சிவனடியார் கோபால் சாமிகள்

  • Home
  • India
  • Chennai
  • சிவனடியார் கோபால் சாமிகள்
Directions

சிவனடியார் கோபால் சாமிகள் தலைவர்,உலக சிவனடியார்கள் பேரவை & இந்து தமிழர் பேரவை

*Today Rasipalan: இன்றைய ராசிபலன்-29.08.25 | Today Rasipalan-29.08.25 in tamil*
29/08/2025

*Today Rasipalan: இன்றைய ராசிபலன்-29.08.25 | Today Rasipalan-29.08.25 in tamil*

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-29.08.25 | Today Rasipalan-29.08.25 in tamil மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்மேஷம்செவி க....

ஆன்மீகம்,திருமறை பாடங்கள்,சித்தர் மருத்துவம்,யோகா,குண்டலினி சக்தி,பிராஞ்ச ஞானம்,மந்திரம்,தந்திரம்,யந்திரம் பிரயோகம்,அட்ட...
14/05/2025

ஆன்மீகம்,திருமறை பாடங்கள்,சித்தர் மருத்துவம்,யோகா,குண்டலினி சக்தி,பிராஞ்ச ஞானம்,மந்திரம்,தந்திரம்,யந்திரம் பிரயோகம்,அட்டமாசித்துக்களை அடைவது எப்படி ...
இன்னும் நீங்க அறிந்திராத பல ஆன்மீக கேள்வி பதில்களுக்கு follow us
#கலியுகசித்தர்

follow us:
https://www.facebook.com/share/18sjNES9L8/

கலியுக சித்தர் (kaliyuga Siddhar)
யோகா, ஆசானா,சித்தர் மருத்துவம்,மந்திரம்,தந்திரம்,யந்திரம்,சித்தர் ஞானம்,ஆரா, நோக்கு வர்மம்,டெலிபதி அட்டமா சித்திகள்,அஷ்டகர்மங்கள்,ஆன்மீகம்,திருமறைகள்,கோயில் தல வரலாறு

மனிதனை மேம்பட்ட நிலையை அறிய செய்தல்

இன்று மாசி மகம் – கடலாடும் விழாவின் விளக்கம்  மாசி மகம் – கோடிக்கணக்கான பக்தர்களின் புனித நீராடல் நிகழ்வு இன்று. மாசி மா...
12/03/2025

இன்று மாசி மகம் –
கடலாடும் விழாவின் விளக்கம்

மாசி மகம் – கோடிக்கணக்கான பக்தர்களின் புனித நீராடல் நிகழ்வு இன்று. மாசி மாதம் மகம் நக்ஷத்திரத்தில் கொண்டாடப்படும் மாசி மகம், தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த நாளில் கடல், திருத்தல தீர்த்தங்கள், மற்றும் புனிதக் குளங்களில் நீராடுவது பாவங்களை கழுவும் மற்றும் புண்ணிய பலன்களை அளிக்கும் என்று சித்தர்கள் நூல்கள் மற்றும் புராண சான்றுகள் சொல்கின்றன...

(1) மாசி மகம் – முக்கிய கடலாடும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள்:
- பூம்புகார் – சிலம்பியார் தீர்த்தம்.
- வேளாங்கண்ணி திருத்தலம்.
- கன்னியாகுமரி – குமரிக்கடல்.
- ராமேஸ்வரம் – அக்னி தீர்த்தம்.
- மாமல்லபுரம் – சங்கமம்.
- சேர்மாதேவி மற்றும் திருச்செந்தூர்.
- தேவி பட்டினம்.

புனித நீராடலின் நன்மைகள்:
- தோஷங்கள் அகலும்.
- புதிய ஆரோக்கியம் கிடைக்கும்.
- குடும்ப பிரச்சனைகள் தீரும்.
- கடன் தீர்வு கிடைக்கும்.
- முக்தி பெறுதல்.

(2) மறைந்துள்ள ரகசியங்கள்:-
யோக சித்தர்கள் கூறும் மர்மம்:
மாசி மகத்தில் பிரம்மாண்ட சக்தி இந்த பூமியை இயங்கும், ஆகவே ஆழமான தியானம், யாகங்கள், மற்றும் புனித நீராடல் மிகுந்த பலன்களை தரும். பல சித்தர்கள், மகான்கள் இந்த நாளில்தான் கங்கையைக் கடந்து தபஸ் செய்யும் மரபு உள்ளது.

கயிலாய வழிபாடு தொடர்பு:
மகாபாரதம், ராமாயணத்தில் கூட மாசி மகம் குறித்த பாரம்பரியங்கள் கூறப்பட்டுள்ளன. மாசி மகத்தில் தேவதைகள் தரிசனம் செய்வதாக ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன.

(3) அரசியல், வர்த்தக ரகசியம்:
பழங்கால ராஜாக்கள் மாசி மகத்தின் போது தங்கக்காசுகள் வழங்கியுள்ளனர். சிற்பக்கலை மற்றும் பண்டைய நகரமைப்பு திட்டங்கள் வெளிப்படுத்தப்படும். ஆயுர்வேத மருந்துகள், மரபு சித்த மருத்துவங்கள் அதிகம் விற்கப்படும்.

(4) தற்காலத்திலும் மாசி மகம் முக்கியமா?
ஹோமங்கள், யாகங்கள், மற்றும் பரிகாரங்கள் இன்று அதிகளவில் வளர்ந்துவரும் பண்பாடாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கூட மாசி மகம் தினத்தில் புனித நீராடல்களை மேற்கொள்கின்றனர். தமிழ் திரைப்படங்களில் கூட மாசி மகம் விழாவை மையமாகக் கொண்டு பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

(5) 108 பெருமாள் கோவில்களில் மாசி மகம் விழா:-
திருக்கோஷ்டியூர் – மாசி மகம் விசேஷம். தெப்பக்குளத்தில் தீபமேற்றி வேண்டுதல் செய்வது சிறப்பு. தீபம் ஏற்றி புத்திர பாக்கியம், திருமண யோகம், கல்வி, மனநிறைவு போன்றவற்றை வேண்டலாம். பூஜைக்குப் பிறகு, அகல் விளக்கை வீட்டில் வைக்கலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசி மகத்தில் மீண்டும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம்.

(6( முக்கிய 108 பெருமாள் கோவில்களில் மாசி மகம் விழா:-
திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்) பெருமாள் சிறப்பு அபிஷேகம், புனித நீராடல்.
ஸ்ரீரங்கம் கோவில் தீர்த்தம் மற்றும் புனித கங்கை நீராட்டு.
அழகர் கோவில் (மதுரை) திருப்பள்ளி எழுச்சி, தீர்த்தவாரி.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் புனித தீர்த்த அபிஷேகம், யாகம்.
திருவள்ளிக்கேணி பார்த்தசாரதி கோவில் மாசி மகம் ஸ்நானம், அன்னதானம்.
திருநங்கூர் திவ்யதேசம் பெருமாள்களின் தங்க உற்சவம், மகா தீர்த்தவாரி.

(7) மாசி மகத்தில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்:-
காலை வழிபாடு – பஞ்சாமிர்த அபிஷேகம், திவ்யபிரபந்த பாராயணம்.
தேர் உலா / தீர்த்தவாரி – பெருமாள் தேரோட்டம், புனித நீராடல்.
அன்னதானம் – திருநங்கூர், ஸ்ரீரங்கம், திருமயிலாப்பூர் போன்ற கோவில்களில்.
யாகம், ஹோமம் – திருமண, புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்காக.
தீப வழிபாடு – திருக்கோஷ்டியூரில் தீபமேற்றி வேண்டுதல் செய்தல்.

முடிவுரை:-
மாசி மகம் 108 பெருமாள் கோவில்கள் மற்றும் பல திருத்தலங்களில் கொண்டாடப்படும் முக்கிய புனித திருவிழா.
இந்த நாளில் புண்ணிய நீராடல், தீபமேற்றி வேண்டுதல், யாகங்கள், ஹோமங்கள், தீர்த்தவாரி, தேர் உற்சவம் ஆகியவை நடைபெறும்.
பக்தர்கள் திருப்பதி, காஞ்சி, மதுரை, திருநங்கூர் போன்ற திவ்யதேசங்களில் வழிபட்டு, புண்ணிய பலன் பெறும் நாளாக மாசி மகத்தை கொண்டாடுகின்றனர்.

#மாசிமகம்

12/03/2025

உடல் நலம் தரும் யோகா,வர்மா பயிற்சி
***************************************
வர்மா,யோகா,சித மருத்துவம் மூலமாக பல வியாதிகளை குணப்படுத்தலாம் விரைவில் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது விருப்பமுள்ளவர்கள் நன்கொடை செலுத்தி இணைந்து கொள்ளலாம்
Whatsapp:
080726 90599

திருமாலும் பன்றியாய்ச்சென்றுணராத் திருவடியைஉருநாம் அறியவோர்அந்தணனாய் ஆண்டுகொண்டான்ஒருநாமம் ஓர் உருவம்ஒன்றுமில்லாற்கு ஆயி...
12/03/2025

திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓர் உருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்ஏல நினைப்பவர்க்கு இன்பம்...
12/03/2025

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே--திருமூலர் திருமந்திரம் --இந்த பாடலின் அருமையான விளக்கம் --நாள்தோறும் காலை எழுந்த(உதிக்கும்) கதிரவன் மாலையில் மறைவதும், அதனால் நம் வாழ்நாள் ஒன்று கழிந்தும், போவதும், இறைவன் கோபத்தோடு கூடியவன் ஆயினும், அன்டன் நினைந்து வழிபடுபவர்க்கு இன்பம் அளிப்பவன். வாழ்நாளை வீழ்நாள் ஆக்கியது போதும் என எண்ணி ஈசனை உள்ளம் உருக வேண்டுபவர்களுக்கு இடையறா இன்பம் கொடுத்தருள்வான்...இந்த பாடலை இன்னும் ஆழமாக பார்க்கலாம் அதாவது காலையில் உதிக்கும் கதிரவன் மாலையில் மறையும் கதிரவன் இதுமட்டுமே நமக்கு தெரியும் ஆனால் அந்த காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து ஓர் அறிவு ஜீவராசிகள் முதல் ஆறாறிவு ஜீவராசிகள்வரை பெறும் நன்மைகள் என்னவென்று தெரியாது --இந்த நன்மைகள் தெரியாமலே வாழும் உயிரனங்கள் போல் மானிடர்களும் தாம் எதற்காக என்ன நன்மை செய்வதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்கிற தன்மை தெரியாமலே ஒரு நாள் மறைந்து போகிறோம் இதனால் படைத்த பரம்பொருளுக்கு கோபம் உண்டானாலும் அந்த பரம்பொருளுக்கு நம் மேல் உள்ள கருணை குறையாது --அதனால் அந்த கருணையை உணர்ந்து மனமார பரம்பொருளை நினைக்க நினைக்க நாம் வீண் செய்த நாட்கள் நமக்கு புரியவரும் அப்படி புரிந்துவிட்டால் ஈஸ்வர ஸ்வரூபம் நமக்குள் தெரியவரும் அந்த ஸ்வரூபத்தை முழுதும் தெரிந்து மனமார அவனை நேசியுங்கள் அப்படி நேசித்தால் அம்பலத்தின் இன்பம் எதுவென அவனே உங்களுக்கு எடுத்துரைப்பான் என்கிறார் திருமூலர் --திருமூலர் கூறவரும் சூட்சமமான விஷயம் இதுதான் நாம் யார் நம் தன்மை என்ன நாம் படைக்கப்பட்டது எதற்காக என்கிற என்ன ஓட்டங்களை நம் உள்மனத்திற்குள் செலுத்தி தன்னை தானே முழுமையாக அறிய அறிய நாம் வாழும் நாட்கள் வீணாகாமல் நமசிவாய பதத்தின் கருணையை அறிந்து கொள்ளும் தன்மையை உணர்வோம் அப்படி உள்கடந்து உணர உணர அவன்மேல் மாசில்லா நேசிப்பு உண்டாகும் அந்த நேசத்தின் விளைவாக ஈசனே உங்களுக்கு அம்பலத்தின் தன்மையை எடுத்துரைத்து உங்களை தன்னோடு சேர்த்துக்கொள்வான் என்கிறார் திருமூலர் --திருமூலரின் திருமந்திரத்தை ஆழமாக படிக்க படிக்க இறையருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் --அன்புடன் அணவரதம் முருகா

"பாடலில் சங்கதிகளின் கனம்!" "கருமை நிற மேனியுடைய விநாயகரின் பாதத்திற்குக் காப்பு, காலாங்கி கருவூரார் பாதங்களுக்குக் காப்...
12/03/2025

"பாடலில் சங்கதிகளின் கனம்!"

"கருமை நிற மேனியுடைய விநாயகரின் பாதத்திற்குக் காப்பு, காலாங்கி கருவூரார் பாதங்களுக்குக் காப்பு; உயர்வான போகர் நந்தி தாளுக்குக் காப்பு, கும்பமுனி அகத்தியர் மெய்யடிக்குக் காப்பு; மலர் பூத்த அவர் திருவடிக்குக் காப்பு, அவர் அளித்த சாஸ்திர சூத்திரத்திற்குக் காப்பு; பாரினில் வகார வித்தையை நான் இயற்றிப்பாட அருள் செய்த என் பாட்டர் திருமூலர் பாதத்திற்குக் காப்பு."

நான் என் பாட்டர் திருமூலருக்கு மூன்றாம் பேரன், போகருக்கு நான்காம் பிள்ளை, வலிமை தரும் அம்பிகையின் அடிதொழும் அம்பிகானந்தன் என் பெயர். வாதம் 710, வாசியோகம் 320, வைத்தியம் 1200 என நூல்களை இயற்றிப் பொன்னொளி வீசும் கயிலாயம் தன்னில் சித்தர் சட்டைநாதரிடம் காண்பித்தேன். நூல்களை வாசித்துப் புகழ்ந்தபோது அவருடைய சீடர் சுந்தரானந்தர் கூர்ந்து நோக்கி, இப்படி எல்லா சங்கதிகளின் மூலப்பொருளை வெளிப்படையாய்ச் சொல்லலாமோ என்று கேட்டு பெரும் தர்க்கம் புரிந்தார். கோபத்தில் அவர் நான் பகர்ந்த நூல்களைக் கணப்பொழுதில் மறைத்து விட்டார் என்பதே இப்படத்திலுள்ள பாடல்களின் எளிய பொருள்.

ஒரு சித்தருடைய பாடல் என்றால் அதில் முதற் பாடல் காப்புப்பா. சித்த மரபில் யார் யாருடைய பரமகுரு, குரு, சீடர்; யார் பாதங்களுக்குக் காப்பாகச் சரணம் சொன்னார், சித்தருடைய பெயருக்குக் காரணம் என்ன, இயற்றிய நூல் விபரங்கள் யாது, அதை யார் பார்வையிட்டது, யார் நிராகரித்தது; வெளியிட்ட மறைப்பு ரகசியங்கள் என்ன, பெற்ற சாபம் யாது, அதை நிவர்த்தி செய்த குருவருள் யாது, எத்தகைய பாடல்களை நீக்கச்செய்து நூலை அங்கீகரித்த தருணம் என்ன... போன்ற பல உண்மைகள் அதில் பொதிந்து வரும். இதுபோன்ற விஷயங்களைக் காட்டத்தான் அம்பிகானந்தரின் ஞானோபதேசம் 25 நூலின் சில பாடல்களை இங்கே பதிவிட்டேன்......

தெய்வ வழிபாட்டில் அந்தந்த தெய்வங்களின் படைக்கலன்களும் முக்கியத்துவம் பெறுவதுடன் வழிபடப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் வாள்...
12/03/2025

தெய்வ வழிபாட்டில் அந்தந்த தெய்வங்களின் படைக்கலன்களும் முக்கியத்துவம் பெறுவதுடன் வழிபடப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் வாள்களிலும் வீரர்களின் தோள்களிலும் கொற்றவை உறைவதாகக் குறிப்பிடப்படுகிறது. சிவபெருமானின் சூலம், திருமாலின் சக்கராயுதம், அம்பாள் விநாயகருக்கு அங்குசம், முருகனுக்கு வேல் ஆகியவை தெய்வீகப்படைக்கலன்களாக வழிபடப்படுகின்றன.

சிவன் கோயில்களில் பொது வழக்கில் சூலம் எனப்படும் ஆயுதம் உண்டு. அதை அஸ்திர தேவர் எனப்படுகின்றார். பல திருக்கோயில்களில் சூலாயுதம் மட்டுமே இருக்கும். சில இடங்களில் அவற்றில் தெய்வத் திருவுருக்கள் எழுந்தருளியிருக்கும். இந்த அஸ்திரதேவர் கோயில்களில் திருவுலா நடைபெறும்முன் பாதுகாவல் அதிகாரியாக உலா வருவது பழக்கத்தில் உள்ளது. அப்போது அஷ்ட திக்குகளிலும் இதன்முன்பாக சாத உருண்டைகளை பலியாக இடுவதும் பழக்கத்தில் உள்ளது.

படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐவக தொழில் செய்யும் சிவனுக்கு முகம் ஐந்து; ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என்பவை. ஐந்துவகை முகத்திலிருந்து அவற்றுக்கு உண்டான சக்திகள் அஸ்திரங்களாக மாறி எதிரிகளின் சேனைகளை, கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவைகளை விலக்கி, துவம்சம் செய்கின்றன. வாழ்வில் ஏற்றம் கிடைக்கச் செய்கின்றன.

இவ்வாறு சிவனின் படைக்கலன்களில் சிவாஸ்திரம், பாசுபதாஸ்திரம், தூளிகாஸ்திரம், யோகமாஸ்திரம் ஆகிய நான்கு அஸ்திரங்கள் சிவலிங்கத்தை மூலமாகக் கொண்டவை இவைகள் உருவமற்றவை. ஆனால் ஐந்தாவதான "அகோராஸ்திரம்" மட்டும் வழிபாட்டுக்குரிய தெய்வத்திருவுருவுடையது. சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய சத்ததந்துவை வீரபத்திரர் அகோர அஸ்திரத்தை ஏவி கொல்லப்பட்டான். அவ்வாறு அஸ்திரம் மேற்கொண்ட வடிவம் அகோர அஸ்திர மூர்த்தி ஆகும். திருவெண்காட்டில் இந்த அகோராஸ்திர தேவருக்கென ஒரு தனி சந்நிதி அமைந்துள்ளது.

இவர் தன்னுடைய சேனையை காப்பாற்றுவதும் பிறரின் படைக்கு பயத்தை உண்டு பண்ணுவது, எதிரியால் ஏவப்பட்ட காரியத்தை அழிப்பது, எல்லா வியாதியையும் போக்க வல்லது எல்லா தோஷத்தையும் போக்குவதில் சாமர்த்தியமானது, அண்டியவர்களை குழந்தைபோல் பாவிப்பது என்று அகோர மூர்த்தியின் மகிமையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் அகோர மந்திரத்தால் ஜபம் செய்யும்போது பலன் அதிகம். அகோர மந்திரம் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காக்கும். எதிரிகளுக்கு அச்சத்தை விளைவித்து தோற்றோடச் செய்யும் தன்மை வாய்ந்தது. இவ்வாறு தீயதை அழிப்பது அஸ்திர தேவர் ஆகும்.

முக வசிகரம் பெறகார் போக அரிசிகஸ்தூரி மஞ்சள்கிச்சிலி கிழங்கு கோரை கிழங்குகசகசாபாதாம் பருப்புஇவைகளை சம அளவு எடுத்து பசும்ப...
12/03/2025

முக வசிகரம் பெற

கார் போக அரிசி

கஸ்தூரி மஞ்சள்

கிச்சிலி கிழங்கு கோரை கிழங்கு

கசகசா

பாதாம் பருப்பு

இவைகளை சம அளவு எடுத்து பசும்பால் விட்டு அறைத்து உருண்டை செய்துக்கொண்டு தினமும் 10 நிமிடம் முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் வசிகரம் கிடைக்கும் முகவசிகரம் கிடைத்தால் அனைத்து காரியங்களையும் சாதிக்கலாம்.

ஓமவல்லியின் மகத்துவம் #ஓமவல்லி
12/03/2025

ஓமவல்லியின் மகத்துவம்
#ஓமவல்லி

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவனடியார் கோபால் சாமிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share