Vishwa Hindu Parishad North Tamilnadu / விசுவ ஹிந்து பரிஷத் - வட தமிழ்நாடு

  • Home
  • India
  • Chennai
  • Vishwa Hindu Parishad North Tamilnadu / விசுவ ஹிந்து பரிஷத் - வட தமிழ்நாடு

Vishwa Hindu Parishad North Tamilnadu / விசுவ ஹிந்து பரிஷத் - வட தமிழ்நாடு Official Vishwa Hindu Parishad North Tamilnadu Profile VHPNTN - வட தமிழக விசுவ ஹிந்து பரிஷத்தின் அதிகார பூர்வ முகநூல் பக்கம்..

அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய ரக் ஷா பந்தன் நல்வாழ்த்துகள்.
26/08/2026

அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய ரக் ஷா பந்தன் நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்.         #ஓணம்
26/08/2026

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்.

#ஓணம்

தமிழக விசுவ ஹிந்து பரிஷத்தின் முதல் தலைவரும், தன் அருளுரையால் ஆன்மீக மறுமலர்ச்சி கண்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவா...
24/08/2026

தமிழக விசுவ ஹிந்து பரிஷத்தின் முதல் தலைவரும், தன் அருளுரையால் ஆன்மீக மறுமலர்ச்சி கண்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த நன்னாளில் அவரை போற்றி வணங்குவோம்.

தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். கடைக்கோடி மனிதர்களின் மனதில் தெய்வீகத்தை விதைத்தவர்.

சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். சுமார் 200 நூல்களை எழுதியுள்ளார்.

இளைஞர்கள் மனதிலே நஞ்சை விதைக்கும் ராகுலுக்கு விசுவ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்.
24/08/2026

இளைஞர்கள் மனதிலே நஞ்சை விதைக்கும் ராகுலுக்கு விசுவ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்.


இன்று புதுச்சேரி ஓம்காரனந்தா சாமி ஆசிரமத்தில் நடைபெற்ற ஆலய கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி மாவட் காரியகர்த்தர்கள் பங்கேற்றா...
24/08/2026

இன்று புதுச்சேரி ஓம்காரனந்தா சாமி ஆசிரமத்தில் நடைபெற்ற ஆலய கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி மாவட் காரியகர்த்தர்கள் பங்கேற்றார்கள்.

அது சமயம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமிகள் அவர்களிடம் ஆசிகள் பெற்றோம் ஹிந்து சமுதாய வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் தவம் புரிய வேண்டும்.

அனைவரும் அனைவரிடத்திலும் அன்பு கலந்த வார்த்தைகளையே கூற வேண்டும்
யாருக்கும் எதிரான சொற்களை பேசக்கூடாது.

போன்ற பல நல்ல அறிவுரைகளை நமக்கு வழங்கி, நமது பணிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்று ஆசிகளை வழுங்கினார்கள்

இந்த நிகழ்வில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் தர்மபிரஸார் மாநில அமைப்பாளர் திரு சு.வெ.ராமன் ஜி, வட தமிழகம் மாநில துணைத்தலைவர் திரு.ஞானகுரு ஜி , வட தமிழகம் மாநில சேவா பொறுப்பாளர் திரு லட்சுமி நாராயணன் ஜி, வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் மாநில தர்மபிரஸார் பொறுப்பாளர் திரு கிரண் குமார் ஜி மற்றும் புதுச்சேரி மாவட்ட செயலாளர் K. நந்தகுமார்

ஆகியோரு சந்தித்து ஆசிகள் பெற்றனர்.

இந்தியாவின் அறிவியல் பயணத்தில் ஒரு மகத்தான மைல்கல்லைக் கொண்டாடுகிறோம்! தேசிய விண்வெளி தினமான இன்று, சந்திரயான்-3-ன் வரலா...
23/08/2026

இந்தியாவின் அறிவியல் பயணத்தில் ஒரு மகத்தான மைல்கல்லைக் கொண்டாடுகிறோம்! தேசிய விண்வெளி தினமான இன்று, சந்திரயான்-3-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும், இந்திய விண்வெளி ஆய்வின் தளராத மன உறுதியையும் நாம் திரும்பிப் பார்க்கிறோம். முன்னோடி ஆய்வுகள் முதல் நிலவின் மேற்பரப்பை அடைந்தது வரை, சாத்தியமானவற்றின் எல்லைகளை அறிவியல் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

23/08/2026

திருச்சி காஜா பேட்டை ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசுக்கு 10 நாள் கெடு விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் மாநில அமைப்புச் செயலாளர் திரு பாலாஜி ஜி அறிவிப்பு.

வேதாந்த கேசரி ஸ்வாமி லட்சுமணானந்த சரஸ்வதி, சமூகத்தில் நலிந்த வகுப்பினரை மேம்படுத்த சபதம் எடுத்து, பழங்குடியினர் ஆதிக்கம்...
23/08/2026

வேதாந்த கேசரி ஸ்வாமி லட்சுமணானந்த சரஸ்வதி, சமூகத்தில் நலிந்த வகுப்பினரை மேம்படுத்த சபதம் எடுத்து, பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள சகபடாவை தனது செயல்பாட்டு மையமாக அமைத்து, ஆதரவற்ற பழங்குடியினரைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதை எதிர்த்தும், உள்ளூர் வனவாசிகளின் நலனுக்காகப் பணியாற்றியதாலும், வேதாந்த கேசரி ஸ்வாமி லட்சுமணானந்த சரஸ்வதி 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

ஏக் நாத் ராணடேவின் நினைவு தினம்.ஏக்நாத் ராணடே, பாரதம் முழுவதும் பயணம் செய்து, தமிழ் நாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான ...
22/08/2026

ஏக் நாத் ராணடேவின் நினைவு தினம்.

ஏக்நாத் ராணடே, பாரதம் முழுவதும் பயணம் செய்து, தமிழ் நாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான விவேகானந்தரின் மண்டபத்திற்கான பொதுமக்களின் ஆதரவை திரட்டினார். பல கட்சித் தலைவர்களையும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார்.

அவருடைய அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பீரமாக நிற்கிறது. ஸ்வாமிஜியின் சிந்தனைகளைத் தொகுத்து ” ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்” புத்தகத்தையும் ரானடே வெளியிட்டார்.

அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்திரா, தேசியப் புனர் நிர்மாணப் பணிகள், கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. தற்போது 640 கிளைகளுடன் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.

விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் , மாத்ருஷக்தி, துர்க்காவாஹினி சார்பில் வரலக்ஷ்மி வ்ரதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும...
22/08/2026

விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் , மாத்ருஷக்தி, துர்க்காவாஹினி சார்பில் வரலக்ஷ்மி வ்ரதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், லக்ஷ்மி பூஜையும் கீழ்கண்ட இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செம்பூண்டி, வேளச்சேரி மேடவாக்கம் விபாக், நாகாத்தம்மன் கோயில், சின்ன ஈக்காடு போக்குவரத்து குடியிரப்பு திருவள்ளூர் ஒன்றியம், ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் பகுதி, ரிஷிவந்தியம் ஒன்றியம் வெங்கலம் கிராமம்,
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருங்கோழி கிராமம் மற்றும் ஆத்தூர் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி மாரியம்மன் கோயிலிலும் நடைபெற்றது.

Address

Flat H, 169/32, Brindavan Apartments, Rangarajapuram Main Road, Rangrajapuram, Kodambakkam
Chennai
600024

Telephone

+919380427547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vishwa Hindu Parishad North Tamilnadu / விசுவ ஹிந்து பரிஷத் - வட தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vishwa Hindu Parishad North Tamilnadu / விசுவ ஹிந்து பரிஷத் - வட தமிழ்நாடு:

Shortcuts

Share