06/05/2016
லூசிபர் சபையை குறித்து...
இன்று நாம் வாழும் காலம் கடைசிகாலம் என்பதை இந்த சமபவங்கள் நமக்கு வலியுறுத்துகிறது. அமேரிக்காவில் ஹோட்டல் காலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சபையானது தொடர்ந்து உலகம் முழுவதும் பரம்பி வருகிறது நாமறிந்தது. முதலில் சாத்தானுக்கு ஆராதனை செய்யும்படியாக இது ஆரம்பிக்கப்படவில்லை, தேவன் இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் பலர் ஒன்றுகூடி, கிறிஸ்தவர்களுக்கு புத்தி உண்டாக்கும்படி, அவர்களின் எதிரியாகிய சாத்தானை நாங்கள் வழிபடுகிறோம் என்ன நடந்துவிடும், என விளையாட்டாக ஆரம்பித்த இந்த இயக்கம், இப்போது முழுவீச்சில் அவனை “நம்பி” நடக்கும் அனுபவத்திற்கு வந்துவிட்டது.
“லூசிபர்” சபை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்று நீங்களும் நானும் பயந்துகொண்டிருக்கிறோமே, உண்மையில் இந்த சபையால் என்னை பொருத்தவரை பெரிய பாதிபில்லை ஏன் தெரியுமா?
“லூசிபரின்” பெயரில் ஆரம்பிக்கப்படும் சபையை காட்டிலும், நாம் கிறிஸ்தவ சபை என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல சபைகள் தான் இன்றைக்கு சாத்தானின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. லூசிபரின் பெயரை பார்த்தவுடன் நீங்களும், நானும் எளிதில் தப்பிக்கமுடியும், ஆனால் கிறிஸ்துவின் பெயரை சொல்லி ஏமாற்றும் சாத்தானின் சபைகள்தான் இன்றைக்கு நமக்கு பெரிய அச்சுறுத்தல்கள். இயேசு சொன்னார் ,”என் நாமத்தை தரித்துகொண்டு உங்களிடம் வருவார்கள் எச்சரிக்கை என்றார்”, அதன் அர்த்தம் "நான் தான் இயேசு” என அநேகர் எழும்வார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதன் சரியான அர்த்தம் என் பெயரைக்கொண்டு உங்களிடம் வருவார்கள், கிறிஸ்துவின் பெயரைக்கொண்டு வஞ்சிப்பார்கள், இது “இயேசுவை வழிபடும் சபைதான்” என்று சொல்லி உங்களை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்று அர்ததம்.
ஆக இன்றைக்கு சாத்தானின் பெயரில் வரும் சபைகள், நமக்கு உண்மையில் அச்சுறுத்தல்கள் இல்லை, மாறாக கிறிஸ்துவின் பெயரைச்சொல்லி ஆரம்பிக்கப்படும் சாத்தானின் சபைகளே மிகப்பெரிய அச்சுறுத்தலகள்.
In God's ministry
Your beloved
J.C.K. SUNDAR