10/07/2026
யோகியும் .... போகியும்"....
🌱🌱ஆரியன்காவு திருத்தலம்– கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஒரு ஆன்மிகப் பயணம்...🌱🌱
❔ கேள்வி 6 :
ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தா ஐயன் கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்கோலத்தை விவரிக்க வேண்டுகிறேன்.
பதில்:–👉
ஆரியன்காவில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, கேரள தாந்திரீக மரபின் "தந்திர சமுச்சயம்" ஆகமப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, "மதகஜ வாகன ரூபத்தில்" காட்சி தருகிறார்.
மதம்பிடித்த யானையை அடக்கி, அதன் மீது வேடர் ரூபத்தில், மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரிய திருக்கோலமே ஒரு மௌன உபதேசம் தான்.
👉 பகவான், மாப்பிள்ளை கோலத்தில் நெற்றியில் திலகமிட்டு, ஞான ஜூவாலையாக ஜொலிக்கும் அடையாளமாக சிரசில் ஜூவாலா கிரீடம் அணிந்து, வலது கரத்தில் மாலையில் மட்டுமே மலரும் நீலோற்ப மலர் ஏந்தி, வலது காலை கீழே வைத்துக் கொண்டும், இடது காலை மடித்து பீடத்தில் வைத்துக் கொண்டு இடுப்பிற்கும் மடித்த காலுக்கும் சேர்த்து "வீராசனம்" எனும் யோகப்பட்டயம் அணிந்து, இடது கரத்தை இடது காலின் மேல் வைத்து கொண்டு, அந்தக் கரத்தால் தனது திருவடியை காட்டி, என்னிடம் சம்பூர்ண சரணாகதி அடைந்தவர்களுக்கு எப்போதும் மனநிறைவும், நிம்மதியும் பேரானந்தத்தையும் வழங்குவேன் என்ற ரூபத்தில் காட்சி தருகிறார்.
அவருக்கு இடப்பாகத்தில் மணப் பெண் அலங்காரத்தில், சர்வ லட்சணங்களுடன் வலது கரத்தில் கதம்பவன மலர் செண்டு ஏந்தி, எழில் பிரகாசம் பொங்கக் காட்சியளிக்கிறார்.
பகவானின் வலப்புரத்தில், எம்பெருமான் சிவபெருமான் அழகு சிலா ரூபத்தில் காட்சி தருகிறார்.
–––
❔கேள்வி:–7 ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தாவுக்கும் சபரிமலை ஶ்ரீ ஐயப்பனுக்கும், இடையே உள்ள தத்துவ ஒப்பீடு, போக நிலை, யோக நிலை பற்றிய தத்துவ நிலை , இரு நிலைகளுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் இரு நிலைகளுக்குமான கல்யாண குணங்களை அறிய விரும்புகிறேன்.
பதில்:–👉 ஆரியன்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆகிய இரு மூர்த்திகளும் ஒருவரே என்றாலும், அவர்கள் வீற்றிருக்கும் கோலமும், தத்துவமும், வழிபாட்டு முறைகளும் முற்றிலும் மாறுபட்டவை.
"ஆரியன்காவு சாஸ்தாவும் சபரிமலை ஐயப்பனும்"
ஓர் ஆன்மீக தத்துவ ஒப்பீடு செய்தால், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சாஸ்தா திருத்தலங்களில், ஆரியன்காவும் சபரிமலையும் மிக முக்கியமானவை.
ஒரே பரம்பொருள் இரு வேறு நிலைகளில் நின்று பக்தர்களுக்கு எப்படி அருள் பாலிக்கிறது என்பதை உணர்த்தும் உன்னத தத்துவக் களஞ்சியம் இது.
👉 ஆரியன்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா 'மாப்பிள்ளை' கோலம் (போக
நிலை)
ஆரியன்காவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, கேரள தாந்திரீக மரபின் "தந்திர சமுச்சயம்" ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மதகஜ வாகன ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதம் பிடித்த
யானையை அடக்கி, அதன் மீது
வேடர் ரூபத்தில், மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரிய திருக்கோலமே ஒரு மௌன உபதேசம் தான்.
👉 அலங்காரமும் தத்துவமும்.
• கோலம்: பகவான் மாப்பிள்ளை கோலத்தில் நெற்றியில் திலகமிட்டு, ஞான ஜூவாலையாக ஜொலிக்கும் ஜூவாலா கிரீடத்தை சிரசில் அணிந்து பூரணமாக காட்சியளிக்கிறார்.
• அமர்ந்த நிலை: வலது காலை கீழே தாழ்த்தி வைத்துக் கொண்டும், இடது காலை மடித்து பீடத்தில் வைத்துக் கொண்டு இடுப்பிற்கும் மடித்த காலுக்கும் சேர்த்து "வீராசனம்" எனும் யோகபட்டயம் அணிந்துள்ளார்.
• முத்திரைகள்: வலது கரத்தில் மாலையில் மட்டுமே மலரும் நீலோற்பல (நீலோர்ப்ப) மலரை ஏந்தியுள்ளார். இடது கரத்தை இடது காலின் மேல் வைத்து, அந்தக் கரத்தால் தனது திருவடியைக் காட்டி, "என்னிடம் சம்பூர்ண சரணாகதி அடைந்தவர்களுக்கு எப்போதும் மனநிறைவும் நிம்மதியும் பேரானந்தமும் வழங்குவேன்" என்ற ஞான ஸ்ரூபமாக "தத்துவமஸி" யை வலியுறுத்துவனாகக் காட்சி தருகிறார்.
• பரிவாரங்கள்: அவருக்கு இடப்பாகத்தில் மணப் பெண் அலங்காரத்தில், சர்வ லட்சணங்களுடன் வலது கரத்தில் கதம்பவன மலர் செண்டு ஏந்தி புஷ்கலா தேவி (சௌராஷ்டிர குல தேவி) கொஞ்சும் எழில் பொங்க காட்சியளிக்கிறார்.
• பகவானின் வலது புரத்தில், எம்பெருமான் சிவபெருமான் அழகிய சிலா ரூபத்தில் காட்சி தருகிறார்.
• இங்கு சாஸ்தா கிரகஸ்தனாக , போக மூர்த்தியாக விளங்குகிறார்.
👉 சபரிமலை ஸ்ரீ ஐயப்பன். 'நைஷ்டிக பிரம்மச்சாரி' கோலம் (யோக நிலை)
சபரிமலையில் வீற்றிருக்கும் பகவான், ஆரியன்காவுக்கு முற்றிலும் மாறாக, உலக பந்தங்களை அறுத்த "நைஷ்டிக பிரம்மச்சாரி" (முழுமையான துறவற) கோலத்தில் யோகியாகக் காட்சியளிக்கிறார்.
👉 பகவானின் ரூபமும் தத்துவமும்.
• சின்முத்திரை: சபரிமலை ஐயப்பன் தனது வலது கரத்தில் 'சின்முத்திரை' தாங்கி நிற்கிறார். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைந்த இந்த முத்திரை, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று (தத்துவமஸி) என்பதை மௌனமாக உபதேசிக்கிறது.
• யோகப் பட்டம்: இரண்டு கால்களையும் மடித்து, குத்துக்காலிட்டு அமர்ந்து, இடுப்பையும் கால்களையும் சேர்த்து யோகப்பட்டம் (யோக தாரணைப் பட்டி) தரித்து, பிரபஞ்ச சக்தியைத் தன்னுள் ஒடுக்கி தவம் செய்யும் யோக ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
• சரண் தத்துவம்: உலக ஆசைகளைத் துறந்து, இருமுடி சுமந்து, பதினெட்டு படிகள் ஏறி வரும் பக்தர்களுக்குத் தன்னையே ஞானமாக அள்ளித் தரும் "தத்துவமஸி" தத்ரூபனாக காட்சி தருகிறார்.
👉 சபரிமலையானின் கல்யாண குணங்கள்.
• சமபாவனை (சமத்துவம்): சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளின்றி "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று சரணடையும் அனைத்து பக்தர்களையும் 'மணிகண்டனாகவே' (சமமாக) பார்க்கும் உன்னத குணம்.
• கருணை வாரிதி: விரதமிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் கர்ம வினைகளைத் தீர்த்து, அவர்களுக்கு மன அமைதியையும், ஆன்ம ஞானத்தையும் வழங்குபவர்.
• சரணாகதி வத்சலன்: "அஹம் பிரம்மாஸ்மி" மற்றும் "தத்துவமஸி" (நீயே அதுவாக இருக்கிறாய்) என்ற மஹாவாக்கியத்தின் படி, தன்னை நாடி வரும் பக்தனைத் தன்னுள்ளும் , தன்னை அவனுள்ளும், இரண்டற்று, நாம் ஒன்றென கணநேரமாவது உணர வைத்து கலந்து விடும் ஞானாசிரியர்.
👉ஆரியன்காவு என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே லௌகீகக் கடமைகளைச் செவ்வனே செய்து இறைவனை அடையலாம் என்ற "கர்ம யோகத்தை" உணர்த்துகிறது.
சபரிமலை என்பது உலக ஆசைகளைத் துறந்து, புலன்களை அடக்கி இறைவனுடன் கலக்கலாம் என்ற "ஞான யோகத்தை" உணர்த்துகிறது.
கோலங்கள் வேறானாலும், இரு தலங்களிலும் அருள்மழை பொழியும் பரம்பொருள் ஒன்றே!
சுவாமியே சரணம் ஐயப்பா!
–––
❔கேள்வி 8 >தொடரும்:...
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷