சிவ வேதம்

சிவ வேதம் ❀உ❀
❀சிவமயம்❀
❀திருச்சிற்றம்பலம்❀
❀சிவவேதம்❀
❀ஆன்மீக குழு வழங்கும் தினம் ஒரு ஆன்மீகம்❀

🕉️2️⃣2️⃣அர்த்தநாரீசுவர மூர்த்தி🕉️திருக்கயிலாயகிரியிற் பக்தாநுக்ரஹ காரணமாகச் சிவபிரான் திருவோலக்க முற்றிருந்தனர். திருமால...
13/05/2025

🕉️2️⃣2️⃣அர்த்தநாரீசுவர மூர்த்தி🕉️

திருக்கயிலாயகிரியிற் பக்தாநுக்ரஹ காரணமாகச் சிவபிரான் திருவோலக்க முற்றிருந்தனர். திருமால் - பிரமன் - இந்திராதி திக்குப்பாலகர் - அஷ்டவசுக்கள் ஸப்தருஷிகள் - நவசித்தர்கள் கிந்நர கிம்புருஷ யக்ஷ வித்யாதராதி அஷ்டாதச கணங்கள் - துவாதசாதித்தர் முதலிய கிரகங்கள் - இன்னும் இமையவர் யாவரும் சிவபிரானைத் தரிசிக்கும்படி திருக்கயிலாய கிரியையடைந்து, ஆங்கு முதற்பெருங்காவலாயுள்ள திருநந்திதேவரைப் பணிந்து, அவர் திருவருள் பெற்றவராய் முறைமுறையே அவர் விடுப்ப மகாசந்நிதானத்தினுட் சென்று இருகண்களார எம்பெருமானையும் இறைவியாரையுந் தரிசித்து அஷ்டாங்க பஞ்சாங்கமாகப் பணிந்து இருவரையும் பிரதக்ஷிணஞ் செய்து தமது குறைகளைச் சொல்லி யாசித்து, அவ்விருவராலும் அநுக்கிரகித்த வரங்களைப் பெற்று வருகையில், ருஷி சிரேஷ்டர்களிலொருவராகிய ப்ருங்கி ருஷியானவர் பார்வதி தேவியாரைப் பணியாமற் சிவபெருமானை மாத்திரம் பணிந்து பலவகையாகப் பாடிப் புகழ்ந்து நிற்பது கண்ட இமையவல்லி, இம்முனிவன் யாவன்? எம்மைச் சிறிதும் மதித்திலன்? என்று முனிந்து, சக்தியாகிய தனது கூறாகவுள்ள உதிரமாம்சங்களை அவருடலிற் சிறிதுமின்றி ஆக்ராணித்துக் கொள்ள, அவர் சிவகூறாகவுள்ள என்பையும் நரம்பையுமே உட்கொண்ட தோற் பதுமை போலத் தள்ளாடி நின்று தம்மைப் பிரார்த்தித்தது கண்ட தாணு மனந்தரியாராகி ஓர் காலையுதவ, ப்ருங்கி முநி களித்து மூன்று காலுடன் முன்னின்று கூத்தாடிப் பல வகையாகப் பாடிச் சென்றனர்.கவுரியம்மையார், கன வருத்தமுற்றுக் கடுகியெழுந்து கணவராகிய கண்ணுதலை நமஸ்கரித்து ''எம்பெருமானே! எளியேன் தவமிழைக்க எண்ணினேன். ஏழையேற்கு இன்னருள்புரிய வேண்டும்” என்று விண்ணப்பித்து விடைபெற்றுத் திருக்கயிலையை நீங்கி ஐங்கரக்கடவுள் அறுமுகக்கடவுள் ஸப்தமாதர் முதலானோர் தம்மைப் புடைசூழ்ந்து நிற்க, ஓர் மலைச்சாரலில், எழுத்தூணின் மேல் நின்று எண்ணற்குமருந் தவத்தை எண்ணில்லாக் காலமியற்றினர்.சிவபெருமான் உமாதேவியார் தவத்திற்கிரங்கித் திருவருள் புரியத் திருவுளங் கொண்டு இடபவாகனரூடராய், சமஸ்த தேவர்களுந் தம்மைப் புடைசூழ்ந்து வரவும், சர்வ வாத்தியங்களு மொலிக்கவும், வேதங்கள் கோஷிக்கவும், மலைச்சாரலை யடைந்து எமதன்னையாகிய ஈசுவரியின் தவச்செயலைக் கண்டு சந்தோஷித்துக் காட்சி தர, தேவியார் திருக்கண்களாற் றரிசித்து விழியினின்றும் ஆனந்த பாஷ்பஞ் சிந்த அடியற்ற மரம் போலச் சாஷ்டாங்கமாகத் தரைமேல் விழுந்து பணிந்தனர். மாதேவர் மனக்களிப்பு மிக்கவராய் "மாதே! யாது வரம் வேண்டும்?' என வினாவ, மலைமகள் மணவாளனை வணங்கி "வள்ளலே! தேவரீர் வேறும் அடியேன் வேறுமாகவிருப்பதில் விருப்பற்றேன். வாமபாகத்தில் அடியாள் கலந்திருக்க வேண்டும்” என சிவபெருமான் அவ்வாறே தமது திருமேனியில் வாமபாகத்தை அம்மையாருக்கருள் செய்து இடபாரூடராகித் தேவியாருடன் திருக்கயிலாய கிரியை யடைந்தனர். பாதி சரீரம் வாமபாகத்திற் பார்வதியாரும், பாதிசரீரம் வலப்பாகத்திற் சிவபெருமானுமாக வீற்றிருக்குந் திருக்கோலமே அர்த்தநாரீசுவர மெனப்படும்.

🕉️2️⃣1️⃣கல்யாணஸுந்தர மூர்த்தி🕉️திருக்கைலாயகிரியிற் சகலதேவர்களும் நிறைந்திருக்கும்படி நவரத்தின மண்டபத்திற் சிவபெருமான் தி...
10/05/2025

🕉️2️⃣1️⃣கல்யாணஸுந்தர மூர்த்தி🕉️

திருக்கைலாயகிரியிற் சகலதேவர்களும் நிறைந்திருக்கும்படி நவரத்தின மண்டபத்திற் சிவபெருமான் திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருக்கையில், எம்மன்னையார் சிங்காதனத்தை விட்டுத் துணுக்குற்றெழுந்திருந்து இறைவரது இருசரணாரவிந்தங்களையும் பணிந்து கைகூப்பிநின்று "தேவரீரைப்பணியாத தக்கன் மகளென்பதனாலாய தாக்ஷாயணியென்று சாற்றும் பெயரை மாற்றத்தயை செய்ய வேண்டும்" எனப் பிரார்த்திக்க, அரவாபரணர் ‘மாதே! மலையரயன் உன்னை மகளாகப்பெறத் தவஞ் செய்கின்றான். அவன்பாற் குழந்தையாகுக. உன்னை யாம் வந்து மணப்போம்'' என, அம்மையார் அவ்வாறே இமாசலத்திலுள்ள தாமரைத் தடாகத்தில் மலர்த்தவிசின்கண், மூவாண்டுள்ள மதலைவடிவேற்று நிற்ப, மலை மன்னன் கண்டு மகிழ்ந்தெடுத்துப்போய் மனைவியாகிய மேனைகையிற் கொடுப்ப, அவள் பாலூட்டி வளர்த்தனள். அம்மையார் ஐந்து வயதடைந்து அருள் மேலீட்டால் அத்தனாகிய பர்வதராஜனுக் கறிவித்து அவனநுமதி பெற்று மலைச்சாரலிற் பர்ணசாலை செய்வித்துச் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்துகொண்டிருந்தனர்.அக்காலத்திற் சிவபிரான் தம்மிடஞ்சேர்ந்து மனமொடுங்கும் வண்ணம் வினாவிய ஸநகன் – ஸநந்தனன் – ஸநாதனன் – ஸநற்குமாரன் என்னும் நால்வருக்கும், பதி பசு பாச லக்ஷணங்களைப் போதிக்க, அவர்கள் "அடியேங்கள் மனம் விரிந்திருப்பது அகலும் வகை யருள்புரிக'' என, “அப்பொருள் இவ்வாறிருப்பது'' என்று ஒன்று முரையாது முநிவர் போல் யோகத்திலிருந்தனராகலின், உலகமுழுவ தும் மாதர் முயக்கற்றுப் பிரமன் படைப்புத் தவறுற்றது கண்ட தேவர் அதனை விலக்குவான் கருதி, மன்மதனை விடுத்து மலர்க்கணை செலுத்தி யோகினை யழிக்கச்செய்ய, நின்மலர் நெற்றி விழியைத் திறப்ப, மதனன் சாம்பராயினன். அருகிருந்த இரதி பரமனைப் பார்த்துப் புலம்பி வேண்ட, பெருமான் ''உமையை மணந்தபின் உன் கணவனை யுதவுவோம் " என இரதி இமாசலமுற்றிருந்தனள்.

சிவபெருமான் முநிவர்கட்கருளி, இமயமலை யடைந்து எம்மன்னையாரது கடுந்தவத்தைக் கண்டுகளித்து வேதியவடிவுகொண்டு “யாது கருதித்தவஞ்செய்கின் றனை?” என, உமையம்மை “சங்கரன் என்னை மணஞ்செய்யத் தவஞ்செய்கின்றேன்” என, “பெண்ணே! என்னை மணஞ்செய்து கொள்”' என, இறைவி கோபித்து “கொடியோனே! அகன்று போக, என்று கூற , விமலர் விடையேறிக்காட்சிதர, அம்பிகை அண்ணலைக்கண்டு அச்சத்துடன் கை கூப்பி "தேவரீரை அறியாமற்கூறிய அபசாரத்தை மன்னிக்கவேண்டும்” என, ஐயர் "அவை யெம்மைத் துதித்தனவாகக் கொண்டோம்; தவமொழிக. விரைவில் மணம்புரிதும்'' என மறுமாற்றங்கூறி மறைந்தருளினர். பார்வதியார் நிகழ்ந்தது கூற பர்வதராஜன் கேட்டுக்களிப்புற்றிருந் தான். சங்கரர் கயிலை சார்ந்து ஸப்த ருஷிகளை வருவித்து "மலையரயன் மகளை மணம் பேசுக'' என, மாதவர் இமோற்கிரியுற்று மன்னனைக்கண்டு மகாதேவன் மனக்கருத்திசைப்ப, அவனங்கீகரிக்க அதனை அரன்பாலறைந்து அவரவரிடஞ் சேர்ந்தனர். இமோற்கிரிராஜன் விச்சவகன்மனால் நகர் புனைவித்து விசேஷாலங் காரஞ்செய்து "பங்குனியுத்திரத்தினம் உத்தமத்தினமாதலின், உமையை மணஞ் செய்க” என விண்ணப்பித்தனன். பெருமான் திருநந்திதேவரை விளித்து "தேவர்கள் முதலானாரைத் தருக'' என, நந்திதேவர் சிந்தித்தவளவில், கோடி யுருத்திரர்கள் - நூற்றுவருருத்திரர்கள் - கீழண்ட கடாகத்துள்ள காலாக்கினி யுருத்திரர் – கூர்மாண்டர் - ஆடகேசுரர் - திருமால் – பிரமன் - இந்திரன் முதலிய திக்குப்பாலர்கள் நவக்கிரகங்கள் - நவசித்தர்கள் - அஷ்டவசுக்கள் - ஸப்தருஷிகள் - யக்ஷ கிந்நர கருட காந்தருவர் முதலிய கணங்கள் - வேதாகமசாஸ்திரங்கள் - யுகாதி கால பேதங்கள் முதலிய யாவருங் குழுமிவந்து திருவாயிலடைந்து நந்தியெம் பெருமானைப் பணிந்தனர். பிரமன் பலரத்நாபரணங்களை முன் வைத்து அணியும்படி வேண்ட, பெருமான் 'அணிந்தாம்' என்று அவற்றைப் பரிசித்து அராக்கலனே பொற்பணியாகத் தோற்றுவித்து இடபவாகனத்தி லாரோகணித்துத் தேவர்கள் மலர்மாரி பெய்யவும், ஸ்ரீகணேஶர் – ஸ்கந்தர் - வீரபத்திரர் - வயிரவர் தத்தம் வாகனங்களில் வரவும், ஸப்தருஷிக ளாசீர்வதிக்கவும், பாநுகம்பன் ஆயிரம் வாய்களாற் சங்கத்தொனி செய்யவும், வாணாசுரன் சிவார்ச்சனை செய்த ஆயிரங்கரங்களாற் குடமுழவடிக்கவும், கணத்தலைவர்கள் பலவாத்தியங்களை முழக்கவும், திருநந்திதேவர் பொற்பிரம்பேந்தித் தேவமுநிவர்கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் செல்லவும், இந்திரன் களாஞ்சியேந்தவும், ஈசானன் அடப்பை தாங்கவும், வாயு ஆலவட்டம் பணிமாறவும், அக்கினி தூபமேந்தவும், வருணன் பூரணகும்பமெடுக்கவும், நிருதி தர்ப்பணமேந்தவும், குபேரன் நவநிதிகள் சிந்தவும், யமன் கஞ்சுகத்தொழில்புரியவும், நாகராஜர்கள் மாணிக்கத்தீபமேந்தவும், வேதங்கள் திருவடியைச் சுமக்கவும், கங்கை காவிரி முதலிய நதிக்கன்னியர் சாமரையிரட்ட வும், குண்டோதரன் குடைபிடிக்கவும், பிரமவிஷ்ணுக்கள் இருபுரம் கைகுவித்து வரவும், ஸ்ரீசுந்தரேசப்பெருமான் திருவெண்ணீற்றுப் பெட்டகமுந் திருப்பள்ளித் தாமமு மெடுத்துக்காட்டவுமமைந்த சர்வாலங்காரத்துடன் இமாசலமடைந்து, திருவீதியிற் கண்ட மாதர்கள் காதல் கொள்ளும்படி திருவுலாப்போந்து, பர்வதராஜன் மனையையடைந்து, திருமால் கைலாகு கொடுக்க இடபவா கனத்தினின் றவரோகணித்தனர்.

பர்வதராஜன் பாரியாகிய மேனை அநேக மாங்கல்யமாதர் புடைசூழ ஆவின்பால்கொணர்ந்து ஐயனது திருவடித்தாமரையை விளக்கி நாணத்துடன் உட்சென்றனள். மன்றற் சடங்குகளை மலரோன்செய்தனன். சிவபெருமான் இரத்ன சிங்காதளத்தில் வீற்றிருந்தனர், அவரவர் தங்கட்குத் தக்க ஆதனத்திருந்தனர்.[அப்பொழுது யாவரும் ஆண்டுக் கூடிநின்றதால், வடதிசை தாழ்ந்தது கண்டு, அத்தன் அகஸ்திய முனிவரை நோக்கி "நீர் ஒருவரே எமக்கொத்தவர்; நீர் தென்றிசையிலிருப்பின் உலகஞ் சமனாயிருக்கும்; உமக்குத் திருமணக்கோலங் காட்டுதும்'' என, அகஸ்தியர் ஆணையைக் கடவாராய் இமாசலமகன்று வழியில் மாயை செய்த க்ரௌஞ்சனைச் சபித்து, வழிவிடாது நின்ற விந்தத்தை யடக்கி, வாதாவி வில்வலரைமாய்த்து, குற்றாலத்துள்ள திருமாலைப் பெருமான் வடிவாக்கிப் பொதியமலை சேர்ந்து சிவத்தியானத்திருந்து பின்னொருகாலத்தில் திருமணக்கோலத்தைத் திருவருளால் தரிசித்தனர். இதுநிற்க. அகஸ்திய ரகன்றபின் உலகு உயர்வு தாழ்வின்றி யிருந்தது.]அம்மையார் பலவகையாகிய ஆடையாபரணங்களை யலங்கரிக்கப் பெற்றவராய் அநேகர் தோழியர் புடைசூழ, புராரியை வந்து பணிய மாதேவன் "மாதே! பக்கலிரு” என, இருவரும் ஏகாசனத்திருந்தனர். மேனை யருகிருக்கப் பர்வதராஜன் பரமன் பாதத்தைப் பூசித்து, பார்ப்பதி கையைப் பரமேச்சுரன் திருக்கரத் திற்கொடுத்தனன். சிவபெருமான் திருமாங்கல்யந்தரித்து மணவினை முடித்தனர். இரதி தன் கணவனைப்பெற அது ததியிற் கண்ணுதலைப் பணிய, அண்ணல் தமதெண்ணத்தில், காமனைக் கருத, அவன் முன் தோன்றினன். முன்னோன் "உன் மனைவிக்கு மட்டும் உருக்கொண்டு அகிலத்திற்கெல்லாம் அரூபியாயிருத்தி" என்றருளிச்செய்து அங்கிருந்து தேவியாருடன் திருக்கயிலாயகிரியை யடைந்து தேவர்களை விடைகொடுத்தனுப்பி வீற்றிருந்தனர்.பார்ப்பதியாரை மணஞ்செய்ய, சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோலமே கல்யாணஸுந்தரமெனப்படும்.கல்யாணஸுந்தரமூர்த்தயே நம:

🕉️2️⃣0️⃣த்ரிபுராந்தக மூர்த்தி🕉️தாரகாசுரன் பெற்ற தனயராகிய தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி யென்னு மூவரும், பிரமனை நோக்கி...
09/05/2025

🕉️2️⃣0️⃣த்ரிபுராந்தக மூர்த்தி🕉️

தாரகாசுரன் பெற்ற தனயராகிய தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி யென்னு மூவரும், பிரமனை நோக்கிப் பெருங்காலந் தவம்புரிகையில், பதுமன் அவர்கட்குமுன் தோன்றக்கண்டு பணிந்துநின்று பலவகையாகத்துதித்து ''அண்ணலே! அடியேங்கட்கழி'யாவர மருளவேண்டும்” என, மலரோன் "மைந்தரே! மடியாதிருப் போர் வையகத்திலில்லை; கற்பகாலங் கழியின் யானும் இந்திராதி தேவர்களும் இறப்போம். ஈசனே யிறவாதவன். ஆதலின் அது நீங்க மேம்பாடாவது மோக்ஷமாவது வேண்டிற் றருதும்' என, தானவர் பொன் – வெள்ளி - இரும்பினா லமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி – அந்தர - சுவர்க்க மென்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற் கொருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப்புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒருகணையா லழித்தாலன்றி வேறொருவராலு மழியா வரம் வேண்டும்” எனக் கேட்க, பிதாமகன் அவ்வாறே பிரசாதித்துத் தனதுலகுசார்ந்தனன்.தாரகாக்ஷன் முதலாயினர் அளவில்லாத அவுணர் சேனையை யுடையவராய், மயன் என்னுந் தானவதச்சனை வருவித்துத் தங்கள் விருப்பின்படி பூமியி லிருப்பு மதிலும் . அந்தரத்தில் வெள்ளி மதிலும், சுவர்க்கத்திற் பொன்மதிலுமாக, பலவளப்பமு நிறைந்த முப்புரம் நிருமிக்கச்செய்து, தமக்கு வேண்டியதொன்றுமின்றி, சிவலிங்கபூசனை முதலியவற்றைக் குறைவறச்செய்து வாழ்ந்திருப்பினும், தமது அசுரகுலத் தியற்கை குன்றாதவராய் வைகுந்த முதலிய தேவநகரங்களையும், உலகிலுள்ள பல பதிகளையும், திரிபுரத்தோடு சென்று சிதைத்து வருதலாற் சினந்த இந்திரைகேள்வன் இந்திரன் முதலிய இமையவரை யுடன் கொண்டுபோ யெதிர்த்துத்துன்புற்றுச் சகியாமல், தேவர் குழுவுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலந் தவஞ்செய்ய, பரமபதி இடபாரூடராய்க் காட்சிதந்தனர். தேவர்கள் நமஸ்கரித்துத் திரிபுரத்தவர் தீமையை விண்ணப்பஞ்செய்ய, சிவபிரான் “அவர்கள் நமதடியராதலின், அவர்களைச்செகுத்தல் அடாது" என்றருளி அந்தர்த்தானமாயினர்.விண்டு தேவர்களே அஞ்சாதீர்களென்று புத்தவடிவுகொண்டு, நாரதமுநிவர். சீடராக வுடன்வரத் திரிபுரமடைந்து பிடகாகமம் பிரசங்கித்து, அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையிலகப்படாதார் மூவரேயாதலின் திருமால் எனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவரையும் பாராதீர்கள். அவர்கள் இழிதொழில்பூண்டோர்” என்று கூறி, நாரதருடன் மேருமலையடைந்து தேவ கூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்துத் தவத்திருந்தனர். பெருமான் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்திதேவரை விளித்து “'தேவர்கள்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தகருவிகளைச் சித்தஞ்செய்யக் கட்டளையிடுக'' என, நந்தியெம் பெருமான் மேருமலை சேர்ந்து அவ்வாறே அமரர்கட்கு ஆஞ்ஞாபித்துச் செல்ல, தேவர்கள் களிகூர்ந்தனர்.மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கிரமாகவும் இருதுக்கள் சந்தியாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், ஆகாயம் ஆதனமாகவும், உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும் நதங்களும் நாட்டுங்கொடியாகவும், நக்ஷத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்சலோகம் மேல்விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலிய காலத்திரயங்கள் (கடுப்பாகிய) எண்ணெயூற்றும் இடுக்குமரமாகவும், அஷ்டபர்வதங்கள் தூணாகவும், எட்டுத் திக்கஜங்கள் இடையிற் றாங்கவும், சத்தசமுத்திரம் திரைச்சீலையாகவும், ஞானேந்திய கன்மேந்தியங்கள் கலன்களாகவும், கலைகள் முளையாகவும், புராணம் – வேதாங்கம் – சாஸ்திரம் - மநுக்கள் மணியாகவும், மருத்துக்கள் படியாகவு மமைந்த திவ்வியமான ஒரு தேரைச்செய்து, வேதங்கள் நான்கையும் நான்கு குதிரைகளாய்ப் பூட்டி, பிரமனைத் தேர்சாரதியாய் நிறுத்தி, ப்ரணவமே குதிரை தூண்டுங் கோலாய்க்கொண்டு, கங்கை அதிதிமுதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை விரட்டவும், தும்புகுகாரதரிசைபாடவு மமைத்து, அரம்பை முதலிய கணிகையர் நடிக்கவுஞ் சமைத்து, மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணி யாகவும் நியமித்து, திருமால் பாணமும், சரச்சுவதி வில்லிற்கட்டிய மணியும், அக்கினிதேவன் அம்பின்கூர்வாயும், வாயு அம்மிற்கட்டிய இறகுமா யேற்படுத்தித் திருக்கயிலாயகிரியை யடைந்து திருநந்தி தேவரைப் பணிந்து "அமரர் அமரர்க் கருவிகளை யமைத்துக் கொண்டடைந்தன ரென்று அருள்வள்ளல் சந்நிதியில் அறிவிக்க வேண்டும்" எனப் பிரார்த்தனை செய்தனர்.அவர் சென்று விண்ணப்பிக்க, இறைவர் தேவியாருடன் இடபாரூடராய் இரதத்தை யடைந்து இமையவர் எண்ணத்தின்படி அதிற் காலூன்ற அதன் அச்சு முரிந்தது. அச்சுதன் அக்கணமே விடை வடிவாகி எம்பிரானை யேற்றுத் தாங்க மாட்டாமல் தரை மேல்விழ, சிவபெருமான் திருவருண்மே லீட்டாலிறங்கினர். பிரமன் ஸ்ரீ விநாயகக்கடவுளைப் பூசித்தனன். அவரருளால் அவ்விரதம் முன்போலாக அதன்மேற் பெருமான் அம்மையாருடன் ஆரோகணித்தனர். மூத்த பிள்ளையார் – இளையபிள்ளையார் – திருமால் - இந்திரன் முதலான தேவர்கள் தத்தம் வாகனங்களிலேறிவரவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்பக்கத்திலுஞ் சூழ்ந்துவரவும், ஸப்தருஷிக ளாசீர்வதிக்கவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு கொண்டு முன் செல்லவும், பாநுகம்பன் - வாணன் – சங்குகன்னன் முதலிய சிவகண நாதர்கள் வாச்சிய மிசைக்கவும் சிவபெருமான் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ரபுஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.அமரர்கள் அப்பொழுது ஐயனைப் பணிந்து "அண்ணலே! வில்லைவளைத்துக் கணைவிடவேண்டும்'' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லையெடுத்து வளைத்து, வாசுகியாகிய நாணேற்றினர். [அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை யழிப்பின், அந்தரர் அந்தமில்லாத அகந்தையுறுவராதலின், அவ்வாறின்றி] இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணிந்து, பிறகு புன்னகை செய்யப் புரமூன்றுந் தீப்பற்றிச் சாம்பராயின, பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும், யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால்வந்து பணிய கண்ணுதல் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அவரவரிடத்திற் கனுப்பித் திருக்கைலைமலைக் கெழுந்தருளினர். அமரர்துயர் தீரும்படி முப்புரத்தைச் சிரித்தெரித்தலின், சிவபிரான் த்ரிபுராந்தக மூர்த்தியெனத் திருநாமமுற்றனர்

🕉️1️⃣9️⃣கங்காவிஸர்ஜந மூர்த்தி🕉️அயோத்தி நகரை யரசுபுரிந்த சகரன் என்னுஞ் சக்ரவர்த்தி விடுத்த அசுவமேதப்புரவியை அமரேசன்கண்டு ...
07/05/2025

🕉️1️⃣9️⃣கங்காவிஸர்ஜந மூர்த்தி🕉️

அயோத்தி நகரை யரசுபுரிந்த சகரன் என்னுஞ் சக்ரவர்த்தி விடுத்த அசுவமேதப்புரவியை அமரேசன்கண்டு மனம் பொறானாகித் தன் வாழ்வுக் கீனம் வந்ததேயென்று சிந்தை நைந்து வஞ்சனையாற் பற்றி, பாதலத்திற் கடுந்தவம்புரியுங் கபில முநிவர் பக்கலிற் கட்டிப் போயினன். அம்மன்னவன் மக்கள் அறுபதினாயி ரவரும் தந்தை கட்டளைப்படி தரணி முழுதுந்தேடிக் காணாது, பாரைத்தோண்டிப் பாதலமடைந்து அரியதவசியாகிய கபிலர் பக்கலிற்கட்டிய பரியைக்கண்டு இக்கள்வனே நமது புரவியைக்கவர்ந்து காவலன் யாகத்தைப்போக்கக் கருதியவனெ ன்று கனன்று அவர் துன்புறவைத்தனர். அதனால் முநிவர் முனிந்து விழிக்க, விழித்தீயினாற் சகரபுத்திரர் அறுபதினாயிரவருஞ் சாம்பரா யழிந்தனர். அச்செய்தி யவருடன் போந்த தூதுவர் சொல்லத் தெரிந்த அரசன் தன் பௌத்திரனாகிய அஞ்சு மானை யழைத்து ''என் புதல்வரிறப்பினும் எடுத்த யாகத்தை விடலாமோ?" என அஞ்சுமான் பாதலஞ்சென்று கபிலர்முன்னுள்ள சாம்பர் மலையைக் கண்ணுற்று நடுங்கி, முனிவர் முன்வந்து குதிரையைக் கேட்க, முனிவர் மனமகிழ்வுற்றுப் புரவி யைக் கொடுக்கப்பெற்று, பூவுலகடைந்து பிதாமகன்பால் விடுத்து அவ்யாகத்தை முடிப்பித்தான். அவன் சந்ததியி லொருவனான பகீரதன் பண்டைக்காலத்தில் தன் மூதாதையர் முனிவன் முனிவால் முடிந்து சாம்பராய் நரகத்தில் மூழ்கியுள்ளா ரென்று தெரிந்து, அவர்களைச் சுவர்க்கமடைவிக்கக்கருதிப் பதுமனை நோக்கிப் பதினாயிரவருடந் தவம்புரிந்தனன். பகீரதன் பண்ணிய பெருந்தவத்திற்குக் களித்த பிரமன் பிரசன்னனாகி "ஆகாயகங்கை அவர்கள் அஸ்தியிற்பட்டாற் சுவர்க்கமடை வர். அஃது அவனிமேல்வரில் அதன் வேகத்தை யாற்றுதல் அரனுக்கு அமையுமன்றி ஏனையோருக்கேலாதாகலின், சிவபிரானை நோக்கித் தவஞ்செய்க" எனச் சாற்றி மறைய, புகீரதன் பதினாயிரவருடந் தவம்புரிந்து பரமனருள் பெற்று, கங்கையைக் கருதி ஐயாயிரவருடம் அருந்தவம்புரிகையிற் கங்கை பெண்வடிவாக வந்து "என்வேக மதிகமாதலின் என்னைத் தாங்கும்படி ஈசனை நோக்கி இன்னுந் தவஞ்செய்க'' என்றிசைப்ப, இறைவனை நோக்கி இரண்டாயிரத்தைஞ்னூறு வருடம்மீண்டுந் தவஞ்செய்தலும் எம்பிரான் காட்சிதர, கங்கை பெண் வடிவாக வந்து கூறியதை விண்ணப்பித்து "காக்கிறேன்'' என்று கண்ணுதல் கொடுத்த வரத்தைப் பெற்று, திரும்பவுங் கங்கையைக் கருதி இரண்டாயிரத் தைஞ்னூறுவருடந் தவமிழைத்தனன் . கங்கை அப்பொழுது திரிலோகமும் அச்சமுற்று அலறும்படி ஆரவாரித்துக்கொண்டு வந்து தோன்றினள். அவ்வாறுவந்த கங்கையைச் சிந்தாழற் சிவபெருமான் சடைநுணியி லணிந்தனர். பகீரதன் கங்கையைக் காணாமற் கலங்கி நிற்பதுகண்டு, கருணாமூர்த்தி “நமது சடையிலிருக்கின் றனள்; அஞ்சற்க" என்று திருவாய்மலர்ந்து சிறு திவலைவிட, கங்கை நாதன்சடையிலிருந்து நதியுருநண்ணி நானிலத் திறங்கினள். இவ்வாறு வந்த கங்கை முன் பகீரதன் படர்கையில் இறந்தோரைக் கதியிற்சேர்க்க விரைந்து செல்லுங் கங்கையின் வேகத்தால், ஜந்து முறிவர் வேள்விச்சாலை யழிய அவர்கோபித்து அந்நீரை உள்ளங்கையி லேற்றுட்கொண்டனர். அரசன் கங்கையைக் காணாமல் ஜந்துமுநிவரைப் பணிந்து முன் நடந்தவற்றைமொழிய அவர் மனமிரங்கிச் செவிவழி விட்டமையால் ஜாந்நவியெனப் பெயர்பெற்று, இறந்து கிடைந்த சகரர்கநடலுதிர்ந்த சாம்பரிற்படிய அவர்கள் நற்கதியடைந்தனர்.பகீரதனாற் கொண்டுவரப் படுதலின் கங்கைக்குப் பாகீரதியெனவும் ஒருபெயர் வழங்காநிற்கும். மேற் கங்காதரத்திற் கூறிய வண்ணம் சிவப்பிரசாதத்தினாற் பிரமன் தனது மனோவதி நகரிற்குக்கொண்டுபோன கங்கை பகீரதன் வேண்டுகோளால் பூமியில் வந்தபொழுது, உலகமழியாமற் சிவபிரான் தமது சடையிலேற்று, அவன் பிரார்த்தனைக் கிரங்கி அதிலோர் துளிவிடுத்தனர். ஆதலின் கங்காவிஸர்ஜநமூர்த்தி யென நாமமெய்தினர்

🕉️1️⃣8️⃣கங்காதர மூர்த்தி🕉️திருக்கயிலாயகிரிக் கருகிலுள்ள ஒரு சிங்காரவனத்தில் சிவபிரான் உலாவு கையில் உமாதேவியார் ஒன்றமுரைய...
06/05/2025

🕉️1️⃣8️⃣கங்காதர மூர்த்தி🕉️

திருக்கயிலாயகிரிக் கருகிலுள்ள ஒரு சிங்காரவனத்தில் சிவபிரான் உலாவு கையில் உமாதேவியார் ஒன்றமுரையாது ஒரு விளையாடல் கருதிப் பின்வந்து தமது திருக்கரங்க ளிரண்டினாலும் பெருமானது திருவிழிகளை மூடினர். அதனால் அளவில்லாத அண்டகோடிகளிலுள்ள ஆன்மாக்களெல்லாம் அல்லலுற் றழுங்கும்படி அந்தகாரம் நிறைந்தது. தினகரன் வெயிலுந் திங்களின் நிலவுந் தீயின் சுடரும் தேவர் ஒளியும் மற்றெங்குமுள்ள பிரகாசமுமிறந்து உலகமுழுவதும் பேரிருண்மய மாயிற்று.சிவபிரான் திருவிழி யொளியால் எல்லாச் சோதியும் இயங்கும் தன்மையால், கங்களானது கண்களைக் கவுரி கையால் மூடிய கணமொன்றில் உயிர்கட்கு ஊழி பல கழிதல் கருதி, கருணைமூர்த்தி மன்னுயிர்த் தொகைகட் கின்னருள்புரியத் தன்னுளமதனிலுன்னினனாகி, நெற்றியினாப்பண் நீள்விழி தோன்றுவித்து, அன்னது கொண்டுலகின் இன்னலை விலக்கி நீங்காநிலையாய் நிறைந்த பேரிருளைத் தீர்த்து, திங்கள் – செஞ்சுடர் – தீ - முதலாய சுடர்கட்கொளிசெய்தனர். எண்ணிறந்த ஆன்மாக்கள் தத்தம் உண்ணிறைந்த பெருங்களிப்பால் உமைபாகனை வழுத்தின.

இத்திறச்செய்கையை இறைவியறிந்து சித்தமதனில் மெத்தப்பிரமித்து ஈசன் இணை.விழிமூடிய இருகரத்தையும் இமைப்பொழுதிலெடுத்தனள். அவ்வாறெடுக்கையில் அம்மையாருக்கேற்ற அச்சத்தால் விரல்கள் பத்திலும் வியர்வு தோன்ற, விமலை கண்டு கைவிதிர்க்க, பத்துவிரலிலிருந்து பிறந்தவை பத்துக்கங்கைகளாகிப் பெருகிச் சத்தசமுத்திரக்கட்கும் வழிகொண்டன: நூறு ஆயிரங் கோடி முதலிய கணக்கில்லாத முகமுற்று மூதுலக முழுவதும் மூடிப் பரவக்கண்டு மோசம் வந்ததென்று இந்திரன் பிரமன் விண்டு மூவரும் திருக்கயிலாய கிரியில் திருநந்திதேவர் விடைபெற்றுத் திருச்சந்நிதானத்தி னுட் சென்று திரியம்பகனைச் சேவித்து "தேவதேவா! ஏதோவொரு வெள்ளம் எங்கும் பெருகி எல்லையில்லா திரைந்து யாவையு மழியஅண்ட முழுவதுங் கவர்ந்தது. அதனை யடக்கி அடியேங்களையும் அகிலத்தையும் அளிக்க வேண்டும்" என்றறைய, பன்னகாபரணன் பார்வதி விரலிற் பத்துக் கங்கைகள் உற்பவித்ததை யுணர்த்தி உலகைச்சூழ்ந்த அவ்வெள்ளத்தை யுன்னியழைத்துத் தமது * சடைக் கற்றையிலோர் மயிர் முனையில் தரித்தனர்.* இஃதிவ்வாரிருக்கையில், வைணவரி லொருசாரார் "திருமால் திரிவிக்கிர மாவதாரங் கொண்டு, மாவலிபால் மூவடி மண் ஏற்று ஆகாயத்திற் றன தடியை நீட்டிய பொழுது, பிரமன் கங்கா சலத்தால் அபிடேகித்தனன்' எனவும், மற்றொருசாரார்

“வாமனாவதாரங்கொண்ட விஷ்ணுமூர்த்தியின் அங்குஷ்டத் தினின்றுங் கங்கை அவதரித்தது” எனவுங் கூறி, "அத்தகைய கங்கையைச் சிவபிரான ணிந்தனர்” எனவும், கர்ணபரம்பரையில் வழங்கி வருகின்றனர். அவையொவ்வா: எவ்வாறெனில்,ததீசி - கண்ணுவர் - பிருகு முதவிய முநிசிரேஷ்டர் சாபத்தாற் பத்துப் பிறவியடைந்த பதுமநாபன் (மச்சம் – கூர்மம் - வராகம் - நரசிம்ஹம் - வாமனமாகிய) ஐந்து அவதாரங்களில் கண் - ஓடு - கொம்பு – தோல் - முதுகந்தண்டு இவற்றைப் பறிகொடுத்து) , ஐயனால் தண்டிக்கப்பெற்றும், மற்றைந் தவதாரங்களில் மஹாதேவனை யருச்சித்து வரங்கள் பெற்றும், தான் பெற்ற சாபப்படி, தசாவதாரங்க ளுஞ் செய்தொழிந்தனர் எனச் சிவபுராணங்கள் விளங்கக்கூறும். [இச்சரிதங்களை முறையே மச்சாரி – வராஹாரி – கூர்மாரி - ஹிம்ஹக்நம் - கங்காளமூர்த்தங்களிற் கண்டு கொள்க. ஈண்டு : விரிவு கருதி, விடுத்தாம்.] இது நிற்க.ஈண்டுக் குறளுரு வேற்று, மாவலிச்சக்ரவர்த்திபால் யாசித்து மூவடி மண் பெற்று, வையகமும் வானகமும் மாயோன் அளந்த பொழுது, அவ்வாமனனது அடி அங்குஷ்டம் மேலண்டகடாக முகட்டிற்பட்டு, அண்டகடாகம் பினத்து, ஆங்குள்ள ஆகாயகங்கை அவனிமே லொழுகியதென்றும், அது கங்காத்வாரத்தின் வழியே, மாளவதேச மூலமாய்ச் சென்று மேற்கடலிற் சங்கமமாயிற்று என்றும், சிவரஹஸ்யம் துதீயாம்சத்தில் ஸ்ரீந்தியெம்பெருமான் ஹிமவானுக்குப் பூலோக விசிஷ்டத்தைக் காட்டுகிற கட்டத்திற் கூறப்பட்டுளது.

🕉️1️⃣7️⃣சண்டதாண்டவ மூர்த்தி🕉️ஸ்ரீவடாரண்யத்தின் மகிமையைச் சிவபிரானாற் சொல்லக் கேட்ட சுநந்த முநிவர், பெருமான் அதுக்கிரகித்...
02/05/2025

🕉️1️⃣7️⃣சண்டதாண்டவ மூர்த்தி🕉️

ஸ்ரீவடாரண்யத்தின் மகிமையைச் சிவபிரானாற் சொல்லக் கேட்ட சுநந்த முநிவர், பெருமான் அதுக்கிரகித்தவண்ணந் தாண்டவதரிசனத்தை விரும்பி ஆங்கடைத்து தவத்திருந்தனர். அவ்வாறிருக்கையிற் கண்லுதல் கைவிரலணியாகிய கார்க்கோடகன், திருவிரலில் விஷத்தைக்கக்க, விடையூர்தி ''நம்மை மனத்திற் கரு தாது மமதையோடு நீ செய்த தீமைக்கத் திருக்கைலையை நீங்குக” என, நாகம் நடுங்கிப்பணிய, நாதன் "வடாரண்யத்தலத்திற் பல வாண்டுகளிருந்து அருந்தவம் புரியுஞ் சுசந்தருடன் சண்டதாண்டவத்தைத் தரிசித்துப் பிறகுவருதி'' என, கட்செவி கருடனுக் கஞ்சி முறையிட, இறைவர் ''இத்தீர்த்தத்தில் மூழ்கி ஆண்டுள்ள முத்திதீர்த்தத்தில் முளைக்க'' என, அரவு அவ்வாறே ஆலவன மடைந்து அருந்தவஞ் செய்யுஞ் சுநந்தரைக்கண்டு தொழுது தனது வரலாற்றைச் சொல்ல, சுநந்தமுநிவர் மகிழ்ந்து தன்பக்கலிற் றவமியற்றப்பணித்து, பழையபடி நெடுங்காலந் தவத்திருப்ப, முநிவரைப் புற்றுமூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்தமையால், அவர் முஞ்சிகேச முநிவரெனப் பெயர்பெற்றனர். இதுநிற்க:நிசும்பன் சும்பன் என்னும் நிசாசாரிருவர் செய்துவருந் தீமையைப்பொறாத தேவர்கள், பார்வதியாரை நோக்கிப் பலகால் அருந்தவஞ்செய்ய, இறைவி இமையவர் முன் தோன்றி, "அமரரே! நீங்களவாவிய அடைவே அவர்களை யழிப்பேன்'' என்றருளிச்செய்து மலைச்சாரலை யடைந்து தவவடிவேற்று வசித்திருக்கையில், சண்டன் முண்டன் என்னுந் தானவரிருவர் சாம்பவியைச் சார்ந்து, "தார்குழலே! தனித்திருப்பானேன்; சாற்றற்கரிய வலியுடைய சும்பனிடஞ்சேர்க” எனச் சொல்ல, அம்பிகை "அருந்தவமாற்றும் யான் ஆடவரோடுரையாடேன். அரைக்கணத் தகலுமின்" என்றறைய, அவர்கள் சும்பாசுரன்பால், தேவியின் பொலிவை வியந்து செப்பி, அவனேவலாற் சில படையுடன் மீட்டுஞ் சென்றழைத்தும் வாராமை நோக்கி வலிதிற் கைபற்றி யீர்க்கக் கருதுகையில், விமலை வெகுளிகொள்ள, அம்மையார் தோளிலிருந்து அனேகஞ் சேனையும் ஒருசத்தியும் அவதரித்து, அவ்விருவரையுஞ் சேனையுடன் சங்கரித்தனர். ''சண்டனையு முண்டனையுஞ் சங்கரித்தமையாற் சாமுண்டியெனப் பெயர்பெற்றுத் தரணியோர் தொழவாழுதி'' என அச்சத்திக்கருளினர். அவற்றை யறிந்த நிசும்பன் - சும்பன் என்போர் அநேக அசுரருடன் ஆர்ப்பரித்து வந்து அம்மையை யெதிர்த்து அஸ்திரமாரி சொரிய, உமாதேவியார் தமதுடலினின்று ஸப்தமாதர்களையுஞ் சிவதூதியரையும் உதிப்பித்து யுத்தத்திற்கனுப்பி அவர்களால் அசுரச்சேனையை யழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையு மாய்த்தனர்.ஆற்றலுடைய அவ்விரண்டு அசுரர்கட்கும் இளையாளாகிய குரோதி யென்பவள் பெற்ற இரத்தபீசன் தனதுடற்சோரியில் ஒரு துளி தரைமேல் விழுந்தால் அத்துளி தன்னைப்போலத் தானவனாமாறு வரம் பெற்றனன். அவன் இச்செய்தியறிந்து இமைப்பொழுதி லெதிர்த்தனன். அந்நிருதனுடன் ஸப்தமாதர்கள் சமர்கெய்கையில் உதிரத்துளிகட்கு ஒவ்வோர் உருவேற்றதுகண்டு ஓடிவந்து உமையம்மையோடுரைப்ப, தேவியார் சினமிகத் திருத்தோளினின்றுங் காளி தோன்றினள். ''பெண்ணே யான்! இரத்தபீசனைச் சங்கரிக்கையில் உதிரத்துளி யொன்றும் பூமியில் விழாமல் உன் கைக்கபாலத்தேந்தி யுண்ணக்கடவாய்" என்று பணித்து, அவளுதிரபானஞ் செய்துவர, இறைவியார் இரத்தபீசனை இமைப்பிலழித்து இமையவரை அவரவர் நாட்டிற்கேக விசைத்து, காளியைக் களிப்பித்து அவளுக்குச் சண்டியென்று பெயரும் தெய்வீகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ்செய்து அவர் பக்கலில் வசித்தலும் ஆகிய இவற்றை அநுக்கிரகித்து, ஸப்தமாதர்கட்கருள்செய்து, அந்தர்த்தானமாயினர். காளி அசுரருதிரமருந்திய ஆற்றலாலும், இறைவியாரிடம் பெற்ற வரத்தாலு இறுமாந்து மாமிசம் நிண முதலியவற்றைப் புசித்து, மோகினி இடாகினி பசாசு பூதங்கள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய் உலக முழுவது முலவிவடாரண்யத் தருகில் வந்து யாவரையுந் துன்புறுத்தி வாழ்ந்திருந்தனள். இஃதிவ்வாறிருக்க,ஒருநாள் திருவாலங்காடு சென்ற நாரதமுநிவருக்குக் காளியின் தீச்செயல்களைக் கார்க்கோடகமுநிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுமளவில், காளி விழுங்கவர, அவர் கரந்து சென்று விண்டுவைக்கண்டு விஷயத்தை வாய்விண்டனர். திருமால் சிவபிரான்பால் திருவிண்ணப்பஞ்செய்ய, இறைவர் ''இப்பொழுதே அக்காளியின் வன்மைகுன்ற வடவனமடைவோம்'' என்று கூறி, சுநந்த முநிவர் கார்க்கோடக முநிவர்கட்குக் கருணை செய்யக் கருதி ஆலவனமடைந்தனர்.மாதேவன் வயிரவவடிவு கொண்டமையின், உடன்வந்த பூதகணங்களுடன் காளியின் சேனை எதிர்த்து ஆற்றாது, காளிக்கறைய, அவள் அமர்க்கோலங் கொண்டுவந்து ஐயனைக்கண்டு பயந்து “நிருத்த யுத்தஞ்செய்வோம்" என நிகழ்த்த, முன்னோனிசைந்து முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனந்தந்து திருநடனத்துக் குத் தேவருடன் வந்தனர். அக்காலத்து அமரர் அவரவர்கட்கிசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம் - அற்புதம் - இரௌத்ரம் - கருணை – குற்சை – சாந்தம் - சிருங்காரம் – பயம் – பெருநகை - வீரியமென்னும் நவரசங்களும் அபிநயமும் விளங்க வாத்தியங்கட்கொப்பப் பாண்டரங்கமாகிய சண்டதாண்டவத் தைக் காளியுடன் செய்கையில், கருணாநிதியின் திருச்செவியிலிருந்த குண்டலமா னது நிருத்தவேகத்தால் நிலத்தில் நழுவ, அதை இறைவரே திருவடி யொன்றினா லெடுத்துத்தரித்துத் திருத்தாண்டவஞ் செய்து காளியைத் தோல்வியடையச் செய்தனர். அவள் செயலற்று நாணிப் பணிந்தனள். அருள்வல்லல் "ஈண்டோர் சத்தியா யிருத்தி" என அநுக்கிரகித்து இருமுநிவரும் எண்ணில்லா அடியார்களும் தமது தாண்டவக்கோலத்தைச் சர்வகாலமுந் தரிசிக்கும்படி ஆண்டு வீற்றிருக்கின்ற னர்.இக்காரணத்தா லிறைவர் சண்டதாண்டவமூர்த்தி யெனப் பெயரெய்தினர்.

🕉️1️⃣6️⃣ஸதாந்ருத்த மூர்த்தி🕉️சிவபெருமான் ஆன்மாக்களுக்குப் பெத்த முத்திகளைத் திருவருள் செய்தற் பொருட்டுப் பஞ்சாக்கரமே திர...
28/04/2025

🕉️1️⃣6️⃣ஸதாந்ருத்த மூர்த்தி🕉️

சிவபெருமான் ஆன்மாக்களுக்குப் பெத்த முத்திகளைத் திருவருள் செய்தற் பொருட்டுப் பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்சகிருத்தியத் திருநடனத்தை யெஞ்ஞான்றும் இயற்றி யருளாநிற்பர்.

“தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற்சாற்றியிடு மங்கியிலே சங்காரம் - ஊற்றமாய்ஊன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்திநான்ற மலர்ப்பதத்தே நாடு."“மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ்சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தால்ஆநந்த வாரிதியி லான்மாவைத் தானழுத்தல்தானெந்தை யார்பாதந் தான்."என்னும் உண்மை விளக்கத்தின்படி, பெருமான் மூன்று திருக்கரங்களாலும் இரண்டு திருவடிகளாலும் பஞ்சகிருத்திய மியற்றுகின்றார். எவ்வாறெனில், தமருகமேந்திய கரத்தினாற் சிருட்டியும், அமைத்த அஸ்தத்தினால் திதியும், மழுவேந்திய கையினாற் சங்காரமும், முயலகன் முதுகிலூன்றிய திருவடியினால் திரோபவமும், அநவரத நடம்பயிலும் அடித்தாமரையினால் அநுக்கிரகமும் புரிவர்.

அன்றியும்,''உரையுணர்வுக் செட்டா வொருவன்மிகு பஞ்சாக்கரத்தால் வரைமகடான் பாதி - பரையிடமாய்க்காணும் படியே கருணையுருக் கொண்டாடல்பேணுமவர்க் குண்டோ பிறப்பு.''என்றபடியே , ஆன்மாக்கள் அநாதியே பந்தித்துள்ள பாசவீக்கம்போக்கி முத்தியடைதற் பொருட்டே, அருள்வடிவாகிய அம்மையார் பக்தாநுக்கிரக காரண மாய், பஞ்சாக்கரவடிவமாகிய அவ்வாநந்தத் திருநடனத்தை வாமபாகத்தினின்றுந் தரிசிப்பர். மேலும்,"ஆடும் படிகேணல் லம்பலத்தி லையனேநாடுந் திருவடியி லேநகரங் - கூடுமகர முதரம் வளர்தோள் சிகரம்பகருமுகம் வாமுடியப் பார்.”என்றபடியே, சிவபிரான் நிருத்தக் கோலங்கொண்டஞான்று திருவடியில் நகரமும், திருவயிற்றில் மகரமும், திருத்தோளில் சிகரமும், திருமுகத்தில் வாகாரமும், திருமுடியில் யகரமுமாகக்கொண்டு ஸ்ரீ பஞ்சாக்ஷரமே திருவுருவாக நின்று ஆன்மாக்களின் மீதுள்ள கருணையால் ஐவகையான கிருத்தியங்களையு மியற்றாநிற்பர். இனி இந்நடனம் ஊனநடனம் ஞானநடனம் என இருவகைப்படும். சிவபிரான் திருக்கயிலாயமலை ஸ்ரீ மேருமலை - வடாரண்யம் - திருத்தில்லை – திருவாலவாய் - திருநெல்வேலி - திருக்குற்றாலம் - திருத்தெளிச்சேரி முதலாகக் கூறப்படும் பலவிடங்களிற் பலகாரணங்களாற் பலமுறை பதம் பெயர்த்தாடி யிருப்பினும், ஸ்ரீ பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்சகிருத்தியகாரணமாக எப்போதும் உமையம்மையார் தரிசித்து நிற்கும்படி திருமால் திருந்திதேவர் பிரமதகணங்கள் முதலானாரது தோற்கருவி தொளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக் கருவி மிடற்றுக்கருவி முதலியவற்றி னோசையோடு திருநடனஞ் செய்திருத்தலின், ஸதாக்ருத்தமூர்த்தியெனப் பெயருற்றனர்.

ஸதாந்ருத்தமூர்த்தயே நம:

🕉️1️⃣5️⃣ஸந்த்யாந்ருத்த மூர்த்தி🕉️தேவர்கள் சிவாக்கினை யின்றித் திருப்பாற்கடலை மதித்த பொழுது அதில் நாட்டிய மந்தரமலையாகிய ம...
22/04/2025

🕉️1️⃣5️⃣ஸந்த்யாந்ருத்த மூர்த்தி🕉️

தேவர்கள் சிவாக்கினை யின்றித் திருப்பாற்கடலை மதித்த பொழுது அதில் நாட்டிய மந்தரமலையாகிய மத்திற்குப் பூட்டப்பட்ட தாம்பாகிய வாசுகியென்னும் பாம்பு தன் தலைவால்களைப் பற்றியீர்க்குந் தேவாசுரர் வலிக்காற்றாமல் வாய்வழி நஞ்சுகக்கியது. அவ்விஷம் யாவரையு மெதிர்க்கத் திருமால் அதனை யெதிர்த்து உடல் கருகி உம்பர் குழுவுடன் வெள்ளிமலையை யடைந்து சிவபிரானுக்கு விண்ணப்பஞ் செய்து கொள்ள, அருள்வள்ளல் அதனை அமுது செய்தனர்.

[இதன் வித்தாரம் விஷாபஹரணத்திற் காண்க.]

ஆகமத்திரட்டு ''பொங்குங்கள் காதரன் காளமயின் றேயெரன்றும்புகலாம லிருந்தனனோர் கணப்பொழுது புலவோர்அங்கவனை யிடைவிடா தருச்சனைமுன் புரிந்தாரத்திதியே காதசியா மடுத்ததிதியதனிற்புங்கவர்பா ரணம்புசித்தே பூர்த்தியுற்ற ரதன்மேற்பொருந்துதிதி தனிலிமவான் பொற்கொடியைவைத்தேசங்கான் கு லஞ்சுழற்றி நடித்தனனோர் யாமஞ்சதுர்மறை லது பிரதோடம்மெனவே சாற்றும்.”

என்னும் பிரமாணத்தின்படியே,சிவபெருமான் தேவர் துயர் தொலையும்படி விஷபானஞ்செய்த காலத்தில், அதனால் தாமொருதீமையு மடைந்தாரில்லையாயினும், ஓர் திருவிளையாடல் செயக்கருதி ஓர் க்ஷணப்பொழுது ஒன்றுங் கூறாராய் உமாதேவியார் தம்மை யுபசரிக்கும்படி மௌநமாய்ச் சயனித்திருந்தனர்.

அதுகண்ட அமரர் அரனை யருச்சித்தனர். அத்திதியை ஆன்றோர் ஏகாதசியென்பர். அற்றைய நாள் முற்றும் உணவில்லாது அன்றிரவெல்லாம் நித்திரையினின்று நீங்கி மறுநாளாகிய துவாதசி யிற் பண்ணவர் பாரணஞ்செய்தனர். அதன்மேற்பட்ட திதியாகிய திரயோதசியிற் சிவபிரான் மலையரசபுத்திரியாராகிய உமாதேவியாரை நிறுத்திச் சூலத்தைச் சுழற்றி, கையில் தமருகமேந்தி ஓர் ஜாமகாலம் நிருத்தஞ்செய்தனர். அக்காலத் தையே வேதசிவாகமங்கள் பிரதோஷமெனக் கூறும். இதுபற்றி, பதினைந்து தினங்கட் கோர்முறைவருந் திரயோதசியைப் பிரதோஷ மென்பதன்றி, தினந்தோறு மாலையு மிரவுங்கலக்கும் ஒருசாமப் பொழுதையும் பிரதோஷகாலமெனவும், வருடத்திற் கோர்முறையெய்தும் மகா சிவராத்திரியை வருடப்பிரதோஷமெனவுங் கூறா நிற்பர். ஒவ்வொரு தினமும் உதயாதி இருபத்தாறேகால் நாழிகை முதல் இரவு மூன்றே முக்கால் நாழிகைவரையும் நாழிகை ஏழரை. இதில் ரஜநிமுககாலத்திற் சம்பவிப்பது பிரதோஷமெனவும், மத்தியான முகூர்த்த மெட்டனுள் எழுகழித்து எஞ்சிய எட்டாவது முகூர்த்தமே பிரதோஷமெனவும் ஆகமங்கள் கூறும். இம்முறை பற்றி மாதப்பிரதோஷத்தை மாதசிவராத்திரி யென்பர்.

இதுநிற்க. சிவபிரான் நிருத்தஞ்செயக்கண்ட தேவர் களித்து இருகரங்களை யுஞ் சிரமேற்குவித்து மனதை மகாதேவன்பாற் பதித்து அரனே பரனெனமதித்து ஆநந்தக்கூத்தாடினர்; அன்புருகிப் பாடினர்; ஐயனைக் கொண்டாடினர்; அருளாளர் விடைபெற்றுத் தமதிடத்தைநாடினர். இத்தகையநிருத்தகாலத்தில் தேவர்கள் தத்தமக்கியைந்த வாச்சியங்களும், திருமால் மிருதங்கமும்வாசித்தனர்.பெருமான் திருக்கயிலாயகிரியில் உமாதேவியார் முதலானார் காணப் பிரதோஷகாலத்தில் நடனஞ்செய்த அவசரம் ஸந்த்யாந் ருத்தமூர்த்தமெனப்படும்.

வருகின்ற சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம்
22/04/2025

வருகின்ற சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம்

🕉️1️⃣4️⃣புஜங்கத்ராஸ மூர்த்தி🕉️தாருவநத்து முநிவர்கள் தவமே சிறந்ததென்றும், அவர் பன்னியர் கற்பே மிகுந்ததென்றுங் கருதிக் கடவ...
20/04/2025

🕉️1️⃣4️⃣புஜங்கத்ராஸ மூர்த்தி🕉️

தாருவநத்து முநிவர்கள் தவமே சிறந்ததென்றும், அவர் பன்னியர் கற்பே மிகுந்ததென்றுங் கருதிக் கடவுளர் பெருமானாகிய கண்ணுதலைப் பரம்பொருளென மதியாது மமதை கொண்டு வாழ்ந்திருக்கு நாளில், சிவபெருமான் திகம்பரமாய்ப் பிக்ஷாடனத் திருக்கோலங் கொண்டும், திருமால் மோகினி வடிவேற்றுஞ் சென்று அம்முநிபத்தினிகள் கற்பையும் அம்முனிவர் மழித்தனர். அக்காலத்தில் அரிவையர் முயக்கி லவாவுற்றுத் தமதிருக்கை நாடிய அவ்வந்தணர் தத்தம் வீதியிற் கற்பழிந் துழலுங் காரிகையரைப்பார்த்துத் தமது ஞானத்தால் 'நம்தவத்தையழித்து நமது மனைவியர் கற்பை யொழித்தவன் சிவனே; அவனேவலால் ஆயிழையா யடைந்தவன் அச்சுதனே" என்றறிந்து விஷவிருக்ஷங்களைச் சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதினின்றெழுந்த பல பொருள்களையும் பரமபதியின்பேரிற் பிரயோகிக்க, சிவபிரான் அவற்றை எண்ணிய வகையெலாம் உடை, பாதச்சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை முதலியவாகச் செய்து கொண்டனர்.தாம் பிரயோகித்தவை பிரயோசனப்படாதது கண்ட தாருவநமுநிவர் யாகாக்கிநியினின்றெழுந்த சர்ப்பங்களையுஞ் சங்கரன் மேல்விட, அவை அச்சமின்றி அவனி யழியும் வண்ணம் அதிவேகமாகத் தமது காளி - காளாஸ்திரி - யமன் யமதூதன் என்னும் நான்கு நச்சுப்பற்களிலுள்ள தொளைவழி விஷஞ்சிந்திக்கொண்டு நாதனை நண்ண, அண்ணல் ஆதிநாளையில் விண்டுவின் வாகனமாகிய கருடனுக் கஞ்சித் தம்பால் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தமதுடலிற்றாங்கி யிருந்ததுடன் இப்பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்றுகூடி வாழுங்கள்” என்று திருவுள்ளஞ்செய்து அப்பாம்புகஞ்சும்படி திருக்கரத்தாற்பற்றிச் சிறிது பொழுது நடித்து, திருக்கரம் திருவடி அரை முதலியவிடங்களிற் கங்கணம் – காலணி – அரை நாண் - கடிசூத்திரமுதலியவாகப் பிணித்தருளினர்.

[இச்சரிதத்தின் ஏனைய விஷயங்கள் பிக்ஷாடநம் சார்த்தூலஹத மிவற்றில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்குக் கண்டுகொள்க.] தாருவநத்து முநிவர் செலுத்திய சர்ப்பங்களை அச்சுறுத்தினமையால், சிவபெருமான் புஜங்கத்ராஸமூர்த்தியெனத் திருநாமமெய்தினர்.

Address

Perumal Koil Street
Chennai

Telephone

+919884069253

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவ வேதம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சிவ வேதம்:

Share

Category