Sri Pooja & Homam Services

Sri Pooja & Homam Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Pooja & Homam Services, poompozhil Nagar Avadi, Chennai.

திருப்பதி  7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!1. வேங்கட மலை:‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசம...
12/12/2025

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

1. வேங்கட மலை:

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்

திருப்பதி திருமலையில்,

1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.

"ஸ்ரீ ஸ்ரீநிவாச உன் திருவடிகளே சரணம்"

ஶ்ரீரங்கம் நாச்சியார் 🙏🏻🙏🏻
12/12/2025

ஶ்ரீரங்கம் நாச்சியார் 🙏🏻🙏🏻

12/12/2025

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறுமிகள் தங்கள் இயல்பான நடனத்தை வெளிப்படுத்தினர்

60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா?சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப...
11/11/2025

60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா?

சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன


அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் உறவினரின் திருமணத்திற்கே செல்ல தயங்குகின்றனர். அவர்கள் எப்படி 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்வார்கள்.

ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என கண்டிருப்பார்கள். அவர்களின் ஆசி வாங்கும் போது நம் தலைமுறையும் செழிக்கும் என்பது ஐதீகம்.

அப்படி திருமணத்தைச் செய்பவர்கள் ஆணின் தமிழ் பிறந்த தேதி ஜென்ம நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்

1.) 55ஆவது வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம் (Bhima Shanthi Vaibhavam)

2.) 60ஆவது வயது ஆரம்பமாகும் போது உக்ரரத சாந்தி வைபவம் (Ugra Ratha Shanthi Vaibhavam)

3.) 61ஆவது வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம். (Sashtiapthapoorthi Vaibhavam)

4.) 70ஆவது வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி வைபவம் (Bhima Ratha Shanthi Vaibhavam)

5.) 72ஆவது வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி வைபவம் ( Ratha Shanthi Vaibhavam)

6.) 78ஆவது வயதில் ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம் (Vijaya Shanthi Vaibhavam)

7.) 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்ல நாளில் - சதாபிஷேகம் வைபவம் (Sathabhishekam Vaibhavam)

8.) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால் - ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம் (kanakabhishekam Vaibhavam)

9.) 85ஆவது முதல் 90க்குள் - ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம் (Mrutyunjaya Shanthi Vaibhavam)

10.) 100ஆவது வயதில் சுபதினத்தில் கொண்டாடப்படுவது பூர்ணாபிஷேகம் வைபவம் (poorabhishekam Vaibhavam)

ஜென்ம நட்சத்திரத்தில் ஏன் கொண்டாட வேண்டும்?
ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு தனி குணம் உண்டு. ஒருவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினால், ஆத்ம காரகனான சூரிய பகவான், ஒருவரின் பிறந்த ஜாதக சூரியனைத் தொடுவதால், அவரின் ஆசி அந்த மாதம் முழுதும் கிடைக்கும்.

அதே போல் சந்திரன் ஜென்ம நட்சத்திரத்தில் நிற்கும். அதனால் அவரின் ஆசியும் கிடைக்கும். சூரியன் பித்ருகாரகனாகவும், சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருக்கின்றனர். நம் ஜென்ம நட்சத்திரத்தின் போது இருவரின் ஆசியும், நம் பெற்றோர்கள் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் குழந்தைக்கு கிடைக்கும். இதனால் அந்த குழந்தை நல்ல நிலையை அடைவான்.

02/08/2025

உஜ்ஜயினியில் இருந்து ஸ்ரீ மஹாகாலேஷ்வரின் தெய்வீக ஆரத்தியின் அற்புதமான காட்சி

காலம் கூட நின்று ஆன்மா சிவனால் நிரம்பி வழியும் இடம்.
ஹர ஹர மகா தேவ!


இன்று சனி மகா பிரதோஷம்சனி மகா பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ காலமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை...
10/05/2025

இன்று சனி மகா பிரதோஷம்

சனி மகா பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ காலமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு நிலைகளிலும் திரயோதசி திதி வரும்போது பிரதோஷ காலம் உண்டாகிறது. அந்த பிரதோஷ காலம் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை ஆகும். சனிக்கிழமையில் இந்த பிரதோஷ காலம் வந்தால் அது சனி மகா பிரதோஷம் எனப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடலாம். ஆலகால விஷத்தை உண்டு தேவர்களையும், உலக உயிர்களையும் காத்த ஈசனை வழிபடலாம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலத்தில் நந்தி தேவரை வழிபடலாம். சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

சனி மகா பிரதோஷத்தின் சிறப்பு என்னவென்றால், ஈசன் பிரதோஷ வேளையில் ஆனந்த நடனமிட்டது ஒரு சனிக்கிழமையில் தான். அந்த வேளையில் சகல தேவர்களும் ஈசனை வழிபட வருவார்கள். அதனால் அந்த வேளையில் ஈசனை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Address

Poompozhil Nagar Avadi
Chennai
600062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Pooja & Homam Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share