Sri bhadra vinayakar devasthanam

Sri bhadra vinayakar devasthanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri bhadra vinayakar devasthanam, Religious organisation, ekkambara Iyer Street, Chennai.

Sri Bhadra vinayakar devasthanam one of the oldest temple in Ambattur area,Every year we used to conduct Radha Kalyanam in the month of Thai maasam (Jan-Feb) and next year it's going to be 63st year of Radha Kalyanam request everyone to visit the temple

21/08/2024

வருகின்ற வியாழ கிழமை 22.08.2024 அன்று மஹா சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ பத்ர விநாயகருக்கு மாலை 6.30 மணிக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது.மற்றும் 7.15 மணிக்கு திருவீதி உலா நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு பத்ர விநாயகர் அருள் பெற வேண்டுகிறோம். இப்படிக்கு பத்ர விநாயகர் நிர்வாகம் 🙏🙏🙏

21/08/2024

நாளை மகா சங்கடஹர சதுர்த்தி
******************************************
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குறிப்பிட்ட திதி சிறப்பானது. அது வளர்பிறை, தேய்பிறை என ஏதோ ஒன்றில் வரும். முருகனுக்கு வளர்பிறை சஷ்டி, சிவபெருமானுக்கு தேய்பிறை சதுர்த்தசி, ராமருக்கு வளர்பிறை நவமி, கிருஷ்ணருக்கு தேய்பிறை அஷ்டமி, அம்பாளுக்கு பவுர்ணமியே சிறப்பு. ஆனால் விநாயகருக்கோ வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதியும் சிறப்பு.

அவர் பிறந்தது என்னவோ வளர்பிறை சதுர்த்திதான். என்றாலும் தேய்பிறை சதுர்த்தி என்பது அவருக்கு பிடிக்கும். இதையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

'ஸங்கட ஹர' என்றால் 'சங்கடங்களை தீர்ப்பவர்' என பொருள். இந்த சதுர்த்தியை விநாயகரே ஏற்படுத்தினார். குண்டாக இருக்கும் விநாயகரைக் கண்ட சந்திரன் கிண்டல் செய்தார். பதிலடியாக சாபமிட்டார் விநாயகர். அதற்காக வருந்திய சந்திரன் மன்னிப்பு கோரினார்.

மன்னித்ததோடு தன்னுடன் சேர்த்து சந்திரனையும் வழிபட வேண்டும் என ஆணையிட்டார் விநாயகர். இது பற்றி, 'தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் மனம் குளிர்வேன். சங்கடங்களை போக்குவேன். பூஜையின் முடிவில் சந்திரனையும் வணங்குங்கள்' என்றார் விநாயகர்.

இந்நாளில் விநாயகர் போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். மாலையில் வானில் தெரியும் சந்திரனை தரிசித்து விட்டு விநாயகரை வழிபட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக ஆவணி மாதத்தில் வரும் மஹாசங்கடஹர சதுர்த்தியன்று விரதம் தொடங்கி ஓராண்டு இதைச் செய்வர். இதனால் சங்கடங்கள் பறந்தோடும்.

➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️

23/05/2024

அன்புடையீர் நிகழும் குரோதி ஆண்டு வைகாசி மாதம் 11 ம் தேதி 24.05.24 வெள்ளிக்கிழமை அனுஷ நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் பூஜ்ய ஸ்ரீ மகா பெரியவர் ஜெயந்தியை முன்னிட்டு நமது ஆலயத்தில் பெரியவர் திருவுருவ படத்திற்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீப ஆராதனையும் திருவீதி உலாவும் பஜனையும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ காஞ்சி பெரியவர் அருளுக்கு பாத்திரமாகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
ஸ்ரீ பத்ர விநாயகர் நிர்வாகம்

28/01/2024

Address

Ekkambara Iyer Street
Chennai
600053

Opening Hours

Monday 7am - 10:30am
5:45pm - 8:30pm
Tuesday 7am - 10:30am
5:45pm - 8:30pm
Wednesday 7am - 10:30am
5:45pm - 8:30pm
Thursday 7am - 10:30am
5:45pm - 8:30pm
Friday 7am - 10:30am
5:45pm - 8:30pm
Saturday 7am - 10:45am
5:45pm - 8:30pm
Sunday 7am - 10:30am
5:45pm - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri bhadra vinayakar devasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share