JAQH Naduveerapattu

JAQH Naduveerapattu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JAQH Naduveerapattu, Religious Center, Periyar Street, Ramji Nagar, Naduveerapattu, Chennai.

21/09/2025
16/09/2025

REF: JGS0041/0925

வக்ஃப் மசோதா தீர்ப்பு - அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது!

15.09.2025 நேற்று உச்ச நீதிமன்றம் வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா வழக்கின் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை மேலோட்டாமாக பாரக்கும் போது சற்று ஆறுதலைத் தருவதை போன்று இருந்தாலும், முற்றிலும் நீதிக்கு எதிரான தீர்ப்பாக இது உள்ளதையே நம்மால்; அறிய முடிகின்றது.

முதலாவதாக - இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதித்த முன்னாள் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு எழுப்பிய பல கேள்விகளுக்கு நேற்று வழங்கிய தீர்ப்பில் பதில் இல்லாமல் உள்ளது.

இரண்டாவது, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடியாது என்று நீதி அரசர்களே கூறுவது ஆச்சரியமாக இருக்கின்றது. ஏற்கனவே இரண்டு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தாலும் நாடாளுமன்றத்தாலும் நீக்கப்பட்டுள்ளதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் வரலாறு! ஆனால், ரத்து செய்ய முடியாது என்று சொல்வது மிகவும் கவலைக்குரியதாக ஆக்கி உள்ளது

வக்ஃப் திருத்த மசோதாவில் உள்ள சில சட்ட விதிகளுக்கு இடைக்காலத் தடை தானே தவிர, முழுமையானதாக ரத்து செய்யப்படவில்லை. இந்தத் தீர்ப்பின் போக்கை பார்க்கும் போது ஒன்றிய அரசின் வக்ஃப் ஆக்கிரமிப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வருவதை நோக்கிய பயணத்தில் உள்ளது என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிக்கு
M.ரஹமத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
மாநில பொதுச்செயலாளர்
மாநிலத் தலைமையகம் (JAQH)
16.09.2025

Teaching and reform campaign was done to the muslims in the Naduveerapattu Area today . நடுவீரப்பட்டு பகுதியில் முஸ்லிம்...
11/08/2025

Teaching and reform campaign was done to the muslims in the Naduveerapattu Area today .

நடுவீரப்பட்டு பகுதியில் முஸ்லிம்களை வீட்டில் நேரில் சந்தித்து

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், இறுதி வேதம் திருக்குர்ஆனை படித்து அமல் செய்வதின் அவசியம், இறுதி மூச்சு வரை தொழுகையை பேணி கொள்வது, தட்டு ,தகடு , தாயத்தின் ஆபத்துகள் பற்றிய நபிகளாரின் எச்சரிக்கை ஆகிய தலைப்புகளில் , சீர் திருத்த பிரச்சாரம் நடைபெற்றது.

மெளலவி அப்துர்ரஹ்மான் மன்பஈ , சகோதரர் அப்துஷ் ஷுக்கூர் ஆகியோர் தெளிவாக குர்ஆன் நபிகளாரின் பொன் மொழிகள் மூலம் உபதேசித்தனர்.
இதில் சகோதரர் அப்துல் லத்தீப், சகோதரர் செய்யித் அலி ,சகோதரர் அப்துல் ஹலீம், சகோதரர் நாசர் , சகோதரர் தன்வீர் , இமாம் ஆகியோர் உடன் இருந்து முழு ஒத்துழைப்பு தந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் தர்ஜுமா , குர்ஆன் சுன்னா மார்க்க புத்தகங்கள் , ஹிஜாப் ஆகியவை கொடுக்கப்பட்டது.

உபதேசம் கேட்ட மக்களுக்கு அல்லாஹ் நேர் வழி தருவானாக.
அவர்களின் ஈமானை அதிகப் படுத்துவானாக .

யாஅல்லாஹ் அவர்களின் பாவங்களையும் எங்கள் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள் புரிவானாக.

மஸ்ஜிதுல் ஹக் JAQH நடுவீரப்பட்டு பள்ளிவாசல்

அன்புடன். ஜம்யித்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH காஞ்சி மாவட்டம்..
👇👇👇👇👇👇👇👇👇

Eid Wishes
30/03/2025

Eid Wishes

Address

Periyar Street, Ramji Nagar, Naduveerapattu
Chennai
600069

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAQH Naduveerapattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share