தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

  • Home
  • India
  • Chennai
  • தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சத்திய மார்க்கமான இஸ்லாத்தை, அதன் தூ?

 #அத்ல்_குழுவின்_கடிதத்துக்கு_அழகிய_அழைப்பு! #அரபு இலக்கணத்தை அறைகுறையாக அறிந்த சிலர் குர்ஆனுடன் விளையாடி வருகின்றனர்.  ...
27/07/2023

#அத்ல்_குழுவின்_கடிதத்துக்கு_அழகிய_அழைப்பு!

#அரபு இலக்கணத்தை அறைகுறையாக அறிந்த சிலர் குர்ஆனுடன் விளையாடி வருகின்றனர்.

#அவர்களின் அறியாமையை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைப்பதற்காக அவர்கள் எழுதிய கடிதத்துக்கு நாம் அளித்த பதிலை வெளியிடுகிறோம்.

#இன்ஷாஅல்லாஹ் நேரடியான கலந்துரையாடல் மூலம் இதற்கு முடிவு கட்டப்படும்.
அவர்களின் கடிதமும் நமது பதிலும் வெளியிடப்படுகிறது.

#சேப்பாக்கம் அன்சாரி
தலைமை சார்பில் கலந்துரையாடல் மற்றும் விவாத ஏற்பாட்டுப் பொறுப்பாளர்.

18/02/2023 #பத்திரிகை_அறிக்கை #முஸ்லிம்கள்_உயிருடன்_எரித்துக்_கொலை! #பஜ்ரங்தள்_பயங்கரவாதிகள்_வெறிச்செயல்!!*தேசிய தவ்ஹீத்...
17/02/2023

18/02/2023
#பத்திரிகை_அறிக்கை

#முஸ்லிம்கள்_உயிருடன்_எரித்துக்_கொலை!

#பஜ்ரங்தள்_பயங்கரவாதிகள்_வெறிச்செயல்!!

*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!*

*NTF பொதுச்செயலாளர் அறிக்கை:*

ஹரியானா மாநில எல்லையை ஒட்டியுள்ள, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கட்மீகா கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத் (35 வயது) , நஸீர் (25 வயது) ஆகிய இரு முஸ்லிம் இளைஞர்களும் கடந்த புதன்கிழமை 15/2/23 அன்று பொலிரோ வாகனத்தில் பயணம் செய்யும் வழியில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, மோனு மனேசர் என்பவனுடைய தலைமையில் திடீரென அங்கே வந்த 8-10 பேர் அடங்கிய பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பல் அவ்விரு இளைஞர்களையும் காரணமின்றி கடுமையாகத் தாக்கி, அந்த இளைஞர்கள் வந்த வாகனத்திலேயே கடத்திச் சென்று, ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் பர்வாஸ் கிராமத்திற்கு கொண்டு சென்று காருக்குள்ளேயே வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் வியாழக்கிழமை 16/2/23 அன்று காருக்குள் எரிந்து கருகிய நிலையில் அவர்களுடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலைக் கும்பலின் தலைவனான மோனு மனேசர் என்பவன் ஹரியானா மாநில பஜ்ரங்தள பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், பசு பாதுகாவலன் என்ற போர்வையில் இவன் ஏற்கனவே ஏராளமான முஸ்லிம்களைக் கொன்றொழித்த கொடுங் கொலைக் குற்றவாளி என்றும் தெரிய வருகிறது.

மேலும், முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று அப்பட்டமாக மதவெறியையும், வன்முறையையும் தூண்டக் கூடிய பதிவுகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருபவன்.

இத்தகைய இந்துத்துவ பயங்கரவாதி மீது இதுவரை பாஜக ஆளும் ஹரியானா மாநில காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவனை ஊக்கப்படுத்தும் விதமாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜக அரசுகள் தன்னைக் காப்பாற்றும் என்ற தைரியத்தில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு முஸ்லிம் இளைஞர்களையும் கடத்தி வந்து எரித்துக் கொலை செய்திருக்கிறான்.

மனிதாபிமானமுள்ள எவரையும் பதைபதைக்க வைக்கும் இந்தக் கொடூரம் நடந்த பிறகும் கூட காவல்துறை
மோனு மனேசர், லோகேஷ் சிங்க்லா, ரிங்கு சைனி, அனில், ஸ்ரீகாந்த் என்ற 5 பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யாமல், பெயரளவுக்கு
IPC 143- சட்ட விரோதமாகக் கூடுதல்,
IPC 365- ஆள் கடத்தல்,
IPC 367- கடும் காயம் விளைவிப்பதற்காக கடத்துதல்,
IPC 368- முறையின்றி தடுத்து வைத்தல்
ஆகிய பிரிவுகளை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விலங்கினங்களின் பெயரால் மனிதாபிமானம் இன்றி முஸ்லிம்களை பகிரங்கமாக கொலை செய்வதும், அதை சமூக ஊடகங்களில் துணிச்சலாக வெளியிடுவதும் தற்போதைய பாசிச பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே வட மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றது.

ஆட்சியாளர்களின் அனுசரணையும், காவல்துறையின் ஆதரவும் இன்றி இதுபோன்ற கொடுஞ்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் துணிவு எவருக்கும் வராது.

எனவே, மதவெறியை ஊதி வளர்க்கும் பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற பச்சைப் படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதிகளின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசையும், காவல்துறையையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவண்,
*ஏ.எஸ்.அலாவுதீன்*
*பொதுச் செயலாளர்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)*

இறைவனின் திருப்பெயரால்...26/12/2022பத்திரிகை அறிக்கைமதுரா ஈத்காஹ் மஸ்ஜிதை சட்டவிரோதமாக அபகரிக்க சங்கிகள் முயற்சி!சட்டத்த...
26/12/2022

இறைவனின் திருப்பெயரால்...

26/12/2022
பத்திரிகை அறிக்கை

மதுரா ஈத்காஹ் மஸ்ஜிதை சட்டவிரோதமாக அபகரிக்க சங்கிகள் முயற்சி!

சட்டத்தை மதிக்காத உ.பி. நீதித்துறை!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

NTF பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை!

சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்தொழித்து, மத வழிபாட்டு உரிமையை பறிப்பதில் இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில், 450 ஆண்டு கால வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. ஏறத்தாழ 70 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்குப் பிறகு, 2019ல் உச்ச நீதிமன்றம் ஒரு அநியாயத் தீர்ப்பின் மூலம், முஸ்லிம்களிடமிருந்து பள்ளிவாசல் இடத்தைப் பிடுங்கி, இந்துத்துவாக்கள் கையில் ஒப்படைத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் கையெழுத்து கூட போடாத தீர்ப்பை வாசித்த, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த தீர்ப்பு பாபரி மஸ்ஜித்-ராமஜென்மபூமி வழக்குக்கு மட்டுமே பொருந்தும். இதே முறையிலான தீர்ப்பு மற்ற மஸ்ஜித் Vs கோயில் விவகாரத்திற்கு பொருந்தாது என்று கூறிய பிறகும், தீர்ப்பெழுதிய பேனா மை காயும் முன்பே, ராம ஜென்ம பூமியை மீட்டுவிட்டோம்; அடுத்து வாரணாசியையும், மதுராவையும் மீட்போம் என ஆர்.எஸ்.எஸ்.பரிவார சங்கிகள் பகிரங்கமாக அறிவித்தார்கள்.

பாபரி மஸ்ஜித் பாணியில் நீதித்துறையை வசப்படுத்தி வாரணாசி கியான்வாபி மஸ்ஜிதும், மதுரா ஈத்கா மஸ்ஜிதும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதை அப்போதே நமக்கு உணர்த்தியது.

முகலாய மன்னர் அவ்ரங்கஜேப்பால், வாரணாசியில் கட்டப்பட்ட கியான்வாபி மஸ்ஜித் இடம் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், மதுராவில் கட்டப்பட்ட ஈத்காஹ் மஸ்ஜித் இடம் கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் இந்துத்துவ பாசிசவாதிகள் நீண்ட காலமாக புரளியை கிளப்பி வந்தார்கள்.

இது சம்பந்தமாக வாரணாசி உரிமையியல் நீதிமன்றம், அலஹாபாத் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல அடுக்கு நீதிமன்றங்களில் மஸ்ஜித் நிர்வாகமும், இந்துத்துவாக்களின் தரப்பும் தொடுத்த பல வழக்குகளில் சட்டத்தின் அடிப்படையிலான சில தீர்ப்புகளும், சட்டத்தை மீறிய பல தீர்ப்புகளும் வந்தன.

1991 மத்திய அரசின் வழிபாட்டுத் தல சிறப்புச் சட்டங்களுக்கு எதிராக - நீதித் துறையின் உத்தரவுப்படி 3 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு பள்ளிவாசலுக்குள் சோதனை நடத்தியது.

அங்கு, சிவலிங்கத்தைக் கண்டுபிடித்ததாக கூறி, இறுதியாக ஒலுச் செய்யும் நீர்த்தடாகம் (ஹவுல்) உள்ள பகுதியை சீல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தால் வாரணாசியில் இன்னமும் பதற்றம் நிலவி வருகிறது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம், இந்து மகா சபைத் தலைவர் ராஜேஷ் சிங் சவுத்ரி என்பவர் ஈத்கா பள்ளிவாசலுக்குள் கிருஷ்ணர் சிலையை நிறுவ முயற்சித்தார்.

உ.பி.மாநில முன்னாள் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மதுராவை விரைவில் கைப்பற்றுவோம் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

அதன் தொடர் நடவடிக்கையாகத்தான், வாரணாசி பாணியில் நேற்று முன்தினம், மதுராவிலுள்ள ஈத்காஹ் மஸ்ஜிதுக்குச் சொந்தம் கொண்டாடி, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர், மதுரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வாரணாசியைப் போலவே, மதுரா நீதிமன்றமும் அம்மனுவை விசாரித்து, 1991 - மதவழிபாட்டுச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு,ஜனவரி 2ந் தேதி தொல்லியல்துறை ஆய்வு நடத்தி, 20ந் தேதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அக்கிரமம் நடந்துள்ளது.

ஜனநாயகத்தை காக்கும் இறுதிப் புகலிடம் நீதித்துறை என்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் தொடர்ந்து பொய்த்துப் போய் வருகிறது.

சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி இந்தியாவில் இல்லை. ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி பாசிசம் தான் கோலோச்சுகிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை அழித்தொழிக்கும் ஆட்சியாக உள்ளது. அதற்கு நீதித்துறையும் உடந்தையாக இருக்கிறது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள, முஸ்லிம்கள் வழிபாட்டுத்தல விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அத்துமீறலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது,

நீதித்துறை பாரபட்சப் போக்கைத் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் முஸ்லிம்கள் மதச் சுதந்திரத்துடன், வழிபாட்டு உரிமையுடன் நிம்மதியாக வாழ, வேறு மாற்று வழி என்ன என்பதை இந்திய முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஐ.நா.மன்றம், OPEC நாடுகள், OIC நாடுகளின் கவனத்திற்காவது இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தரவுகளுடன் இந்திய முஸ்லிம் தலைவர்கள் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

இவண்
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)

15/11/2022
07/11/2022பத்திரிகை அறிக்கை*10% இடஒதுக்கீடு தீர்ப்பு:**பாதிக்கப்போவது பெரும்பான்மை மக்களே!**வகுப்பு வாரி பிரதிநிதித்துவம...
07/11/2022

07/11/2022
பத்திரிகை அறிக்கை

*10% இடஒதுக்கீடு தீர்ப்பு:*
*பாதிக்கப்போவது பெரும்பான்மை மக்களே!*

*வகுப்பு வாரி பிரதிநிதித்துவமே சரியான தீர்வு!*

*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:*

ஒன்றிய பா.ஜ.க. அரசு 2019 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு குறித்த அரசியலமைப்பு சட்டத்தின் 103 வது பிரிவில்
திருத்தம் செய்து, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தச் சட்டம், இட ஒதுக்கீட்டு கோட்பாட்டின் அடிப்படையையே தகர்க்கக் கூடியது; சமூக நீதிக்கு எதிரானது; அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது போன்ற காரணங்களை முன்வைத்து கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அனைத்து மனுக்களையும் ஒருங்கிணைத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி மற்றும் J.B.பர்திவாலா ஆகிய 3 நீதிபதிகள் உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டம் செல்லும் எனவும், நீதிபதி ரவீந்திர பட் இந்தச் சட்டம் செல்லாது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் முரண்பட்ட தீர்ப்பளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்பை ஆதரித்துள்ளார்.

இன்று ஓய்வு பெறப் போகும் தலைமை நீதிபதி தனது இறுதி வழக்கில் அரசியல் சட்ட விழுமியத்தின் பக்கமும், சமூக நீதியின் பக்கமும் நின்று தனது நேர்மையை நிரூபித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

3 நீதிபதிகள் ஒத்த கருத்தில் தீர்ப்பளித்துள்ளதால், 103 வது விதியில் ஒன்றிய அரசு செய்த திருத்தத்தின்படி உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற எதிர் கருத்து பரவலாக சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படைக் காரணமே சமத்துவமும் சமூக நீதியும் தான். சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே இந்தத் தீர்ப்புச் சிதைத்து விட்டது.

இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோளாக பொருளாதாரத்தையும் முக்கிய காரணியாக எடுத்துக் கொள்வதாக இருந்தால், உயர் சாதியினரை விட ஏனைய அனைத்துப் பிரிவினரிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களும் தான் அதிகம்.

நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை பா.ஜ.க.வுக்கு இருந்திருக்குமேயானால், வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு இருக்குமேயானால், பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

உயர் சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்ற சட்டம், முழுக்க முழுக்க பா.ஜ.க. தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக நிறைவேற்றிய சட்டம். ஏற்கனவே நாட்டின் அனைத்துத் துறைகளும் உயர் சாதியினரால் கபளீகரம் செய்யப்பட்டு காவி மயமாகி வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மேலும் அவர்களின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் பொதுப் பிரிவில் போட்டியிடும் மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

மண்டல் கமிஷன் தொடர்பான இந்திரா சஹானி வழக்கில், அன்றைய தலைமை நீதிபதி M.N. வெங்கடாசலைய்யா தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 1992 நவம்பர் 19 தீர்ப்பில், இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது; இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் கூடாது என்ற தீர்ப்பை பா.ஜ.க. அரசும், இன்று தீர்ப்பு சொன்ன 3 நீதிபதிகளும் புறக்கணித்ததையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. அந்தத் தீர்ப்பும் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் 4 தூண்களில் இரண்டு தூண்களால் சமூக நீதி, சமத்துவம் சாகடிக்கப்படும் போது அதற்கெதிரான போராட்டம் வலிமை பெற வேண்டும். இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படப் போவது நிச்சயமாக SC / ST / BC / MBC / OBC பிரிவினர் தான்.

தங்களின் எதிர்காலத் தலைமுறை தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள இந்தப் பிரிவினர் அனைவரும் பா.ஜ.க.வின் இந்த அநீதியான சட்டத்திற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றத் தயாராக வேண்டும். இதில் கட்சி, அமைப்பு என்ற பேதம் பார்க்கக் கூடாது. மக்கள் சக்தி ஒன்றே சட்டத்தை மாற்றும் வலிமை படைத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான நீதி, சமத்துவம் கிடைக்க வேண்டும் என்றால், சாதி வாரி பிரதிநிதித்துவம் மட்டுமே ஒரே தீர்வு. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, ஒவ்வொரு சாதியினருக்கும் அவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூக நீதி என்பதைப் புரிந்து அதற்கேற்ப கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இவண்,
*ஏ.எஸ்.அலாவுதீன்*
*பொதுச் செயலாளர்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)*

01/11/2022

01/11/2022
#பத்திரிக்கை_அறிக்கை

*பா.ஜ.க. அரசின் பொது சிவில் சட்ட முயற்சிக்கு தமிழக தி.மு.க. அரசு துணைபோவதா?*

*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) தமிழக #முதல்வருக்கு கேள்வி!*

*NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:*

மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

கஷ்மீர் விவகாரம் - 370 சட்டப்பிரிவு நீக்கம், ஒருங்கிணைந்த கஷ்மீரை துண்டாடியது, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் என தொடர்ந்து அரசியலமைப்பு வழங்கிய சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.

அதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் உரிமையைப் பறிப்பதாக நினைத்துக்கொண்டு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.

ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில், இந்து ஓட்டுக்களைத் திரட்டுவதற்காக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

2024 மக்களவைப் பொதுத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்துக்கள் ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதற்காக, பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியை எடுத்துள்ளது.

இதற்கான பரிந்துரைக்காக, சட்டம்- நீதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவை, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுசில் குமார் மோடி என்பவர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்தது. பா.ஜ.க. எம்.பி. தலைமையிலான குழுவின் அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நாடு முழுவதும் கருத்தாய்வு நடத்தி பரிந்துரைக்க வேண்டும் என்பதால், ஒரு கமிட்டியை அமர்த்தி இதற்கான வேலைகளை முடுக்கிவிடும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்தது.

ஒன்றிய அரசின் இந்த மாபாதகச் செயலுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைத் தவிர வேறு மாநில அரசுகள் இதற்காக எந்தக் கமிட்டியையும் அமைத்ததாகத் தெரியவில்லை.

விடியல் அரசு, திராவிட மாடல் அரசு, மதச்சார்பின்மை -சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் அரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, பா.ஜ.க. இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு உடனே நிறைவேற்றிட ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயாணன் தலைமையில், மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர்கள் பிரபு, முபீன் ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸ்ஸா, பிஹார், மே. வங்கம் என பல்வேறு மாநில முதல்வர்களெல்லாம் இதற்கான எந்த முயற்சியையும் எடுக்காத நிலையில், தமிழக முதல்வருக்கு மட்டும் என்ன நெருக்கடி ஏற்பட்டது?

பொது சிவில் சட்டம் கூடாது என்ற சமூகநீதிக் கோட்பாட்டைக் கொண்ட தி.மு.க., இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமே? இதற்கு எதிராக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களை அணிதிரட்டி இருக்க வேண்டாமா? மாறாக உடனடியாக பா.ஜ.க. வின் மதவாதக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை உடனே கலைக்க வேண்டும். பொது சிவில் சட்டம் குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதச் சார்பற்ற ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. அரசின் இந்தச் செயலின் விபரீதத்தைச் சுட்டிக்காட்டவேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதத்தினரும் தங்களின் மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப, திருமணம், விவாகரத்து உரிமை, வாரிசுரிமை, சொத்துப் பிரிவினை, இறப்பு, மத அனுஷ்டானங்கள் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். இது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை.

முஸ்லிம்கள் மட்டுமல்ல; இந்துக்களிலும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் என பல்வேறு சமூகங்கள் சிவில் விஷயங்களில் தங்களுக்கென பிரத்தியேக வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

இந்து என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டவர்களில் கூட அனைத்து பிரிவினரும் தங்கள் திருமணம், விவாகரத்து, வாழ்வியல், சொத்து விவகாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரே (UNIFORM) நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இதை மீறி பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், அனைவரும் வெகுண்டு எழுவார்கள். நாடு உள்நாட்டுப் போரைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மத, இன மக்களுக்கும் எதிரானது. நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கக் கூடியது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இவண்,
*ஏ.எஸ்.அலாவுதீன்*
*பொதுச் செயலாளர்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)*

அல்லாஹ்வின் திருப்பெயரால்…25/10/2022*தென்காசி மாவட்ட NTF ஒருங்கிணைப்பாளர் நியமனம்!*தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த NTF சகோ...
25/10/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

25/10/2022

*தென்காசி மாவட்ட NTF ஒருங்கிணைப்பாளர் நியமனம்!*

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த NTF சகோதரர்களை ஒருங்கிணைக்கும் பணிக்காக கடையநல்லூரைச் சேர்ந்த *அப்துல் நாசர்* அவர்கள் *மாவட்ட ஒருங்கிணைப்பாளராக* இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்.

அம்மாவட்ட கொள்கைச் சகோதரர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும்.

அவரது தொடர்பு எண்:
*86103 52208*

*இவண்,*
*ஏ.எஸ்.அலாவுதீன்*
*பொதுச் செயலாளர்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)*

அல்லாஹ்வின் திருப்பெயரால்…நாள்: 25/10/2022*நியமன அறிவிப்பு!**கடையநல்லூர் சதாம் ஹுசைன் அவர்கள்* *இன்று முதல் மாநிலச் செயல...
25/10/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நாள்: 25/10/2022

*நியமன அறிவிப்பு!*

*கடையநல்லூர் சதாம் ஹுசைன் அவர்கள்* *இன்று முதல் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.*

*கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட விவகாரங்களை கவனிக்கும் மேலிட பொறுப்பாளராக செயல்படுவார்.*

*NTF சகோதரர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும்.*

*அவரது தொடர்பு எண்:*
*95663 47318*
*70109 02769*

*இவண்,*
*ஏ.எஸ்.அலாவுதீன்*
*பொதுச் செயலாளர்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)*

Address

Chennai
600001

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 12pm
2pm - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919962041110

Alerts

Be the first to know and let us send you an email when தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு:

Share