01/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும் ...
பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் சார்பாக *ஜமாஅதார்கள் அனைவரும் முக்கிய வேண்டுகோள்.*..
இறைவனை வணங்கிட இறைத்தூதர்கள் பலரால் கட்டப்பட்ட *மஸ்ஜிதுல் அக்ஸா புனிதமிகு பள்ளி அடங்கிய காசா பாலஸ்தீன மக்களின் மீது கொடூர இஸ்ரேலிய இராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது* என்பதை அனைவரும் அறிந்ததே..
காசா மக்கள்
உன்ன உணவு இன்றி உடை இன்றி
இருக்க இடம் இன்றி மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்..
இதை உலகம் முழுவதும் இருக்கின்ற முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மனிதநேயமிக்க பல கோடிக்கணக்கானோர் இதை கண்டித்து பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
பாலஸ்தீனம் முழுமையாக இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுபடவும் காசா மக்கள் மற்றும் பாலஸ்தீன போராளிகள் வெற்றி பெறவும் அந்த மக்களுக்காக *நாளை 2.10.2025 வியாழன் அன்று முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருந்து இறைவனிடத்திலே பிரார்த்திக்குமாறு* ஜமாத்துல் உலமா சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ஆகையால் நமது பகுதியைச் சேர்ந்த அனைவரும் நாளை நோன்பு இருந்து இறைவனிடத்திலே காசா மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
சஹர் நேரம் 4:24
நோன்பு திறக்கும்
நேரம் :6.05
நோன்பு திறப்பதற்கான
இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
*அஸர் தொழுகை பின்னர்* காஸா மக்களுக்கும் அவர்களின் வெற்றிக்கும்
*திக்ரு மஜ்லிஸ்*
*சிறப்பு துஆ* நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்வோம் வாருங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..
அனைவரும் நோன்பு காஸா மக்களுக்கு பிரார்த்தனை செய்வோம் நமது பிரார்த்தனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக..