WahdatMedia

WahdatMedia Islam - A complete system of life. It is the only solution for the crisis of humanity. Thrives for sincerity in all its activities viz.

Believes in Islam as the only way of life and the cornerstone of all its efforts is to attain the pleasure of Allah and succeed in the Hereafter. Self Purification (Tazkiya), Reforming the society on the foundations of Quran and Sunnah, Establish Social Justice etc. as it is the only prerequisite for acceptance in the eyes of Allah.

26/08/2026

நபிகளாரின்(ஸல்) புரட்சித்தூது
தேசம் தழுவிய
தொடர் பிரச்சாரம்
ஆகஸ்ட் 16 முதல் 26 வரை 2026

*பெண் சிசுக் கொலைக்கு எதிரான தூதர் (ஸல்)*





வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக நபிகளாரின் புரட்சித்தூது எனும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் சமூகம் எதிர்கொள்ளும் முக்க...
25/08/2026

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக நபிகளாரின் புரட்சித்தூது எனும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய நான்கு பிரச்சினைகளான போதை, தற்கொலை, பெண் சிசுக்கொலை மற்றும் சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு ஆகியவைகளுக்கு தீர்வாக நபிகளாரின் வழிகாட்டுதலை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!

இத்தொடர் பிரச்சாரத்தின் ஓர் நிகழ்வாக 23/8/26 ஞாயிறு அன்று மாலை 7.00மணி முதல் கோவை கரும்புக்கடை சாஜி கார்மெண்ட்ஸ் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

"இன்றைய Genz க்களும் இறைத்தூதரின் வழிகாட்டுதலும்!
மற்றும்
நபிகளாரின் புரட்சித்தூது - மாற்றத்தை உருவாக்குவோம்! " எனும் முக்கிய தலைப்பில் பேசுவதற்காக வஹ்தத்தின் மாநில தலைவர் செய்யத் முஹம்மத் புகாரி ஸாஹிப் அவர்களும் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. அலாவுதீன் அவர்களும் வருகை தந்து சிறப்புரையாற்றினர்.
மாநில ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. ஜாகிர் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை குர்ஆனின் அல் ஃபத்ஹ் அத்தியாய வசனங்களை சகோ.அதீக்குர்ரஹ்மான் ஓதி துவக்கி வைத்தார்.

முதலில் பேசிய சகோ.அலாவுதீன் அவர்கள் Genz க்கள் எனும் இன்றைய வளரும் தலைமுறையினர் அதிக திறனும் சாதிக்கும் எண்ணமும் கொண்டவர்கள். அவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறன்களை ஒன்றுமில்லாமல் ஆக்கவே இளைஞர்கள் மத்தியில் கேளிக்கைகள் போதை போன்ற தீமைகளும் அனாச்சாரங்களும் பரவலாக்கப் படுகின்றன. இதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது அவை அண்ணல் நபிகளாரின் மூலமே கிடைக்கப் பெறும் என கருத்துரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மாநில தலைவர் செய்யது முஹம்மது புகாரி அவர்கள் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் சமூகம் சிக்கித் தவிக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருப்பது அண்ணலம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களே என்று கூறினார் . மேலும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளான சுற்றுப்புற சூழல் மாசுபடுவது, தற்கொலை, போதை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவைகளை நபி(ஸல்) எவ்வாறு அன்றைய மக்களிடமிருந்து அகற்றினார்கள் எனும் வரலாற்று படிப்பினைகளை அழகாக எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து சகோதரர் ஜாகிர் ஹுசைன் தொடர் பிரச்சாரத்தில் எடுத்துச் செல்லும் இந்த நான்குவகையான பிரச்சனைகள் என்பன களையப்பட வேண்டுமெனில் சமூகத்தில் ஓரிறைக் கோட்பாடு போதிக்கப்பட வேண்டும் ஏனெனில் ஓரிறைக் கோட்பாட்டில் தான் இருளிலிருந்து ஒளியை நோக்கி அழுக்கிலிருந்து தூய்மையை நோக்கி தனிமனித வாழ்வு சமூக வாழ்வு அகவாழ்வு புறவாழ்வு அனைத்தும் நகரும் என தெளிவு படுத்தினார்கள். தவ்ஹீதை கொண்டு தான் நபிகளார் (ஸல்) அவர்கள் சமூகத்தை சீர்படுத்தினார்கள் எனும் கருத்தில் சிற்றுரையாற்றினார்.

இறுதியாக மாவட்ட தலைவர் சகோதரர் நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!! அல்ஹம்துலில்லாஹ்.

நபிகளாரின் (ஸல்) புரட்சித்தூதுதேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக, “நபிகளாரின் (ஸல்) புரட்சித்த...
25/08/2026

நபிகளாரின் (ஸல்) புரட்சித்தூது
தேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக, “நபிகளாரின் (ஸல்) புரட்சித்தூது” எனும் தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம், சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான நான்கு பிரச்சினைகளான போதைப் பழக்கம், தற்கொலை, பெண் சிசுக்கொலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றிற்குத் தீர்வாக, நபிகளாரின் ﷺ வழிகாட்டுதல்களை நாடு முழுவதும் எடுத்துச் சென்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இத்தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 25.08.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில், சமூகத்தின் தூய்மையையும் சுகாதாரத்தையும் பாதுகாக்க அயராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் 80-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் செய்யத் முஹம்மத் புகாரி ஸாஹிப் அவர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்களும் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பொன்னாடைகள் வழங்கி கௌரவித்தனர்.

மேலும், மாநிலத் தலைவர் செய்யத் முஹம்மத் புகாரி ஸாஹிப் அவர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்களும், “நபிகளாரின் (ஸல்) புரட்சித்தூது” பிரச்சாரத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் சமூகப் பங்களிப்பையும் பாராட்டி தெரிவிக்கப்பட்ட நன்றியுரை, அவர்களின் உள்ளங்களைத் தொட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அல்ஹம்துலில்லாஹ்! 🤲

📢 நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூதுதேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்திருப்பூர் – மதரஸத்துல் பய்யினாஅல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வி...
25/08/2026

📢 நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூது
தேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்

திருப்பூர் – மதரஸத்துல் பய்யினா

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பேரருளால், நேற்று திருப்பூர் மதரஸத்துல் பய்யினாவில், நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு தர்பியா அமர்வு சிறப்பாக நடைபெற்றது.

📌 முதல் அமர்வு – “மனித உயிர்களின் மாண்பு”

சகோதரர் நிசார் அவர்கள், பெண் சிசுக்கொலை மற்றும் தற்கொலை உள்ளிட்ட சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தற்கால சூழலுக்கு ஏற்ப விழிப்புணர்வுடன் எடுத்துரைத்தார்.

📌 இரண்டாம் அமர்வு – “சமூகத்தின் சவால்களும் அதன் தீர்வுகளும்”

உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், சமூகத்தில் உருவாகும் சீர்கேடுகள், குடும்பங்களில் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூகச் சவால்கள் குறித்து விளக்கினார்.

மேலும், சுற்றுப்புறச் சூழல் மற்றும் தூய்மை குறித்தும், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் தூய்மை தொடர்பான அவலநிலைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய நாம், இத்தகைய பிரச்சினைகளை கடந்து செல்லாமல், அவற்றை உணர்ந்து நபிகளார் ﷺ காட்டிய வழியில் சமூக மாற்றத்திற்காக செயல்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

🤲 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று, பயனுள்ள கருத்துகளைப் பெற்றுக் கொண்டனர்.

🍽️ நிகழ்ச்சியின் நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்! 🤲

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்தின்சார்பாக நடைபெற்று வரும்நபிகளாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புரட்சித்தூது தேசம் தழுவிய தொடர் ப...
25/08/2026

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்தின்
சார்பாக நடைபெற்று வரும்
நபிகளாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புரட்சித்தூது
தேசம் தழுவிய தொடர் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இன்று (25/08/2026).

கோவை 86வது வார்டு கவுன்சிலர் மதிப்புக்குரிய அண்ணன் கபீர் ம. ம. க அவர்களின் தலைமையில் துப்புரவு தொழிலாளர்களுக்கான சந்திப்பு நடைபெற்றன.

இதில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் போதை சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்கள் பகிரப்பட்டன.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!!

#கோவை மாவட்டம் #

25/08/2026

#தற்கொலை

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டம் சார்பாக சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் தலைப்பின் கீழ் சமூகம்...
25/08/2026

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டம் சார்பாக சமூகம்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் தலைப்பின் கீழ் சமூகம் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சினைகளான போதையால் ஏற்படும் சீர்கேடுகள், பெண்சிசுக்கொலைகள், தற்கொலைகள், மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு போன்றவைகளை மையப்படுத்தி சமூக ஆர்வலர்களின் சங்கமத்தை 23/8/26 ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு வஹ்தத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக செயல்பாட்டாளர்களுக்கான சிறப்பு நிகழ்வான இதில்

ஜனாப். செய்யத் முஹம்மத் புகாரி - WIH
சகோ.அலாவுதீன் - WIH
ஜனாப். சுல்தான் அமீர் - மமக
திரு.கனகராஜ் - CPI(M)
திரு.மனோஜ் - தபெதிக

ஆகிய சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை மௌலவி நியசுத்த்தீன் நத்வி அவர்கள் அனைவரின் அறிமுகத்துடன் துவங்கி வைத்தார்.

தொடர்ந்து தோழர் கனகராஜ் பேசுகையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் சில நபர்களின் சுயலாபத்திற்காக இயற்கை வளங்களை அவர்கள் சுரண்டுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதுவே சுற்றுப் புறச் சூழல் பாதிப்படைய காரணமாக அமைகிறது. இதற்கு இயற்கை வளங்களை சுரண்டுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து ஜனாப் சுல்தான் அமீர் பேசுகையில் போதை போன்ற தீமைகள் இன்று சினிமாக்களில் Heroism மாக சித்தரிக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் இது போன்ற விஷயங்கள் தீமையாகவே இல்லாதவாறு ஆக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடுத்து பேசிய தோழர் மனோஜ் அவர்கள் பெண்களின் உரிமைகள் பரிக்கப்படுவதின் மரு உருவமே பெண் சிசுக்கொலை என்றும் மனிதன் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத சரியோ தவறோ தனக்கு தோன்றியதை மட்டுமே செய்து கொள்ளும் சமூகம் உருவவாகுவதே தற்கொலை போன்ற விபரீதங்கள் ஏற்பட காரணமாகிறது என்றார்.

அடுத்து பேசிய ஜனாப் அலாவுதீன் அவர்கள் போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களில் கடைநிலையில் உள்ளவர்களே தண்டனை பெறுகிறார்களே தவிர கண்டெய்னர்களில் டன் கணக்கில் போதையை கடத்தக் கூடியவர்கள் எந்த வித பாதிப்பும் இன்றி தொடர்ந்து அதே செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பெண் சிசுக்கொலை இன்னும் இது போன்ற சமூக கொடுமைகளுக்கு நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களே தீர்வாக அமையும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக பேசிய ஜனாப். செய்யத் முஹம்மத் புகாரி அவர்கள் காலம்காலமாக மனித சமூகம் எதிர்கொள்ளும் இந்த 4 பிரச்சினைகளுக்கு தீர்வாக பல அறிஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர் ஆனாலும் தீர்வு இல்லாமல் தவிக்கின்ற சூழலில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதனை அவர்களது உணர்வுகளை இறைவனுக்கு கட்டுப்பட செய்து பெரும் மாற்றத்தை நிகழ்த்தி காட்டினார். அதுவே நபிகளாரின் புரட்சித்தூது என்று கூறி தன்னுடைய உரையை முடிவு செய்தார்.

சமுதாயத்திற்கு தேவையான சிறந்த கருத்து பரிமாற்றங்களும் சமூக செயல்பாடுகளில் இயங்கும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் அது காலத்தின் அவசியம் என்று கூறி வருகை தந்த அனைவரும் ஏற்பாடு செய்த வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் கூறி நிறைவு செய்தனர்.

இப்படிக்கு
வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்
கோவை.

📢 நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூதுதேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்திருச்சி – இனாம்குளத்தூர்அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மகத...
24/08/2026

📢 நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூது
தேசம் தழுவிய தொடர் பிரச்சாரம்

திருச்சி – இனாம்குளத்தூர்

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மகத்தான பேரருளால், இன்றைய தினம் திருச்சியின் புறநகர் பகுதியான இனாம்குளத்தூரில் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் வியாபாரிகள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.

மேலும், பின்வரும் இறை இல்லங்களில் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரப் பதாகைகள் (பிளக்ஸ்) வைக்கப்பட்டன:

🕌 மதீனா பள்ளிவாசல்
🕌 அல் அமீன் நகர் பள்ளிவாசல்
🕌 உமைரா உமைசா மஸ்ஜித்
🕌 ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அல் மதீனா டீ ஸ்டால் மற்றும் சிவத்தக்கனி பிரியாணி கடை பகுதிகளிலும், ஊரின் முக்கியமான மூன்று பகுதிகளிலும் பிரச்சாரப் பதாகைகள் வைக்கப்பட்டன.

இவ்வாறு, நபிகளாரின் (ஸல்) புரட்சித் தூதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அல்ஹம்துலில்லாஹ்! 🤲

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when WahdatMedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to WahdatMedia:

Shortcuts

Share