிபீடம் கட்டுவது அவர்களுடைய குலவழிபாடாக இருந்தபடியால் அவன் பலிபீடம் கட்டினான்.

பின்பு ஆபிராம் இரண்டு முறை தன்னை அழைத்தவந்த தேவனுக்கு பெத்தேலுக்கும், ஆயீக்கும் இடையிலும், மம்ரேயின் சமபூமியிலும் பலிபீடம் கட்டி ஆதி 12: 8; 13: 18 தேவனை தொழுதுக்கொண்டான்.

தேவன் மனிதனை மீட்பின் செயல்களை ஆபிரகாமுக்கு விளக்கும்படி ஆபிரகாமின் ஒரே குமரனனும், ஏகசுதனுமாய் இருந்த ஈசாக்கை பலி பொருளாக (மீட்பின் சாயலாக) கொடுக்கும்படியாகவும்.(முதல் தகனபலியைய் செலுத்தினான்.. ஆதி 22: 13). இரத்தத்தினால் பாவமீட்பு உண்டு என்பதை அறிந்து விசுவாசிக்கும்படியாகவும். தேவன் ஆபிரகாமை தன் மகனை பலியிடச்சொன்னார். அகிலத்தை ஆளும் ஆண்டவர் மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த திட்டத்தை சாரத்தை ஆபிரகாம் தன் வாழ்நாள் முழுவதும் விசுவாசித்தான்.

இந்த குலவழிபாட்டை ஆபிரகாமுக்கு பின்வந்த அவனுடைய சந்ததினர்கள் ஈசாக்கு, யாக்கோபு, மோசே என்பவர்கள் பலிபீடம் கட்டி உலகத்தையாலும் தேவனை தொழுதுக்கொண்டார்கள். ஈசாக்கு பெயெர்செபாவில் ஒரு பலிபீடத்தை கட்டி கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான். ஆதி 26: 25, யாக்கோபு மலையின்மேலும், பெயெர்செபாவில் பலியிட்டான் (ஆதி 31:54; 46:1), யாக்கோபுக்கு கர்த்தர் தரிசனமான இடத்தில் (ஏல்பெத்தேல் பெயர் வைத்து) பலிபீடத்தை கட்டின தேவனை தொழுதுக்கொண்டான்(ஆதி 35:7). மோசே பலிபீடத்தை கட்டி தேவனை தொழுதுக்கொண்டான்(யாத் 17:15) தான் கட்டிய பலிபீடத்திற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டான்.

நினைவுக்கல் வழிபாடு
ஆபிரகாமின் முற்பிதாக்கள், மற்றும் அவனுடைய பிள்ளைகள் தன் தகப்பானாகிய ஆபிரகாம் செய்த முறையின் படியே பலிபீடம் கட்டியும், பலிபீடத்தில் பலிசெலுத்தியும் தேவனை தொழுதுகொண்டார்கள். யாக்கோபும் தன் பிதாக்களின் முறையை பின்பற்றி இருந்தாலும், யாக்கோபு ஒரு புதிய வழக்கத்தை உண்டாகினான். அதாவது யாக்கோபுக்கு கர்த்தர் தரிசனமான இடத்தில் தன் தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து அதை தூணாக நிறுத்தி எண்ணெய் வார்த்து, கர்த்தர் தனக்கு தரிசனமான இடத்தில் நினைவுகூறும்படி இதை செய்து தேவனுடைய வீடு (பெத்தேல்) (ஆதி 28:18-19)என்றுபெயரிட்டான். யாக்கோபு தன்னுடைய வாழ்வில் நினைவுகல்லுக்கு ஒரு முக்கியத்தும் கொடுத்தான். லாபானுக்கும், யாக்கோபுவுக்கும் சாட்சியாக கல்லை தூணாக நிறுத்தினான் (ஆதி 31:45). யாக்கோபுக்கு தேவன் மறுபடியும் தரிசனமாகி அவனோடு பேசிய இடத்தில் மீண்டும் ஒரு கற்றூணை நிறுத்தி அதின் மேல் பானபலிகளையும், எண்ணெயையும் வார்த்தன்(ஆதி 35:14). யாக்கோபு கற்தூணை நிறுத்தி தேவனை தொழுதுக்கொள்ளவில்லை. இது ஒரு அடையாளக்கல் சின்னமாக வைத்தான்.
-தொடரும்.

16/07/2015

யோவன் 12: 35-36 “ இயேசு: இன்னும் கொஞ்சகாலம், ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.” “ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாமாயிருங்கள் என்றார்.”

அன்புள்ள கடவுளின் பிள்ளைகளே, இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் கிறிஸ்த்துவர்களாக, அல்லது பிற மத நம்பிக்கையுடைவர்களாக பிறந்து இருந்தாலும். நம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில், சுவிஷேச வார்த்தைக்கு செவிச்சாய்து இயேசுவை சொந்த இரட்ஞகராக ஏற்றுக்கொண்டு, அவரோடு நாம் கொண்டிருந்த தேவ பக்த்தி, மிகவும் அருமையானது, அந்த காலகட்டத்தில் தினமும் வேதவாசிப்பு, ஜெபம், ஐக்கியம், உழியத்தில் பங்கேடுப்பு......... என நாம் கொண்டிருந்த மகிமையான தருனம் அது, அந்த பசுமையான நினைவுகளை எல்லாரும் தன்னுடைய இளந்தலைமுறைக்கு சொல்லுவதுண்டு, ஏன் என்றால் அவர்களும் அந்த மாபெரும் அனுபவத்தை அடையவேண்டும் என்பது எல்லாருடைய ஆசை. நாம் கிறிஸ்த்துக்குள் வளர்ந்து கனிகள் கொடுத்து, வாழ்ந்தவாழ்க்கையில் என்னிப்பார்ப்போம் அது மிகவும் குறைந்த காலம்தான், ஏன் இந்த நிலை??? நாம் அந்த ஆதி வெளிச்சத்தை ஏதோ ஒரு தருனத்தில் இழந்துவிடுகிறோம். கராணம் அவருடன் வைத்துருந்த ஆதி அன்பு, பற்று, சிலருக்கு காலத்தின் சூழ்நிலை, சிலருக்கு வேலை, சிலருக்கு போரட்டங்கள், சிலருக்கு குடும்ப சூழல் ஆகியவற்றால் இழந்துவிடுகிறோம். இந்த சூழலை நாம் சிந்திப்பது இல்லை. ஆகவே தேவனைவிட்டு பல தூரம் சென்றுவிடுகிறோம். நாம் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருந்தால் அவருடைய ஒளி நம்மிடத்தில் இருக்கும், நாம் அவரின் பிள்ளைகளாயிருப்போம்
இயேசு சொன்னவார்த்தையை அவருடைய சீடர்கள் விளங்கிக்கொள்ளவில்லை, காரணம் அந்த ஒளியை அவர்கள் உலகத்தை இரட்சிக்கும் மேசியா, தேவகுமாரன் என்று அவர்களால் புரிந்துக்கொள்ளவில்லை. ஆகவேத்தான் அவர்களுக்கு ஏற்ப்பட்டது இடறல்.
நமக்கு!!!!!!!

14/07/2015

அன்புள்ள போதகர்கள், சகோதராகள், கிறிஸ்த்துவின் நாமத்தினால் வாழ்த்துகள்.
நான் உங்களோடு சில தகவல்களை பகிர்ந்து கொள்ளாம் என்று நினைக்கிறேன்.
வேதம் கூறும் வார்த்தையில் யாருக்கும் சந்தேகம் கிடையாது, ஏன்னெனில் அது தேவனுடைய வார்த்தை,அவற்றில் தவறு கிடையாது, ஆகவே அந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் நாம் எத்தனையோ முறன்பாடுகளோடு நாம் இருக்கிறோம். இந்த முறன்பாடுகளை கற்றுகொடுத்து யார்? தான் என்று அதிகார கையில் வைத்துஇருக்கும் கிறிஸ்த்துவ சபைத்தலைவர்கள்.
வேதம் சொல்லிதருகிறது: நாம் எல்லாரும் ஓரே சரிரம், கிறிஸ்த்து தலையாய் இருக்கிறார்.
ஒரே சரிரம்: இந்த சரிரம் எலும்புகள், தசைகள், நரம்புகள், உடல் உறுப்புக்கள், இரசாயணம், ஆகியவைகளின் கூட்டு பொருள் ஆகும்.
சற்று நாம் சிந்திப்போம்: இந்த சரிரத்தில் குழறுபடிகள் உண்டானால் என்னவாகும், அதே போலத்தான் கிறித்துவின் சரிரமும். நம்முடைய சரிரத்தை துண்டு துண்டாக வேட்டிக்கொள்ளமுடியுமா, அப்படி வேட்டிக்கொண்டால் அந்த சரிரம் எப்படி செயல்படும்.
சபையில் ஜாதி, பண்க்காரன், ஏழை, தாழ்நத ஜாதி, உயர்ந்த ஜாதி, வியபாரி, தொழிலாளி, என்று பல்வேறு உறுப்புகளாக உள்ளது. சபை போதகர் தன்னுடைய செய்தில், ஏற்றதாழ்வு, ஜாதி இருக்க்கூடாது என்று சொல்லிவிட்டு. சபையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுடை வீட்டுக்கு செல்லுவதிகிடையாது, அவர்களோடு உணவு அருந்துவதுகிடையாது, சபைக்குவரும் ஏழை விசுவாசிக்கு உதவுவதுகிடையாது, ஆனால் சபைக்கு பணம் தேவை என்று வந்தால், அவர்களிடத்தில் இயேசு, ஆசீர்வாதம் என்ற வார்த்தையேல்லாம் சொல்லி பண வேட்டை நடத்துவது. சபைக்கு வருகிற மக்களில், சிறுவியபாரம், வீட்டு வேலை, கூலிவேலை, இது போன்று இருக்கும் நண்பர்களிடத்தில் தேவ வார்த்தையைக்கொண்டு மிரட்டி பெற்றுக்கொள்வது. வெள்ளாடைதரித்துக்கொண்டு. தேவ சரிரத்தை துண்டு துண்டாக வைத்துள்ளார்கள்.

இன்று சபைகள் கோட்ப்பாடு, விசுவாச சட்டம், நம்பிக்கை சட்டம், ஞானஸதான சட்டம், உபதேசம் என்னும் பல வகையில் பிரிந்துயுள்ளது, இவற்றின் முலமும் கிறிஸ்த்துவின் சரிரத்தை கை, கால், தலை, உடலின் பாகங்களை (படம் வரைந்து குறிப்பு வரைக) என்பதற்கு இன்ங்க இன்று சபை உள்ளது, தலையில்லாமல். (ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சபை, அந்த பாகத்திற்க்கும் சண்டை, நாங்கதான் கை,கால், வயிறு, விரல், நகம், கண், காது)
எத்தனைபிரிவு அப்பப்பா (சுயாதீனம் என்ற பெயரில் எத்தனை பிரிவுகள், பெந்தகொஸ்தே என்ற பெயரில் எத்தனை பிரிவுகள், முதன்மை சபைகள் என்ற பெயரில் எத்தனை பிரிவுகள்) இப்படி பல்வேறு விதமாய் கிறிஸ்த்துவின் சரிரம் அங்க அங்கமாய் வேட்டி தலையில்லாமல். வேறும் பாதி சரிரம் மட்டும் உள்ளது.
ஐயா எங்கே ஐயா இயேசுவின் தலை: காணவில்லை
உண்மையாக கிறிஸ்த்துவை நேசிக்கும் என்னமிருந்தால் ஏன் ஐக்கிய குறைபாடு?

16/05/2015

Abundant life Center greet you in the name of Christ
John 10: 1- 18 == "I am the good shepherd"
Christian life is a very special trip. Based on this journey of faith in Jesus Christ by following a route that passes.
1) Who is the good shepherd? - What is the shepherd's mission? Or what characteristics?
# Shepherd will come through the door => shepherd has the key to the door of Tampere, where his sheep assumes he has full authority. When he comes through gate goats do not fear. they know who is the shepherd.
1. Name of the sheep know him.
@. be familiar with the voice of the shepherd and the sheep.
@. calls telling them to be quiet and follow others. No mess, no fear. (Who knew that the person calling)
2. shepherd Gate: can not go without a shepherd.
3. Life giving himself for his sheep.
4.Watching his sheep
*. During grazing,
*. enough to be in a stable sheep
*. leading in a head
5. good pasture for his sheep understand.
6. gives water.
7. What does not work for wages. (Doing work for the sheep) - Shepherd love his Sheep and giving his life.
My dear friends! In our lives, waiting for us, maintained, leading the cell that person, Jesus Christ, our dear Lord, Telling him that the Bible shepherd, good shepherd that tells him beautifully.
My dear friends! Verse: 1, Our Lord Jesus, he will be coming like a thief, a good friend, we allow him to come and dwell and rule our live........
I may think I am good Christian, Scripture read, i am giving Tith i take participate in all activities in Church going to house all things stock take, we Once can, but dear brother, not him any understanding, accepted, and he has allowed, our Lord, how we adopt? .... .............
We'll meet again ...

பரிபூரண வாழ்வு மையம் உங்களை  கிறிஸ்த்துவின் நாமத்தினால் நல்வாழ்த்துகிறது. யோவான் 10: 1- 18    ==    "நானே நல்ல மேய்ப்பன்...
14/05/2015

பரிபூரண வாழ்வு மையம் உங்களை கிறிஸ்த்துவின் நாமத்தினால் நல்வாழ்த்துகிறது.

யோவான் 10: 1- 18 == "நானே நல்ல மேய்ப்பன்"

கிறிஸ்த்துவ வாழ்க்கையானது மிகவும் விஷேசமான ஒரு பயணம். இந்த பயணமானது விசுவாசத்தின் அடிப்படையாக கொண்டு கிறிஸ்த்து இயேசுவை பின்பற்றி செல்லக்கூடிய ஒரு பாதை.

1) நல்ல மேய்ப்பன் யார்?- மேய்ப்பனுடைய பணி என்ன? அல்லது குணாதிசயங்கள் என்ன?

# மேய்ப்பன் வாசல் வழியாக வருவான் => அவனிடததில் வாச கதவின் சாவி உண்டு, அகவே தன் ஆடுகள் இருக்கும் இடத்திற்கு வருவதற்க்கு அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. அவன் வாசல்வழியாக வரும் போது ஆடுகள் பயப்படாது. அவைகள் தொழுவத்துக்குள் வரும் மேய்ப்பனை அறிந்து உள்ளது.

1. அவனுக்கு ஆடுகளின் பெயர் தெரியும்.
1. ஆடுகளும் மேய்ப்பனுடைய சத்தத்தை நன்கு அறிந்திருக்கும்.
2. அவைகளை பேர் சொல்லி அழைத்தவுடன் அமைதலாக பின்செல்கிறது. குழப்பம் இல்லை, பயம் இல்லை. (அழைக்கும் நபர் யார் என்று தெரியும்)

2. மேய்ப்பனே வாசல்-- மேய்ப்பன் இல்லாமல் தொழுவத்துக்குள் செல்லமுடியாது.
3. தன் ஆடுகளுக்காக தன் ஊயிரையே தருகிறான்.
4. தன் ஆடுகளை காவல்காக்கிறான்

1. மேய்ச்சலின் போது,
2. ஆடுகள் தொழுவத்தில் இருக்கும் போதும்
3. வெளியே நடத்திச்செல்லும் போதும்

5. தன் ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சலைக் காட்டுகிறான்.
6. தண்ணீர் கொடுக்கிறான்.
7. கூலிக்கு வேலை செய்யாதவன்.(ஆடுகளுக்காக வேலை செய்கிறவன்)- மேய்ப்பன் ஆடுகளை மிகவும் நேசிக்கிறான்- தன் ஜீவனையே கொடுக்கும் வரைக்கும்.

என் அருமையான நண்பர்களே! நம்முடைய வாழ்வில், நம்மை காத்து, பராமரித்து, வழிநடத்தி செல்லக்கூடிய நபர், நம் அருமை நாதர் இயேசு கிறிஸ்த்து., அவரை வேதாகமம் மேய்ப்பன் என்று சொல்லாமல், நல்ல மேய்ப்பன் என்று அவரை அழகாக சொல்லுகிறது.

என் அருமை நண்பர்களே! வசனம்:1, நம்முடைய ஆண்டவர் இயேசு நம்முடைய வாழ்வில் ஐயக்கியம் கொள்ள அவர் திருடனை போல வாரமல், ஒரு நல்ல நண்பணாக, நம்முடைய அனுமதியோடு வர பிரயாசப்படுகிறார். அவரை எவ்வாரு ஏற்றுக்கொள்ளபோகிறோம்.?............

ஒரு வேலை நாம் நினைக்கலாம் நான் கிறிஸ்த்தவன், வேதத்தை வாசிக்கிறேன், தசம் பாகம் கொடுக்கிறேன், தவராமல் ஆலத்திற்க்கு செல்கிறேன், ஆலயத்தின் எல்லா காரியத்திலும் பங்கு கொள்கிறேன், நாம் எதைவேண்டுமானலும் செய்யலாம், ஆனால் அருமை சகோதரனே நாம் இயேசுவை எவ்வகை புரிதலோடு ஏற்றுக்கொண்டு, அவருக்கு அனுமதி கொடுத்து, நம்முடைய இரட்சகராக எப்படி ஏற்றுக்கொண்டோம்?.................

மீண்டும் சந்திப்போம்...

22/04/2015

I than God for His Faithfulness, We ( Devan & DALE & Arun) are able to initiate the Ministry Called Abundant Life Center in humble level. Our Core idea Is to edify the Christians to be witness for the Body of Christ. Now days unhealthy teaching's and training's are penetrating among the Christians. So we come out with Scripture " If you Know the TRUTH; The TRUTH will set you FREE". Satan's trying to dividing and diverting from Truth. Because of that we are not able to grow from 2.5%, even though we received the Gospel In 1'st Century 54 AD by Apostle of Thomas, we are not grow in meaningfully. So ALC play the role to Teach and Train the Body of Christ to be a Witness among World. It's time for us to think and to do action. God has given us the Higher commission for every Christian to share the Good news of Peace. Still we are focusing in differently, we are going to hills, mountain and village, but not in City, Urban,educated. Brother Paul says: "I preach Only One Gospel" There is no other Gospel in the WORLD Except JESUS CHRIST, But what are we preaching every day about in the name of Gospel. Think Brothers and Sisters. Do some work based on Scripture.

Address

9/5 2nd Floor, Vellala Street, Ayanavaram
Chennai
600023

Alerts

Be the first to know and let us send you an email when Abundant Life Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Abundant Life Center:

Share

Category