அகத்தியர் தியான மையம்

  • Home
  • India
  • Chennai
  • அகத்தியர் தியான மையம்

அகத்தியர் தியான மையம் A Non Profit organisation to construct a Pyramid shaped temple for the Great Sage MAHAN AGATHIYAR at Chennai - Old Mahabalipuram Road .

🙏🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🙏*🌺ஓம் முருகன் துணை🌺**🌺ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !!!🌺**_🌼✨அழைத்தால் அருள்புரியும் மஹா குரு அகத்தியர் ✨🌼_...
24/07/2017

🙏🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🙏

*🌺ஓம் முருகன் துணை🌺*
*🌺ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !!!🌺*

*_🌼✨அழைத்தால் அருள்புரியும் மஹா குரு அகத்தியர் ✨🌼_*

ஆதி பரமகுரு சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் *ஸ்ரீ முருகப்பெருமானின்* பரிபூரண அருளாசியால், அவரின் தலைமை சீடனும் நவகோடி சித்தர்களுக்கு தலைவருமான *மஹா குரு ஸ்ரீ அகத்தியர் பெருமான்* 12 அடி உயர திருவுருவம் தாங்கி அருட்காட்சி தந்து, இப்பூவுலக மக்களின் குருவாக வந்து மரணமில்லாப் பெருவாழ்வை தந்து அருள் பாலிக்க உள்ளார்...

*🌼 அகத்தியர் அருள்வாக்கு :*

" மனிதர்கள் தவறு செய்யலாம், கோவப்படலாம், ஆத்திரப்படலாம், விட்டு கொடுக்காமல் போகலாம், வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில், நம்பிக்கை இல்லாமல் போகலாம், தவறு இல்லை. ஆனால், அதையும் மீறி *"சிக்கெனப் பிடித்தேன்"* என்று இறைவனை நோக்கி எவன் ஒருவன் "சிக்கெனப் பிடிக்கிறானோ" அவனுக்கு அகத்தியன் வழிகாட்டுவான். இப்பொழுது சித்தர்கள் காலமடா ”

*🌼 திறப்பு விழா :*
மஹா குரு அகத்தியர் பெருமான் பிறந்த *மார்கழி* மாதம் , *ஆயில்யம்* நட்சத்திரம் தினம் அன்று நடைபெற உள்ள குரு பூஜையில் 12 அடி உயர திருவுருவ சிலை திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சிலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு, மாமல்லபுரத்தில் மணிமேகலை சிற்ப கலைக்கூடம் ஸ்தபதி ராமசந்திரன் கைவண்ணத்தில் சிறப்பாக உருவாகிறது..

*🌼 சென்னையில் சித்தர்கள் தரிசனம் :*
நம் குருநாதர் அகத்தியரின் அருள்வாக்கின்படி, ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் 108 மூலிகை அபிஷேகமும் , 246 சித்தர்கள் போற்றி பாராயணமும், மகா யாக பூஜையும் நடைபெற உள்ளது...
இந்த *246 சித்தர்களில்* யாராவது ஒரு சித்தர் தான் தங்களுக்கு குருவாக வந்து அருவுருவமாக காட்சி தந்து, இம்மையிலும் மறுமையிலும் தங்களை சுற்றி ஒரு கவசமாக நின்று மரணமில்லா பெருவாழ்வு தந்து அருள் புரிவார்கள்..
*🌷இது சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !🌷*

*_🌷சித்தர்கள் தரிசனம் பெற வாரீர் !!! 🌷_*

*🌼 திருவடி பூஜை:*
பக்தர்கள் அனைவரும் தங்கள் பொற்கரங்களால் பெருமானின் திருவடிகளில் மூலிகை அபிஷேகமும், மலர்களும் செலுத்தலாம்..
*_🌷அக மகிழ்கின்றேன், அவர் அருளாலே அவர் தாள் வணங்கி !!!_ 🌷*

*🌼 பெளர்ணமி தியான பிரார்த்தனை:*
பவுர்ணமிதோறும் தியானமும், 108 மூலிகை வேள்வியும் செய்து மக்களின் நோய் என்னும் பெரும் பிணியை தீர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் பரமகுருவான முருகப்பெருமானிடமும், சித்தர்களிடமும், நம் குரு பீடம் சார்பில் பிரார்த்தனைகள் நடைபெறும்.

*🌼 நோய் தீர்க்கும் குரு அகத்தியர் :*
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கெல்லாம் மறுவாழ்வு தரும் தலமாகவே விளங்கப்போகிறது அபூர்வ மூலிகைகள் நிறைந்த *_அகத்தியர் வனம்._*

புற்று நோய், தீராத சக்கரை வியாதி, குழந்தை இன்மை, இருதய அடைப்பு போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு குரு அருளாலும், திரு அருளாலும் கிடைத்த சஞ்சீவி மூலிகைகளை பயன்படுத்தி வெறும் மூன்றே மாதங்களில் முழுமையான தீர்வுகள் இங்கு பெறலாம்...

சரியான முறையில் கடைபிடித்தால் எந்த ஒரு கொடிய நோய்களையும் சரி செய்துவிடலாம் ..
*_🌷மக்கள் பணியே மகேசன் பணி !!! 🌷_*

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதனின் ஆசையும், வேகமும் இயற்கை மீதான புரிதல்களைத் தடுத்துவிட, வேறு எதையோ நோக்கி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்.. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்!
அத்தகைய மூலிகைகளை சித்தர்கள் முறைப்படி மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கி, தீரா நோய்கள் தீர்த்து . அனைவரும் நலமோடு வாழவுமே... *'அகத்தியர் மூலிகை வனம்’* இங்கே அமைய இருக்கிறது.

சித்தர்கள் உலாவரும் அபூர்வமலையாக திகழும் சதுரகிரி மலையில் இன்றும் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருகின்றனர். சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அந்த மூலிகைகளின் ஆற்றல் மிக மிக சக்திவாய்ந்தவையாக திகழ்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளாகிய பொதிகை மலை, சதுரகிரி மலை, கொல்லிமலை, பருவத மலை, கஞ்ச மலை, வெள்ளியங்கிரி மலை, சுருளிமலை, ஜவ்வாதுமலை போன்ற சித்தர்களின் அதிர்வலைகள் நிறைந்த மலைகளில் இருந்து அபூர்வ மூலிகைகளை இனம் கண்டு அவைகளை சேகரித்து இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி அகத்தியர் மூலிகை வனத்தில் மூலிகை கன்றுகள் மற்றும் மரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

*🌼 உணவே மருந்து; மருந்தே உணவு :*
இயற்கை உணவில் உடல், உள்ளம் ஆக்க வளர்ச்சி பெறுகின்றன. *“இயற்கையே இறைவன். இயற்கையை ஓம்புதலே இறைவழிபாடு”* என்ற கோட்பாடுகளுக்கு இணங்க, உயிருள்ள இயற்கை உணவுகளான சத்துள்ள பிஞ்சுகள், காய்கள், கனிகள், இலைகள், சருகுகள், கீரைகள், கிழங்குகள், தண்டுகள், கொட்டைகள், பருப்புகள், வேர்கள், விழுதுகள், பட்டைகள், தோள்கள், முளைவிட்ட தானியங்கள், இவற்றின் சாறுகள், பால்கள், பொடிகள் போன்றவற்றை மட்டுமே தேர்தெடுத்து ஓவ்வொருவரும் உணவாக உட்கொள்வதன் மூலம், நோய் நொடி, தளர்ச்சி ஏற்படாமல் வாழலாம் என நன்று கண்டறிந்து அவை பற்றிய கருத்துகளை மக்களிடையே பல்லாண்டு காலமாக நம் சித்தர் பெருமக்கள் பாடல்கள் வரியில் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு நம் குரு பீடத்தில் சமைக்காத இயற்கை உணவுகள், முளைவிட்ட தானியங்கள், முளைவிட்ட பயிறு வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், போன்ற இயற்கை உணவுகள் பரிமாறப்பட்டு மக்கள் எல்லோரும் ஆரோக்கியம் பெற்று நீண்ட நாள் வாழ வகை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது..
*_🌷வளர்வோம் இயற்கை உணவில்! 🌷_*
*_🌷வாழ்வோம் இயற்கை வாழ்வில்!! 🌷_*
*_🌷அடைவோம் மரணமிலாப் பெருவாழ்வை!!! 🌷_*

*🌼 உணவே மருந்து ! வாழ்க்கைமுறையே அதற்கு தீர்வு :*

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள், நம் தவறான வாழ்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும், மருத்துவமுறைகளாலும் நிரந்தரமாக தீர்வு தர இயலாது !!!
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.
ஆதலால் மாதம் ஒருமுறை இரண்டாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் *"இயற்கையோடு இணைந்த வாழ்வு"* என்ற கோட்பாட்டின்படி *_இயற்கை மருத்துவம், யோகா, பிரமிட் தியானம் மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சிகளும், பஞ்ச பூதச் குளியல் (மண்,வாழையிலை,சூரிய ஒளி,நீராவி & மூலிகை) சிகிச்சைகளும், மூலிகை மருத்துவம். மூலிகை தேநீர், சிறு தானிய உணவுகளும்,_* அதை பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளும் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது...
*_🌷உடல் நோயற்று இருப்பது, முதல் ஆனந்தம் !_*

*_🌷மனம் கவலையற்று இருப்பது, இரண்டாம் ஆனந்தம்!!_*

*_🌷பிற உயிர்களுக்கு உதவியாக வாழ்வது, முடிவிலா ஆனந்தம்!!!_*

*🌼 திருப்பணி விபரம்:*

🌷12 அடி உயர திருவுருவ சிலை :

🌷8 கால் மண்டபம் அமைக்கும் பணி :

🌷மதில் சுவர் அமைக்கும் பணி :

🌷500 க்கும் மேற்பட்ட மூலிகைக் கன்றுகள் -சேகரித்து நடும் பணி :

🌷தியான மண்டபம் அமைக்கும் பணி :

🌷இயற்கை குடில்கள் அமைக்கும் பணி :

🌷இயற்கை உணவு தயார் செய்ய
மண்பாண்டங்கள் மற்றும் பாத்திரங்கள் :

🌷சமையல் கூடம் அமைக்கும் பணி :

🌷தங்கும் வசதிகள் அமைக்கும் பணி :

🌷அன்னதான மண்டபம் அமைக்கும் பணி :

ஆகிய திருப்பணிகள் நடைபெற இருப்பதால் பக்தகோடிகளும், தன வந்தர்களும், சிவநேய தொண்டர்களும், பொது மக்களும் பொருளாகவோ, பணமாகவோ (அ) சரீர உபகாரமாகவோ தங்களால் இயன்ற உதவி செய்து ஆலயத் திருப்பணியில் பங்கு பெற்று, தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் இறைவனின் திருவடிக்கமலத்திலே நீங்காத இடத்தை அடைந்து அகமும் புறமும் பசுமை பெற தங்கள் திருவடி பணிந்து அழைக்கின்றோம்.

திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை காசோலையாக அல்லது வரைவு ஓலையாக ( CHEQUE / DD ) நீங்கள் செலுத்தலாம். ( IN FAVOUR OF " *_DIVINE WISDOM FOUNDATION_* ") .. அல்லது கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

*🌼 DIVINE WISDOM FOUNDATION (டிரஸ்ட் ) பதிவு எண் 363/2014,*
*_🌷வங்கி கணக்கு :_🌷*
*_Name : DIVINE WISDOM FOUNDATION_*
*_Account No : 34971702990_*
*_Account Type : CURRENT_*
*_Bank : STATE BANK OF INDIA_*
*_Branch : RANGARAJAPURAM_*
*IFSC Code : SBIN0011605*

பொருளாகவோ (அ) சரீர உபகாரமாகவோ தங்களால் இயன்ற உதவி செய்து திருப்பணியில் பங்கு பெற தொடர்பு கொள்ளவும்.

*குரு அகத்தியர் மூலிகை வனம்:*
*_மானாம்பதி_ _காஞ்சிபுரம் - 603105,_ *தமிழ்நாடு , *இந்தியா*
*Mobile: +91 - 9514567899, +91 - 9500600562.*
*E.Mail: [email protected]*

குரு அகத்தியரின் மரபினைப் பின்பற்றி அவரை ஞானகுருவாக ஏற்று குருவருள் நெறியினை வழிநடத்திடும் எல்லாம் வல்ல ஆதி பரமகுரு ஸ்ரீ முருகப்பெருமானின் பரிபூரண அருளாசியால் நடைபெறவிருக்கும் தன்னலம் கருதா இப்புனிதசேவை வெற்றி பெற அனைவரும் உழைத்திடுவோம், குருவருள் பெற்றிடுவோம்...

*_🌺 ஞானிகளின் திருவடியை பூஜிப்போம்._* *_ஞானம் பெற்று_*
*_இன்புற்று வாழ்வோம்!!!_ 🌺*

*_🌷வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி_🌷*

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏

கஷ்டத்திலும்  #நேர்மையாக இரு.நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றவும்  #செய்யாதே.உன் தெய்வ நம்பிக்கை  #உன்னை கைவிடாது.
27/10/2016

கஷ்டத்திலும் #நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப் பட்டாலும்,
பிறரை ஏமாற்றவும்
#செய்யாதே.
உன் தெய்வ நம்பிக்கை
#உன்னை கைவிடாது.

சென்னையில் இருக்கும் அகத்தியர் ஆலயத்தின் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் ...
13/07/2016

சென்னையில் இருக்கும் அகத்தியர் ஆலயத்தின் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் வங்கி கணக்கில் அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

DIVINE WISDOM FOUNDATION (டிரஸ்ட் ) பதிவு எண் 363/2014, பாரத ஸ்டேட் வங்கி - சென்னை, தமிழ்நாடு.

வங்கி கணக்கு:

Name : DIVINE WISDOM FOUNDATION
ACCOUNT NO : 34971702990
ACCOUNT Type : Current
Bank : STATE BANK OF INDIA
Address : RANGARAJAPURAM, KODAMBAKKAM - 600024
State : TAMIL NADU
City/Town : CHENNAI
IFSC Code : SBIN0011605
MICR Code : 600002141
Branch Code : 011605
Branch Name : RANGARAJAPURAM


ஆன்லைன் முகவரி :

https://www.payumoney.com/webfronts/index/AGATHIYAR-ASHRAM.

அல்லது கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

அகத்தியர் தியான மையம் :
அகரம் கிராமம் , மானாம்பதி தாலுகா ,
காஞ்சிபுரம் - 603105, தமிழ்நாடு , இந்தியா.
+91-9514567899, +91-9500600562.

Gift a tree or Adopt a tree !The donor can gift a tree / herbs  on behalf of a relative or a deceased person.Our Trust w...
12/07/2016

Gift a tree or Adopt a tree !

The donor can gift a tree / herbs on behalf of a relative or a deceased person.

Our Trust wants to plant herbal / medicinal trees and herbs during this rainy season from July to Oct 2016.
Costs incurred in planting trees is saplings cost, digging helper costs, mud buying, digging equipment, transportation of saplings if in huge number, transportation from buying plants from distant places, etc.

So Donors and Volunteers who are willing to donate for this herbal mission are most welcome....

Kindly Contribute towards the construction of Siddhar temple and seek the blessings from the Siddhas. We invite you to a...
12/07/2016

Kindly Contribute towards the construction of Siddhar temple and seek the blessings from the Siddhas. We invite you to accept this unique spiritual opportunity for participating in the construction of this glorious temple. You can donate for 1 Sq feet construction or even a Single piece of Bricks from your hands..

We have found this new place with Siddhar’s blessings. Our Primary Goal is to spread the teachings of Siddhars and make ...
12/07/2016

We have found this new place with Siddhar’s blessings. Our Primary Goal is to spread the teachings of Siddhars and make this a beautiful permanent place for the Great Sages, in the heart of chennai.

This new location is located at the intersection of Tiruporur & Tirukalukundram.
The landlord has given us a limited time buying option with lease.The total area is 4 Acres. We will be allocating 10,000 sq ft for the main prayer hall and meditation and the rest for Herbal & Organic Garden to cure all Dread Diseases like CANCER at free of cost as a service to Humanity......

We need funds to complete this holy mission. We therefore appeal to all Philanthropist world-wide to contribute liberally and help us to build the holy shrine for our beloved Mahan as early as possible..

For the act of your kindness, we shall remain ever grateful to you.May all of you be happy, peaceful, and liberated. May your highest wholesome aspirations be fulfilled and may all beings partake in the merits of this work.

“As technology and modern medicines evolve, we have forgotten the plants that contributed to our health. The prime compo...
12/07/2016

“As technology and modern medicines evolve, we have forgotten the plants that contributed to our health. The prime component of morphine, the pain killer, comes from khus khus seeds. A lot of medicines, including the ones available to treat heart attacks, have vital ingredients derived from plants. A visit to the herbal garden will help people see some of these plants that contribute to medical breakthroughs,”
Everyday, in rural areas around the world, people use herbs to help heal the sick, keep the healthy strong, and feed their family and friends. But, they may have never written down this traditional knowledge. Agathiyar Herbal Farms was started to protect their knowledge, keeping it safe for generations to come.

Address

Agaram Manambathi, Kanchipuram
Chennai
603105

Alerts

Be the first to know and let us send you an email when அகத்தியர் தியான மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அகத்தியர் தியான மையம்:

Share