ஆன்மிக தகவல்கள்

Directions

ஆன்மிக தகவல்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆன்மிக தகவல்கள், Religious Center, Chennai.

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்? அதன் பின் உள்ள ஆன்மிகக் காரணங்கள்.காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக...
10/06/2023

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்?
அதன் பின் உள்ள ஆன்மிகக் காரணங்கள்.

காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உண்டு.

ஆம் ! ஒவ்வொரு நாளும் தங்கள் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானைகள், வழியில் கிடைக்கும் உண்ணத்தக்க மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன.

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்திலிருந்து பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாகும் வல்லமையுடன் கூடியதாக இருக்கின்றன .

அதனால் யானைகள் பயணம் செய்யக்கூடிய தூரம் வரை சில நாட்களில் அதன் எச்சத்திலிருந்து பல புதிய மரம், செடி, கொடிகள் என பல தாவரங்கள் உருவாகின்றன. இது காடுகளை உருவாக்க முக்கிய காரணமாக அமைகிறது.

தினமும் மூலிகைத் தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் மிகவும் பலனைத் தரக்கூடிய விலங்கு யானை.

மேலும் யானை மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது.

யானைகள் ஏன் தெய்வீகமாக பார்க்கப்படுகின்றன?

யானையிடம் பல அதிசயத்தக்க விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை. இது யானைகளுக்கு மட்டுமே உண்டு.

மனிதர்களுக்குக் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித் துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும்.

சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர்.

இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்கள் தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசனப் பயிற்சிகளாகும்.

யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இது காட்டு விலங்காக இருந்தாலும் அதைப் பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது.

இப்படிப்பட்ட தெய்வீக அம்சம் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும் .

ஓம் சரவணபவாய நமவைகாசி விசாகம்:முருகப்பெருமான் பற்றிய 60 ஸ்வாரசிய தகவல்கள் 1. முருகனின் திருவுருவங்கள்:1. சக்திதரர்,2. கந...
02/06/2023

ஓம் சரவணபவாய நம

வைகாசி விசாகம்:

முருகப்பெருமான் பற்றிய 60 ஸ்வாரசிய தகவல்கள்

1. முருகனின் திருவுருவங்கள்:

1. சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்

ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது..

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமண்ய ஸ்வாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் புஜங்கம் கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.
இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:

1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.

10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. ஸ்கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான்.
இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான்.
சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் ஸ்கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

18. “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

21. முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை பலவாறு வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

27. ப்ரம்மசரிய-க்ரகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. ஸ்கந்த சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

49. ஸ்கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பாலன் தேவராயர் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று சொல்லப்படுகின்றது.

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. ஸ்கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார்.
இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள்.
இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடிபட்ட இடம் ஞானமலை ஆகும்.

🌷சித்ரா பௌர்ணமி🌷           🌷சித்ர புத்ர நாயனார் கதை🌷(இந்த சரித்திரத்தைப் படித்தவரும், கேட்டவ ரும், படிப்பிக்கச் செய்தவரு...
05/05/2023

🌷சித்ரா பௌர்ணமி🌷

🌷சித்ர புத்ர நாயனார் கதை🌷
(இந்த சரித்திரத்தைப் படித்தவரும், கேட்டவ ரும், படிப்பிக்கச் செய்தவரும் பூலோகத்தில் தீர்க்கா யுளுடன், ஸகல ஸௌபாக் கியங்க ளுடன் வாழ்வார். பெண்கள் தீர்க்க சுமங்கலி யாய், நோய் நொடியின்றி, புத்ரபௌத்ராதிக ளுடன், பதினாறு பேறுகளும் பெற்று சீருடனு ம் சிறப்புடனும் வாழ்வார்கள்.)

பூலோகத்தை படைக்கும் முன்னர் இன்னார்க் கு இன்னபணி என பணிகள் வகுக்கப்பட்டன. யமனுக்கு தண்டனை
கொடுக்கும் தொழில் விதிக்கப்பட்டது.
ஆனால் சாட்சி வேண்டுமே என யோசித்தார் சிவ பெருமான்.

விநாயகரை அனுப்பலாமென்றால் அப்போது தான் பாரதம் எழுதி ஓய்ந்திருந்தார். முருகன் முன்கோபக்காரன். பிரணவத்திற்குப் பொருள் தெரியவில்லை என்று பிரம்மனையே தலையில் குட்டிச் சிறையிலடைத்த தகப்பன் சுவாமி அல்லவா

🌷கைலாஸபதி “🌷

பொற்பலகையும், வண்ணங்க ளும், தூரிகை யும் கொண்டு வரப்பணித்தார்.” அவர் கேட்டதெல்லாம் கொண்டு வந்து தந்தாள் உமாதேவி. பச்சை, நீலம், மஞ்சள், வெண்மை , சிவப்பு என ஐந்து நிறம் கொண்டு தன்னைப் போலவே ஒரு அழகிய உருவம் வரைந்தவர்

“தேவி.. சித்திரம் எப்படி இருக்கிறது?” என்றார்.
*************************************************

“அழகாகத் தான் இருக்கிறது, வலதுகையில் தங்க நிற எழுத்தாணி: இடது கையில் ஓலைச் சுவடி…. என்ன செய்யப் போகிறான் உங்கள் சித்திரத்துப் புத்திரன்?” என்று கேட்டாள் சக்தி.

நம்புத்திரன்’ என்று சக்தியின் வார்த்தைகளை திருத்தினார் ஈசன். “விநாயகரை நீ உருவாக்கி னாய்! நான் தலையைக் கொய்து யானைத்த லையை பொருத்தினேன். சண்முகனை நீ சரவணப் பொய்கையில் சேர்த்தணைத்தாய். அவன் ஆறுமுக னானான். உன் அருள்பார்வை பட்டால்தான் இவனும் வெளிவருவான். இன்று ஞாயிற்றுக்கிழமை. சூரிய பலம் மிகுந்த நாள்."

கண்பார்வை கூர்மையாயிருந்தால் தான் கண க்கெழுத முடியும். சித்திரை மாதம் சூரியன் உச்சமான சீர்பெற்ற மாதம். சித்திரை நட்சத்தி ரம் கன்யா ராசிக்குரியது. அதில் பிறந்தவன் கணக்கில் வல்லவனாக இருப்பான், பௌர்ண மி தாயான உனக்குரிய நாள். இதுவே நல்ல லக்னம் கூப்பிடு” என்றார்.

கருணையை கண்களில் தேக்கி“கண்மணியே
என்றாள் அன்னை பராசக்தி. பொற்பலகையி லிருந்து வெளியே.. வந்த புதல்வன் உலக மா தா பிதாவாகிய பார்வதி, பரமேஸ்வரர் களின் பாதங்களை பவ்யமாக பணிந்து கைகட்டி வாய்பொத்தி நின்றான்.

“சித்ர குப்தா ஆம். அதுதான் இனி உன் பெயர். சிரஞ்சீவி யாய் ஜீவராசிகளின் பாவ புண்ணி ய கணக்கெழுதிக் கொண்டிரு அன்னை வயிற் றில் கரு உதித்தவுடன் புதிதாய் ஓலைக்கட்டு போட்டுவிடு. சின்னச் சின்ன எழுத்துக்களில் சன்னமான ஓலைகளில் நீ எழுதும் பாவ புண்ணியக் கணக்கு முடிந்து விடுமானால் புண்ணியத்துக்கு புதுக்கட்டு போடலாம்.."

"பாவத்துக்கு தண்டனையை பூலோகத்திலே யே அனுபவிக் கட்டும். பூலோக நரகம் முடிந்து மேலுலக நரகம் வேண்டும்."

" கைலாயம், வைகுண்டம், ஸத்யலோகம், ஸ்வர்க்க லோகம், கோலோகம் என்ற எல்லா உலகத்துக் கணக்குகளையும் தனித்தனியே எழுது. இத்தனை நாள் பாவம், இத்தனை நாள் புண்ணியம் என்று வகை வகுத்து எழுது. யார் யார் எங்கெங்கே எத்தனை நாள் கழித்துப்பிற க்க வேண்டும் என்று பிரம்மனிடம் கேட்டறிந்து குறித்துக்கொள்” என்று ஈசன் சொல்ல,

“குழந்தாய்! விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், கார்த்திகை போலவே சித்திரை மாதம் “சித்ரா பௌர்ணமி” உன் பிறந்த நாள் அன்று உன்னை சிறப்பாக பூஜிப்பவர்களுக்கு பாபங்களிலி ருந்து விலக்களிக்கலாம். மைந்த ர்களில் எங்களுக்கு ஏற்றத் தாழ்வு கிடையாது” என உமையம்மையும் ஆசீர்வதித்தார்

சித்ர குப்தனை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து விபூதி யிட்டு வலது காதிலே சிவனும் உமையும் சித்திர குப்தா என்று பெயர் சொல்லி அழைப்பார்கள் பட்டுக்கட்டி நகைக ளெல்லாம்பூட்டி, “மற்றவர்களுக்குக் கஷ்டமா யிருக்கின்ற கணக் குகள் யாவும் உனக்கு சுலபமாய் வரும்” எனவும் ஆசீர்வதித்தனர்.

இந்திரனும் இந்திராணியும் குழந்தை இல்லை என்று நெடுங்காலமாய் தவம் செய்தனர்.

கௌதமர் சாபத்தால் பூமி மலடானது, வானம் மலடானது மரங்கள் மலடானது, செடி கொடிக ளில் பூ வில்லை, காயில்லை

பசுக்கள் மலடானது. அதனால் பாலில். ஒரு ஊசியை உச்சியில் வைத்து, அந்த ஊசிமேல் உள்ளங்கால் வைத்து ஒற்றைக்காலால் பசுப தியை நோக்கித்தவமிருந்தான் இந்திரன்.சில காலங்கள் சென்றபின், சுற்றிலும் குழிவெட்டி அக்கினி குண்டம் வளர்த்து இரண்டாயிரம் வருஷங்கள் தவமிருந்தான்.

தேவி “ஸ்வாமி! இந்திரன் அகலிகையை ஏமாற்றியது பெரும் குற்றம்தான்! ஆனாலும் அவன் உம்மை நோக்கிக் கடும் தவம் புரிகின் றானே! மன்னித்து அருளை கூடாது” என்று கேட்க, நந்தியை அழைத்து இந்திரனை அவள து மனைவியுடன் அழைத்துவரச் சொன்னார்.

நந்தி இந்திரன் இந்திராணியை அழைத்து வந்தார். ஈசன் இந்திரனிடம் “என்ன வரம் வே ண்டுமென்று கேட்க, இந்திரன்”, லோமஸுந்தர பெருமானே! நாடே மலடாகி விட்டது. காடு பற்றி எரிகிறது பூமி செழிக்க வேண்டும், புத்தி ரன் பிறக்க வேண்டும், பூக்கள் மலர வேண்டும் என வேண்டினான்.

“பூவையர் சாபம் பொல்லாதது அமரேந்திர… அகலிகை கல்லாய் கிடக்கிறாள். அந்தப்பாவம் லேசில் விடுமா? காமதேனு வயிற்றில் பாலன் பிறப்பான். பாலன் பிறந்த பிறகு எங்குமே செ ழிப்பு தான்” என்று வரம் கொடுத்தனுப்பினார்.

இந்திரன் சென்ற பிறகு காமதேனுவை வரவ ழைத்து “இந்திரனின் கொட்டிலில் ஒரு புத்திர னை ஈன்ற பிறகு. வா” என்றார். பசு கண்ணீ ரோடு நிற்க, “சித்திரை மாதம் சித்திரை நட்ச த்திரம் பௌர்ணமி அன்று உனக்கு மோட்சம் கிடைக்கும்” என்று வரமும் கொடுத்தார்கள்.

காமதேனு கன்று மாறி இந்திரன் இந்திராணி க்குப் பின்னால் போய் செல்லமாய் முட்ட, இது ஈசனளித்த வரம் என்று புரிந்து கொண்டு அம ராவதிப்பட்டணம் சென்றபின், வளர்பிறையில் வைகாசி மாதம் 21ம் நாள் வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் ‘மாவேந்திரி’ எனப் பெயர் சூட்டினார்கள். பெயர் சூட்டு விழா தான தருமங்களோடு, வேடிக்கைகளோடு இருபது நாட்கள் கோலாகலமாய் நடந்தது.

கன்றாய் மாறிய காமதேனு மந்தைகளோடு ஓட்டுவதில்லை.தினமும் கோபூஜை செய்தாள் இந்திராணி. பசு வயிற்றில் எப்போது புத்திரன் பிறக்கும் என்று தினமும் அதன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாள்.

இந்திராணியின் ஏக்கத்தைக் கண்டு மீண்டும் தவம் செய்யப் புறப்பட்டான் இந்திரன். இடை யில் புலித்தோல், கழுத்தில் ருத்ராட்சம்; ஒரு கையில் பிட்சாபாத்திரம்; மறுகையில் கமண்ட லம்; மழுவாள்; (தவத்தைக் கலைப்பவரை ஓடுக்க) இந்திராணி அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்புண்டாக்கி மண் கலயத் தில் போட்டுக் கொடுக்க, காடு சென்று அக்கினி வளர்த்துத் தவமிருந்தான் இந்திரன். மறுபடி சக்தி சிவபெருமானைத் தூண்டிவிட நந்தியை கூப்பிட்டு சித்திர குப்தனை அழைத்து வரச் செய்தார் ஈசன்.

சித்திராபுத்ரன் வந்ததும் “இந்திரன் கணக்கி லே சந்தான ப்ராப்தி உண்டா?” என்று கேட்டார்.

“அதிக புண்ணியம் செய்தவர்க்கு சத்புத்திரன் பிறப்பான் அதிக பாவம் செய்தவனுக்குத் தீயே புத்திரன் பிறந்து அவமா னத்தை ஏற்படுத்து வான். கடனைக் கழிக்கப் பிறக்கும் பிள்ளை கள் பெற்றோருக்கு முன்பே காலமாகி விடுவர்.

"பாப புண்ணியம் இரண்டும் கலந்து செய்வோ ருக்கு கர்மவினைப்படி புத்திர யோகம் ஏற்படு ம். முற்பிறவியில் பெற்றோரை தவிக்க விட்ட வர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடையாது. சென்ற பிறவியில் மனைவி இருக்கச் சோரம் போனவனுக்கு பிள்ளைகள் பிறந்து பிறந்து மரிக்கும். அகலிகையை ஏமாற்றிய பாவம் தவ த்தால் அழியாதது. அதனால் இந்திரன் விந்து வில் ஜீவன் இல்லை ” என்றார் சித்ரகுப்தன்.

“சரி நீயே போய் இந்திரன் வளர்க்கும் பசுவின் வயிற்றில் பிறப்பாய்” என்றார் கைலயங்கிரி நாதர்.

“சுவர்க்கத்திலுள்ள சம்புப் பொய்கையில் ஒரு தாமரைப் பூவாக இரு. காமதேனு அங்கே தண்ணீர் அருந்த வரும். தாமரை மலரையும் சேர்த்துத் தின்று விடும். அதுவரை கணக்குகளை மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்துவிடு” என்று உத்தரவிட்டார் மகேசன்.

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽05/05/2023 வெள்ளிக்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது !!  சித்ரா ப...
05/05/2023

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

05/05/2023 வெள்ளிக்கிழமை
இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது !!

சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு செல்வதால் என்னென்ன நன்மைகள் என்று என் அன்பிற்குரிய மகேஸ்வரன் சுவாமிகள் கேட்டார். அனைவரும் அறிய இந்த பதிவை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்....!!

நம்முடைய மரபில் ஆதியில் இந்த நாள் "சித்தர் பௌர்ணமி" என்றே அழைக்கப்பட்டது. பின்னாளிலே தான் மருவி சித்ரா பௌர்ணமியானது என காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் அடிக்கடி கூறுவார். இந்த சித்ரா பௌர்ணமியன்றுதான் இறையருளை வழங்குவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூமிக்கு வருவதாக கோரக்கர் தனது "மலை வாடகம்" நூலில் கூறுகிறார்....

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு சித்ரா பௌர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

பௌர்ணமியன்று தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. அன்றைய தினம் புனித மலைகளுக்கு இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் தியானத்தால் அல்லது ஆழ்ந்த தவத்தால் பெற முடியும். சித்ரா பௌர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். பொதுவாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமியில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் (பூநீறு) என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று அந்த உப்பின் சக்தியை பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம், கபிலவத்தை, வேலோடு மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

இறைவனின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, நாகங்களாக ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் சென்றால் நமக்கு இறையருளும் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சித்த மலைகளில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் நம்பிமலைக்கு வந்து பூத நாராயண சித்தர் தலைமையில் ஒன்று கூடி உலக மாற்றங்களை பற்றி முடிவெடுப்பார்கள் என கோரக்கர் மலை வாடகம் என்ற நூலில் கோரக்கர் பெருமான் சொல்கிறார். ஆகையால் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

பொதிகை மலையில் அகத்தியரை சித்ரா பௌர்ணமி தினம் வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். அன்றைய தினம் கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும். அன்றைய தினம் "மூலிகை குளியல்" செய்வதால் அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறுவதாக போகர் சொல்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை "சித்தர் பெருவிழா" என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.

சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் எங்காவது அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள். இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் இலங்கையில் சித்தர்கள் வாசம் செய்யும் வேலோடு மலையில் திருப்பணி செம்மல் தியாகராஜா சந்திரா குடும்பத்தினர் எப்போது யார் வந்தாலும் அன்னதானம் கொடுக்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும். சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும்.

16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர்.

எனவே எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். வேலோடு மலையில் போகர் பெருமான் பூஜித்த வேலுக்கு பின்புறம் 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் பௌர்ணமி தினம் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.

அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும்.

நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவிலில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமின்றி சித்ரா பௌர்ணமி தினம் ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.

சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு சித்ரா பௌர்ணமி அன்றுகாலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.

உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் சித்தர்களின் அருளை பெற முடியும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

சித்திரைப்பெண் சிரித்தபடி சீவிசிகைநன்கு முடித்தபடிமத்தளங்கள் ஒலித்தபடி மணப்பெண்போல் வருகின்றாள்சத்தியநல் தருமத்தை சாற்றி...
14/04/2023

சித்திரைப்பெண் சிரித்தபடி சீவிசிகைநன்கு முடித்தபடி
மத்தளங்கள் ஒலித்தபடி மணப்பெண்போல் வருகின்றாள்
சத்தியநல் தருமத்தை சாற்றியதோள் பூமாலையென
சுத்தநலம் வளமையினை சூடியசோலை சேலையென
மெத்தமைதி மேன்மையொடு மேவும்புகழ் நன்மையோடு
தத்தையவள் வருகின்றாள் தரணிசெழிக்க வருகின்றாள்
புத்தம்புது காலைபோலே பூக்குமெழில் கதிரும்போலே
நித்தமொரு நல்வசந்த நினைவுதர வருகின்றாள்
சித்திர பருவபெண்களுக்கு சிறந்ததுணை அமைக்கின்றாள்
அத்தனாக்கி அம்மையாக்கி அழகுமழலை அணிகின்றாள்
உத்தமவாழ்வு உமக்கென ஊர்புகழ ஓடி வருகின்றாள்
சத்தியத்தார் மேன்மைபெற சகலசெல்வம் நிதம்தவழ
பத்தினியாள் பார்வையாலே பலயின்பம் படர்செய்கின்றாள்
சித்தமதை சீர்செய்து செயல்தன்னை நேர்செய்து
நித்தமும் ஜெயம்நிகழ நிலம்பதித்து வருகின்றாள்
முத்தமிழ்போல் சோபகிருதை முழுச்சுவையாய் தந்திடுவாள்!!!

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

🎆ராமநவமி பெருவிழா வாழ்த்துக்கள்🎆🎆  மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாகவும் கருதப்படுவது ...
29/03/2023

🎆ராமநவமி பெருவிழா வாழ்த்துக்கள்🎆

🎆 மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாகவும் கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் மகாவிஷ்ணு மனிதனாக பிறந்து, அரசன், மகன், கணவன், தலைவன் என்பவன் எப்படி அறவழியில் வாழ வேண்டும் என்பதை தானே வாழ்ந்து உலகிற்கு காட்டிய அவதாரம் ஆகும்.
🎆 மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பெருமாளின் கையில் இருக்கும் சங்கும் சக்கரமும், பரதன் மற்றும் சத்ருகனனாக அவதாரம் எடுத்து, பெருமாளுடனேயே இருக்கும் பாக்கியத்தை பெற்றனர்.
🎆 கிமு 5114 ல் பங்குனி மாதம் வளர்பிறையில் நவமி உச்சிவேளையில், விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரமாக இராம பிரான், அயோத்தியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.
🎆 அவரது பிறந்தநாள் ராம நவமி விழா என பத்து நாள் விழாவாக வைணவ ஸ்தலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.
🎆 2023 ம் ஆண்டில் பங்குனி மாதம் வளர்பிறையில் . நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது.
🎆 ஆகவே ஸ்ரீ ராமநவமி விழா பங்குனி 16ஆம் தேதி மார்ச் 30ஆம் நாள் வியாழன் கிழமை கொண்டாடப்பட உள்ளது ராம நவமி விழாவின் நிறைவாக ஸ்ரீராமர் - சீதை திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீராம பட்டாபிஷேகமும் நடத்தப்படும். இந்த சமயத்தில் ராமாயணம், சுந்தரகாண்டம் உள்ளிட்டவைகள் படித்து ராமரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.

🎆 இந்த இனிய இராமன் பிறந்தநாளில் மக்கள் அனைவரும், அவர்களுடைய பொருளாதார பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனை முற்றிலுமாக நீங்கி, சகல சௌபாக்கியம், ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, மனநிறைவு பெற்று சந்தோசமாக வாழ இராமபிரான் அருள் வேண்டி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்🙏🏽.

🎆 ஸ்ரீராம நவமி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள ராமர் படத்திற்கு குங்குமம், சந்தனம் வைத்து துளசி மாலை அணிவிக்க வேண்டும். வெற்றிலை, பழம், பூ ஆகியன படைத்து வழிபட வேண்டும். பானகம், பாயசம், வடை ஆகியன நைவேத்தியமாக படைத்து, ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ஸ்ரீ ராம நவமி அன்று தவறாமல் ராமருக்கு பானகமும், நீர்மோரும் படைத்து வழிபட வேண்டும். ராமர் காட்டில் இருந்த போது பானகம் மட்டுமே அருந்தியதால் அது அவருக்கு மிகவும் விருப்பமான பானமாக கருதப்படுகிறது:
🎆 ராம நவமி அன்று உபவாசம் இருந்து ராம நாமம் ஜபிப்பது உயர்வான புண்ணிய பலன்களை தரும். ராமாயண கதை, ராமரின் புகழை போற்றும் கதைகளையும் படிப்பதும், கேட்டதும் நன்மை அளிக்கும். 108, 1008 என்ற கணக்கில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். ஸ்ரீ ராம நாமத்தை இடை விடாது ஜபித்துக் கொண்டே இருந்தால் ஸ்ரீ ராமரின் அருளுடன், ராம பக்தரான ஆஞ்சநேயரின் அருளையும் பெற முடியும். ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வாசம் செய்வார் என்பதால் ஸ்ரீ ராம நாம பாராயணம் செய்ய வேண்டும். இது அனைத்து விதமான பாவங்களையும் போக்கும் ஆற்றல் நிறைந்தது. ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வதை விட ஸ்ரீ சீதா ராம ஜெயம் என சொல்வது சிறப்பானது. இதனால் ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூன்று பேரின் அருளும் கிடைக்கும்.

"🎆 ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே 🎆"
என்ற மந்திரத்தை சொன்னாலே விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைத்து விடும் என சிவ பெருமான் , பார்வதி தேவியிடம் கூறியதாக ஆன்மிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

🎆 ராம காயத்ரி மந்திரம் :

"🎆 மேல தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத் 🎆"
என்ற ஸ்ரீ ராம காயத்ரி மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
🎆 தீராத நோயினால் தினம் தினம் துன்பப்படுபவர்கள்
" ஓம் க்ரீம் அச்சுதா அனந்தா கோவிந்தா"
என்ற ராம மந்திரத்தை தினந்தோறும் ஜெபித்து வந்தால் அந்த நோயிலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.

🎆 காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நாமம் துதித்து விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.
🎆 வடஇந்தியாவில் ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.ராமர் பிறப்பதற்கு முன் பங்குனி மாதம்
சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர்.
🎆 பங்குனி மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.
🎆 ராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ராம.... ராம என்று உச்சரித்தாலே புண்ணியம் கிடைக்கும்.
🎆 தென்னிந்தியாவில் இந்த நாள் இராமர், சீதா ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
🎆 ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலத்தில் நடத்தப்படும் "கல்யாணம்" மிகவும் பிரபலமானதாகும்.
🎆 ராமநவமி திருமலையில் வெகு சிறப்பாக நடத்துவது ஐதீகம். யுகாதி பண்டிகையை தொடர்ந்து மார்ச் 30 ம் தேதி ஸ்ரீ ராம நவமி விழாவும், மார்ச் 31 ம் தேதி ஸ்ரீ ராம பட்டாபிஷேக விழாவும் நடத்தப்பட உள்ளன. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
🎆 திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினமான மார்ச் 30 ம் தேதியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் உற்சவ மூர்த்திகள், ரங்கநாயகுல மண்டலத்தில் எழுந்தருளச் செய்து ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
🎆 இதைத் தொடர்ந்து மாலையில் 06.30 மணி முதல் 8 மணி வரை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.
🎆 இரவு 9 மணி முதல் 10 மணி வரை பங்காரு வகிலியில் ஸ்ரீ ராம நவமி அஸ்தனம் நடைபெற உள்ளது. மார்ச் 31 ம் தேதியன்று திருமலை திருப்பதி கோவிலுக்குள் இருக்கும் பங்காரு வகிலியில் ஸ்ரீ ராம பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது.

சயன திருக்கோயில்கள் எங்கெங்கு உள்ளது.... தெரிந்து கொள்வோம்...🙏ஜலசயனம்மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஸ்ரீ...
27/03/2023

சயன திருக்கோயில்கள் எங்கெங்கு உள்ளது.... தெரிந்து கொள்வோம்...

🙏ஜலசயனம்

மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

🙏ஸ்தல சயனம்

மாமல்லபுரம் என்னும் கடல் மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

🙏புஜங்க சயனம்:

ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

🙏உத்தியோக சயனம்

திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🙏பாம்பணை சயனம்

திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாளின் பங்கையக் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க, இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார். சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் அற்புதம்!

🙏வீர சயனம்

திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், நான் எங்கு உறங்குவது? என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம், இங்கு திருமால் வீர சயனத்தில் ஸ்ரீ வீரராகவப் பெருமாளாக காட்சி தருகிறார்.

🙏போக சயனம்

திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேதராய் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளாக போக சயனத்தில் காட்சி தருகிறார்.

🙏பத்ர சயனம்:

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ ரங்கமன்னார் பெருமாளாக வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்.

🙏தர்ப்ப சயனம்:

திருப்புல்லாணியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🙏மாணிக்க சயனம்:

திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ அரங்க நாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மிக தகவல்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share