29/08/2024
18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
1 யோவான் 2:18
20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
1 யோவான் 2:20
26 உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
1 யோவான் 2:26
27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
1 யோவான் 2:27
மேலே குறிப்பிட்ட சில வசனங்கள் அடிப்படையில் பார்த்தால் அபிஷேகம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த கடைசி நாட்களில் நாம் பெறும் அபிஷேகம் மட்டுமே நம்மை போதித்து வழி நடத்தும். எனவே தேவனின் அபிஷேகத்தை பெற்று கொள்ளுங்கள்.