01/07/2026
ஜூலை மாத வாக்குத்தத்தம் 2026.
சங்கீதம் 46:1.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்தில் அநுகூலமுமான துணையுமானவர் என்ற வசனம்,
உலகமே தலைகீழாக மாறினாலும் விசுவாசிகள் பயமின்றி வாழ முடியும் என்ற தைரியத்தை அளிக்கிறது.
இந்த சங்கீதம் எசேக்கியா ராஜாவின் காலத்தில், அசீரிய ராஜாவான சனகெரிப் எருசலேமை முற்றுகையிட்டபோது இந்த வசனத்தினால் பெலப்பட்டான் என்று கருதுகின்றனர். அவர்கள் தங்களின் சொந்த பலத்தால் அசீரிய இராணுவத்தை வெல்ல முடியாத இக்கட்டான சூழலில், ஒரே இரவில் கர்த்தருடைய தூதன் அசீரிய பாளையத்தில் 1,85,000 பேரை அழித்து யூதாவுக்குப் பாதுகாப்பு அளித்தார்.
*2 இராஜாக்கள் 19:35* மற்றும் ஏசாயா 37:36.
இந்த ஒற்றை வசனம் தேவனை பற்றிய மூன்று நிலைகளை நமக்கு வெளிப்படுத்துகிறது:
1) தேவன் நமக்கு அடைக்கலமானவர்
அடைக்கலம் என்பது புயல், மழை அல்லது எதிரிகளிடமிருந்து தப்பிக்க நாம் ஓடி ஒளிரும் ஒரு பலத்த கோட்டையாகும். மனித அடைக்கலங்கள் அழியக்கூடியவை, ஆனால் தேவன் மாறாத நிரந்தரக் கோட்டையாய் இருக்கிறார். நாம் சோதனைகளில் சோர்ந்து போகும்போது, நம்முடைய பாரங்களை அவரிடம் இறக்கிவைத்துவிட்டு பாதுகாப்புப் பெறலாம்.
*நீதிமொழிகள் 18:10*
*சங்கீதம் 61:3*
2) தேவன் நமக்கு பெலனானவர்
நாம் பலவீனமடையும் போது, தேவன் நமக்குத் தம்முடைய தெய்வீகப் பெலனைத் தருகிறார்.
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு." *பிலிப்பியர் 4:13*
*சங்கீதம் 28:7*
3) ஆபத்தில் துணையானவர்
மனிதர்கள் ஆபத்துக் காலத்தில் நம்மை விட்டு விலகிப் போகலாம், ஆனால் தேவன் நம்முடைய நெருக்கடி நேரங்களில் மிக அருகில் இருந்து உடனடியாக நமக்குச் சகாயம் செய்கிறார்.
*சங்கீதம் 145:18*
*சங்கீதம் 50:15*
*மத்தேயு 28:20*
வாழ்க்கையில் புயல்களும் இயற்கைச் சீற்றங்களும் நம்மை அச்சுறுத்தும்போது விசுவாசிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தேவன் மட்டுமே.
உலகத்தின் சூழ்நிலைகள் எப்படி மாறினாலும், மாறாத தேவன் நமக்கு அடைக்கலமாக இருப்பதால் நம்முடைய எதிர்காலம் பாதுகாப்பானது, நம்முடைய வாழ்வு பெலனானது மற்றும் துணையாக இருக்கிறார் என்ற நம்பிக்கையானது.