Jeevan ministries

Jeevan ministries Jesus Christ is the true living God.... live like Jesus and live with Jesus...be prepared to meet Him

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்...கடன் இல்லாத நாடு இல்லை... வீடு இல்லை... நிறுவனங்...
04/03/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்...கடன் இல்லாத நாடு இல்லை... வீடு இல்லை... நிறுவனங்கள் இல்லை... தனிப்பட்ட மனிதனும் இல்லை.
கணவனும் மனைவியும் வேலைக்கு செல்லும் போதும் குடும்பத்தில் கடன் பிரச்சினைகள்... ஏன் என்று யோசிக்கும் போது...ஒன்று அளவுக்கு மீறி ஆசை படுவது...மற்றவரைப் போல வாழ நினைப்பது...தேவையில்லாத ஆடம்பரம்..
இவைகள் தான் இன்றைக்கு மனிதர்களை கடனுக்குள் விழ வைக்கின்றது...சில நேரங்களில் நினைத்துப் பார்க்க முடியாத சுகவீனம் காரணமாக கடன் வரும்...இதை நம்மால் தவிர்க்க முடியும்... health insurance இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றது... எல்லாவற்றிற்கும் மேலாக நாம் திட்டமிட தவறுகிறோம்...
ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு அற்புதம் செய்த தேவன் 12 கூடைகள் மீதம் எடுக்க வைத்து பத்திரப் படுத்தவும்
சொன்னார் அல்லவா...சரி...ஏதோ கடன் வந்து விட்டது...அதை நிவர்த்தி செய்ய என்ன பண்றது..... முதலாவது உண்மையாக உழைக்க வேண்டும்...சோம்பலைத் தவிர்க்க வேண்டும்...கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து ஜெபித்து காரியங்கள் செய்யப்பட‌வேண்டும்... ஆலோசனை தேவனிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்... இந்த காரியங்களை நாம் தவறாமல் கைக் கொள்ளும் போது நிச்சயமாக கடனிலிருந்து விடுதலைப் பெற முடியும்.
கர்த்தர் நம்மை கொடுப்பவர்களாக மாற்றுவார் .. அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... ஒருநாள் ஏதோவொருபிரச்சினை காரணமாக வேதனையோடுதுக்க...
28/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... ஒருநாள் ஏதோவொரு
பிரச்சினை காரணமாக வேதனையோடு
துக்கத்தோடு... சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கனத்த இதயத்தோடு வீதியில் செல்லும் போது
தீடீரென்று உங்கள் முன்னால் ஒரு ஆட்டோ செல்லும்... உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும் என்ற வேதவசனம்...
பளிச்சென்று கண்களில் படுவது போல் எழுதப்பட்டிருக்கும்...அதைப் பார்த்த உடனே மனதின் பாரம் கண்ணீராக கண்களில் வழியும்...நன்றி இயேசப்பா என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஒரு குரல்..தளர்ந்து போயிருந்த நடையில் ஒரு வேகம்...கறுத்து போயிருந்த முகத்தில் ஒரு மலர்ச்சி...
இது தாங்க தேவனின் வசனத்தின் மகிமை... நம்முடைய ஆத்துமாவைக் குணமாக்கும் அருமருந்து...நம்மை அழிவுக்கு விலக்கிக் காக்கும்...வேத வார்த்தைகள் உயிருள்ளவை... சோர்ந்து போகும் போது ஜீவன் கொடுப்பவை...வேத வார்த்தைகள் மனமகிழ்ச்சி கொடுப்பவை...தியானிப்போம்...நமது
பாதைக்கு வெளிச்சமும் கால்களுக்கு தீபமுமாயிருக்கும்... அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... பயம் இல்லாத மனிதன் யாரும் இல்லை என்றே சொல்ல முட...
26/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... பயம் இல்லாத மனிதன் யாரும் இல்லை என்றே சொல்ல முடியும்...எதைக் குறித்தும் எனக்கு பயமில்லை என்று சொல்லுகின்ற மனிதர்களிடம் அவர்களுடைய முதுமையைக் குறித்து கேட்கும்போது கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள்....எந்த காரியத்தையும் இளமையில் எளிதாக தாண்டவோ எதிர் கொள்ளவோ முடியும்...
ஒருவேளை இளமையில் பயம் வரும் என்றால் எதையும் சாதிக்க இயலாது...
இந்த பயம் நம்மைத் தாக்க கூடாது என்றால் தேவன் மேல் பூரண அன்பும் நம்பிக்கையும் வேண்டும்...அவரை நம்பும் போது மாத்திரமே உன்னை முதிர் வயது
வரையும் தாங்குவேன் ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன் என்ற வசனம்
நம் வாழ்வில் கிரியை செய்யும்...தாவீது ராஜா கர்த்தரை நம்பினான் எனவே தான் அவன் மரண பயத்தை மேற்கொண்டு
பல வெற்றிகளைப் பெற்றான்...நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன் என்று‌எழுதியும் வைத்தார்... இன்றைக்கு
எதோ ஒரு காரியத்தைக் குறித்து பயந்து கொண்டு இருக்கின்றீர்களோ...பயத்தை
தூக்கி எறியுங்கள்...கர்த்தரை நம்பி தைரியமாக செயல் படுங்கள்...வெற்றி உங்களை தேடி வரும்... அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... உபத்திரவம் தாங்க முடியாமல் தான் வேதத்தை படிக்கல...
25/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... உபத்திரவம் தாங்க முடியாமல் தான் வேதத்தை படிக்கலாம் என்று நினைக்கின்றோம்...ஜெபிக்கலாம் என்று நினைக்கின்றோம்...தேவனைத் தேடலாம் என்று நினைக்கிறோம்...பல நேரங்களில் பேசாம எங்கேயாவது ஓடிடலாம்னு கூட நினைக்கின்றோம்... ஆனால் உபத்திரவப் பட்டது நல்லது என்று தாவீது சொல்லுகிறார்...இது உண்மையும் கூட... ஏனென்றால் உபத்திரவம் நம்மை பல காரியங்களை கற்று கொள்ள வைக்கிறது... நம்மோடு கூட இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சொல்லிக் கொடுக்கும்...ஏன் இந்த உபத்திரவம் வந்தது என்பதை யோசிக்க வைக்கும்...எதை செய்ததால் இதற்குள் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர வைக்கும்...திரும்பவும் இந்த உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்கு நம்மைப் பக்குவப்படுத்தும்...
இதைக் கடந்து வெளியே வருவதற்கு வழிகளை சொல்லிக் கொடுக்கும்...
இப்ப சொல்லுங்க...உபத்திரவப் பட்டது
நல்லது தானே... அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனி...
23/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதர்கள் ஒருவரும் இல்லை... நடந்து செல்பவன் சைக்கிள் வேண்டும் என ஆசையோடு நடக்கிறான்... சைக்கிளில் செல்பவன் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை படுகிறான்...பைக்கில் செல்லுபவன் காரில் செல்ல வேண்டும் என்று ஆசையோடு ஓடிக்கொண்டிருக்கிறான்...உயர வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல....ஆனால் அந்த உயர்வு‌ உலகம் அல்ல...தேவன் கொடுப்பதாக இருக்க வேண்டும்...மாம்சீகமாக(உலகமாக)ஒரு ஆசீர்வாதம் கிடைக்கும் போது நிச்சயமாக அந்த ஆசீர்வாதம் நிலைக்காது
அல்லது பிரச்சினை நிறைந்ததாக இருக்கும் ...ஒரு வேளை கடன் நிறைந்து கடனாளியாகக் கூட‌மாற்றி விடும்... என்வே தான் கர்த்தருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்க சொல்லப் பட்டு
இருக்கிறது....ஏற்ற நேரத்தில் தேவன் நம்மை உயரத்தில் வைத்து அழகு பார்ப்பார்...

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்...இந்த வார்த்தைகளை படிக்கும் போது மனதை வருடுவது போ...
22/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்...இந்த வார்த்தைகளை படிக்கும் போது மனதை வருடுவது போல இருந்தது.... பெற்றெடுத்த பெற்றோரைக் கண் முன்னே கொண்டு வந்தது... நாம் குழந்தைகளாக இருந்த பொழுது நடக்க கஷ்டப்படும் போது அம்மா நம்மை இடுப்பில் தூக்கி கொள்ளுவார்கள்... எவ்வளவு தூரம் என்றாலும் சுமந்து செல்லுவார்கள்....அப்பா ஓய்வாக அமரும் போது தன் குழந்தையை முழங்காலில் வைத்து தாலாட்டுவார்... இப்படி நம்முடைய தேவன் நம்மையும் வேதனை தாங்க முடியாமல் தள்ளாடும் போது சுமந்து செல்லுகிறார்... ஆறுதல் இன்றி
கண்ணீரோடு இருக்கும் போது முழங்காலில் வைத்து தாலாட்டுவார் என்று அவரே சொல்லுகிறார்...எத்தனை அன்பு நம் இயேசுவின் அன்பு...அந்த அன்புக்கு ஈடு இணை எதுவும் உண்டோ..
அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... "-அன்பு" _இந்த உலகத்தை இயங்க வைத்துக் கொண்டு இர...
19/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... "-அன்பு" _இந்த உலகத்தை இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் மூன்றெழுத்து மந்திரம்....பல விதமான ...வகையான அன்பு உண்டு....தாயின் அன்பு_இந்த உலகத்தில் தலைசிறந்தது...இந்த அன்புக்கு நிகர் எதுவுமில்லை...சகோதர அன்பு_உலகத்தையே வாங்கி விடலாம்....
நண்பனின் அன்பு_ கை கோர்த்து கொள்ளலாம்... காதலன் காதலி அன்பு மடியில் தலை வைத்துக் கொள்ளலாம்....
கணவன் மனைவி அன்பு காலமெல்லாம்
உடனிருக்கும்...இப்படியாக நாம் சொல்லிக் கொள்ளலாம்...ஆனால் அவைகளும் துரோகங்களும்...
வஞ்சகங்களும் நிறைந்தவைகளே இன்றைய காலகட்டத்தில்....எனக்காக உயிரைக் கொடுப்பதற்கு மேலே சொன்ன யாராவது தயாரா....வேண்டாங்க ஒரு யுனிட் இரத்தம்...ஐயோ எனக்கு HG லெவல் குறைவுங்க....ஒரு சிறுநீரகம்...மரணப் போராட்டத்தில் இருக்கும் போது கேட்டுப் பாருங்கள்... நானும் நீங்களும் பின்னிட்டு
ஓடி விடுவோம்... ஆனால் நமக்காக உயிரைக் கொடுத்த அன்பு...ஒரு துளி இரத்தம் கூட இல்லாமல் மொத்தமாக கொடுத்த அன்பு... தலையில் முள்முடி சூடிக்கொடுத்த அன்பு...குற்றமே செய்யாமல் நமது குற்றங்களுக்காக
கொல்கொதாவிலே சிலுவையில் தொங்கிய அன்பு...அவர் தான் நம் அருள்நாதர் இயேசு...கல்வாரி அன்பை எண்ணும் போது நமது கண்கள் எல்லாம் குளமாகிப் போகிறதல்லவா... அவருடைய பாடுகளை நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து விடுகிறதல்லவா....இதை விடவா பெரிய
அன்பு இந்த உலகில் உண்டு..இல்லவே இல்லை...கணவன் மனைவி ...பிள்ளைகள்
சகோதரர்கள்...நண்பர்கள்...காதலன் காதலி...ஏதோ ஒரு எதிர்பார்ப்புகளைக் கொண்ட அன்பு...கிடைக்கவில்லை என்றால் முறிந்து போகும் உறவுகள்...
இவர்களுக்காகவா இத்தனை ஆண்டுகள் ஓடினோம் என்று சிந்திக்க வைக்கும்...ஆனால் இயேசுவின் அன்புக்காக கொஞ்சம் கிரயம்(நேரம்) செலுத்திப் பாருங்கள்...நீங்கள் விட்டு சென்றாலும் விடாது உங்களை தொடர்ந்து வரும் உறவு.... இயேசு மாத்திரமே...அவர் அன்பு மட்டுமே... அவருக்கு முன்பாக மண்டியிட்டு‌ வாழ்வை அவருக்கு கொடுப்போம்... அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... வாழ்க்கையில் என்ன போராட்டம் வந்தாலும்... பிரச்ச...
17/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... வாழ்க்கையில் என்ன போராட்டம் வந்தாலும்... பிரச்சினைகள்
வந்தாலும்...வீண் பழிகள் சுமத்தப்பட்டாலும்..... பொய்யான நிந்தைகள் அவமானங்கள் சூழ நின்றாலும்....நம்மை தவறானவர்கள் அல்ல என்று நிரூபிக்க சாட்சி இல்லாத நிலையிலும்...சோர்ந்து போகாதிருங்கள்...கீழே விழுந்து விடாதிருங்கள்.... கர்த்தருடைய கரம் மாத்திரம் நம் மேல் இருக்கட்டும்...அப்படியிருக்கும் போது
கரம் பிடித்து நடத்தும் தேவன் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுவார்...நிந்தை மறையும்... அவமானங்கள் அழிந்து போகும்...பழி சுமத்தியவனும் பழிகாரனும் நம் முன் வந்து தலை கவிழ்ந்து நிற்கும் சூழ்நிலை
கர்த்தரால் உருவாக்கப்படும்... தேவனுடைய கரம் பராக்கிரமங்களைச் செய்யும்... சோர்ந்து போகாதிருங்கள்...
அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.... தவக் காலம்... பாவமன்னிப்பின் காலம்... ஆவிக்குர...
14/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.... தவக் காலம்... பாவமன்னிப்பின் காலம்... ஆவிக்குரிய வாழ்க்கையில் வசந்த காலம்....என பல பெயர்கள் உண்டு...உயிர்த்த பெரு விழாவுக்கு முன்பாக நாம் ஆசரிக்க கூடிய நாட்களே இவைகள்... எதற்காக இந்த நாட்கள்...இது ஒரு சடங்காச்சாரமாக தெரிகிறதே...நல்ல காரியங்கள் செய்வதில்லை...பெரும்பாலானவர்கள்
மாமிச உணவுகளைத் தவிர்க்கிறார்கள்...
இன்னும் சில வெளி ஆடம்பரங்களைத் தவிர்க்கிறார்கள்...சரி....இதை மறுக்கவில்லை....இது ஆவிக்குரிய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது....இது தான் கேள்வி....40 நாட்கள் கழித்து நமது அன்றாட வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது...திரும்பவும் எதை செய்யவில்லையோ அதையெல்லாம் செய்கிறோம்...நமக்கும் தேவனை அறியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்...நமது வாழ்க்கையில்
மாற்றம் வந்ததா....தேவனுக்கு பிரியமில்லாத ஏதோ ஒரு காரியத்தை விட்டு வெளியே வந்தோமா...ஜெப நேரம் கூடியதா....அவர் விரும்பும் பரிசுத்தத்தை நம்‌ வாழ்க்கையில் அப்பியாசப் படுத்துகிறோமா...இந்த நாட்களில் கூடி
ஜெபிக்கிற நிகழ்வுகள் வாழ்க்கையின் தொடராக மாறட்டும்...மது அறவே ஒழியட்டும்...வீணான ஆடம்பரங்களை நிரந்தரமாக தள்ளி விடுவோம்...நாம் இயேசுவின் பிள்ளைகள் என்ற வித்தியாசத்தைக் காட்டுவோம்....இல்லை
என்றால் LENT ஒரு சடங்காச்சரமான பாரம்பரிய நிகழ்வே.... சிந்திப்போம்
தேவனுக்கு மகிமையாய் வாழ்ந்து காட்டுவோம்... அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... இரட்சிக்கப் பட்ட நேரத்தில் நாம் தேவனுடன் எவ்வளவ...
11/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... இரட்சிக்கப் பட்ட நேரத்தில் நாம் தேவனுடன் எவ்வளவு நெருங்கி வாழ்ந்தோம்... நேரம் செல்வது தெரியாமல் அவரோடு இரவெல்லாம் பேசிக் கொண்டே இருந்தோமே... எவ்வளவு வரங்கள் நம் மூலம் செயல்பட்டது... வல்லமையால் நம்மை வழிநடத்தினாரே.... குறிப்பாக பெண்கள்..
குடும்ப சுமைகள் மற்றும் பாரங்கள் அதிகமாக அதிகமாக நம்மையுமறியாமல்
அவருடைய அன்பை விட்டு வெளியே வந்து விட்டோமே... எவ்வளவு வைராக்கியமாக ஓடிக் கொண்டிருந்த நாம் சோர்ந்து போய் அமர்ந்து விட்டோமே
ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு வெளியே வந்து விட்டோமே.... கண்களில் கண்ணீர் வடிகிறதல்லவா...எந்த கணவனுக்காக எந்த பிள்ளைகளுக்காக
தேவனின் அன்பிலிருந்து வெளியே வந்நதோமோ அவர்கள் நம்மோடு இருக்கிறார்களா...இல்லையே... அன்பு
தணிந்து போய்விட்டதே... ஆனால் என் இயேசு இன்றைக்கும் நம்மோடு இருக்கிறாரே...என் நேசம் தணிந்த போதும் என்னை வெறுக்காமல் என்னோடு வந்த அன்பரல்லவா... இன்றைக்கு எழும்புவோம்....எந்த நிலையில் இருந்து கீழே விழுந்தோம்
சிந்திப்போம்.... திரும்பவும் அவருக்காக எழும்புவோம்...முன்பு எப்படி வைராக்கியமாக நின்றோமோ அதை விட
மேலாக தேவனுக்காக நிற்ப்போம்... ஏனெனில் தேவனுடைய அன்பு மட்டுமே
ஒரு நாளும் மாறாதது...
அல்லேலூயா அல்லேலூயா

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... கால்களை குத்திக் கிழிக்கிற முட்கள் ...முள் உள்ள...
10/02/2024

அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்... கால்களை குத்திக் கிழிக்கிற முட்கள் ...முள் உள்ளே இருக்கும் போது இரத்தம் வராது...வேதனையும் சுருக் சுருக் என்று தைக்கிற உணர்வுமே வரும்...அந்த முள் வெளியே எடுக்கப்படவில்லை என்றால்
சீழ் பிடித்து செப்டிக் ஆகி சில சமயம் கால் அகற்றப் படும் சூழ்நிலை கூட உருவாக்கலாம்...முள் அகற்றப்பட வேண்டும்...வேதனை தருகின்ற முள் போன்ற காரியங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப் பட வேண்டும்.. நெரிஞ்சில் முள் போன்று ஒட்டிக் கொண்டு வரும் நோவு கொடுக்கும் செயல்கள் மாற்றப் பட வேண்டும்... இவைகள் ஒரு மனிதனிடம் இருக்கும் போது நிச்சயமாக அவனால் திருப்தியோடு வாழ முடியாது...இவைகள் இனிமேல் உங்கள் வாழ்க்கையில் இருப்பதில்லை என்று கர்த்தர் வாக்கு கொடுக்கிறார்... அல்லேலூயா

Address

Chennai

Telephone

+917418242850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeevan ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jeevan ministries:

Share