Mahaperiyavaa Aathmartha Paropakara

Mahaperiyavaa Aathmartha Paropakara Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahaperiyavaa Aathmartha Paropakara, Religious organisation, T225/16, Gandhi Street paari nagar, Chennai.

With Ambal and Periyavaa's divine anugraham, our mission is to create a team of blessed devotees who may be in a position to help and support Ambal and Periyavaa's children who may be going through challenging situations in life.

08/05/2025

How important is it to Surrender to your Guru? How craving are we to receive her blessings? What should we do?

08/05/2025

(Translation of letter from Shrimatam)
*Verses from Muka Panchashati for protection*

By the orders of the Mahasannidhanam Jagadguru Shankaracharya Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetadhipatis, it is notified that –

In the current security situation of Bharat, the attached prarthana verses of Muka Panchashati are to be continuously chanted by astika-s as time permits.

The 90th verse of Arya Shataka says that it is Kamakshi Para-devata who takes the form of Dandanatha or Varahi, and prays that She drives away enemies, and that Her weapons hala and musala should protect good people.

The 59th verse of Padaravinda Shataka describes how Bhagavati's lotus feet are like the Nava-graha-s. So seva to Bhagavati's padaravinda is sufficient to give the anukula needed from the Nava-graha-s and remove any pratikula indicated by their positions.

The 48th verse of Stuti Shataka prays that by Bhagavati's karuna, receiving Her anugraha, the mind of good people should be firm, flow of good words should be in their speech, those opposing the good should lose their malevolent thoughts.

*Yatra-sthanam* - Tirupati
Shankarabda 2534 Vishvavasu Samvatsara

            - Sarva Shaka Sammelanam for Lokakshemam is presently happening in Nanganallur, Chennai. Aug 2 - Aug 9, plea...
02/08/2022

- Sarva Shaka Sammelanam for Lokakshemam is presently happening in Nanganallur, Chennai. Aug 2 - Aug 9, please take time and get the blessings.... Request all to come united to establish in

Venue: Ayyappan temple annadhanam hall, Ram Nagar, Nanganallur (Chatur Maasya Mohotsav venue)

தமிழகத்தில் விரைவில்வேத பல்கலைக்கழகம் நிறுவப்படும்

24/07/2022

SREE GURUBHYO NAMAHA! OM NAMO NARAYANAYA!

Srimath Narayana Theertha Swamigal’s Chatur Maasya Mahotsav is happening in Ayyappan Temple Annadhana Mandapam, Nanganallur. As a part of this Mahotsav, Maha Sudarshana Homam is being performed for Loka Kshemam from 23rd July – 27th July, 2022 and 1 Lakh and Eight Homa Aavarthi’s are being given to Lord Sudarshana. You are invited to be a part of this Mahotsav and receive the anugraham of Guru and Lord Sudarshana Moorthy.

Mahasankalpam would be taken on 27th July 2022 in the presence of Srimath Narayana Theertha Swamigal and you can participate by paying Rs. 1001/- per sankalpam. Annadhanam is being given for 1000’s of devotees every day and contributions towards these noble causes are most welcome. Your contributions shall be very useful for purchasing the needful for the Homam’s and Pooja’s, in addition to flowers, fruits, annadhanam and towards the expenses incurred for this chatur maasya pooja. Chandramouleeshwarar pooja is being performed trikaalam.

Dasamahavidya Samasthanam
Contact: +91 95001 11108 / 98408 21012 / 81440 14412 / 98400 90435

09/01/2022

IMPORTANT INFORMATION - KINDLY SHARE MAXIMUM (Verified)

1. Save this number 9013151515 to your address book.

2. Type "Certificate" in WhatsApp and you will get the list of verified users for your mobile number provided during your Covid Vaccination

3. Follow the instructions

4. Download your COVID VACCINATION CERTIFICATE INSTANTLY

Such an amazing initiative by our Central government . . .9013151515

Please forward to all

Vaikunth Kasturirangan

18/12/2021
18/09/2021

புரட்டாசியில் அன்ன தானம் செய்யுங்க... பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும் !

தானங்களில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம். மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதனால் நம்முடைய பல தலைமுறைக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பல தானங்களை செய்த கர்ணனையே பசிக்கொடு மை வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாது தான் என்று கூறப்பட்டது.

அது பற்றிய சுவையான கதை உள்ளது.

கர்ணனின் கொடைத்தன்மையை உலகம் அறியும். அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ணன்.

குருசேத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன்.

ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

அப்போது, அந்தணராக வேடமணிந்து வந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார்.

சொர்க்கம் சென்ற கர்ணனை உரிய மரியாதைக ளோடு எமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்க்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார்.

கர்ணனுக்கு பசி

கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படை ந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.

பசி தீர்ந்தது

தேவ குரு பிரகஸ்பதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது.

விரலுக்கு கிடைத்த புண்ணியம்

கர்ணன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இதற்கான காரணம் என்ன என்று குரு பிரகஸ்பதியிடம் கேட்க, அவரோ விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்ய வில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய் என்றார்.

ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
அதற்கு குரு, " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்து விட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக் கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது என்று கூறினார்.

மகாளய பட்ச அன்னதானம்

கர்ணன் கண்களில் நீர் கசிந்தது. அடடா அன்னதானத்திற்கு இத்தனை புண்ணியம் இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டு உடனே எம தர்ம ராஜனிடம் சென்று வேண்டுகோள் வைத்தார். நான் ஒரு பட்ஷம் மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார்.

யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார். கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்னதானம் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.

எமன் மகிழ்ச்சி

கர்ணா, மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார் என்கிறார் எமன்.

அன்னதானம் செய்யவேண்டும்

கர்ணன் உடனே மகிழ்ச்சியடைந்தார், " எம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக் கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்." யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார். யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

முன்னோர்களுக்கு உணவு

சூரியனின் மைந்தர் கர்ணனே அன்னதானத்தின் மகிமையை உணர்ந்து பூமியில் வந்து தர்மம் செய்த மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். புண்ணிய தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும் இந்தநாட்களில் தானம் கொடுப்பது சிறப்பு.

காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வத...
14/09/2021

காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வது என தெரியவில்லை. என்னால் பரிகாரம் செய்ய சொன்னால் பண்ண முடியாது அவ்வளவு வறுமை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு காஞ்சி பெரியவர், உனக்கு துன்பம் என உணரும் போதெல்லாம் நான் சொல்லும் செயலை செய்து வா உன் துன்பம் ஓடி விடும் என்றார். அதற்கு அந்த நபர் அதை உடனே கூறுங்கள் என் துன்பத்தை போக்கிக் கொள்கின்றேன் என்றார்.

பெரியவரோ, சற்று நேரம் அங்கு அமைதியாக உட்கார்ந்திரு, சிறிது நேரத்தில் கூறுகின்றேன் என்றார். சிறிது நேரம் கழித்து பெரியவரிடம் செல்ல, அவர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் அதே இடத்திற்கு சென்று அமைதியா அமர்ந்து கொண்டார். பொறுமையாக அமர்ந்து இருந்து, பின்னர் மீண்டும் பெரியவரிடம் சென்றார்.

இப்போது உன் துன்பம் பறந்தோட என்ன செய்வது என சொல்லுகின்றேன் என்றார்.

பெரியவரின் ஆலோசனை:
இவ்வளவு நேரம் பொறுமையாக அமைதியாக இருந்தாய் அல்லவா, அதே போல் பொறுமையாக அமர்ந்து “ராமா ராமா ராமா ராமா ராமா ” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இரு.

அப்படி சொன்னால் அந்த இடத்திற்கு ஆஞ்சநேயர் வந்துவிடுவார். ராமா என அழைத்தால் அந்த இடத்திற்கு சீதா தேவி வந்துவிடுவார்.

ராமா ராமா என பூஜித்தால் ராமரை பூஜிக்கும் பரமேஷ்வரன் அந்த இடத்திற்கு வந்துவிடுவார். ஈசன் வந்துவிட்டால், அங்கு அம்பாள் வந்துவிடுவார். சிவனும், அம்பாளும் இருக்கும் இடத்திற்கு விநாயகரும், முருகனும் வந்துவிடுவார்கள்.

பிள்ளையார், முருகன் வந்துவிட்டால் அங்கு லட்சுமி கடாட்சம் வந்துவிடும். லட்சுமி கடாட்சம் வந்துவிட்டால் அங்கு லட்சுமி தேவி வந்துவிடுவார்.

லட்சுமி தேவி வந்துவிட்டால் அங்கு மகா விஷ்ணு வந்துவிடுவார்.
அவர் வந்துவிட்டால் அங்கு தசாவதார மூர்த்திகளைப் பார்த்துவிடலாம். இப்படி இறைவன் அந்த இடத்திற்கு வந்துவிட்டால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் அங்கு வந்துவிடுவார்கள்.

இதனால் ‘ராம’ நாமத்தை சொன்னால் அந்த இடத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்துவிடும்.

அதனால் இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தது போல அமர்ந்து ராம நாமத்தை கூறி வந்தால் அனைத்து தெய்வங்களும் உன் துன்பத்தைப் போக்க துணை நிற்பார்கள்.

அதனால் ராம நாமத்திற்கு இவ்வளவு மகிமை உண்டு. நாமும் ராம நாமத்தை கூறி வாழ்வில் அனைத்து வகை செல்வங்கள். வளங்களைப் பெறுவோம்.

Jaya Jaya Shankara hare hare Shankara

Address

T225/16, Gandhi Street Paari Nagar
Chennai
600083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahaperiyavaa Aathmartha Paropakara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share