Bhakthi Deepam

Directions

Bhakthi Deepam Bhakthi Deepam posting most of the devotional and astrology related info in the Tamil language.

 #புரட்டாசி_மாதத்தின்_முதல்_நாள். சீதாராமர் உடன் லட்சுமணன் :பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறு...
18/09/2026

#புரட்டாசி_மாதத்தின்_முதல்_நாள். சீதாராமர் உடன் லட்சுமணன் :பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.*

 #புரட்டாசி_மாத_முதல்_நாளும்  #முதல்_வெள்ளியான இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகே உள்ள திருமாலின் 108 வைணவத்திவ...
18/09/2026

#புரட்டாசி_மாத_முதல்_நாளும் #முதல்_வெள்ளியான
இன்று தமிழகத்தின் தலைநகரான
சென்னைக்கு அருகே உள்ள
திருமாலின்
108 வைணவத்திவ்ய தேசங்களில்
தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றானதும்,
பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி தரும் தலமான
#செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
உலகப் புகழ்பெற்ற
#திருநீர்மலை என்ற தோயாத்ரதி ஷேத்ரம், #தோயாத்ரிகிரி, நீர்மலை
1. #ஶ்ரீநீர்வண்ண_பெருமாள் மற்றும்
#அணிமாமலர்மங்கை_தாயார்
2. #ஶ்ரீரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயார்
3. #உலகளந்த_பெருமாள்
4. #பால_நரசிம்மர்
திவ்யதேச திருக்கோயிலின்
வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇
ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக அருள்கிறார். நின்ற கோலத்தில் அருளும் தலங்கள், சயனக்கோலத்தில், அமர்ந்த கோலத்தில், உலகளந்த பெருமாளாக எனப் பல நிலைகளில் அருள்கிறார் திருமால். ஆனால் அனைத்து நிலைகளிலும் திருமால் அருளும் ஆலயம் சென்னை பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலையில் உள்ளது.
இங்கே நீர்வண்ணப் பெருமாளாக நின்ற கோலத்திலும், நரசிம்மராக அமர்ந்த கோலத்திலும், ரங்கநாதனாக கிடந்த கோலத்திலும், உலகளந்த பெருமாளாக நடந்த கோலத்திலும் திருமால் அருள்கிறார்.
திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் எண்ணற்ற திருத்தலங்களில் எழுந்தருளி யிருந்தாலும், எட்டு திருத்தலங்கள் சுயம்வியக்த தலங்கள் – தானாகத் தோன்றிய தலங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய தலங்களுடன் திருநீர் மலையும் சுயம்வியக்த தலமாகப் போற்றப் படுகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை என்றாலும், இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதற்கான சான்றுகள் அங்கு உள்ளன.
#கோயில்_குறிப்புகள்:
*மூலவர்:நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்
*தாயார்:அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி
*தல விருட்சம்:வெப்பால மரம்
*தீர்த்தம்:சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி
*ஆகமம் :வைகானஸம்
*புராண பெயர்:நீர்மலை, தோயாத்ரிகிரி
*ஊர்:திருநீர்மலை
*மாவட்டம்:காஞ்சிபுரம்
*மாநிலம்:தமிழ்நாடு
*பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்
#திருநீர்மலை பாசுரம்:
"அன்றாயர் குலக்கொடி யோடனிமா மலர் மங்கை யொடளப்பளாவி அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மாமலையாவது நீர்மலையே.
-திருமங்கையாழ்வார்
*வால்மீகி முனிவர் தரிசனம்:
ராமாயணத்தை இயக்கிய வால்மீகி முனிவர், மலை உச்சியில் உள்ள ரங்கநாதரை வழிபட்டுப் பின் அடிவாரத்தில் ராமனின் காட்சியைக் கண்டதாக ஐதீகம். சீதா தேவி லட்சுமியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், மற்ற தம்பிகள் சங்கு சக்கரங்களாகவும் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது.
*திருமங்கையாழ்வார் காலம்:
திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். அப்போது மலைமீது நீர் சூழ்ந்திருந்ததால் அவர் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. பூதத்தாழ்வாரும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
#புராண வரலாறு:
பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசித்துவிட்டு, மற்ற திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தனர். திருநீர்மலை வழியாக வந்தபோது, திருமாலின் சயனக் கோலத்தை மீண்டும் தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஸ்ரீரங்கத்தில் தரிசித்த சயனக்கோலம் கண்களுக்குள்ளேயே இருந்ததால், மீண்டும் சயனக் கோலத்தில் கண்டு மகிழ விரும்பினார்.
இருவரும் திருமாலை வேண்டிநிற்க, அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, திருமால் திருநீர்மலையில் போக சயனத்தில் ரங்கநாதராக காட்சி கொடுத்து அருளினார். இந்த ரங்கநாதப் பெருமாளே இந்தத் திருநீர்மலையில் மலைக்கோயில் மூல மூர்த்தியாக அருள்கிறார். இவர் அருகே பிருகு முனிவரும் மார்க்கண்டேயரும் இருப்பதை இப்போதும் காணலாம்.
மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் இத்தலத்திற்கு ஒருமுறை வந்தபோது, மலைமீது ஏறி, அங்கே அருளும் ரங்கநாதரையும், அமர்ந்த கோலத்தில் அருளும் நரசிம்மரையும், நடந்த கோலத்தில் அருளும் திரிவிக்கிரமரையும் தரிசித்தார். ஆனாலும் அவர் மனதில் ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தோன்றியது. மலை மீதிருந்து இறங்கி வரும்போதும் நிம்மதி இல்லாத ஒரு உணர்வு. மூன்று கோலத்தில் திருமாலை வணங்கி வந்தபிறகும் மனதில் குறை இருக்கக் காரணம் என்ன என்று ஆராய்ந்தார்.
அப்போதுதான் அவருக்கு தன் மனம் கவர்ந்த ராமபிரான் அங்கில்லையே என்பது புரிந்தது. தன் மனம் ராமரைத் தரிசிக்க ஏங்குகிறது என்பது புரிந்தபோது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ராமபிரானை உடனே தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. மனம் உருகி இறைவனைப் பிரார்த்தித்தார்.
அவர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த திருமால், நீர்வண்ணனாகக் காட்சி தந்தார். சீதாதேவி, லக்ஷ்மணன், பரத சத்ருக்னன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமபிரானாக திருமால் அவருக்குக் காட்சிகொடுத்தார்.
வால்மீகி மகரிஷி மனம் குளிர்ந்தார். அதே திருக்கோலத்தில் அங்கே கோயில் கொண்டருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் அப்படியே இத்தலத்தில், மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீ ராமராக, நீர்வண்ணப் பெருமாள் என்ற திருநாமத்தோடு தங்கிவிட்டார். தாயார் அணிமாமலர் மங்கை என்ற திருநாமத்தில் தனிக்கோவில் நாச்சியாராக அருள்கிறார்.
இத்தலத்து இறைவனைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் ஒருமுறை வந்தார். அப்போது இந்த மலையைச் சுற்றி அகழி போல் நீர் தேங்கியிருந்தது. அவரால் நீரைக் கடந்துசெல்ல முடியவில்லை. திருமாலைத் தரிசிக்காமல் திரும்பிச்செல்ல அவருக்கு மனமில்லை. தண்ணீர் வடிந்து பெருமாளைத் தரிசித்தபிறகே திரும்பிச் செல்வது என்று தீர்மானித்தார். கோவில் எதிரே உள்ள சிறிய மலையில் தங்கினார்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஆறு மாதங்கள் காத்திருந்தார். தொடர் மழை காரணமாக தண்ணீர் வற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் நாராயணனைத் தரிசிக்கும் ஆவலில் காத்திருந்தார் ஆழ்வார். அவர் எண்ணம் ஈடேறியது. தண்ணீர் வற்றியதும், ஆர்வமுடன் கண்களில் நீர் பெருக, ஓடோடி வந்து திருமாலின் நான்கு திருக்கோலங்களையும் தரிசித்து மகிழ்ந்து பாசுரங்கள் பாடினார்.
திருமங்கையாழ்வார் வந்தபோது மலையைச் சுற்றி நீர் தேங்கியிருந்ததால் இத்தலத்திற்கு திருநீர்மலை என்ற பெயர் வந்தது. அதற்கு முன் ‘காண்டவ வனம்’ ‘தோயாத்ரி மலை’ போன்ற பெயர்களாலேயே வழங்கப்பட்டன.
நரசிம்மர் அநேகமாக எல்லாத் தலங்களிலும் உக்கிரமாகக் காட்சி தருவார். ஆனால் இங்கே சாந்தமாக, பால நரசிம்மராக அருள்கிறார். இரணியனை வதம் செய்ய உக்கிரமாகத் தோன்றிய நரசிம்மரைக் கண்டு பிரகலாதன் பயந்தான். அதனால் தன் பக்தனுக்காக, அவனைப் போலவே பாலகனாக, சாந்த ஸ்வரூபியாக தரிசனம் தருகிறார் நரசிம்மர். ‘பால நரசிம்மர்’ என்று இவரை அழைக்கின்றனர். சங்கு சக்கரம் இன்றி பாலகனாக அருளும் நரசிம்மருக்குப் பின்புறம் நரசிம்மர் சுயரூபம் காட்டி அருள்கிறார்.
திருமால் தானாகத் தோன்றிய தலங்கள் எட்டு. இவை ‘ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப் படுகின்றன. அவற்றில் திருநீர்மலையும் ஒன்று.
ஸ்ரீரங்கம்
 ஸ்ரீமுஷ்ணம்
 திருப்பதி
 சாளக்கிராமம்
 நைமிசாரண்யம்
 புஷ்கரம்
 நாராயணபுரம் ஆகியவை மற்ற ஏழு தலங்களாகும்.
ாறு:
ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்’ ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.
*திருவிழா:
சித்திரையில் பிரம்மோற்சவம் 10 நாட்கள், வைகாசி வசந்த உற்சவம், ஆனி கோடை உற்சவம், புரட்டாசி சனி பவித்ர உற்சவம் கொண்டாடப்படுகிறது.
*தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார்.
*பொது தகவல்:
இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு 3 ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு. இக்குளம் சுத்த புஷ்கரணி, ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. வைகானச ஆகம விதிப்படி இரு வேளை பூஜை நடக்கிறது. ராமர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார்.
#தலபெருமை:
1.நீர்’ பெருமாள்:
ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.
2.ஒரே தலத்தில் நான்கு பெருமாள்:
இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.
3.குழந்தை நரசிம்மர்:
நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
*கோபுரம் ராமருக்கு… கொடிமரம் நீர்வண்ணருக்கு…:
கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர்மங்கை’ எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
#அஷ்ட சயனங்கள்:
பெருமாளின் அஷ்ட சயன திருக்கோலங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனம் என்பார்கள். திருவள்ளூர் திருத்தலத்தில் வீர சயனம் என்று போற்றுவார்கள். திருக்கடல் மல்லை என்று புகழப்படும் மாமல்லபுரத்தில், தல சயனம் என்கிறது ஸ்தல புராணம். திருக்குடந்தை திருத்தலத்தில் உத்தாயன சயனம் என்றும் திருப்புல்லாணி திருத்தலத்தில் தர்ப்ப சயனம் என்றும் சொல்லுவார்கள்.
வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் தலத்தைத்தான் சொல்லுவார்கள். அத்தகைய பெருமைமிக்க தலத்தில், புஜங்க சயனமாக பெருமாள் திருக்காட்சி தருகிறார். திருச்சித்திரக்கூடம் என்று கொண்டாடப்படும் சிதம்பரத்தில், போக சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். எட்டாவதாக திருநீர்மலை திருத்தலத்தில், மாணிக்க சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள்.
அரங்கன் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தை, ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம் என்று சிலாகிக்கிறது ஸ்தல புராணம். அதாவது, மனிதர்களால் உண்டுபண்ணாமல் தானே ஏற்பட்ட சிலாமேனி என்று அர்த்தம். சைவ திருக்கோயில்களில் சுயம்பு மூர்த்தம் என்று சொல்வது போல், வைஷ்ண தலங்களில், ஸ்வயம் வயக்தம் என்பார்கள்.
இப்படி ஸ்வயம் வயக்த க்ஷேத்திரங்களாக, ஸ்ரீரங்கம் திருத்தலம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், ஸாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி, தோத்தாத்ரி எனப்படும் திருநீர்மலை முதாலான க்ஷேத்திரங்களைச் சொல்லுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
*இரட்டை திருவிழா:
மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
குளம் ஒன்று:
தீர்த்தம் நான்கு:
கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, “முக்கோட்டி துவாதசி’ என்று அழைக்கிறார்கள்.
*திருவிழாக்கள்:
சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர் - அணிமாமலர் மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் பவனி வருவதைக் காண பக்தர்கள் குவிவது வழக்கம். காலை சூரிய உதயத்துக்கு முன்னர் சூரியபிரபையில் எழுந்தருளி மாடவீதி வலம் வந்து தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்கிறார். சூரிய உதய வேளையில், சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதை சூரியனே பெருமாளுக்கு செய்யும் பூஜையாகக் கருதுவதுண்டு. பின்னர் சுவாமி, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை, சிம்ம வாகனங்கள் மற்றும் சந்திர பிரபையில் எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம். சித்திரை, பங்குனி பிரம்மோற்சவங்களில் 9-ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய 3 நாட்களில் தீர்த்தவாரி விழா நடைபெறும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதால், இந்த நிகழ்ச்சி ‘முக்கோட்டி துவாதசி’ என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் கோயில் கிரிவலம்:
தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, “ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்’ எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.இம்மலைக்கு “தோயாத்ரிமலை’ என்ற பெயரும் உண்டு. தோயம் என்றால் “பால்’ எனப்பொருள். சுவாமி தோயகிரி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது இவருக்கு புஷ்பாங்கி அலங்காரம் செய்கின்றனர்.
மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன. அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.
இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் பெருமாள் நின்றான், கிடந்தான், இருந்தான் மற்றும் நடந்தான் என்று நான்கு நிலைகளில் காட்சி அளிக்கிறார். நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும், இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாக பெருமாள் காட்சி அளிக்கின்றார்.
இக்கோவிலில் சென்று வழிபட்டால் நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார் கோவில், திருவாலி, திருக்குடந்தை மற்றும் திருக்கோயிலூரை வழிப்பட்ட பலனை அடையலாம் என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியை வணங்கிய பலனை இவ்வாலயத்தில் அடையலாம் என்று பூதத்தாழ்வார் குறிப்பிடுகிறார்.
திருநீர்மலையில் உள்ள ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. நீர்வண்ணப் பெருமாளின் விமானம் – புஷ்பக விமானம்; ரங்கநாதர் விமானம் – ரங்க விமானம்; நரசிம்மர் விமானம் – சாந்த விமானம்; திரிவிக்கிரமர் விமானம்- பிரமாண்ட விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.
கோயில் திருக்குளமும் நீராழி மண்டபத்துடன் ஸ்வர்ண புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி என்ற நான்கு தீர்த்தங்களுடன் அமைந்திருக்கின்றன.
பொதுவாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பார் பெருமாள். கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பார். இருந்த கோலத்திலும் நடந்த கோலத்திலுமாகக் காட்சி தருவார். இங்கே... திருநீர்மலை திவ்விய திருத்தலத்தில் நான்குவிதமாகவும் திருக்காட்சி தருகிறார் பெருமாள் என்பது இந்தத் தலத்தின் இன்னொரு மகத்துவம்.
ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். அதேபோல, ஸ்ரீசாந்த நரசிம்மராக இருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். மாணிக்க சயனத்தில், ஸ்ரீரங்கநாதராக கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். த்ரிவிக்கிரம பெருமாளாக நடந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார்.
வால்மீகி முனிவருக்கும் தொண்டைமான் மன்னருக்கும் இங்கே திருக்காட்சி தந்து வரமருளிய திருத்தலம் எனும் பெருமைமிக்கது திருநீர்மலை.
திருநீர்மலைக்கு வந்தால், திருப்பங்களும் நல்ல மாற்றங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை, திருமணத் தடைகள் நீக்கவும், ஆயுள் ஆரோக்கியம் அருளும் ப்ரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஓம் நமோ நாராயணாய நமஹா

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhakthi Deepam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category