அருள்மிகு சிவசக்தி ஜோதிட நிலையம்

  • Home
  • India
  • Chennai
  • அருள்மிகு சிவசக்தி ஜோதிட நிலையம்

அருள்மிகு சிவசக்தி ஜோதிட நிலையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு சிவசக்தி ஜோதிட நிலையம், Religious organisation, 8/6 Govindappa naicken 1st cross Street, Alapakkam, Chennai.

*ஆறுமுகன் அவதாரம்* 🍀🍀🍀🍀🍀🍀ஒரு கற்பத்தில் இந்த அண்டத்தையும் அதில் உயிர்த் தொகுதிகளையும் சிவனருளால் படைத்தவர் காசிப முனிவர்...
17/10/2024

*ஆறுமுகன் அவதாரம்*
🍀🍀🍀🍀🍀🍀

ஒரு கற்பத்தில் இந்த அண்டத்தையும் அதில் உயிர்த் தொகுதிகளையும் சிவனருளால் படைத்தவர் காசிப முனிவர். அவர் பெயரால் இந்த பூமிக்குக் காசினி என்பதும் பெயரானது.

அவர் தனது பதிமூன்று மனைவியருடன் சேர்ந்து இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார்.
சிவனருளால் அரிய வரங் களையும் தபோ பலத்தையும் பெற்றிருந்தார்.

அசுரர்களை வலிமையுள்ளவர்களாகவும் ஆளும் உரிமை உள்ளவர்களாகவும் ஆக்க விரும்பிய அசுர குலமகளான மாயை என்பவள் காசிபமுனிவரை அணைந்து சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று புதல்வர்களையும் அசமுகி எனும் பெண்ணையும் பெற்றாள். அசுர சகோதரர்கள் அரிய தவங்களைச் செய்து பெரிய வரங்களைப் பெற்றனர். சூரபத்மன் 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் வரை ஆட்சிபுரியும் வரத்தையும் பெற்றான்.

அதன்படி அண்டங்களின் அதிபதியானான். தொடக்கத்தில் மிகவும் நல்லவனாக ஆட்சி புரிந்த அவன் படிப்படியாக அசுர குணம் ஏறி கொடுங்கோலனானான். அவன் தமது சகோதரர்களான தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தையும் அவனால் செய்யப்படும் துன்பங்களையும் பொறுக்க முடியாத தேவர்கள் பெரிதும் துன்புற்று வாடி வதங்கினர்.

அவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து, அசுரர்களை அழித்துத் தம்மைக் காக்கும் படியாக வேண்டினர். சிவபெருமான் அவர்களது துயரத்தைத் தீர்த்து இன்பமாக வாழ்விக்கும்படியான ஒரு குமாரனைத் தோற்றுவிக்க எண்ணம் கொண்டார்.தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதை அக்னியிடம் அளித்துப் பாதுகாத்து வருமாறு கூறினார்.

அந்தப் பொறிகளின் வெப்பத்தைத் தாங்கமுடியாத அக்னி அவற்றை வாயுவிடம் அளித்தான். அவனாலும் அதன் ஒளியையும் வெப்பத்தையும் தாங்கமுடிய வில்லை.

அதனால் குளிர்ச்சி மிகுந்தவளான கங்கையிடம் அளித்தான். கங்கையும் அதன் அளவற்ற ஆற்றலைத் தாங்கமுடியாது, கயிலை மலைச்சாரலில் நாணற்காட்டிற்கு நடுவே இருந்த சரவணப்பொய்கையில் விடுத்தாள். அங்கு அந்தத் தீப்பொறிகள் குளிர்ந்து குழந்தை வடிவம் பெற்றன. அங்கிருந்த ஆறு தாமரை மலர்களில் அந்த ஆறு குழந்தைகளும் ஏறி அமர்ந்து விளையாடத் தொடங்கின.

அவற்றைப் பாலூட்டிச் சீராட்டச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்கள் அறுவரை அந்தப் பொய்கைக்கு அனுப்பினார். அவர்கள் பொய்கையை அடைந்து அங்கு தாமரை மலர்களில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஆறு குழந்தைகளையும் எடுத்துப் பாலூட்டி சீராட்டி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்திருந்தனர்.

பின்னர், சிவபெருமான் உமாதேவியை அழைத்துக் கொண்டு சரவணப் பொய்கையை அடைந்தார். அங்கு சென்ற உமையன்னை கார்த்திகைப் பெண்களுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஆறு குமாரர்களையும் கண்டாள். அப்பெண்கள்
அந்தக் குழந்தைகளை உமாதேவியிடம் அளித்தனர். அவள் ஆறு குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தழுவினாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஒரே திருமேனியைப் பெற்றன. அது ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்டு ஒளிவீசி நின்றது.

பார்வதி மகிழ்ச்சியுடன் அந்த ஆறுமுகக் குழந்தையை எடுத்து மடிமீது அமர்த்திக் கொண்டு மகிழ்ந்தாள்.

கந்துதல் என்றால் ஒன்றாகச் சேருதல் என்பது பொருள். ஆறுதிருவுருங்களாகத் தனித்தனியே தோன்றி அன்னை பராசக்தியால் ஒன்றாக்கப்பட்டதால் அவர் ஸ்கந்தன் எனப்பட்டார்.

சரவணப்பொய்கையை இடமாகக் கொண்டு தோன்றியதால் சரவணபவன் (சரவணம்-நாணற்காடு; பவனம்-உயர்ந்தோர் வாழுமிடம்) என்றும்

கார்த்திகைப் பெண்களின் மடி தவழ்ந்ததால் கிருத்திகா புத்ரன் என்றும் கார்த்திகேயன் என்றும்,

பார்வதியால் தழுவப்பட்டு ஒன்றானதால் ஸ்கந்தன் என்றும்,

கங்கையால் ஏந்தப் பெற்றதாலும், தீக்கங்குகள் வடிவில் தோன்றியதாலும் காங்கேயன் என்றும்,

உமையின் மடியில் அமர்ந்ததால் உமாசுதன் என்றும்,

அக்னியில் இருந்து தோன்றியதால் அக்னிஜாதன் என்றும் பெயர்களைப் பெற்றான்.

உமாதேவி ஆறுகுழந்தைகளை ஒன்றாக அணைக்க, அவை ஒரு திருமேனியும் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களையும் கொண்டு விளங்கியதையும் கந்தன் எனப் பெயர் பெற்றதையும், கந்தபுராணமும், கந்தர் கலிவெண்பாவும் அழகாகச் சொல்வதைக் காணலாம். தேவர்களை வாழ்விக்க வந்த பெருமானாக ஆறுமுகன் விளங்குகிறார்
❤❤❤❤❤❤
இவண்👉 சென்னை ஆலப்பாக்கம் அருள்மிகு நடராஜர் கோயில் பூசகர் மற்றும் ஜோதிடர் ஆ.சீ.சிவதாசன்
(9884014363)

இந்த ஞானத்தை எனக்கு நல்கிய குருவாகிய சிவசுந்தரிர மாதயிதழ் ஆசிரியர் பூசை
ச.ஆட்சிலிங்கம்
ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் (ஓம் குருவே சரணம்)

சிவசுந்தரி மாத இதழை நீங்களும் பெற 👉 (ஆண்டு சநதா 180₹)
9941124964

*தொண்டைமான்*🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 முன்னாளில் தமிழ்நாடு ஐந்து பெரும் பிரிவாக இருந்து வந்துள்ளது. இவை👉 1.சேரநாடு,2.சோழநாடு, 3.பாண்டியநா...
16/10/2024

*தொண்டைமான்*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

முன்னாளில் தமிழ்நாடு ஐந்து பெரும் பிரிவாக இருந்து வந்துள்ளது. இவை👉
1.சேரநாடு,
2.சோழநாடு, 3.பாண்டியநாடு, 4.நடுநாடு,
5.தொண்டைநாடு

என்று அழைக்கப்பட்டன.

தொண்டைமான் என்னும் அரசமரபினர் ஆண்டு வந்ததால் இப்பகுதிக்குத் தொண்டைநாடு என்பது பெயராயிற்று.

தொண்டைமான் அரச வம்சத்தினர் பற்றிய குறிப்பைப் பழந்தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம்.

தமிழகத்தின் வடபகுதியாக இருப்பது தொண்டைமண்டலமாகும். இது *தொண்டைமான் இளந்திரையன்* என்பவன் ஆண்ட பகுதியாதலின் அவன் பெயரால் *தொண்டைமண்டலம்* எனப்பட்டது.

இந்த தொண்டைமான் இளந்திரையன் சோழமன்னனுக்கும் பீலிவளை என்னும் நாககன்னிகைக்கும் பிறந்தவன் என்றுகூறப் படுகின்றது.

இவன் வரலாற்றை ஐம்பெரும்
காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை மூலம் அறியமுடிகிறது.

சோழமன்னன் ஒருவன் நாகலோகம் சென்றான் அங்கு நாகலோகப் பெண்ணான பீலிவளை என்பவளைக் கண்டுமணந்தான். பின்னர் நாடு திரும்பினான். பிலிவளைக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது அவள் அதைத் தொண்டைக் கொடி என்னும் கொடிகளால் செய்யப்பட்ட தொட்டிலில் வைத்து கடலில் விட்டுவிட்டாள்.

கடல் அலைகளால் தாலாட்டப்பட்டு பயணித்த அந்தக் குழந்தை காஞ்சி மண்டலக்
கடற்கரையில் ஒதுங்கியது. அதைக் கண்ட மக்கள் சோழ மன்னனுக்கு அறிவித்தனர்.

அவன் வந்து பார்த்து இவன் தன்மகன் என உணர்ந்தான். அவன் கடல் அலைகளான திரைக் கையால் தாலாட்டப்பட்டு வந்ததால் திரையன் என்றும், என்றும் இளையோன் என்பதால் இளம்திரையன் என்றும், தொண்டைக் கொடிகளால் ஆன தொட்டிலில் மிதந்து வந்ததால் தொண்டைமான் இளந்திரையன் என்றும் அழைக்கப்பட்டான்.

சோழன் தனது நாட்டின் வடபகுதியைத் தொண்டைமண்டலம் என்று பெயரிட்டு காஞ்சியில் அரண்மனை கட்டி அங்கு பட்டம் சூட்டினான். அதுமுதல் தொண்டைமான் ஆட்சி செய்து வரலானான்.

தொண்டைமான் பெயரை வடமொழியாளர்கள் துண்டீரன் என்று மொழிபெயர்த்து அதற்கு ஏற்பப் புராணக் கதையையும் புனைந்துள்ளனர்.

தொண்டைமான் திருவுருவம் அழகிய சுதைச் சிற்பமாகக் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உற்சவ காமாட்சிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. இங்கு அவனைத் துண்டீரன் என்று குறித்துள்ளனர்.

தொண்டைமான் காமாட்சிதேவியின் அருள்பெற்று அரசாண்டவனாவான்.

திருப்பதியில் உள்ள பெருமாள் ஆலயத்தை ஆதியில் அமைத்தவன் தொண்டைமானே ஆவார். அங்கு அவருக்கு திருவுருவம் இருக்கிறது என்கின்றனர்.

தொண்டைமண்டலத்திலுள்ள திருமுல்லைவாயில் இறைவன் தொண்டைமான் மன்னனால் வெளிப்பட்டவர். அவனை ஆட்கொண்டு அவனது திருப் பணியை ஏற்றவர் என்று தேவார வரலாறு கூறுகிறது.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் தொண்டைமான். அந்நாளில் வடக்கே இருந்த குறும்பர்கள் வடஎல்லையில் பெருந்தொல்லை கொடுத்து வந்ததால் அவர்களை அடக்க தானே படை நடத்திச் சென்றான். அப்படிச் செல்லும் வழியில் முல்லைக்கொடி படர்ந்திருந்த பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது.

அதனைக் கடக்கும் போது முல்லைக் கொடிகள் தாவி வந்து அவனது யானையின் கால்களைச் சுற்றிக்கொண்டு அதனை நகர விடாது தடுத்தது. மன்னன் (யானை மீதிருந்தவாறே) கொடியை வெட்டினான். அப்போது (நெடிய மண்மேட்டில் படர்ந் திருந்த) அந்தக் கொடியின் அடியிருந்து இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் இறங்கி அந்த இடத்தை சோதிக்க மண்மேட்டுள்ள நெடிய சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

அவரைப் பணிந்து வணங்கி வெட்டுண்ட இடத்தில் குளிர்ச்சி உண்டாகும் பொருட்டுச் சந்தனத்தை அப்பினான். பெருமான் அவனது பூசையால் மகிழ்ந்தார்.

அவனுடன் தனது காளையையும் போருக்கு அனுப்பினார். அங்கு சென்று குறும்பர்களை அடக்கி அவர்களது கோட்டைகளைத் தகர்ந்தான். அவர்களை வென்றதன் அடையாளமாக அங்கிருந்த வெள்ளெருக்காலான நெடிய தூண்களைக் கைப்பற்றி வந்தான்.

மீண்டும் வரும் வழியில் முல்லை நாதரை வணங்கி ஆலயம் அமைத்தான். அவரது முன்மண்டபத்தில் வெற்றியின் அடையாளமாகத் தான் கொண்டு வந்த வெள்ளருக் கத் தூண்களை நட்டு மண்டபம் அமைத்தான். (அத்தூண்களை இப்போதும் காணலாம்)

அவனுக்குத்
துணையாகச் சென்றதன் அடையாளமாக நந்திதேவர் இத்தலத்தில் கிழக்கு முகமாகத் திரும்ப அமர்ந்துள்ளார்.

ஆலயத்தின் பிராகாரத்தில் தொண்டைமான் சக்ரவர்த்தியின் திருவுருவம் உள்ளது.

அவனுக்குத் திருமணக்கோலம் காட்டியதை நினைவூட்டும் பெரிய செப்புத் திருமேனியாகப் பெருமான் விளங்குகின்றார்.

தேவாரத்தில் தொண்டைமான் பற்றிய செய்தியைச் சுந்தரர் குறித்துள்ளார். தொண்டைமானால் இறைவன் வெளிப்பட்டதைச் சுந்தரர்👉
👇👇👇👇👇👇

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்சூழ்கொடி

முல்லையால் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய

இறைவனே என்றும் நல்லவர் பரவும் திருமுல்லைவாயில் நாதனே

👆👆👆👆👆👆
என்றும் குறித்துள்ளார்.

புதுக்கோட்டையை ஆட்சிசெய்த மன்னர்கள் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் முக்குலத்தோரில் கள்ளர் மரபினர் ஆவர். தொண்டை மண்டலத்து தொண்டைமானுக்கும் இவர்களுக்கு மான தொடர்பு தெரியவில்லை.

இலங்கையிலும் தொண்டைமான் என்னும் மரபினர் ஆட்சியில் இருந்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அவர்கள் வெட்டிய ஆறு தொண்டைமானாறு என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற முருகன் கோயிலான செல்வச் சந்நிதியை ஒட்டி அந்த ஆறு ஓடுகிறது.

❤❤❤❤❤❤
இவண்👉 சென்னை ஆலப்பாக்கம் அருள்மிகு நடராஜர் கோயில் பூசகர் மற்றும் ஜோதிடர் ஆ.சீ.சிவதாசன்
(9884014363)

இந்த ஞானத்தை எனக்கு நல்கிய குருவாகிய சிவசுந்தரிர மாதயிதழ் ஆசிரியர் பூசை
ச.ஆட்சிலிங்கம்
ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் (ஓம் குருவே சரணம்)

சிவசுந்தரி மாத இதழை நீங்களும் பெற 👉 (ஆண்டு சநதா 180₹)
9941124964

முழுநீறு பூசிய முனிவர்🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀சிவபெருமானுக்குரிய அனேக வடிவங்களில் ஒன்றாக இருப்பது விபூதியாகும். விபூதி மந்திரங்களின்...
15/10/2024

முழுநீறு பூசிய முனிவர்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

சிவபெருமானுக்குரிய அனேக வடிவங்களில் ஒன்றாக இருப்பது விபூதியாகும்.

விபூதி மந்திரங்களின் சக்தியை தன்னுள் ஈர்த்து வைத்து தம்மை அணிபவர்க்கு நன்மை அளிப்பது. விபூதி தம்மைப் பேணி அணிபவர்க்கு பெருமை கொடுப்பதும் மற்றும் முக்தியைத் தருவது. எனவே முனிவர்களால் விரும்பி அணியப்படுவது உயிருக்கும் உடலுக்கும் கவசமாக இருப்பது எனவே கவசத்திருநீறு எனப்படுகிறது.

அன்பர்களில் சிலர் விபூதியை உடலெங்கும் பூசிக் கொண்டு விரதம் காத்தனர். இது விபூதிக்கு பாசுபதம் என்பதும் பெயராகும். சிவபெருமானின் ஒப்பற்ற ஆயுதங்களில் முதன்மை பெற்றதான பாசுபதாயுதத்திற்கும் மேலான ஆயுதம் என்பதால் விபூதிக்கும் பாசுபதம் என்பது பெயரானது. விபூதியை உடலெங்கும் பூசிக் கொண்டு விரதம் இருப்பது பாசுபத விரதம் எனப்படுகிறது. லகுளீசரால் தோற்றுவிக்கப்ட்ட பாசுபத மதத்தில் இருந்து இந்த விரதம் வேறு பட்டதாகும்.

மகாபாரதத்தில் கண்ணபிரான் உபமன் முனிவரிடம் சிவதீட்சைபெற்று பாசுபத விரதம் மேற்கொண்டு உடலெங்கும் விபூதியை அணிந்து கொண்டு சிவனை ஆராதித்ததாகக் கூறுகின்றனர்.

பாரததேசம் முழுவதும் இத்தகைய அன்பர்கள் இருந்தனர். இப்போதும் வட இந்தியாவில் அதிகம் இருக்கின்றனர். இவர்களையே சுந்தரர் முழுநீறு பூசிய முனிவர் கூட்டம் என்றார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒன்பது தொகையடியார் கூட்டத்தில் முழுநீறு பூசிய முனிவர்கள் கூட்டத்தையும் குறித்துள்ளார்.

தேவாரத்தில் இறைவனை பாசுபதாஸ்திரத்தை ஏந்திய பசுபதியாகவும் அவனுடைய அருளான விபூதியை உடலெங்கும் பூசிக் கொண்டு பாசுபதவிரதத்தை மேற் கொண்டு ஒழுகும் முனிவர்கள் பற்றியும் தேவார மூவரும் பல பாடல்களில் குறித்துள்ளனர்.

இவர்கள் சடைமுடியை உயர்த்திக் கட்டிக் கொண்டு உருத்திராட்சங்களை அணிந்து கொண்டு விபூதியை உடலெங்கும் பூசிக் கொண்டு சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு நாடெங்கும் பயணித்தனர். சிவனைப் போலவே நீண்ட சூலம் வாளையும் ஏந்தினார்.

சிவனடியார்களுக்கு துன்பம் செய்பவர்களை தண்டிக்கவும் செய்தனர். இவர்களிலேயே பலர் சிவனருளக்கு ஏங்குபவர் களாகவும் கடும் விரதங்களைக் கடைப் பிடிப்பவர்களாகவும் இருப்பதையும் தேவாரம் கூறுகிறது.

❤❤❤❤❤❤
இவண்👉 சென்னை ஆலப்பாக்கம் நடராஜர் கோயில் பூசகர் மற்றும் ஜோதிடர் ஆ.சீ.சிவதாசன்

நன்றி ஆசிரியர் ஆட்சிலிங்கம் ஐயா (ஓம் குருவே சரணம்)

Address

8/6 Govindappa Naicken 1st Cross Street, Alapakkam
Chennai
600116

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு சிவசக்தி ஜோதிட நிலையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share