Jamaat-e-Islami Hind Tamil Nadu

Jamaat-e-Islami Hind Tamil Nadu தீனை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விட

"பத்திரிக்கை அறிக்கை"27 ஆகஸ்ட் 2026புது தில்லி:நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தையும் கடுமையான அழிவையும் ஏற்படுத்தியுள்ள ...
27/08/2026

"பத்திரிக்கை அறிக்கை"

27 ஆகஸ்ட் 2026

புது தில்லி:
நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தையும் கடுமையான அழிவையும் ஏற்படுத்தியுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர் எஸ். அமீனுல் ஹசன் தனது ஆழ்ந்த துயரத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்த மாபெரும் துயரமான தருணத்தில் நேபாள மக்களோடு எங்கள் இதயங்கள் துணை நிற்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் பிரார்த்திக்கிறோம்.

மனித உயிர்களைக் காப்பாற்றுவது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் பிற அனைத்து வகையான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கே தற்போதைய அவசர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நேபாளத்தின் நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில்,
அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

இதில் பிரத்யேக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவ உதவிகள், அவசரகாலப் பொருட்கள், போக்குவரத்து சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மையில் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை அடங்கும். மேலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு, வானிலை மற்றும் வெள்ள முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியாவின் திறன்கள் அடுத்தடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களைக் கணிக்கவும், உடனடி மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நேபாளத்திற்கு உதவக்கூடும்.

"இந்தத் துயர நிகழ்வானது, இந்தியாவின் பல பகுதிகள் உட்பட ஒட்டுமொத்த இமயமலைப் பிராந்தியமும் தீவிர வானிலை மாற்றங்கள், பனிப்பாறை உறுதியற்ற தன்மை, வெள்ளம் மற்றும் தொடர் பேரிடர்களால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. உயர்ந்து வரும் வெப்பநிலை, பனிப்பாறைகள் உருகுவது மற்றும் கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் புதிய அபாயங்களை உருவாக்குகின்றன.

பேரிடர் நிகழ்ந்த பிறகு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் போக்கிலிருந்து மாறி, தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை மற்றும் நீண்டகால பேரிடர் தாங்கும் திறன் ஆகியவற்றை நோக்கிய முன்னெடுப்புக்கு நாம் நகர வேண்டும்.

பனிப்பாறைகள், பனிப்பாறை ஏரிகள், நிலையற்ற சரிவுகள் மற்றும் உயரமான நீர்நிலைகளை விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் கண்காணிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

கீழ்நிலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சரியான நேரத்தில் எச்சரிக்கை சென்றடையும் வகையில் செயற்கைக்கோள் படங்கள், தொலை உணர்வுத் தொழில்நுட்பம் (Remote Sensing), கள அளவிலான கண்காணிப்பு மற்றும் நம்பகமான முன்னெச்சரிக்கை அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைகள், நீர்மின் திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்புகள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு அரசுகள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் அபாய மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

"நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அரசுகள், மனிதநேய அமைப்புகள் மற்றும் இப்பிராந்திய மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்தத் துயரத்தில் பறிபோன உயிர்கள், பேரிடர் அபாயங்களைக் குறைக்கவும், பாதிப்பிற்குள்ளாகும் இமயமலை சமூகங்களைப் பாதுகாக்கவும் அவசர மற்றும் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் தூண்டும் என்று நம்புகிறோம்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகப் பிரிவு,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், புது தில்லி.

கனவுகள் நனவாகும் தருணம்! கோழிக்கோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘ச...
26/08/2026

கனவுகள் நனவாகும் தருணம்!

கோழிக்கோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘சங்கமம் கூட்டுறவு சங்கம்’, உழைக்கும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தொடர்ச்சியாக உறுதுணையாக நின்று வருகிறது.

திறமை இருந்தும் போதிய மூலதனம் இன்றித் தவிக்கும் சகோதரர்களின் கரங்களைப் பற்றி, அவர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றுவதே சங்கமத்தின் முதன்மை இலக்காகும்.

அதற்குச் சான்றாக—சங்கமத்தின் திருச்சி கிளையில் இதுவரை வாடகை ஆட்டோ ஓட்டித் தனது வாழ்வாதாரத்தைச் சமாளித்து வந்த நமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சங்கமத்தின் வாகனக் கடன் உதவியின் மூலம் தனது சொந்த ஆட்டோவின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள், புதிய ஆட்டோவின் சாவியை அந்தப் பயனாளிக்கு வழங்கி வாழ்த்தினார்.

நேர்மையான உழைப்பும் சரியான உறுதுணையும் இணையும் போது, அனைவரின் வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் சாத்தியமே!

போதையில்லா தமிழ்நாடு – சிறப்பு இளைஞர் சந்திப்புஇளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு  ...
26/08/2026

போதையில்லா தமிழ்நாடு – சிறப்பு இளைஞர் சந்திப்பு

இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

“போதையில்லா தமிழ்நாடு” பரப்புரையை முன்னிட்டு, இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25.08.2026 அன்று சிறப்பு இளைஞர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. முகமது ரியாஸ், உதவி காவல் ஆணையர் பி. சிதம்பரமுருகேசன், மருத்துவர் ஜெ. முஹைதீன், ரெஹோபோத் போதைமீட்பு ஆலோசனை மைய நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் டேனியல், நெக்சஸ் பிஆர் நிறுவன CEO பி. இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போதை – தனிநபர் பிரச்சினை மட்டுமல்ல!

போதை என்பது ஒரு தனிநபரை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. அது குடும்பம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் மிகப்பெரிய சவால் என நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.

“ஒரே ஒரு முறை முயற்சி செய்தால் ஒன்றும் ஆகாது” என்ற தவறான எண்ணத்திலிருந்து இளைஞர்கள் முற்றிலும் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சமூக அழுத்தங்களும் போதைப்பழக்கமும்

உதவி காவல் ஆணையர் பி. சிதம்பரமுருகேசன், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அழுத்தங்கள் மற்றும் அவை போதைப்பழக்கத்திற்கு எவ்வாறு வழிவகுக்கின்றன என்பது குறித்து விளக்கினார்.

மேலும், சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

போதையின் உடல் மற்றும் மனநல பாதிப்புகள்

மருத்துவர் ஜெ. முஹைதீன் தலைமையில் நடைபெற்ற கேள்வி–பதில் நிகழ்வில், போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், அடிமைத்தன்மை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மீண்டு வர முடியும்!

தனது சொந்த போதைமீட்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ரெஹோபோத் போதைமீட்பு ஆலோசனை மைய நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் டேனியல், சரியான உதவியும் முறையான சிகிச்சையும் கிடைத்தால் போதைப்பழக்கத்தில் சிக்கியவர்களும் மீண்டும் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து “ONE TIME” விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் அனைவரும் “போதையில்லா தமிழ்நாடு” உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ச்சியான சமூக இயக்கமாக உருவெடுக்க வேண்டும்!

நிகழ்வின் நிறைவில் பேசிய நசீர் அதாவுல்லா, “போதையில்லா தமிழ்நாடு” பரப்புரை ஒரு குறுகிய கால நிகழ்வாக முடிந்துவிடாமல், தொடர்ச்சியான சமூக இயக்கமாக உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

போதைப்பழக்கத்தால் பாதிக்கப்படாதவர்களை பாதுகாப்பது, போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவது, மேலும் போதைப்பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் மீண்டும் அதற்கு அடிமையாகாமல் தடுப்பது என மூன்று தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த இயக்கம் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு யூனுஸ் சேட் வரவேற்புரை வழங்கினார். பரப்புரை குழு பொறுப்பாளர் முஹம்மது அஜ்மல் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

போதையை எதிர்ப்போம்!
இளைஞர்களைப் பாதுகாப்போம்!
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் செய்திகள் வெளிவந்த சில நாளிதழ்கள்.
21/08/2026

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்
செய்திகள் வெளிவந்த சில நாளிதழ்கள்.

போதை இல்லா தமிழ்நாடு — டிஜிட்டல் வேன் பரப்புரை“போதை இல்லா தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெற்று...
21/08/2026

போதை இல்லா தமிழ்நாடு — டிஜிட்டல் வேன் பரப்புரை

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெற்று வரும் பரப்புரை இயக்கத்தின் தொடர்ச்சியாக, சென்னை மாநகரம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் வேன் பரப்புரை தொடங்கப்பட உள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் இந்த டிஜிட்டல் வேன் மூலம், போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்தும், போதை இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு வாகனத்தை மரியாதைக்குரிய சகோதரி பாத்திமா முஜஃபர் அவர்கள் துவக்கி வைத்து, பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

போதை இல்லா தமிழ்நாடு —
ஆரோக்கியமான குடும்பங்கள்,
அமைதியான சமூகங்கள்,
வளமான எதிர்காலம்!

இப்படிக்கு,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
சென்னை மெட்ரோ

"பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி"ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைமையகத்தில் மாதாந்திர பத்திரி...
20/08/2026

"பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி
மாநில தலைமையகத்தில் மாதாந்திர பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி 20.08.2026 இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாட்டில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ள பல்வேறு சமூக மற்றும் தேசியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக,

- மது மற்றும் போதைக்கு எதிரான மாநிலம் தழுவிய பரப்புரை

- கல்வி – கவலையளிக்கும் கள நிலவரம்

- போதை – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள்

- வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்ட மசோதா, 2026 (FCRA)

- தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026

ஆகிய முக்கியத் தலைப்புகள் குறித்து
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் பத்திரிகையாளர்களிடம் விரிவாக உரையாற்றினார்.
பின்னர் அவர்களின் கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் யூடியூபர்கள் பல்வேறு முக்கியமான பல கேள்விகளை முன்வைத்தனர்.

குறிப்பாக,

• காவல் நிலையங்களில் நடைபெறும் படுகொலைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கருத்து என்ன?

• தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

• தவெக ஆட்சியில் மது மற்றும் போதை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே
அது உண்மையா?

• ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான பிரச்சாரப் பணிகள் தற்போது எவ்வாறு நடைபெற்று வருகின்றன? எதிர்காலத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளன?

• FCRA திருத்தச் சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

• தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 என்ன கூறுகிறது?

• கடந்த ஆட்சியிலும் மதுவிற்பனை இருந்தது
தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது.
மதுவுக்கு ஆதரவான கொள்கையைக் கொண்ட கட்சிகளுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு என்ன?

• காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போதிய அளவில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால் காவலர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஒரு காவலரே பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து தங்களது கருத்து என்ன?

என பல்வேறு முக்கியமான கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர்.
அவற்றிற்கு மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் விரிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள்
ஜனாப் T. யூசுப் பாஷா, ஜனாப் K. M. சிராஜ் அஹ்மத்,
மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்
T. அஜீஸ் லுத்புல்லாஹ், V. S. முஹம்மது அமீன், S. N. சிக்கந்தர்,
மாநில அமைப்புச் செயலாளர்
K. ஜலாலுதீன்
மாநில மகளிர் அணி செயலாளர்
சகோதரி பாத்திமா ஜலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பத்திரிக்கை அறிக்கை,
மது போதைக்கு எதிரான "சமரசம்" சிறப்பிதழ்,
IFT வெளியீடான "போதை அழிவின் பாதை" என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி
மாநில ஊடகச் செயலாளர் S. சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைத்து, நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

சகோ T.E. நாசர் (மண்டல அமைப்பாளர், ஜ.இ.ஹி.) அவர்களுக்கு சிறந்த குடும்பவியல் ஆலோசகர் விருதுதமிழ்நாடு முழுவதிலும் இருந்து க...
18/08/2026

சகோ T.E. நாசர் (மண்டல அமைப்பாளர், ஜ.இ.ஹி.) அவர்களுக்கு சிறந்த குடும்பவியல் ஆலோசகர் விருது

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து குடும்பவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் குறிப்பிட்ட சிலர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு *‘சிறந்த குடும்பவியல் ஆலோசகர்’ (Excellent Family Counsellor)* விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில், கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

FCMCI (Family Counselling & Marriage-related initiative) சார்பில், Muslim Marriage Advisory Council (MMAC) உடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயலாளர் மௌலானா முஜத்திதி, ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஜனாப். ஷாஜஹான் அவர்கள் விருதுகளை வழங்கினார்.

அந்த வகையில், குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்ப்பதிலும், குடும்ப உறவுகளைப் பாதுகாப்பதிலும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும் ஆற்றிவரும் சிறப்பான பணியைப் பாராட்டி சகோ T.E. நாசர் (மண்டல அமைப்பாளர், ஜ.இ.ஹி.) அவர்களுக்கு ‘Excellent Family Counsellor Award’ வழங்கப்பட்டது.

குடும்ப நலன், திருமண உறவு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌலானா M. M. Md. இஸ்மாயில் இம்தாதி அவர்களுக்கு சிறந்த குடும்பவியல் ஆலோசகர் விருதுFCMCI (Family Counselling & Marriage-re...
17/08/2026

மௌலானா M. M. Md. இஸ்மாயில் இம்தாதி அவர்களுக்கு சிறந்த குடும்பவியல் ஆலோசகர் விருது

FCMCI (Family Counselling & Marriage-related initiative) சார்பில், Muslim Marriage Advisory Council (MMAC) உடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயலாளர் மௌலானா முஜத்திதி, ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஜனாப். ஷாஜஹான் அவர்கள் விருதுகளை வழங்கினார்.

அந்த வகையில், குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்ப்பதிலும், குடும்ப உறவுகளைப் பாதுகாப்பதிலும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும் ஆற்றிவரும் சிறப்பான பணியைப் பாராட்டி மௌலானா M. M. Md. இஸ்மாயில் இம்தாதி அவர்களுக்கு ‘Excellent Family Counsellor Award’ வழங்கப்பட்டது.

“போதையில்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்“போதை அழிவின் பாதை” நூல் வெளியீடு | நூலாய்வு | “ONE TIME” குறும்பட...
17/08/2026

“போதையில்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்

“போதை அழிவின் பாதை” நூல் வெளியீடு | நூலாய்வு | “ONE TIME” குறும்படத் திரையிடல்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
சென்னை மெட்ரோ சார்பாக, “போதையில்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரையின் தொடக்க விழாவும், “போதை அழிவின் பாதை” நூல் வெளியீடு, நூலாய்வு மற்றும் “ONE TIME” குறும்படத் திரையிடல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோதரர் அனீஷ் அஹ்மத் அவர்கள், போதைப் பழக்கத்தால் ஏற்படும் அழிவுகள் மற்றும் அதன் சமூகத் தாக்கங்கள் குறித்து புள்ளிவிவரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், மது மற்றும் போதைப் பொருட்கள் குறித்து திருக்குர்ஆன் முன்வைக்கும் எச்சரிக்கைகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் ஒப்பீட்டு அடிப்படையில் விளக்கினார்.

“போதை அழிவின் பாதை” – நூல் வெளியீடு

“போதை அழிவின் பாதை” நூலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்
அமைப்புச் செயலாளர் K. ஜலாலுத்தீன் அவர்கள் வெளியிட, டாக்டர் மொய்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, நூல் குறித்த சிறப்பான ஆய்வுரையை சகோதரர்,
கவிஞர் ருக்னுத்தீன் அவர்கள் வழங்கினார். நூலின் உள்ளடக்கம், அதன் சமூகத் தேவை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வில் அது ஆற்றக்கூடிய பங்கு குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

🎬 “ONE TIME” – குறும்படத் திரையிடல்

நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக “ONE TIME” குறும்படம் திரையிடப்பட்டது.

“ஒரே ஒரு முறைதானே...” என்று தொடங்கும் ஒரு பழக்கம், ஒருவரின் வாழ்க்கையையும், ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் எவ்வாறு சீரழிக்கக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறும்படத்தின் இயக்குநர் அஜ்மல் அவர்கள், திரைப்படம் உணர்த்தும் முக்கியமான படிப்பினைகள் குறித்தும், குறும்படத்தைத் தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

"சிறப்பு விருந்தினர் உரை"

சிறப்பு விருந்தினர் ராம மெய்யப்பன் அவர்கள் பேசுகையில், சமூகத்தைப் போதைப் பழக்கத்தின் அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இளைஞர்களைக் கொண்டே இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றும், ஒழுக்கரீதியான மாற்றத்தை இளைஞர்களின் மூலமாகவே உணர்த்தியிருப்பது மிகச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை சகோதரர் அஜிஸ் லுத்துபுல்லாஹ் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

“போதையில்லா தமிழ்நாடு” – பரப்புரையின் நோக்கம்

நிகழ்ச்சியின் நிறைவாக சென்னை மாநகரத் தலைவர் நசீர் அத்தாவுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.

“இந்தப் பரப்புரை ஏன் தேவை? இளைஞர்களிடையே இந்தப் பரப்புரை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?” என்பது குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

சமூகத்தில் போதைப் பழக்கத்துடன் தொடர்புடைய மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்:

1. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
2. போதைப் பழக்கத்தின் அருகில்கூட செல்லாதவர்கள்.
3. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள்.

இந்த மூன்று தரப்பினரையும் சென்றடையும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்புரையை முன்னெடுப்பது நமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நமது உடல், அறிவு, சிந்தனை உள்ளிட்ட அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள். அவற்றை இறைவன் விரும்பும் வகையில் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய செய்தியையும் அவர் எடுத்துரைத்தார்.

போதைக்கு அடிமையாகாதீர்!

உங்கள் வாழ்க்கையை மதியுங்கள்!

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

இது ஒரு நிகழ்ச்சியோடு முடிந்துவிட வேண்டிய பரப்புரை அல்ல.

ஒரு குடும்பத்தை காப்பாற்ற...
ஒரு இளைஞரின் எதிர்காலத்தை காப்பாற்ற...
ஒரு தலைமுறையை போதையிலிருந்து பாதுகாக்க...

இந்தச் செய்தியை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.

“ONE TIME” குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களிடம் அதிகமாகப் பகிருங்கள்.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டையும் சென்றடையட்டும்!

போதையில்லா தமிழ்நாடு — நமது கனவு மட்டுமல்ல; நமது பொறுப்பும் கூட!

Address

Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami Hind Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamaat-e-Islami Hind Tamil Nadu:

Shortcuts

Share