சைதை காமாட்சி அம்மன் தேவஸ்தானம்

  • Home
  • India
  • Chennai
  • சைதை காமாட்சி அம்மன் தேவஸ்தானம்
Directions

சைதை காமாட்சி அம்மன் தேவஸ்தானம் சைதை விஸ்வகர்ம பரிபாலனம்

17/02/2020

பரபரப்பாக நடந்த தேர்தலில் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தான நிர்வாக தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு :
1. பிரம்மஸ்ரீ சர்வேஸ்வஸ்ரன் ஆச்சாரி
2. பிரம்மஸ்ரீ யுவராஜ் ஆச்சாரி ,
3.பிரம்மஸ்ரீ . மோகன் ஆச்சாரி
4.பிரம்மஸ்ரீ ரமேஷ் ஆச்சாரி
5.பிரம்மஸ்ரீ சுப்ரமணி ஆச்சாரி
ஆகியோர் ஆலய அறங்காவலர்களாக தேர்வு பெற்றனர். காளிகாம்பாளின் அருளாசியுடன் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றி, விஸ்வகர்ம சமூகம் தழைக்க சமூக, ஆன்மிக சேவைகளை செய்ய விஸ்வமலர் சார்பாக வாழ்த்துக்கள்.
த.கோபிநாத் ஆச்சார்யா சென்னை

இந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடன் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்வோம்.நமது குல தொழில்கள் அ...
01/02/2020

இந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடன் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்வோம்.நமது குல தொழில்கள் அழிவில் இருந்து காக்க அவர்களின் வழி தொடர்வோம். கோயில் பணத்தை கணக்கு காட்டாமல் ஆட்டை போட்டு ,பல நூறு பேரின் திருமணத்தை தடுத்து,அடுத்தவன் சோத்தில் மண்ணை போட்டு,தன்னை தலைவனாக கட்டிக்கொள்ளும் தறுதலைகளை விரட்டுவோம்.
” தென்னிந்திய விஸ்வகர்ம கான்பரன்ஸ்”
ப்ரம்ம ஸ்ரீ T.M.முக்கண்ணாச்சாரியார்.

24/12/2019

சைதை காமாட்சியம்மன் கோவிலில் விதிமுறைக்கு மாறாக கோவிலின் அறங்காவலர் தலைவராக ஆக்கிரமித்துள்ள திரு முருகன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும் 1.சைதை விஸ்வகர்மா சமூக பரிபாலனத்திற்கு உட்பட்ட கோவிலில் சைதாப்பேட்டையில் வசிக்காத நீங்கள் எப்படி அறங்காவலராக முடியும்? பதில்: நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சைதாப்பேட்டையில் வசித்தேன் எனக்கு அரசியல் கட்சி பிரமுகர்களை நன்றாக தெரியும். 2. முன்னாள் அறங்காவலர் மறைவுக்குப் பின்னர் புதிய அரங்காவலர் ஐ தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓட்டுப் பதிவு செய்வதற்கு முன் நிறுத்தியது ஏன்? பதில் : சைதாப்பேட்டையில் வசிக்கக்கூடிய பலருக்கு அறங்காவலர் ஆகக்கூடிய தகுதியும் விருப்பமும் இருப்பதால் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக தேர்தல் முறையை சிறிது காலம் தள்ளி வைக்கலாம். இருக்கக்கூடிய நான்கு அறங்காவலர்கள் சிலகாலம் நிர்வாகத்தை கவனிக்கலாம் பின்னர் பொது கருத்து ஏற்படுத்தி அறங்காவலர் நியமிக்கலாம் 3. அப்படி எனில் நீங்கள் எப்படி அறங்காவலர் குழு தலைவர் ஆக தேர்தல் இன்றி ரகசியமாக பதவி ஏற்றது ஏன்? பதில்: நான் கடந்த 40 ஆண்டுகளாக சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.4. ஐயா நீங்கள் விதிகளுக்கு புறம்பாக அறங்காவலர் ஆவது எப்படி என்ற கேள்விக்கு இது பதில் இல்லையே? பதில் : எனக்கு பல கோடி சொத்து உள்ளது. கோவிலின் பணத்தை திருட அவசியமில்லை.இதுபோலவே கேட்கப்படும் எந்த கேள்விக்கும் சரியான பதில் சொல்லாமல் மக்களை ஏமாற்றி கோவிலின் சொத்துக்களை அதன் மூலம் வரும் வருமானத்தையும் கணக்கில் காட்டாமல் அனுபவித்து வரும் முருகன் அவர்களை சைதாப்பேட்டை விஸ்வகர்மா நல சங்கம் சார்பாக கண்டிக்கிறோம்.பதிவு தொடரும் ...
5. சரி எப்படியோ தலைவர் ஆகி விட்டீர்கள் நீங்கள் பதவி ஏற்கும்போது கோவிலில் இருப்பு தொகை என்ன? பதில்: வெறும் 400 ரூபாய் மட்டுமே
6. 13 கடைகளின் வாடகை வருமானம், கோவிலில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக வரக்கூடிய வாடகை வருமானம், உபயதாரர்கள் மூலம் கிடைக்கும் நன்கொடை, உண்டியலில் வரும் பணம் இவை அனைத்தும் சேர்த்து வெறும் 400 ரூபாய் தானா என நீங்கள் கேட்கவில்லையா?
பதில் : பழைய விஷயங்களை கிளற விரும்பவில்லை?
7. நீங்கள் பொறுப்பேற்றதற்கு பின்னர் வந்த கடை வாடகை சுப நிகழ்ச்சிகளுக்கான வாடகை உண்டியல் பணம் இவற்றுக்கான வரவு செலவு கணக்கு என்ன? அதனை எப்போது தாக்கல் செய்வீர்கள்? பதில் : நீ வயதில் என்னை விட மிகவும் இளையவன். உனக்கு சமுதாய பணியில் அனுபவம் குறைவு 8. ஐயா வரவு செலவு கணக்கு கேட்டால் எனது அனுபவத்தை பற்றி பேசுகிறீர்கள் இது சரியான பதிலா? பதில் : உனது பூர்வீகம் சைதாப்பேட்டை இல்லை உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
இவ்வாறு கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் கேள்வி கேட்கும் நபரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் வேறு குறுக்கு வழிகளில் அவரையும், அவரது கேள்வியை தடுப்பதும் திரு
முருகன் அவர்களின் வழக்கமான நடவடிக்கையாக உள்ளது.
இது போல ஏற்கனவே கோவிலின் கணக்கில் இருப்பில் இருக்கவேண்டிய பல லட்ச ரூபாய்க்கு கணக்கு கொடுக்காமல் ஏமாற்றி வரும் திரு. முருகன் தலைமையிலான அறங்காவலர் குழு தற்போது கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்காக ரகசிய கூட்டங்களை போட்டுக் கொண்டு உள்ளார்கள். கும்பாபிஷேகத்தை காரணம்காட்டி சமுதாய பெரியவர்களிடமும் பொதுமக்களிடமும் பல லட்ச ரூபாய் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தவறான வசூல் வேட்டையை தடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு சைதை விஷ்வகர்மா நல சங்கத்திற்கு உள்ளது. அதனால் சைதை வாழ் விஸ்வகர்ம சமூகத்தினரை கலந்தாலோசிக்காமல் அவர்களது ஒப்புதல் இல்லாமலும் நடைபெறும் இந்த முயற்சி முறியடிக்க படும். இனியும் கோவிலின் சொத்துக்களை வைத்து தனிநபர் ஆதாயம் அடைவதை சகித்துக்கொள்ள முடியாது.

15/11/2019

சென்னை சைதை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக அறிவிப்பு

06/11/2019

சைதை காமாட்சி அம்மன் கோவில் சொத்துக்களையும் அதிலிருந்து வரும் வாடகை வருமானத்தையும் கணக்கு காட்டாமல் கொள்ளையடிக்கும் குல துரோகிகளையும் அவர்களுக்கு துணை போகிறவர்களையும் கோவில் நிர்வாகத்தில் இருந்து நீக்குவதற்கான தேவையும் சூழலும் ஒருங்கே வந்துள்ளது நாம் ஒற்றுமையுடன் துரோகிகளை அடையாளம் கண்டு கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவோம். சைதை காமாட்சியம்மன் கோவில் மீட்புக்குழு

12/10/2019

எனதருமை விஸ்வகர்ம சமுதாய தலைவர்களே, தலைவர் என்ற காரணத்தினாலோ வயதில் மூத்தவர்கள் என்ற காரணத்தினாலோ எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருத வேண்டாம்.தனி மனித தாக்குதலில் ஈடுபடவேண்டாம்.உங்களை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் நீங்கள் தலைவர் என்ற பதவியில் இருப்பதால் தானே தவிர வேறு எந்த பகையோ விரோதமோ தங்களுடன் இல்லை.சமுக நலன் சார்ந்து நீங்கள் செயல்பட்டால் உங்களை பாராட்ட நாங்கள் கடமை பட்டுளோம்.சமூக நலனுக்கு எதிராகவோ சமூக மற்றும் சமூகம் சார்ந்த கோவில் சொத்துக்களை நீங்கள் உங்களுக்கு லாபம் வரும் வகையில் பயன் படுத்த முயற்சித்தாலோ தங்களை எதிர்க்க இளைய சமூகம் தயங்காது .தலைவர் என்பதை பொறுப்பாக கருதுங்கள்.இல்லை எனில் பொறுப்பில் இருந்து விலகி பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள்.நீங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற கற்பனை உலகத்தில் இருந்து வெளிய வாருங்கள்.சமூகத்தின் சொத்தினை நிர்வகிக்கும் போது அதன் கணக்கு வழக்குகளை காண்பிக்க வேண்டிய தார்மிக பொறுப்பு உங்களுக்கு உண்டு.குறிப்பாக கோவில் சொத்துக்கள் நானும் நீங்களும் பிறப்பதற்கு முன்னரே இந்த சமூகத்தின் நன்மைக்காக நமது முன்னோர்கள் அர்பணித்துள்ளார்கள்.அதை பாதுகாக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு.தலைவர்களே உங்களது பதவி ஆசைக்காக மற்றவர்களை தடுக்கவோ தவிர்க்கவோ முயற்சிக்க வேண்டாம்.உங்களது பதவி ஆசை வெறியாக மாறி உள்ளதை உணருங்கள்.சமூகம் விழித்துக்கொண்டுள்ளது.

நாளை 31 -07 -2019 ஆடி அம்மாவாசை  மாலை 7 .30 மணி அளவில் விஸ்வகர்ம பூஜை விஸ்வகர்ம அஷ்டோத்திர சத நாமாவளியுடன் நடைபெறும். அன...
30/07/2019

நாளை 31 -07 -2019 ஆடி அம்மாவாசை மாலை 7 .30 மணி அளவில் விஸ்வகர்ம பூஜை விஸ்வகர்ம அஷ்டோத்திர சத நாமாவளியுடன் நடைபெறும். அனைவரும் பங்கு பெற்று எல்லா நலமும் வளமும் பெற சைதை வாழ் விஸ்வகர்ம மக்கள் சார்பாக அழைக்கிறோம்

2-7-2019 செவ்வாய் கிழமை  மாலை அம்மாவாசை முன்னிட்டு விஸ்வகர்மாவிற்க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அஷ்டோத்தர சத நாமாவளி நடைப...
03/07/2019

2-7-2019 செவ்வாய் கிழமை மாலை அம்மாவாசை முன்னிட்டு விஸ்வகர்மாவிற்க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அஷ்டோத்தர சத நாமாவளி நடைப்பெற்றது.

விஸ்வகர்ம சமுகத்திற்கு மட்டும்
02/07/2019

விஸ்வகர்ம சமுகத்திற்கு மட்டும்

Address

Chennai
600015

Opening Hours

Monday 6:30am - 9:30am
5pm - 8:30pm
Tuesday 6:30am - 9:30am
5pm - 8:30pm
Wednesday 6:30am - 9:30am
5pm - 8:30pm
Thursday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when சைதை காமாட்சி அம்மன் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category